Followers

Friday, December 26, 2008

அட, துப்புக்கெட்ட தினமலரே! கி.வீரமணி அவர்கள் "மீ.கி.வீரமணி" ஆகியது

"தினமலர்" (26.12.2008) என்ற பார்ப்பன நஞ்சு கக்கும் ஏடு வழக்கம்போல தனது துப்புக்கெட்ட தனத்தை அரங்கேற்றியுள்ளது.


சென்னை - பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி - திராவிடர் கழக மகளிரணி மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் குழந்தைகளின் பெயர்களுக்குமுன் முன்னெழுத்து (Initial) தந்தையார் பெயரோடு, அம்மாவின் பெயரின் முன்னெழுத்தும் குறிக்கப்படவேண்டும் என்ற பெண்ணுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் - அதற்கு நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி,

தமது தாயார் பெயரான மீனாட்சி அம்மையார் என்னும் பெயரில் உள்ள முதல் எழுத்தையும், ஏற்கெனவே உள்ள "கி"யுடன் இணைத்து "மீ.கி. வீரமணி" என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

அந்த நேரத்திலேயே ஒரு விளக்கத்தையும் தெரிவித்தார். விஷமிகள் இது ஏதோ எண் சாஸ்திரம் (Numerology) என்று விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எச்சரித்திருந்தார்.

"தினமலர்" போன்ற பார்ப்பன நச்சரவங்கள் தனது உச்சிக் குடுமித் தனத்தைச் செய்யும் என்று தந்தை பெரியாரின் சீடரான அவருக்குத் தெரியாதா?

அவர் எதிர்பார்த்தபடியே பார்ப்பன விஷப்பாம்பு தனது பாஞ்சாலி வேலையைச் செய்திருக்கிறது.

பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடிக்கும் தமிழர் தலை வரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற கொழுப்பு "தினமலர்" கூட்டத்தின் தலையில் ஏறியிருப்பதாகத் தெரிகிறது.

நல்ல மாட்டுக்கு ஒரு "சூடு!" இன்னும் எத்தனைச் சூடுகளைத்தான் தமிழர்கள் கொடுப்பார்களோ தெரியவில்லை.
SOURCE:viduthalai/20081226/

No comments: