Followers

Wednesday, April 1, 2009

இந்துக்கலாச்சாரம்- ”பப்” கலாச்சாரம் இந்தியப் பெண்களைக் கவ்வும் இரட்டை அபாயம்

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது

அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம்.

இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் "பப்'' கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த"ஸ்ரீராமசேனை''.