Followers

Wednesday, June 8, 2011

இதோ கடவுள். கடவுளை சொர்க்கத்தை காப்பாற்றுவோம்.

சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான்.? அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

இது திபெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்; `கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

`த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே. அதி விஷ்ட பிச்ரிதா:.. என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார்.

கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போலவ இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்

கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.

1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலா சாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146 (வானதி பதிப்பக வெளியீடு)

நமது கேள்வி இதுதான்

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்! மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிரமிக்க முடிந்தது?

அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?

திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக்கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று?

உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா?இதிலிருந்து என்ன தெரிகிறது?

SOURCE :  viduthalai.news. 26 may 2008
||||||||||||||||||||||||||||||||||||||||

Following the Chinese army entering Tibet in 1950, and political and border disturbances across the Chinese-Indian boundary, pilgrimage to the legendary abode of Lord Shiva was stopped from 1954 to 1978.

Thereafter, a limited number of Indian pilgrims have been allowed to visit the place, under the supervision of the Chinese and Indian governments either by a lengthy and hazardous trek over the Himalayan terrain, travel by land from Kathmandu or from Lhasa where flights from Kathmandu are available to Tibet and thereafter travel over the great Tibetan plateau by car.

http://en.wikipedia.org/wiki/Mount_Kailash
 ||||||||||||||||||||||||||||||||||||||

Mount Kailash And Mansarovar
High on the remote western Tibetan plateau in the northern most region of the Himalayas, sits Mount Kailash, the holy mountain.

The Tibetan people have named it Kang Rinpoche, or snow jewel, and the Hindus refer to it as Mount Meru. Buddhist, Hindu and Jain pilgrims from the world over go to this holy mountain to circumambulate rather than scale the 22,028- foot high peak.

Hindus who walk around the 52-mile circumference of Mount Kailash use the term parikrama.

They believe that lord Shiva, one of their three main gods, resides atop what they call Mount Meru.

Tibetans refer to the clockwise circumambulation as a kora. Both words mean the same thing pilgrimage. Doing a walk around the mountain can away a lifetimes worth of sins.

இங்கு தான் சிவ‌ன் வசிப்பதும் சொர்க்கமும்.

3 comments:

ஜெகதீஸ்வரன்.இரா said...

இந்த கேள்வியின் அடிப்படையே சரியில்லையே... ஒரு சக்தி உலகை இயக்குகிறது உலகின் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில் என்கிறபோது அதற்க்கு எல்லைகள் வகுப்பது குறுகிய் மனம் கொண்ட மனிதனே.. சீனாக்காரன் என்ன, சினிமாக்காரன் என்ன அனைவரும் அவன் படைப்பில் வந்தவர்களே.

நம்பி said...

//Blogger ஜெகதீஸ்வரன்.இரா said...

இந்த கேள்வியின் அடிப்படையே சரியில்லையே... ஒரு சக்தி உலகை இயக்குகிறது உலகின் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில் என்கிறபோது.....//

உலகம் என்பது இந்த பூமி மட்டும் தானா? அப்படி என்றால் மற்ற கோள்களை இயக்கும் சக்தி எது?

//அதற்க்கு எல்லைகள் வகுப்பது குறுகிய் மனம் கொண்ட மனிதனே..//

இதை சொல்வது மனிதன் தானே!

//சீனாக்காரன் என்ன, சினிமாக்காரன் என்ன அனைவரும் அவன் படைப்பில் வந்தவர்களே.//

இங்கே மட்டும் எல்லை வகுக்கப்பட்டது ஏன்? இதையும் அதே குறுகிய மனம் தானே!....?

சிந்திக்க உண்மைகள். said...

//Anonymous has left a new comment
April 11, 2012 10:09 PM

முகமது …………… என்கிறது குறான்.//

Anonymous கருத்து பதிவுக்கு சம்பந்தமில்லாதது. இடம் மாறி வந்துவிட்ட மாதிரி தெரிகிறது.


அதுசரி சொர்க்கத்தை எப்படி மீட்பது? பதில் கூறவும்.