Followers

Tuesday, February 10, 2009

கடவுள் சாகுமா?

மாசாணியம்மன் மறுபடி பிறக்கிறதாம்! நள்ளிரவில் வாயில் மனித எலும்பைக் கடித்துக் கொண்டு கூத்தாடிய பக்தர்களை ஆனை மலைப் பகுதியில் காண முடிந்தது.

செத்துப்போன பெண் சாமியை உயிருடன் கொண்டுவரும் முயற்சியாம். அதற்கான விழாவாம்.

கடவுள் சாகுமா?
அம்மன் சாமி மரத்தில் இருந்த மாங்காயைப் பறித்துத் தின்று விட்டதாம். அரசுப் பொருளைத் திருடித் தின்ற குற்றத்திற்காக மாசாணியம்மனைக் கொலைத் தண்டனை அளித்துக் கொன்று விட்டானாம் நன்னன் எனும் மன்னன்.

மாசாணியம்மன் மறு பிறவி எடுத்து உயிருடன் வருமாம். அதற்காகச் சுடுகாட்டருகில் விழாவாம். எட்டு அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்ட மண் உருவம் மாசா ணியம்மனுக்குச் செய்து, பட்டுப் புடவையைப் போர்த்தி மேளம் அடித்துக் கூத்தடிக்கிறார்கள்.

வாயில் மனித எலும்பைக் கவ்விப் பிடித்தபடி, மண் மாசாணியம்மனின் உடலில் மாங்காய் மறைந்திருக்கும் இடத்தைப் பூசாரி தேடுகிறதும், கூடியிருக்கும் பக்தமாக்கள் ஆடிக் கொண்டே அவர்களும் தேடுவதும் விடிய விடிய நடந்துள்ளது.

பெண் பிணம் ஒன்றின் தொடை எலும்பைத் தேடிப் பிடித்துக் கடிக்கிறார்கள். 15 நாள்கள் நடக்கும் விழாவின் முடிவில் மாசாணி மறுபடியும் பிறப்பதாகப் பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் - ஏன் மறு ஆண்டும் இந்தக் கூத்தை நடத்துகிறார்கள்? மாசாணி மறுபடியும் மரித்து விட்டதா? மாங்காய் திருடியதா? மன்னன் தண்டனை தந்தானா?

மாசாணியம்மன் மறுபடியும் பிறந்துவிட்டது எனக் கூறி 15ஆம் நாள் மண் பதுமையைச் சிதைத்து விடுகிறார்கள். மறு ஆண்டு மீண்டும் ஆக்ஷன் ரிபீட்!

மக்களை மடமையில் ஆழ்த்திக் கொண்டே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விழா. மதுரை, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக் கல், தருமபுரி, கோவை மாவட்ட மக்களில் சிலரிடம் தான் இந்த மூட நம்பிக்கை!
தந்தை பெரியார் சொன்னதுபோல், "இவர்கள் காட்டு மிராண்டிகள்" தானே!
SOURCE: viduthalai/20090210/news11

4 comments:

Valaipookkal said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

நாஞ்சில் பிரதாப் said...

உலகமே அழிந்தாலும் இவங்களை திருத்த முடியாது... இவங்களுக்கு குடிச்சிட்டு கூத்தடிக்க மாசாணியம்மன்..மங்கணியம்மன் என யாரை வேண்டுமானாலும் உருவாக்குவார்கள்...
கொடுமை....

Valaipookkal said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்குநன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

G.Muthukumar said...

அதீத பக்தி என்பது ஒரு போதைதான் - இந்த போதையை பற்றி கேள்விகள் கேட்க சமூகம் ஒத்துகொள்வதில்லை. பகுத்தறிவு இங்கெ கேலிகூத்தாகி விடுகிறது.