Followers

Monday, February 9, 2009

ஜோதிடப் புலி, சிங்கம், நரிகளும் வாயைத் திறக்கவே இல்லையே!

ஜோதிடத்திற்கு என்ன ஆயிற்று?

இந்து மத ஜோதிடர்கள் பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார் என்று வீராப்பு பேசி வருவது உண்டு.

நாளை (9.2.09) நடக்க இருக்கும் சந்திர (கிரகணம்)க் குறை பற்றி பஞ்சாங்கம் எதுவும் சொல்லவில்லையாம்.

ஒரு பத்திரிகை மெனக்கெட்டு கோயில்களில் விசாரித்ததாம். திருப்பதி தலைமையிலிருந்து தகவல் ஏதும் கிடையாது என்று தப்பித்துக் கொண்டாராம் திருமலை திருப்பலை தேவஸ்தான செயல் அலுலவர் கோபாலகிருஷ்ணன்.

மயிலாப்பூர் கபாலி கோயில் அதிகாரிகள் தமக்கு அப்படி ஒரு நிகழ்வு உள்ளதாக என்பது பற்றித் தெரியாது எனக் கூறிவிட்டாராம்.

பல பஞ்சாங்கங்களிலும் இது பற்றி ஏதும் இல்லையாம்.

இதனால் ஜோசியர்கள் குழப்பத்தில் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்களாம்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (நாசா) சந்திரக் குறை பற்றித் தகவல் தந்துள்ளது.

ஆசியக் கண்டத்தின் பெரும்பாலான பாகங்களில் இது தெரியும் எனக் கூறியுள்ளது. இந்தியாவிலும் தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா பகுதிகளில் தெரியும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜோதிடப் புலிகளும், சிங்கங்களும், நரிகளும் வாயைத் திறக்கவே இல்லையே!
SOURCE:viduthalai/20090208/

6 comments:

Giridharan V said...

இதோ தங்கள் பதிவிற்கு பதில் பதிவு போட்டாகிவிட்டது.

http://dondu.blogspot.com/2009/02/blog-post_09.html


மேற்கண்ட பதிவிற்கு காரணம் தங்கள் பதிவுதான். சரிதானே. ஒரு பதிலுக்கு காரணம் அதன் கேள்வியாகதானே இருக்கமுடியும்.

அன்புடன்,
கிரிதரன்

சிந்திக்க உண்மைகள். said...

dear gridharan,

வசமாக மாட்டிக்கொண்டால் எந்த சூழ்நிலைகளிலும் ஒரு பதிலை கூறி குழப்பிவிட்டு தப்பித்து கொள்வதில் வல்லவர்கள் பர்ப்பனர்கள்.

RAJ said...

ஐயா, தாங்கள் குறிப்பிடும் சந்திரன் நாமெல்லாம் அறிந்தது.

டோண்டு பிராமணர் குறிப்பிடும் சந்திரன் பரமசிவன் (பிறை சூடன் ) தலையில் சூடியிருக்கும் சந்திரன்.

வான் வீரர்கள் கால் பதித்ததும், இந்தியா உட்பட பல நாடுகள் விண்கலங்கள் அனுப்பி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் சந்திரன் வேறு.

இரண்டும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பரமசிவன் தலையில் கால்
வைக்க பிராமணர்கள் அல்லாத ஸூத்திரர்களை எப்படி அனுமதிக்க முடியும்.

அத்வவானி, சோ, சுப்ரமணிய சுவாமி, சங்கராச்சாரியார், தொகாடியா இவர்கள் கைகள் எல்லாம் மாங்காய் பறிக்கவா போய் விடும்?

Valaipookkal said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Unmai said...

Hi,

If you say that "jothida puli,singam,nari" are silent on this matter,

Then what do you you say when they predicted all other eclipses, movements of all the planets very precisely without any equipment(of NASA) all these years.

Sethu Raman said...

வைதிகஸ்ரீ தனது சர்வதாரி வருஷ
பஞ்சாங்கத்தில் - 9.2.09 - திங்கள்-சந்திர
கிரஹணம் (தர்ப்பணம் இரவு 7.41 முதல்
8.13க்குள்) சொல்லியிருக்கிறது!
தர்ப்பணம் வேண்டாம் என்பது
ஸ்பெஷல் டிஸ்பென்சேஷன்!! ஆமாம்
கண்மணிகளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை
கிரஹணத்திலும் அதன் பரிகாரங்களிலும்?