Followers

Tuesday, June 7, 2011

பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையா? பாவங்களின் ப‌ல‌னா? வேதம் - பைபிள்

பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையா? பாவங்களின் ப‌ல‌னா? வேதம் - பைபிள் வேதமும் பைபிளும் கூறுவதென்ன ?

வேதம் -- அவள் தீட்டு, அவளை, அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது.

பைபிள் - மாதவிடாய் பெண்களை- தொட்டாலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை ?--

பெண்களுக்கு மாதவிடாய் உடற்கூறு இயற்கையா?  மாத‌விடாய் பாவங்களின் ப‌ல‌னா?


பைபிள்.

Thanks to source:
http://www.tamil-bible.com/lookup.php?Book=Leviticus&Chapter=15&Verse=19-31&Kjv=2


BIBLE லேவியராகமம் 15 அதிகாரம்

19. சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் (மாதவிடாய் காரணமாக‌)  ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

And if a woman have an issue, and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever toucheth her shall be unclean until the even.

20. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

And every thing that she lieth upon in her separation shall be unclean: every thing also that she sitteth upon shall be unclean.

21. அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

22. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

And whosoever toucheth any thing that she sat upon shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

23. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

And if it be on her bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.

24. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.

And if any man lie with her at all, and her flowers be upon him, he shall be unclean seven days; and all the bed whereon he lieth shall be unclean.

25. ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் (மாதவிடாய்) அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.

And if a woman have an issue of her blood many days out of the time of her separation, or if it run beyond the time of her separation; all the days of the issue of her uncleanness shall be as the days of her separation: she shall be unclean.

26. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her separation: and whatsoever she sitteth upon shall be unclean, as the uncleanness of her separation.

27. அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

And whosoever toucheth those things shall be unclean, and shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

28. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக, அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.

But if she be cleansed of her issue, then she shall number to herself seven days, and after that she shall be clean.

29. எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் (சர்ச்)  ஆசாரியனிடத்தில் (ஃபாதர்) கொண்டுவரக்கடவள்.

And on the eighth day she shall take unto her two turtles, or two young pigeons, and bring them unto the priest, to the door of the tabernacle of the congregation.

**கவனிக்கவும்.:--  turtles =ஆமைகள்.
யாரால்? எப்பொழுது? ஏன்?

எப்படி ஆமைகள் காட்டுப்புறாவாக ? க‌ர்த்த‌ரின் கூற்றுக்க‌ளை அவ்வ‌ப்பொழுது மாற்றுவ‌து, திரிப்ப‌து , இடை சொருகுவ‌து யார்?**

30. ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் (மாதவிடாய் காரணமாக‌-) மாதவிடாய் உடற்கூறு இயற்கையா? பாவமா?) பாவ நிவிர்த்தி செய்யக்கடவன்.

And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness.

31. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால்(மாதவிடாய்) சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.

Thus shall ye separate the children of Israel from their uncleanness; that they die not in their uncleanness, when they defile my tabernacle that is among them.

Thanks to source:  http://www.tamil-bible.com/lookup.php?Book=Leviticus&Chapter=15&Verse=19-31&Kjv=2

THANKS TO : பைபிளில் உள்ளவை.
=======================
வேதம்

அவள் தீட்டு, அவளை, அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது.

கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதை வேத காலம் எதனோடு ஒப்பிட்டு காரணம் கண்டு பிடித்தது தெரியுமா?

இந்துமதம் எங்கே போகிறது? பகுதி 37.

ஸ்திரீ ஸம்ஸாதம் அதாவது பெண்கள் மாநாடு பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆணைவிட 4 மடங்கு அறிவு கொண்ட பெண்கள் ஒன்றாக கூடி விவாதங்கள் செய்து... வேத காலத்தில் சிறந்து விளங்கினார்கள்.

கார்க்தி, வாஸக்தலி, யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயி போன்றவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு அறியக் கிடைக்கிறது.

இவ்வளவு முற்போக்காகவா பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்கிற நம் ஆச்சரியக்குறியை ஒடித்துப் போடுகிற அளவுக்கு அடுத்த தகவல் அதிர்ச்சி தருகிறது.

அது என்ன? பெண்களுக்கு இயற்கை மாதாமாதம் அளிக்கும் ஒரு துன்பம்... வலி உடலியல் காரணங்களால் வெளியேற்றப்படும் கழிவாகிய ‘மாதவிடாய்’ என்பதை காரணம் காட்டி பெண்களை வெறுத்து ஒதுக்கியது வேதகாலம்.

அவள் தீட்டு, அவளை விலக்கிவையுங்கள், அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது ஏற்கெனவே இயற்கை தந்த துன்பத்தை சகித்துக் கொண்டிருக்கும் பெண்கள் - அறியாமையால் ஆண்கள் தந்த தீண்டாமை துன்பத்தையும் சகித்துக் கொண்டார்கள்.

கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதை வேத காலம் எதனோடு ஒப்பிட்டு காரணம் கண்டு பிடித்தது தெரியுமா?

பார்ப்பதற்கு முன்...மீண்டும் ஸ்திரீ ஸம்ஸாதம்.... பெண்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிரிப்பொலி காற்றில் சிணுங்கலாக மிதந்து கொண்டிருக்கிறது. அந்த வேளையில் திடுமென அவ்விடத்தில் ஒரு பிரகாசம். வெளிச்சப் புகைக்கு நடுவே அங்கே வந்திறங்குகிறான் இந்திரன்.

இந்திரன்? ஆம் தேவர்களின் அரசன். சர்வ சந்தோஷங்களையும் அனுபவித்து அனுதினமும் பகட்டில் வாழும் அவன் முகமே பார்க்க முடியாத அளவு கோரமாய் காட்சியளித்தது. செம்பட்டு இழையான தலைமுடி கொண்ட இந்திரன் செம்பட்டையும் பரட்டையுமாக மாறி போயிருந்தான்.

புன்னகை வெளிப்பட்ட வாயிலிருந்து கோரப் பற்கள் கறுத்து இருண்ட மேனியுடன் வந்த இந்திரனின் முகத்தில் சங்கட ரேகைகள். கண்கள் மட்டும் அல்ல, அங்கங்கள் அனைத்தும் அழுதன. நடுக்கம் அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. என்ன ஆச்சு இந்திர ராஜாவுக்கு!

ப்ரம்மஹத்தி தோஷம் அப்படியென்றால்...!குற்றங்களிலேயே மிகக் கொடிய குற்றம். உச்ச பட்ச தண்டனைக்கு உள்ளாகும்படியான குற்றம். தலைமைக் குற்றம் என்றுகூட சொல்லலாம். இக்குற்றத்தை செய்தவனுக்கு எந்த பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவதைத் தவிர

சரி.. என்ன செய்தால் இந்த குற்றம் வரும்? ப்ராமணனை கொலை செய்வது தான் ப்ரமஹத்தி குற்றம். பிரம்மம் - பிராமணன்; ஹத்தி கொலை அதாவது பிராமணனை கொலை செய்யும் குற்றம்தான் ப்ரமஹத்தி.

இப்பேர்ப்பட்ட குற்றத்தைத்தான் இந்திரன் செய்துவிட்டான். இப்போது இந்த காலத்தில் காஞ்சிபுரம் கோவிலுக்குள்ளேயே வைத்து சங்கரராமன் என்னும் பிராமணனை கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் ஹத்தி (கொலை) செய்தார்களே. அவர்களும்கூட வேதத்தின் நீதிமன்றம் முன்பு ப்ரமஹத்தி (தோஷம்) குற்றம் செய்தவர்கள்தான். அதாவது அவர்கள் இவ்வளவு ப்ரமஹத்திகள்.

சரி., நாம் இந்திரன் விவாவதத்துக்கு வருவோம் ப்ரம்ஹாத்தி குற்றம் செய்யும் அளவுக்கு இந்திரன் என்ன செய்தான். காஸ்யபன் என்றொரு முனிவர். அவருக்கு திதி, அதிதி என இரண்டு மனைவிகள். திதியின் பிள்ளைகள் மதத்தவர்கள். அதாவது அசுரர்கள். திதி அசுர குலத்தை சேர்ந்தவள். இன்னொரு மனைவி அதிதியின் பிள்கைள் தேவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிதிக்கு பிறந்த 12 புதல்வர்களில் ஒருவரான தொஷ்டா, அசுர குலத்தைச் சேர்ந்த ரஸனை என்னும் பெண்ணை மணமுடிக்கிறார். தேவனாகிய தொஷ்டாவுக்கும் அசுரப் பெண்ணாகிய ரஸனைக்கு பிறந்தவன் விஸ்வரூபன். இந்திர ராஜ்யத்தில் புரோகிதராக இருந்தான் விஸ்வரூபன்.

புனித யாகங்கள் முடிந்தபின் கிடைக்கும் ‘ஹவிஸ்’ என்ற பெரும் நலம் கொடுக்கக்கூடியப் பொருளை இந்திரனுக்குத் தெரியாமல் தன் மாமாவான அசுரர்களுக்கு கொடுத்துவிட்டான். இது தெரிந்த இந்திரன் - விஸ்வரூபனின் தலையையும் கோபப்பட்டு வெட்டி வீழ்த்திவிட்டான். விஸ்வரூபன் ஒரு பிராமணன் கொலை செய்தவன் இந்திரன் சும்மா விடுமோ?

பிடித்தது ப்ரம்மஹத்தி. எங்கெங்கோ போய் கத்திப் பார்த்தான் அலைந்தான் - திரிந்தான்.

கடைசியில் ‘ஞானம்’ வந்த இந்திரன் தனது ப்ரமஹத்தி கொடுத்து விடுதலை பெறலாம் என நினைத்தான்.முதலில் பூமா தேவியை போய் பார்த்து அழுதான் இந்திரன். என்னயென்று கேட்டாள் பூமாதேவி.

இதுபோல் நான் ப்ரமஹத்தி தோஷத்திற்கு ஆளாகிவிட்டேன் தேவி. என் தோஷத்தை நீதான் எடுத்துக்கொண்டு எனக்கு அருளவேண்டும் என்றான் இந்திரன்.

எல்லா தோஷத்தையும் நானே எடுத்துக்கொண்டால் என் மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு ஏது சந்தோஷம். அதனால் நீ கேட்கிறாய் என்பதற்காக ஒரு பகுதி தோஷத்தை என்னிடம் கொடு என்கிறாள் பூமாதேவி.

அதன்படி.... இந்திரன் தன் கொலைக் குற்றத்தில் ஒரு சிறு பகுதியை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான்.

அதுதான், தானியங்கள் விவசாய தகுதி இல்லாத தரிசு நிலங்களாகவும், பாலைவனங்களாகவும் மாறிபோய் விட்டன. தோஷத்தை வாங்கிக் கொண்டதற்கு பரிகாரமாக பூமி பிளந்தால் ஒன்று சேரக்கூடிய வரத்தை வழங்கினானாம் இந்திரன்.

விருட்சங்ளே... என் ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சினான். அப்படியானால், எங்களை வெட்டிப் போட்டாலும் வெட்டிய இடத்திலிருந்து துளிர்க்க வரம் தா என கேட்டன மரங்கள். வரம் கொடுத்த இந்திரன் உடனே தன் ப்ரம்மஹத்தி தோஷத்திலும் பாதியை கொடுத்தான்.

அதுதான் மரங்களில் பிசினாக (கோந்து) வழிந்து கொண்டிருக்கிறது. பெருங்காயமும் ‘ஹிங்கு என்ற மரத்திலிருந்து வந்த ஒரு பிசின்தான். அதனால்தான் பிராமணர்கள் முக்கிய விழா சிரார்த்தம் (தவசம்) போன்ற காரியங்களில் சமையலில் பெருங்காயத்தை உபயோகப்படுத்த மாட்டார்கள்.

இன்னும் பாதி ப்ரம்மஹத்தி தோஷத்தை வைத்திருந்த இந்திரன் கடைசியாக ஸ்தரீ சம்ஸாதம். அதாவது பெண்களின் மாநாட்டில் பிரவேசித்தான். அங்கே?

  CLICK TO READ >>>  பகுதி 38. இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்... மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.

THANKS TO: இந்து மதம் எங்கே போகிறது?

.

No comments: