Followers

Wednesday, November 26, 2008

துக்ளக், தினமலர், பார்ப்பன பத்திரிக்கைகளில் வரக்கூடாத செய்திகள்

காவிக்கூட்டம் சவால் விடுகிறது. ஒவ்வொரு இந்துவும் இந்துக் கடவுள்கள் போல ஆயுதம் எடுத்துப் போராடவேண்டும்.

செயல்படுமா நடுவண் அரசு?
மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வில் புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. உயர்மட்டத் தலைவர்கள் ஒவ்வொருவராக இந்தச் சதியில் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருக்கிறது.


குறிப்பாக இந்திய இராணுவ அதிகாரியாக இருந்துவரும் சிறீகாந்த் புரோகித் கொடுத்துவரும் வாக்குமூலம் பல முக்கியத் தலைவர்களின் தொடர்பை அம்பலப்படுத்தி யுள்ளது.

விசுவ இந்துபரிசத்தின் பொதுச்செயலாளரான பிரவீன் தொகாடியாவும் இந்தச் சதியில் தொடர்புடையவர் என்று கூறியிருக்கிறார்.

இந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய அமைப்பான அபிநவ் பாரத்துக்கு நிதி உதவியைப் பெருமளவில் தொகாடியா செய்துள்ள விவரம் வெளியில் வந்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம் கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரும் - பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் என்பவர் மீதும் சந்தேகக்கண் விழுந்துள்ளது. அந்த ஆசாமியோ என்னைக் கைது செய்து பாருங்கள், பார்க்கலாம் என்று சவால்விட்டு திரிந்து கொண்டுள்ளார்.

இந்துக் கடவுள்களின் கைகளில் ஆயுதங்கள் எதற்கு இருக்கின்றன? ஒவ்வொரு இந்துவும் இந்துக் கடவுள்கள்போல ஆயுதம் எடுத்துப் போராடவேண்டும் என்று திமிரடியாகப் பேசி வருகிறார்.

இந்தப் பெரிய மனுசன்கள் மீதெல்லாம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்ற முறையில் சமீர் குல்கர்னி கொடுத்த வாக்குமூலம் மிகப்பெரிய அளவு அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.

மதக்கலவரங்களை நாடு முழுவதும் உண்டாக்க 5000 இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம். இதில் 55 பேர் வங்கதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனராம் - அங்கு மதக்கலவரத்தைத் தூண்டுவதற்கு!

இராணுவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துத்துவா தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்கிற தகவல் ஏற்கெனவே வெளியில் வந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு இந்தப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாகவிருந்தாலும், விளம்பரம் பெற்ற தலைவர்களாகவிருந்தாலும் சரி, கொஞ்சம்கூட தாடசண்யம் பார்க்காமல் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்!

இந்துக்கள் மீது வழக்குத் தொடுக்கக் கூடாது.

இந்து அமைப்புகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற முறையில் பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவரே மிரட்டுகிறார் என்றால், சட்டத்தை எந்த அளவுக்கு அந்தக் கூட்டம் கிள்ளுக்கீரையாகக் கருதுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இப்படித்தான் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்காமல், அலட்சியமாக இருந்து வருகிறது மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக்கூட்டணி அரசு.

சரியான வகையிலே வழக்கைத் துரிதப்படுத்தி எதிரிகள் சந்து பொந்துகளில் நுழைய முடியாதபடிக்கு விழிப்புணர்வுடன் வழக்கை நடத்தியிருந்தால், உண்மையான குற்றவாளிகள் இந்நேரம் சிறைச்சாலைகளில்தான் இருந்திருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால், அந்தக் குற்றத்திற்காக அவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பார்கள்.
அரசியல் நோக்கத்தோடு அல்ல -ஆட்சி முறையில் நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு இன்னும் வேகமாக மத்திய அரசு செயல்பட்டு இருக்கவேண்டும்.

அந்தக் கடமையைச் செய்யாத காரணத்தால்தான் என்னைக் கைது செய்து பாருங்கள்! என்று காவிக்கூட்டம் சவால் விடுகிறது - செயல்படுமா நடுவண் அரசு?

இந்துத்வப் பயங்கரவாதம் குற்றவாளிகள் சிறையில் அடைப்பு; மகாராட்டிர திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை -ஆர்எஸ்எஸ் அஞ்சுவது ஏன்?

மும்பை, நவ. 26- இந்துத்வப் பயங்கரவாதத்தின் சதிச் செயலை மாலேகானில் செய் தது தொடர்பாகக் கைது செய் யப்பட்ட புரோகித், பிரக்யா சிங் உள்பட அனைவரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கப்பட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராட்டிர மாநிலச் சிறப்புக் காவல் படையினர் மேற்கொண்டு புலன் விசா ரணை செய்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்குத் தடை போடும் முயற்சிகளில் சங்பரிவார்கள் ஈடுபடுவதாகக் காங்கிரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியுள்ளார். சதிச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் ஆள்களின் பெயர்கள் புலன் விசாரணையின் மூலம் வெளி வந்துவிடும் என்று அச்சப்படுகின்றனர் என்றும் அவர் கூறி யுள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர்களையே கொல்லும் திட்டம் அம்பலமாகியிருக்கும் நிலையில், பாஜகட்சி ஏன் சதிகாரர்களை ஆதரித்துப் பேசுகிறது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜகட்சிகளின் தலைவர் பொறுப்பிலிருந்து அத்வானி தூக்கி எறியப்பட்டதற்குக் காரணம் - அவர் ஜின்னாவைப் புகழ்ந்து பேசியதுதான்.

பாஜகட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணையை மேற் கொண்ட முதல் நாளிலிருந்தே எதிர்ப்பதற்குக் காரணம் இவர்களது சதித் திட்டங்கள் வெளி வந்து விடும் என்கிற அச்சத்தினால் தான் என்றும் அவர் கூறினார்.

சதிச் செயல்களுக்கு விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா நிதி உதவி செய்தார் என்கிற புகாரை அவர் மறுத்துக் கூறியுள்ளார்.

இந்துத்வப் பயங்கரவாதம் 5 ராணுவத்தினர்க்குத் தொடர்பு? ஆங்கிலத் தொலைக்காட்சி தெரிவிப்பு

புதுடில்லி, நவ.26: புதுடில்லியிலிருந்து ஒளிபரப்பாகும் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று, மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் பற்றிய சிறப்பு ஒளிப்பதிவில், போர்ப்படையைச் சேர்ந்த 5 பேருக்குச் சதிச் செயலில் தொடர் உண்டு என்று தெரிவித்துள்ளது.

இவர்கள் பயங்கரவாத அமைப்பான அபிநவ் பாரத்துடன் தொடர்பு கொண்டவர்கள். இதுபற்றி விசாரிக்க போர்ப்படை உயர் அதிகாரிகளுடன் விவாதிக்க மகாராட்டிர பங்கரவாதத்தை எப்படி காவலர்கள் புதுடெல்லி வந்துள்ளனர். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்கேராநாயணனுடனும் பேசினர்.

இந்த சதித் செயலில் சம்பந்தப்பட்டோர் என யார் யார் சிக்குவார்களோ? என்கிற நிலையில் இந்துத்வச் சக்திகள் பக்திரிகைகள் மூலம் தங்கள் பொய்ச் செய்திகளைப் பரப்பிக் காவல் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வழக்கமான கைங்கர்யங்களில் இறங்கியுள்ளனர்.

தாருண் பாரத் எனும் பிரபல மராத்தி, மொழி ஒரு ஒன்றில் பயங்கரவாதத் தடுப்புக் காவல் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கார் என்பவரின் மகன் அமெரிகாவில் உள்ளார். இவர் கள்ளப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் செயல்களில் இறங்கியுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவரின் மகனுக்கு வயது 17. மும்பையில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். இப்படிப் பொய்யை எழுதிப் புழுதி வாரித் தூற்றி, பந்தை அடிப்பதற்குப் பதில், ஆட்டக்காரரின் காலில் அடிக்கும் காரியத்தில் மதவெறியர்கள் இறங்கி உள்ளனர்.

புனேயைச் சேர்ந்த சிரிஷ் டடே என்பவருக்குத் தவறான முறையில் துப்பாக்கி உரிமம் வாங்கித் தந்த குற்றத்திற்காகக் காவலில் உள்ள புரோகித் (இன்று) புதன்கிழமை நாசிக் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவார். மாலேகாவ்ன் சதிச் செயல் தொடர்பாக இதுவரை 11 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகங்களில் இதன் துணைத் தலைப்பு, வழக்கமான பாகிஸ்த்தானின் ஐ.எஸ்.ஐ சதித் திட்டம் அம்பலம்" என்றோ நம் நாட்டின் காவல்துறை குற்றம் சுமத்தி விட்டு, ஆதாரங்களைத் தேடிப் பல்லாண்டு காலம் அல்லாடும் அமைப்பான "சிமியின் சதி தவிடுபொடி" என்றோஅண்மையில் 'உருவாக்கப் பட்டு' அடிக்கடி ஊடகங்களில் உலா வரும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் கோரமுகம்" என்றோ இருக்கப் போவதில்லை.

"ஆர். எஸ். எஸின் பொதுச் செயலாளர் மோகன் பகவத்தையும் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரையும் ஒழித்துக் கட்டுவதற்குத் திட்டமிருந்தது.

அவ்விருவரையும் கொன்று விட்டு, முஸ்லிம் அமைப்புகள் ஆர். எஸ். எஸ். தலைவர்களைக் கொலை செய்து விட்டனர் என்று திசை திருப்புவதற்கும் திட்டம் வகுத்திருந்தோம்" என்று மலேகோன் குண்டு வெடிப்பை நடத்தி, தற்போது மகாராஷ்டிர அரசின் தீவிரவாதத் தடுப்புப் படை(ATS)யினரது விசாரணையின் கீழுள்ள பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.

கொலைச் சதித் திட்ட ஆதாரங்களை, கடந்த வெள்ளிக்கிழமை (21.11.2008) எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சத்தித்துப் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K. நாராயணனும் நுட்புலத்துறை(ஐ.பி)த் தலைவர் P.C. ஹல்தாரும் அத்வானியிடம் காட்டியுள்ளனர்.

அதையடுத்து, கடந்த சனிக்கிழமை (22.11.2008) அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸின் இணைப் பொதுச் செயலாளர் மதன் தாஸ் தேவி, "இரு தலைவர்களைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப் பட்ட செய்தி உறுதியானதுதான்" என்று கூறியுள்ளார்.

"இந்துத் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர்களை, இந்துத் தீவிரவாதிகளே கொல்ல முயன்ற காரணம் என்ன?" என்ற கேள்வி ஒன்று எழுவதைத் தவிர்க்கவியலாது.

இந்தக் கேள்விக்கு விடை ATS வசம் தற்போது தோண்டப் பட்டுக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்குச் சொந்தமான மடிக்கணினிகளில் இருக்கிறது.ஆர். எஸ். எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத்தும் அதன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரும் 'போதிய அளவு' தீவிரமாகச் செயல்படவில்லை என்ற ஒரு குற்றமும் முஸ்லிம்கள் விஷயத்தில் அவ்விருவரும் மென்மையாக நடந்து கொண்டதாக இன்னொரு குற்றமும் அதில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது ATSயின் பிடியிலுள்ள சுதாகர் திவேதி (எ) தயானந்த் பாண்டே (எ) அம்ரிதானந்த் தேவ் தீர்த் மகாராஜுக்குச் சொந்தமான மடிக்கணினியில் காவல்துறைக்குத் தேவையான பாண்டேயின் 'இரகசிய சந்திப்புகள்' குறித்து நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன.

அவற்றுள் கடந்த ஜனவரி 26இல் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற ஆசிரமச் சந்திப்பும் போபாலில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற சத்திப்பும் மாலேகான் குண்டு வெடிப்புக்குச் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 'மிக முக்கிய'ச் சந்திப்பும் பாண்டேயின் மடிக்கணினியில் பதிவு செய்யப் பட்டுள்ளன

குண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு!!!இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றிதழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்களைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதைகளை பரப்பி வந்தனர்.

அப்பாவி இந்துக்களை ஏமாற்றுவதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர்.

அதனால் நாடெங்கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தினர். வன்முறைகளில் நாட்டின் பெருமைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரையினர் போல் நடத்தப்பட்டனர்.ஊடகங்களும் கூட இந்த பாரபட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.சத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

செப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர்பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.

காலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின.சங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது.

இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.இவர்கள் தங்களது பிற்போக்குத் தனமான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.சாமியார்கள் பயங்கரவாத சாமியார்களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுருவின.

உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

சங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.பெண் சாமியார் பிரக்யாசிங் போன்றவர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.

இந்நிலையில் இதுவரை பெரிய முதலைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.மதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!)

தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்
VIDUTHALAI.NOV152008

No comments: