Followers

Sunday, November 9, 2008

ஒரு இந்தியரே அமெரிக்க அதிபராக பாரக் ஹூசேன் ஒபாமாவை வெற்றி பெற வைத்தார்.

அமெரிக்க அதிபராக பாரக் ஹூசேன் ஒபாமா வெற்றி பெற்றதை உலகமே கொண்டாடும் நாளில் உள்ளூர்க் காங்கிரசுக்காரர் நஜ்மோகன் பாமா என்பவர் தமது குரங்குக்குத் தான் எல்லாப் பெருமையும் என்று சொந்தம் கொண்டாடுகிறார்.


இவர் ஒரு அனுமன் பொம்மையை ஒபாமாவுக்கு அனுப்பி வைத்தாராம்; அதனால்தான் அவருக்கு வெற்றி வந்ததாம். வெள்ளை மாளிகையில் குரங்குக்குச் சிலை வைத்தால் ஒபாமா அமோகமாக இருப்பாராம்.
அமெரிக்காவுக்கும், உலகத்திற்குமே க்ஷேமத்தைத் தருமாம், குரங்கு!
பொன்முலாம் பூசப்பட்ட 15 கிலோ எடை உள்ள இரண்டடி குரங்கு பொம்மையைத் தந்தாராம். 10 டாலருக்கு மேல் விலை உள்ள காரணத்தால் நன்கொடையாகப் பெறக்கூடாது என்று மறுத்துவிட்டாராம்.

அதிபரானவுடன் அவசியம் வாங்கிக் கொள்வதாக இவரிடம் கூறியிருக்கிறாராம் அவர். காத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆஞ்சனேயனை, அதன் சக்தியை, அங்கீகரிப்பவராக இருந்திருந்தால் - நன்கொடையாகப் பெறுவதற்குப் பதில் காசு கொடுத்து விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டிருக்கலாமே! ஏன் ஒபாமா செய்யவில்லை?

அனுமான் ஆற்றலை அமெரிக்கா முழுவதும் அறிந்து கொண்டு விட்டதாம், அளக்கிறார் பாமா!

ஒபாமாவின் பதவியேற்புக்குப் போகப் போகிறாராம் பாமா! அப்போது குரங்குப் பொம்மையை நேரிலேயே கொடுக்கப் போகிறாராம். ததாஸ்து, ஆமென், ஆமீன்.

viduthalai/20081109/news

4 comments:

மஞ்சூர் ராசா said...

இது போன்ற லூசுகள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் போல.

செந்தழல் ரவி said...

அவர் இந்திய பிரதமருக்கு இன்னும் பொம்மை அனுப்பாத காரணம் பற்றி கேள்வி எழுப்பியிருக்கலாம் !!!

வித்தகன் said...

சரி, நிஜமாகவே இவர் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் பல விஷயங்களில் கருத்து வேறுப்பாடுக் கொண்ட அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதில் இவருக்கு என்ன அவ்வளவு அக்கரை? ஒபாமா உடனே இந்தியாவை வல்லரசாக மாற்றி விடுவாரா? அல்லது பாமாவை உடனிடையாக அமேரிக்காவின் இந்தியத் தூதராக அறிவிப்பாரா?

Joe said...

ஐயோ ஐயோ இவனுங்க இம்சை தாங்க முடியலைடா!