Followers

Sunday, February 15, 2009

“சோ” தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்..பன்றியாக பிறப்பது யோகமா? சாபமா

பிராமனர்கள் மறு ஜென்மத்தில் பன்றியாக பிறப்பது யோகமா? சாபமா?

பிரளய காலத்தில் இருட்டில் இருந்த உலகை பன்றிதான் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். புராணம் கூறுகிறது.

இந்தப் பன்றியின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாம். நாக்கு அக்னியைப் போன்றதாம்; அதாவது நெருப்பு.அதன் மயிர்கள் தர்ப்பைப் புல்களாம்.தலை பிரம்மாவாம். பன்றியின் இரண்டு கண்கள்தாம் இரவும் பகலுமாம்.

வராகத்தின் காதணிகள் ஆறு வேதங்கங்களாம்.நாசித்துவாரங்கள் நெய்யாம்.
பன்றியின் குரல் சாமவேதத்தின் துதிகள் போன்றதாம்.

வேத கோஷத்தைச் செக்காடும் இரைச்சல் என்றார் புரட்சிக் கவிஞர் புராணமோ பன்றியின் குரல் என்றே கூறிவிட்டது. பலே!

பன்றியின் உருவமே யாகம் போன்றதாம்.
சாமஸ்ருதிகள் போன்றவை அதன் குடல்களாம்.

அதன் ஆண் பெண் குறி இருக்கிறதே, அது நெய்யை ஆகுதி செய்வதற்குச் சமமாம்; அவ்வளவு புனிதம். யாக மந்த்ரங்கள் போன்றவையாம்

படிக்க‌
பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம். -புராணம்

-------------------------------------------------------------------------
"பெரியார் உலகப்" பிராப்தியா?

ஓர் உலக்கைக் கொழுந்து கேட்கிறது -

ஆத்திகர்களில் சிலர் இவர் சிவலோகப் பிராப்தி அடைந்தார்! என்றும் சிலர் இவர் விஷ்ணுலோகப் பிராப்தி அடைந்தார் என்றும் சொல்கிறார்கள். நாத்திகர்கள் எந்த லோகத்துக்குப் போவார்கள்? -

என்று கேட்டதற்கு அறிவுக் கொழுந்து "சோ" தனது ஏட்டில் எழுதியுள்ளது -

எமலோகப் பிராப்தியோ என்னவோ - நமக்கென்ன தெரியும்? அல்லது பெரியார் உலகப் பிராப்தியாக இருக்கலாம் என்று எழுதியுள்ளது.

உலக்கைக் கொழுந்தும், அறிவுக் கொழுந்தும் ஒரே ஆள்தான் என்பது நமக்குத் தெரியும்! ஏன் இந்த அரிப்பு அவர்களுக்கு இப்போது?

செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் போகலாம் என்போர் பித்த மனிதர் என்று சங்கு ஊதிப் பாடிய பாரதியும் பார்ப்பனர்தான்!

மனிதன் பிறக்கிறான் - இறக்கிறான் - அவ்வளவே என்ற நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. ராமனும் பார்ப்பனர்தான்! முன்னவர் ஸ்மார்த்தர், பின்னவர் சிறீ வைணவர்!

இரண்டு பிரிவுப் பார்ப்பனரும் சிவலோகத்தையும் விஷ்ணு லோகத்தையும் நம்பவில்லை!

இந்த அபிஷ்டு நம்புகிறதா, இல்லையா தெளிவாக்கியதா என்றால் - இல்லை!

புதிதாக ஒரு லோகத்தைக் கற்பனை செய்து ஏகடியம் எழுதுகிறது.

எமலோகம் எழுதிய "சோ" ஏன் மாட்டுலோகம் பற்றி எழுதவில்லை?

கோலோகம் என்ற ஒன்றை கிருஷ்ணாவதாரம் எனும் புராணத்தில் புகுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்களே, கிருஷ்ணனைக் கும்பிடும் மாத்வர்கள்!
எல்லா லோகமும் பார்ப்பன மடி சஞ்சிகளின் சிருஷ்டி தானே!

இந்த லட்சணத்தில் பகுத்தறிவாளர்களான நாத்திகர்கள்பற்றி எழுத என்ன யோக்கியதை பார்ப்பனர்களுக்கு இருக்கிறது?

பார்ப்பனர்களின் எல்லாப் புரட்டுகளையும் தோலுரித்த பெரியார் - இறப்புக்குப் பின் எந்த லோகத்திலும் இருக்க மாட்டார்! இந்த லோகத்திலேயே இருக்கிறார் - பகுத்தறிவு, நாத்திகம், அறிவியல், மனித நேயம் என இன்னோரன்ன பல அறிவுக் கருத்துகளின் வடிவில் இருக்கிறார் - என்றென்றும் இருப்பார்!

அவருக்கு இடம் தேடும் வேலையை விட்டுத் தன் நிலையை எண்ணிப் பார்க்க சோவை அறிவுறுத்துகிறோம்.

சுருட்டு பிடிக்கும் பார்ப்பனர் அடுத்த ஜென்மாவில் பன்றியாகப் பிறப்பார்கள் என்று புராணம் கூறுகிறது! சோ தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்.
SOURCE: viduthalai/20090214/

3 comments:

Anonymous said...

probably he will eat shit also

Anonymous said...

இந்தப் பரதேசிகளுக்கு நன்றாகத் தெரியும் மோட்சம்,நரகம்,அடுத்த பிறவி இதெல்லாம் ஒன்றும் கிடையாது.
மத்தவங்களை ஏமாத்தத்தான் என்று.

இவனுங்க செஞ்ச செய்யுற பாவத்துக்கெல்லாம் கொதிக்கிற எண்ணையிலே இடுப்பு வரைக்கும் நிக்க வைக்கணும்.

anbil said...

சோ சொல்வது போல் நாம் எமலோகம் போக தயார். ஆனால் சோ கண்டிப்பாய் கைலாசம் போக தயார் ஆகிவிட்டார் என்றே நினைகிறேன்.