Followers

Tuesday, November 4, 2008

பாரதீய ஜனதா கட்சிக்கு சிக்கல் வரும்போதெல்லாம் குண்டு வெடிப்பு நடக்கிறது—காங்கிரஸ் குற்றசாட்டு

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. வுடன் தொடர்புடைய பெண் துறவி பிரக்யா சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்ட வேளையில்தான், அசாமில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.



காங்கிரஸ் குற்றச்சாற்று

போபால், நவ. 4- பாரதீய ஜனதா கட்சிக்கு சிக்கல் ஏற்படுகிற போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வருமான திக் விஜயசிங் குற்றம் சாற்றியுள்ளார்.

அதேபோல, எப்போதெல்லாம் தேர்தல்கள் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

மராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. வுடன் தொடர்புடைய பெண் துறவி பிரக்யா சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்ட வேளையில்தான்,

அசாமில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏனெனில் கவனத்தைத் திசை திருப்பவேண்டிய தேவை பா.ஜ.க.வுக்கு. இந்த இரு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நிகழ்ந்திருப்பது குறித்து கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

பா.ஜ.க.வின் முறைகேட்டை தெகல்கா ஏடு கமுக்கமாகப் படம் பிடித்து வெளிப்படுத்தியது குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க இருந்த வேளையில் தான் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்தது. அதே போல எப்போதெல்லாம் தேர்தல்கள் நடக்கின்றனவோ அப்போதெல்லாம் குண்டு வெடிப்புகள் நடக்கின்றன.

கருநாடகத்தில் முதல் கட்டத் தேர்தல் நடந்த நாளில் ஹூப்ளியில் குண்டுகள் வெடித்தன. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் குண்டு வெடிப்பு நடந்தது என்று திக்விஜய் சிங் கூறினார்.

பெண் துறவி பிரக்யாசிங்கின் தன்னார்வ அமைப்புக்கு குஜராத் அரசு நிதி உதவி அளித்து வருகிறது.

அவரது அமைப்புக்கு எங்கிருந்தெல்லாம் நிதி வருகிறது என்பதை விசாரிக்க வேண்டும்.

அண்மைக் காலமாக மசூதிகள் அருகில் நடந்த, இசுலாமியர்கள் கொல்லப்பட்ட குண்டுவெடிப்புகள் சங் பரிவார அமைப்புகளின் வேலையாகத்தான் இருக்கவேண்டும்.

இவை குறித்தும் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று திக்விஜயசிங் கோரினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம், பா.ஜ.க. ஆட்சி யில் பயங்கரவாதிகளின் மய்யம் ஆகிவிட்டது என்றும் அவர் குற்றம் சாற்றினார்.
viduthalai/20081104/news

No comments: