Followers

Monday, September 12, 2011

இந்து மதத்தைவிட்டு நீங்க வேண்டும்?. பன்றியை விட‌ கேவ‌ல‌மா?

அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது...? 

 மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்... அக்கிரமம்... இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது.


பெரம்பலூரில் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டத்தடை. 6 . 9. 2011.

“இந்து மதத்தின் பெயரை சொல்லிக் கொள்வது வெட்கக் கேடானது. - பெரியார்.

“இந்து மதம் வேண்டுமா? இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை.

இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம் மக்கள் உணர வேண்டுகிறேன்.”

‘இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’ என்று கேட்கலாம்.

உங்களுக்குத் துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரை சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும், இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள்.” – -
பெரியார்.

பெரம்பலூரில் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டத்தடை. 6. 9. 2011.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் பறையர் சமூகத்தை சார்ந்த சுமார் 150 குடும்பங்களும், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுமார் 75 குடும்பங்களும் வசித்து வருகின்றாhர்கள்.

தலித் சமூகத்தை சார்ந்த மக்கள், நாடு சுதத்திரம் அடைந்து இது நாள் வரை மேல் ஜாதியினர் பகுதியில் உள்ள பொது சாலையில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கபடவில்லை.

அனுப்புநர்
இரா. இலட்சுமணன்,
மாவட்ட அமைப்பாளர்,
பெரியார் திராவிடர் கழகம்,
பெரம்பலூர் மாவட்டம்.
செல் : 9994595714.


பெறுநர்
உயர்திரு டாக்டர் தாரேஸ் அகமது அவர்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்,
பெரம்பலூர் மாவட்டம்.


பொருள் : தேனீர்கடையில் இரட்டை டம்ளரை அகற்ற கேரியும்
பொது சாலையில் தலித் மக்கள் சைக்கிள் ஓட்ட அனுமதி
வேண்டியும் விண்ணப்பம்.

—-
ஐயா,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் பறையர் சமூகத்தை சார்ந்த சுமார் 150 குடும்பங்களும், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுமார் 75 குடும்பங்களும் வசித்து வருகின்றாhர்கள்.

தலித் சமூகத்தை சார்ந்த மக்கள், நாடு சுதத்திரம் அடைந்து இது நாள் வரை மேல் ஜாதியினர் பகுதியில் உள்ள பொது சாலையில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கபடவில்லை.
மேலும் அந்த பொது சாலையில் சைக்கிள் ஓட்ட முயன்ற தலித் இனத்தை சார்ந்தவர்களை அவர்கள் தாக்கி அடித்து திட்டி உதைத்துள்ளனர்.

உதாரணமாக மணியரசன் (டிரைவர்) த/பெ. மணிவேல் என்பவர் டீசல் கேனை ஏற்றிக்கொண்டு பைக்கில் செல்லும் போது அன்பழகன் உடையார் என்பவர்

‘நீ எப்படி எங்கள் வீதியில் பைக்கில் செல்லலாம்’ நீ கீழே இறங்கி வண்டியை தள்ளிக் கொண்டுதான் போகவேண்டும் என கூறிவிட்டு
எனது முதலாலியிடம் ‘இவன் எப்படி நமது வீதியில் பைக்கில் ஏரிகொண்டு வரலாம், இதை அவனிடம் சொல்லி வை’ என கூறி தடுத்தார்.

மேலும் எங்கள் பகுதியை சார்ந்த அய்யாக்கண்ணு என்பவர் மகள் சுகுனா 12-ம் வகுப்பு படிக்கின்றார். அவர் வகுப்பு தோழியான உiடாயர் சமூகத்தை சார்ந்த வீரமனி தனது சைக்கிளில் சுகுனாவை பின் சீட்டில் உட்கார வைத்து அழைத்து வந்ததை பார்த்த உடையார் சமூகத்தவர்கள் பறச்சியை ஏன் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து வருகின்றாய் என கூறி உள்ளனர்.

மேலும் ரஞ்சித், ரவி என்ற இரு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு குருப்பிட்ட தெருவில் சைக்கிளில் வந்த போது உருலாஸ் என்பவர் வீட்டில் இருந்தவர்கள் இந்த வீதியில் நீங்கள் எல்லாம் சைக்கிளை தள்ளிக்கொண்டுதான் போக வேண்டும் என்று கூறி உள்ளார்.

துபாய் பெரியசாமி என்பவர் 25 நாட்களுக்கு முன்பு உடையார் தெருவில் பைக்கில் சென்றதை பார்த்த தவிட்டுகாரம்மா என்பவர் நீ என்ன சாதி சனம் உனக்கு உடம்புல தெம்பு இருக்கா என்று கேட்ட போது பதிலுக்கு துபாய் பெரியசாமி (தலித்) இன்னும் ஊர் திருந்தளையாடா என்று கேட்டுள்ளார்.

மேலும் தலித் பள்ளி மாணவர்கள் சைக்கிலில் செல்வதற்கு பாதுகாப்பான சாலை வசதி இருந்தும் உயர் சாதியினர் அச்சாலையில் சைக்கிலில், பயனிக்க அனுமதி மருப்பதால் ஊரை சுற்றி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். பல மாணவர்கள் சைக்கிளை பயன்படுத்தாமல் நடந்தே செல்கின்றனர்.

மேலும் விவசாயத்திற்கு தேவையான உரம் பூச்சி மருத்துகளை ஊருக்கு நடுவில் உள்ளதால் தலித்துகள் தங்கள் நிலத்திற்கு உரத்தை வாங்கி கொண்டு தலையில் தூக்கி கொண்டோ, வண்டியை தள்ளிக்கொண்டோ, தான் செல்கின்றனர்.

மேலும் அஞ்சலகம் ஊருக்குள் இருப்பதால் அஞ்சலகம் வரும் தலித்துக்கள், மத்திய அரசு ஊழியர் தபால்காரர் இன்று வரை தபால் பட்டுவாடா செய்ய சைக்கிலை பயன்படுத்தியது இல்லை.

மேலும் நாள் 02.10.07ம் ஆண்டு மருவத்தூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பேரளியில் 1. சிங்காரவேல் 2. அய்யாசாமி, 3. சின்னதுரை 4. முத்துசாமி ஆகியவரது டீக்கடையில் இரட்டை டம்ளர் இருப்பதாகவும் இதனை அகற்றுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு செய்திருந்தேன்.

எனது மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி 16.04.2008 அன்று எனக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளீர்கள். அதில் டீக் கடையில் காவல்துறையினர் ரகசிய முறையில் விசாரணை செய்ததாகவும்

விசாரணையில் இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கபடவில்லை என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடிதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை எனக்கு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தீர்கள்.

எனது வாதம் யாதெனில் நீங்கள் அப்போது விசாரித்தபோது இல்லை எனில் 04.09.2011. அன்று தி. இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் இரட்டை டம்ளர் முறை பேரளியில் உள்ளதாகவும் மேலும் பல தீண்டாமை நிலை உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளதே?.

ஆகவே இனிவரும் காலங்களிலாவது திறந்த மனதோடு, நடுநிலையோடு, ஒட்டு மொத்த மனித குலுத்துக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படாத வண்ணம் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர
ஒருவார காலத்திற்குள் பேரளியில் உள்ள அனைத்து பொது சாலையிலும் தலித் மாணவர்கள், பொது மக்கள் சைக்கிளில் இனி எப்போதும் சென்று வரலாம் என்று உத்தரவிடுவதோடு

சாதி பாதுபாடு பார்த்து தலித் மக்களை அச்சுருத்துபவர்கள் மீதும் தாக்குகிறவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
. மேலும் பேரளி ஊராட்சி மன்ற தலைவரை தேர்தெடுப்பதில்

ஏழமுறையில். அதிக பணம் கட்டுகின்றார்களோ அவர்கள் தான் தலைவராக அறிவிக்கப்படுகின்றார்கள்.

இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித் மக்களின் பங்களிப்பு எதுவும் இன்றி. அடிப்படை வசதிகள் செய்து தருமாறு தற்போதைய தலைவரிடம் கேட்டால் நீ ஓட்டு போட்ட நான் ஜெயித்தேன் செய்து தரமுடியாது என்று கூறுகின்றார்.

மேலும் தி.இந்து பத்திரிக்கையில் பஞ்சாயத்து தலைவர் படைகாத்து அளித்துள்ள பேட்டியில் சிரிய வகையிலான ஒன்றிரண்டு தீண்டாமை,சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று ஒப்பு கொண்டுள்ளார்.

மேலுத் தலித் மக்களை கோவில்களுக்குள் அனுமதிக்காதது பற்றி செய்தியாளர் கேட்டதற்கு இருதரபினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரவர் கோயில்களில் அவரவர் சாமி கும்பிட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்று ஒப்பு கொள்கின்றார்.

தலைவர் கொடுத்திருக்கும் பேட்டியின் அடிப்படையில் தீண்டாமை பேரளியில் நடந்தேரி வருகின்றது என்பது உண்மை.

தீண்டாமை நடப்பதை அறிந்த பிறகு சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய தலைவர் தீண்டாமை நடப்பதற்கு பல சம்பவங்களில் இவரே காரணமானவராக உள்ளார்.

மேலும் மகேந்திரன் என்ற இளைஞர் இன்று நான் மனுவில் குறிப்பிட்டதை போல் கடந்த 5 மாதத்திற்கு முன்பு பேரளியில் நடக்கும் தீண்டாமை குறித்து மனுநீதி நாளில் வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் முன்பு மகேந்திரனிடம் இருந்த மனுவை தலைவர் படைகாத்து பிடிங்கி கொண்டு சென்று விட்டார்.

சிறிய வகையான தீண்டாமையும் நிகழக் கூடாது என்று தான் சட்டம் சொல்கிறது. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
இரா. இலட்சுமணன்,
06/09/2011


SOURCE:பெரம்பலூரில் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டத்தடை
------------------------------

20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

தொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங்கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.

அதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர்.

அவர்கள்தான் இந்து மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள்.

தலித்துகள் இந்தியாவையே ஆளத் தகுதிபெறும் அளவுக்கு பெரும்பான்மையினர்.

ஆனால் அவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. எப்படியெனில், இன்று அவர்கள் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள்.

மேல்சாதியினர் வசிக்கும் இடங்கள் வழியாக தலித்கள் செல்லும்போது செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். சில இடங்களில் செல்லவே முடியாது.

தாழ்த்தப்பட்ட ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிணத்தை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இந்த மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக கொண்டுசெல்லவே முடியாது. பல மைல் தூரங்கள் தேவையில்லாமல் சுற்றிச் சென்றுதான் கொண்டு செல்லவேண்டும்.

ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று மேல்சாதிக்காரனின் வீட்டில் நுழையலாம்... அங்குள்ள பாத்திரத்தில் வாய் வைக்கலாம்... அவர்களின் தெரு வழியாக இஷ்டத்துக்கு வலம் வரலாம்... ஆனால், இதே காரியங்களை இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவன் செய்தால் இவர்களின் வீடும், பாத்திரமும் உடலும் தீட்டுப்பட்டுவிடும்...! அந்தோ பரிதாபம்...!!!

மேல்சாதியினர் என்று கூறிக்கொள்வோரின் வீட்டுப் பெண்ணையோ அல்லது ஆணையோ இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ நேசித்துவிட்டாலே போதும்... அவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சக மனிதர்கள் முன் கேவலப்படுத்தப்படுவார்கள். ஏன்...? அவர்களுடைய உயிர் கூட பறிக்கப்பட்டுவிடும்.


இது நமது இந்தியாவில் இன்றும் சர்வ சாதாரணமாக நடந்து வருபவை. அது மட்டுமல்ல!

தாழ்த்தப்பட்ட இந்துப் பெண் ஒருத்தி மேல்சாதிக்காரனால் மானபங்கப் படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு சாட்சியே இல்லாமல் ஆக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். பரிதாபம்... பரிதாபம்...

கல்வி கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!! என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இந்த மக்கள் மற்றவர்களைப் போல கல்வி கற்க இயலவில்லை. காரணம் பொருளாதாரம்.

தலைமுறை தலைமுறையாக ஆளும் வர்க்கத்திற்கு கூலி வேலை செய்வதும், கிடைப்பதை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் என்று செலவழித்துவிட்டு கடனாளியாகி, மீண்டும் அவர்களிடமே கையேந்திக் கொண்டு நிற்பதும்தான்!

பல்லாண்டு காலங்களாக பல தலைவர்களும் முயற்சி செய்தபோதிலும் இந்தக் கொடுமைகளுக்கு இன்றும் தீர்வு இல்லை.

இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்... அக்கிரமம்... இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது.

அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது...?


மேலவலவு, கொடியங்குளம், வாசாத்தி போன்ற கிராமங்களின் வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை கிராமங்களோ...!

ஜாதிகள் இல்லையடி பாப்பா...' இது பிஞ்சுக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் பாட்டு.

ஆனால், இதைக் கற்பதற்கு பள்ளியில் சேர வேண்டுமானால் தனது ஜாதியைச் சொல்லித்தான் சேர வேண்டியதிருக்கிறது.

முன்னேறுவதற்கு முயலும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதில் கிடைத்த பலன் பூஜ்யமே!

பல தலைவர்கள் வந்தார்கள்... சென்றார்கள்... அவர்களால் தங்கள் சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கவும், சில சலுகைகளைப் பெற்றுத்தரவும் முடிந்ததே தவிர,

அம்மக்கள் சக மனிதர்களுடன் சரி சமமாகப் பழகும் உரிமையை, தலைமைத்துவத்தை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, கொடுக்கவும் முடியாது. அரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்துமே வீணாகியதுதான் மிச்சம்.

ஏனென்றால், இது நாட்டின் கொள்கை அல்ல!

அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை.


அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.

உதாரணமாக,

தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை.

மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம்.

விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை.

ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை. ஆகா... என்னே சமத்துவம்...!!!


=============

நீ இந்த‌ மாட்டை விட‌ கேவ‌ல‌மான‌வனா?

பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கற்ப்பூர தீபாராதனை.

SOURCE: http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_08.html
******


நீ இந்த‌ மைல் க‌ல்லை விட‌ கேவ‌ல‌மான‌வ‌னா?


SOURCE: http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_08.html


நீ இந்த‌ ப‌ன்றியை விட‌ கேவ‌லமான‌வ‌னா?


மகாவிஷ்ணுவின் அவதாரமான வராகமூர்த்தி (பன்றி)க்கு பூஜை. வராக மூர்த்தியாகிய பன்றிக்குப் படையல் என்ற பெயரால் சோறும் பழமும் வைத்தால் சரிபட்டு வருமா?

அதற்கு வேண்டியதை வைத்துப் படையல் போட வேண்டியது தானே.

SOURCE: viduthalai/20080713/news

சாக்க‌டை ப‌ன்றியின் ஒவ்வொரு ப‌குதியையும் புனித‌ப்ப‌டுத்தும் இந்து மதம்
ம‌னித‌னை எவ்வாறெல்லாம் கேவ‌ல‌ப்ப‌டுத்துகிறது.

சுட்டியை சொடுக்கி ப‌டிக்க‌வும்.

>>>> பன்றி புனிதம். பன்றியின் ஆண் பெண் குறி “யாக மந்த்ரங்கள்” போன்றவையாம் . <<<
---------------

இந்து மதம் வேண்டுமா? இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும்.

இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை.

இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம் மக்கள் உணர வேண்டுகிறேன்.

தீண்டாமை என்பதே ஜாதி காரணமாய் ஏற்பட்டதே தவிர அதற்கு வேறு காரணமோ, ஆதாரமோ இல்லை.தீண்டாமை என்பதே ஒரு ஜாதியானை மற்றொரு ஜாதியான் (மனிதனுக்கு மனிதன்) தொடக் கூடாது என்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகின்றோமே ஒழிய மற்றெதற்கு பிரஸ்தாபத் தீண்டாமையைப் பயன்படுத்துகிறோம்?

அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து தான் வருகிறதே ஒழிய யாருக்குள் இருந்து வருகிறது?

ஆகவே தீண்டாமை இந்துமதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக மேல் ஜாதி என்பவர்களுக்கும், கீழ் சாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக இருந்து வரும் காரியமே தவிர தீண்டாமை மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை மக்கள் நல்ல வண்ணம் சிந்தித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே ஜாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும்,

இந்துமதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர சிறிதும் அறிவுடைமை ஆகாது என்பது என் கருத்து.

நம் வாழ்வில் ஜாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும் கோவிலினிடமும் கடவுளினிடமும் தான் இருந்து வருவதை நல்ல வண்ணம் உணருகிறோம்.

அதாவது கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால் தான் சூத்திரனாகிறோம்.

நாம் ஒரு இந்து என்றால் நமக்கு நாம் கண்ணால் கூடப் பார்க்க முடியாத, காதால் கூடக் கேட்க முடியாத, 'வேதம்', 'சாஸ்திரம்' ஆகியவற்றையும்

நம்மை இழிமகனாக்கும். தருமங்களையும்,

பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாகிய சரஸ்வதி, இலட்சுமி, பார்வதிகளையும், மகன்களும் அவதாரங்களுமாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்கைளையும்

இவற்றைக் குறிக்கும் புராணங்கள் இதிகாசங்கள் நெற்றிக்குறிகள் முதலியவற்றையும் நம்பியாக வேண்டும்.

இவ்வளவு தானா?

மற்றும் பாகவதம், விஷ்ணுபுராணம், பக்த விஜயம், பெரியபுராணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும்.

பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோயில், குளம், தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமத்திரிகாஷணம் நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய், பூதம், மந்திரம், சாந்தி கழித்தல், சூரியன் கதை, சந்திரன் கதை, கிரகணகதை முதலியவற்றையும் நம்ப வேண்டும்.


இவற்றில் எதை நம்பாவிட்டாலும் இந்துவாக மாட்டோமா?

இந்த நிலையில் உள்ள இந்துவும், சூத்திரனுமாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொன்னால் அதில் புத்தியோ, சாத்திய அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஆகவே மானமுள்ள அருமைத் தமிழ் மக்களே!

நமக்கு உண்மையில் தீண்டாமை என்னும் ஜாதிக் கேடும் - இழிவும் நீங்க வேண்டுமானால் இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும்.

இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை.


இந்து மதம் இந்துச் சட்டம் (இந்துலா) இந்து ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) என்பவை எல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சி ஆகுமே அல்லாமல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று – சூத்திரன் தீண்டப்படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. மாற்றமடையவும் முடியாது.

ஆகவே தமிழன் தனக்கு இந்துமதம் வேண்டுமா? சூத்திரப்பட்டமும், தீண்டாமையும் ஒழியவேண்டுமா?

என்பதைப் பற்றி அறிவோடு மானத்தோடு நல்ல வண்ணம் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மானம் பெறுவதும், ஈனஜாதித் தனம் ஒழிவதும் அவசியம் என்றுபட்டால்:

முதலாவதாக நெற்றிக்குறியை ஒழித்துத் தள்ளுங்கள்.

இரண்டாவதாக கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாக எந்தவித இந்துமதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள்.

பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள்.

SOURCE: (12-05-1969 'விடுதலை'யில் தந்தை பெரியார் தலையங்கம். பெரியார் களஞ்சியம். ஜாதி- தீண்டாமை பாகம்:12 என்ற நூலில் இருந்து…. பக்கம்:250

*****************
இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’

இந்து மதத்தின் பெயரை சொல்லிக் கொள்வது வெட்கக் கேடானது.

சமீபத்தில் தோழர் அம்பேத்கர் அவர்கள் சென்னை வந்திருந்த போது என்னிடத்தில் இது சம்பந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்தும் பஞ்சாப் லாகூரிலிருந்து ‘ஜாத்பாத் தோரக் மண்டல’தலைவர் சாந்தராம். அவர்களும்,

முன்பு காரியதரிசியாய் இருந்த ஹரிபவன் அவர்களும் உங்களைப் பற்றி எனக்கு எழுதிய சில கடிதங்களிலிருந்தும் உங்கள் காரியதரிசி எழுதின சில குறிப்புகளிலிருந்தும்

நீங்கள் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பொறுமையாய்க் கேட்கக் கூடியவர்களென்றும் நடுநிலைமையிலிருந்து கவலையாய் சீர்திருத்தக் கூடியவர்கள் என்றும் தெரிந்ததினால் இவ்வளவு ஆயிரம் பேர் கொண்ட இந்த மாபெரும் கூட்டத்தில் இதை நான் சொல்லுகிறேன்.

எங்கள் நாட்டில் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவனாய் இருந்த 1922-வது வருடத்திலேயே ஒரு பெரிய மாகாண காங்கிரஸ் மகாநாட்டில், ‘இராமாயணம் கொளுத்தப் பட்டாலொழிய தீண்டாமை ஒழியாது’ என்று சொல்லியிருக்கிறேன்.

வெகு பேர்களுக்கு அன்று ஆத்திரமாய் இருந்தது. இன்று எங்கள் நாட்டில் இப்படிப் பேசுவதும் கொளுத்துவதும் சர்வசாதாரணமாய் ஆகிவிட்டது. இராமாயணத்தைக் கொளுத்த ஒரு கூட்டமும், அதை ஆதரிக்க ஒரு கூட்டமும் தினமும் பொதுக் கூட்டம் கூட்டிப் பேசி வருகிறார்கள்.

மற்றும், பதினாயிரக்கணக்கான சுயமரியாதைக்காரர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள் என்றே சொல்லலாம். தங்கள் வடமொழிப் பெயர்களை எல்லாம் மாற்றிக் கொண்டார்கள்;

இந்துமத அறிகுறியாய் இருக்கிற சின்னங்களையெல்லாம் விட்டு விட்டார்கள்.

உச்சிக் குடுமிகளை எல்லாம் தாங்கள் கத்தரித்துக் கொண்டதுமல்லாமல் பிறருக்கும் கத்தரித்துவிட்டார்கள்.

அனேகர் புராணப் பண்டிகைகளையும் உற்சவங்களையும் கொண்டாடுவதில்லை.

இதற்கு முன்பு ஏழைகள் பணத்தை வஞ்சித்துக் கொள்ளையடித்த பணக்காரர்கள் இதற்கு முன்பு கோயில் கட்டிவந்ததை நிறுத்திவிட்டு, பள்ளிக்கூடம் முதலிய காரியங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

சென்சஸில் தாங்கள் இந்துக்கள் அல்ல வென்று அனேகம் பேர் சொல்லிவிட்டார்கள்.

புராண நாடகங்களையும், சினிமாக்களையும், பஜனைப் பாட்டுகளையும் ஜனங்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள்.

கூடிய சீக்கிரத்தில் பெரும் கிளர்ச்சிகள் செய்து ஜெயிலுக்கும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் போகத் தயாராய் இருக்கிறார்கள்.

எங்கள் நாட்டார் பலர் எங்கள் திராவிட நாடு, வடநாட்டு சம்பந்தத் திலிருந்து பிரிந்து தனியாக இருக்க விரும்பும் முக்கிய காரணங்கூட இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் இழிவும் சுரண்டலும் ஒழியவேண்டும் என்பதற்குமாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்மபேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாம், தாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்லவென்றும், தாங்கள் இந்துக்கள் அல்லவென்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலகவேண்டும் என்றும், 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள்.

‘இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’ என்று கேட்கலாம்.

உங்களுக்குத் துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரை சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும், இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள்.

அப்படிச் சொல்லிக் கொள்ளுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள் என்றும், திராவிடர் சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அதிலும் கஷ்டமிருந்தால், சமரச சமயத்தார், மனித சமுதாய ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக் கொள்ளலாம்.

பொருள் இல்லாததும், பித்தலாட்டமானதும், இழிவையும் அன்னிய ஆதிக்கத்தையும், சுரண்டலையும் தருவதுமான ஒரு சுயநல கற்பனையான (இந்து) மதத்தின் பேரைச் சொல்லிக் கொள்வது என்பது வெட்கக் கேடான காரியமாகும்.

மதம் வேண்டுமானால் மதம் வேண்டும் என்பவர்கள் மதத் தத்துவங்களையும் அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து, ஒரு மதத்தைத் தழுவுவது என்பது அறிவுடைமையாகும்.

அப்படியில்லாமல், தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டான் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் அது வருணாசிரமத்தை மற்றொரு முறையில் பின் பற்றுவதேயாகும்.

பகுத்தறிவுவாதி என்று சொல்லுவது எல்லா மதத்திற்கும் தாய் மதம் என்று சொல்லிக் கொள்வதை ஒக்கும். நீங்கள் திராவிடர்கள் என்பதை உணராவிட்டாலும் நீங்கள் ஆரியர்கள் அல்லர்.

ஆரிய சம்பிரதாயத்திற்குக் கட்டுப் பட்டவர்கள் அல்லர் என்றும், ஆரியர்கள் இந்த நாட்டிற்குக் குடியேறிவந்த ஓர் அன்னிய இனத்தவர்கள் என்றும்

அவர்களுடைய ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட கடவுள், மத, சாத்திர, புராண, இதிகாசங்களைச் சுமந்துகொண்டிருப்பதன் பயனாகவே இந்த இழி நிலையில் இருக்கின்றீர்கள் என்றும் தெரிந்தால் எனக்கு அதுவே போதுமானதாகும்.


தோழர்களே!முன்னுரையாக அதிகநேரம் பேசிவிட்டேன். அனேக காரியங்கள் நடக்கவேண்டி இருப்பதால் மாநாட்டுக் காரிய நடவடிக்கை ஆனபிறகு சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.

நான் சொன்ன இவற்றை நீங்கள் நன்கு ஆலோசனை செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

SOURCE: (கான்பூரில், 29, 30, 31.12.1944-ல் நடந்த இந்திய பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் சங்க மாநாட்டுத் தலைமை உரை - ‘குடி அரசு’ 13.1.1945)
---------------------------

சுட்டியை சொடுக்கி ப‌டிக்க‌வும்.

>>>> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7.b.ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.


>>>>> இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

7 comments:

Anonymous said...

தலித் இளைஞர்கள் உயிரை அரசு குறைத்து மதிப்பிடுகிறது: திருமாவளவன்
திங்கள்கிழமை, செப்டம்பர் 12, 2011, 10:33 [IST]

சென்னை: வழக்கமாக வன்முறை சம்பவங்களின்போது உயிர் இழப்பவர்கள் குடும்பங்களுக்கு அரசு ரூ. 2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாகத் தான் வழங்கியுள்ளது.

ஆனால் பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு மட்டும் வெறும் ரூ. 1 லட்சம் தான் இழப்பீடாக வழங்கியுள்ளது.

தமிழக அரசு தலித் இளைஞர்களின் உயிரை குறைத்து மதிப்பிடுகிறது என்பது இதில் இருந்தே தெரிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளானன்று பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகி உள்ளனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. மதுரையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் மேலும் வன்முறை பரவும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய அரசு பயங்கரவாத அடக்குமுறைப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை இன்று காலை சுமார் 10 மணியளவில் வல்லநாடு அருகே காவல் துறையினர் வழிமறித்துக் கைது செய்துள்ளனர். காரணம் கேட்டால், ஜான்பாண்டியன் பரமக்குடி சென்றால் வன்முறை உருவாகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், ஜான்பாண்டியன் பரமக்குடிக்கு செல்லாமலேயே மிகப் பெரிய வன்முறை காவல்துறையால் அரங்கேற்றப்பட்டுள்ளது. அப்பாவி இளைஞர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை 3 மணியில் இருந்து 5 மணி வரையில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அஞ்சலி செலுத்துவற்கான அனுமதியை ஏற்கனவே வழங்கியிருந்த காவல்துறை, திடீரென அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு போட என்ன காரணம்?

பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கே கூடியிருக்கும் வேளையில் ஒரு சமூகத் தலைவரை அங்கே செல்லவிடாமல் தடுப்பது அப்பகுதியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பது காவல்துறையினருக்கு தெரியாதா?

பரமக்குடி அருகே பழனிக்குமார் என்கிற பள்ளி மாணவன் ஒருவனை காரண காரியமில்லாமலேயே சாதிவெறிக் கும்பல் படுகொலை செய்துள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த அக்கரை காட்டாத காவல்துறை, அப்பகுதிக்கு ஜான்பாண்டியன் செல்லக்கூடாது என்று தொலைபேசி மூலமாக வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவரும் உடன்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் அவர் அப்பகுதிக்கு வந்தால் கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதுல் சொல்வதற்காகச் செல்லக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகப்பட்டு பரமக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கே வரக்கூடாது எனத் தடை விதித்து, அவரைக் கைது செய்து, அதன் மூலம் ஒரு பதற்றத்தை உருவாக்கி, தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று சாக்குப்போக்குச் சொல்லி அப்பாவி இளைஞர்களைப் படுகொலை செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

எனவே, இந்த வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணமான தவறான முடிவுகளை எடுத்த காவல்துறை அதிகாரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

படுகொலையானவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

வழக்கமாக இவ்வாறான வன்முறைகளின்போது உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேலும் வழங்கி வந்துள்ளது.

ஆனால், தற்போது தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்கியிருப்பது தலித் இளைஞர்களின் உயிரை மிகக் குறைத்து மதிப்பிடுவதாகவே கருத நேரிடுகிறது.

ஆகவே தமிழக அரசு தம்முடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அக்குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும்,

அக்குடும்பங்களில் தகுதியுள்ள தலா ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட உறுதியளிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

SOURCE: http://thatstamil.oneindia.in/news/2011/09/12/tn-govt-underestimates-the-value-dalit-souls-thiruma-aid0128.html

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் said...

துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குகள் பதிவுச் செய்ய வேண்டும்
12 minutes ago · Like

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் said...

ஒட்டுமொத்த தேவர்சாதி காவல்துறை அதிகாரிகள் உடனே தெந்தமிழ்கத்தில் இருந்து வடதமிழகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்

நம்பி said...

//பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள்.//

"பிராமணன்" என்று அழைக்க முற்படுவபவர்கள், அதுவும் திராவிடர்கள் அழைத்தால் திராவிடர்கள் தங்களையே தாழ்த்திக்கொள்வதாக ஆகும்.

மீண்டும் மீண்டும் அவனை வர்ணத்தில் இருந்து பிறந்தவன் என்பதை அறிவுறுத்துவது தான் இந்த "பிராமணன்" என்ற சொல்.

"பிராமணன்" என்ற சொல் பிரிவினையை வலியுறுத்துவது. அவனை உயர்ந்தவனாக காட்டி, மற்றவர்களை எல்லாம் அவனினும் தாழ்ந்தவனாக காட்டுவது\.

3 சதவீத பார்ப்பனனுக்காக 97 சதவீத திராவிட மக்களை மட்டமாக்குவது இந்த "பிராமணன்" என்ற சொல்.

பிரம்மனின் உடலில் இருந்து பிறந்தவன் என்ற உட்பொருளில் அழைப்பது தான், இப்படி அழைப்பது.

பார்ப்பனன் என்று அழைத்தால் அது வெறும் ஜாதிப்பெயராக மட்டும் தான் தெரியும். இது தொன்று தொட்டு அழைத்துவருவது. இலக்கியங்களிலும் இருப்பது. தமிழ் அகராதியில் உள்ளது.

இதை பார்ப்பன பத்திரிகைகள் உஷாராக பார்ப்பானை எதிர்த்து விமர்சனம் வைக்கும்போது கூட அவனுடைய வர்ணத்தை "பிராமணன்" என்று அழைத்து பிராமணீயத்தை 'நிலைநிறுத்துகின்றன.

"தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பது போல.

இன்னும் சில பேர் ஆங்கிலத்தில் "பிராமின்ஸ்" என்று கூறி தேற்றிக்கொள்ளும் மேதாவிகள் உண்டு.. இரண்டுமே தவறு. "

பார்ப்பன்ஸ்" என்று தான் அழைக்கவேண்டும்.

நம்பி said...

//ஒட்டுமொத்த தேவர்சாதி காவல்துறை அதிகாரிகள் உடனே தெந்தமிழ்கத்தில் இருந்து வடதமிழகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்//

ஜாதி வெறி பிடித்த மனிதாபிமானமற்றவர்கள், ஆதிக்கமனப்பான்மை கொண்டவர்கள் எந்தப் பகுதி தமிழகத்திற்கும் வேண்டாம்.

நம்பி said...

//இந்து மதம் பெரும்பான்மை.....////இந்தியா இந்துக்களின் நாடா......?.....//

இந்து மதத்தில் அதிக..... பிரிவினைகள் இருந்து வந்ததால் நம்பிக்கைகள் இருந்து வந்ததால் இதில் இவர்தான் "இந்து" என்று உறுதியுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஒருமைப்படுத்தும் வாதத்தை முன்வைக்கமுடியாது........

இதனடிப்படையில் 1995 ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பி.ப்பி.கஜெந்திரகட்கரால் வைக்கப்பட்ட தீர்ப்பின் விவரம்..(ஒரு பகுதி)....


''''When we think of the Hindu religion, unlike other religions in the world, the Hindu religion does not claim any one prophet; it does not worship any one god; it does not subscribe to any one dogma; it does not believe in any one philosophic concept; it does not follow any one set of religious rites or performances; in fact, it does not appear to satisfy the narrow traditional features of any religion or creed. It may broadly be described as a way of life and nothing more.''''

''''இந்து மதம் என்று எடுத்து கொள்கிறபொழுது, உலகில் உள்ள மற்ற மதங்களைப் போல் ஒரு போதகரின் கீழோ, அல்லது ஒரு கடவுளை வணங்குவது போன்றோ உரிமை கொண்டாடவோ!, இது எந்த ஒரு தனிப்பட்ட சமயக்கோட்டபாட்டை அல்லது எந்தவொரு தனிப்பட்ட தத்துவத்தையோ, எந்தவொரு தனிப்பட்ட சமய வழிபாட்டு முறைகளையோ, இது எந்தவொரு குறுகிய பாரம்பரிய கொள்கைகளையுடைய எந்தவொரு சமயத்தையும், திருப்திபடுத்தவோ! அல்லது கோட்பாட்டை கொண்டதோ! அல்ல. இதை பொதுவாக குறிப்பிட வேண்டுமானால் வாழ்வியல் முறை..அதைத்தவிர வேறொன்றுமில்லை.....''''ஆதாரம் ஆங்கில விக்கி களஞ்சியம்....

http://en.wikipedia.org/wiki/Hindu

http://en.wikipedia.org/wiki/Hindu

நம்பி said...

//பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள்.//

இன்னும் சொல்லப்போனால் "பார்ப்பனன்" என்பது தாழ்வான சொல்லும் அல்ல...".பார்வதியின் மகன்" என்ற பொருள்...(அகராதியில் காணலாம்) .அது போனால் போகட்டும்.....

திராவிடர்கள் எல்லாம் அவரவர் "தாய்தந்தையரின்" பிள்ளைகள் அதில் ஒன்றும் மாற்றம் இல்லை.

(தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை....தந்தை சொல்மிக்க மந்திரமில்லை....அப்புறம் என்ன?)

இது கற்பனைக்கதையைக் கொண்டு உருவாக்கிய கல்லு சிவனின் பொஞ்சாதி பெற்ற பிள்ளைகளாக தன்னை மாற்றிக் கொண்டு பிறரிடம் அதாவது பார்ப்பனரால்லாதாரிடம் உயர்வாக காட்டிக்கொள்வது.

(அன்றைய மௌடீக காலக்கட்டங்களில் மிக உயர்வாக எண்ணக்கூடிய விஷயம், கடவுளின் பிள்ளைகள் என்றளவில்....இப்பொழுது ..??.)...

இதில் மற்றவர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்) எல்லாம் யார்? பெற்ற பிள்ளைகள் என்று வருகிறபொழுது....தாராளமாக "எங்கம்மா பெத்த பிள்ளைகள்" என்று மார்தட்டி மிக மிக உயர்வாக சொல்லிக்கொள்ளலாம்......ஆகையால் இதில் இழிவு திராவிடருக்கு இல்லை...

"பிராமணன்" என்று திராவிடர்கள் அழைப்பது தான் திராவிடர்கள், தங்களைத் தாங்களேத் தாழ்த்திக்கொள்வது.