Followers

Friday, November 21, 2008

அலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கின்றன.

இந்துத்வ வெறி பயங்கரவாத செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன.

இந்துத்வ பயங்கரவாதம்:சம்ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மசூதி, அஜ்மீர் தர்கா சதிகளிலும் புரோகித்துக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு

மும்பை, நவ. 20- காந்தியாரைக் கொன்ற இந்துப் பயங்கரவாதம் அதன் பிறகு நடத்தியுள்ள சதிச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன. அபிநவ் பாரத் எனும் பயங்கரவாத அமைப்பு எல்லா சதிச் செயல்களையும் நடத்தியுள்ளது என்பது வெளிவந்துள்ளது.

பான்டே சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நபருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது. பான்டே அபிநவ் பாரத் அமைப்பின் ஊதியம் பெறும் நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அபிநவ் பாரத் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்புதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், ரயிலில் 68 பேர் கொல்லப் பட்டதற்கும், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கும் காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்ட சுனில் ஜோஷி என்பவன் 2007 இல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். இந்தச் செய்தியை புரோகித்திடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, சம் ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணமான ஜோஷி தியாகியாகி விட்டார் என்று புரோகித் குறிப்பிட்டார் என்பதை வாக்குமூலத்தில் ஒரு சாட்சி தெரிவித்துள்ளார்.

இத்தகயை சதிச் செயல்களை குஜராத்தைச் சேர்ந்த ஜதீன் சாட்டர்ஜி என்பவர்தான் செய்துள்ளார். இவரை சாமி அசிமானந்த் என்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமம் எனும் சர்ச்சைக்குரிய அமைப்பை நடத்தி பழங்குடியினரிடையில் கலவரம் செய்து வரும் அமைப்பை இவர் நடத்தி வருகிறார். இவரையும் கல்சங் ராம் என்பாரையும் இன்னும் கைது செய்ய முடியவில்லை.

சாத்வி பிரக்யா சிங் தனது மோட்டார் சைக்கிளை ஜோஷிக் குக் கொடுத்திருந்ததும் அவர் கொல்லப்பட்ட பின்னர் அதனை கல்சங்ராம் பயன்படுத்தி வெடி குண்டு வைத்து மாலேகாவ்னில் வெடிக்கச் செய்ததும் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.

மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் அபிநவ் பாரத் அமைப்பின் சுனில் ஜோஷி சதிச் செயல்களில் ஈடுபட்டதை 2002 இல் கண்டு பிடித்தது. அப்போதைய காங் கிரசு முதல் அமைச்சர் திக் விஜய் சிங் இது பற்றி அறிவிப்பு செய்து பஜ்ரங்தள் உள்பட இந்துத்வ அமைப்புகள் ஈடு பட்டது குறித்து ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

ஆனால் பிறகு முதலமைச்சராக வந்த உமாபாரதி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று 2003 இல் உத்தரவிட்டு விட்டார்.
இந்துத்வ வெறிக் கட்சிகள் இந்துப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றி ஆதரவு அளித்து வந்துள்ளனர். இப்போது மகாராட்டிர அரசு நடவடிக்கை எடுக்கும்போது அலறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.viduthalai/20081120/

இந்துத்வ பயங்கரவாதம்:கைதான புரோகித் மீது மேலும் இரு வழக்குகள்
ஆர்.டி.எக்ஸ் கடத்தியது பற்றி ராணுவ அதிகாரி சாட்சி - பான்டே சங்கராச்சார்யாவுக்கு மெய் அறியும் சோதனை

நாசிக், நவ. 20- மாலேகான் குண்டு வெடிப்புச் சதி தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நவம்பர் 29 வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிடப் பட்ட ராணுவ அதிகாரி புரோ கித் மீண்டும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொய் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து இரண்டு பேர்களுக்கு துப்பாக்கி உரி மங்களை இராணுவ ஒதுக்கீட் டில் வாங்கிக் கொடுத்த வழக்கு தொடர்பாக இந்த ஆணை.

போர்ப்படைக்குச் சொந்த மான ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைத் திருடி குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கு புரோகித் பயன்படுத்தியது தொடர்பாக, மற்றொரு போர்ப்படை அதிகாரி கேப் டன் நிதின் ஜோஷி வாக்கு மூலம் கொடுத்து உள்ளார்.

மாஜிஸ்டிரேட் முன்னிலையில் தரப்பட்ட இந்த வாக்குமூலம் வழக்கில் மிக முக்கிய சாட்சிய மாகக் கருதப்படும். பல கூட் டங்களை ஏற்பாடு செய்து அவற்றில் பேசி சதிகாரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் புரோ கித் என்பது இன்று நீதிமன்றத் தில் தெரிவிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சங்கராச்சார்யா
பான்டே சங்கராச்சார்யா, காவல் துறைப் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு மெய் அறியும் நார்கோ அனலைசிஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரே கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப் படை யில் கேள்விகள் தயாரிக்கப் பட்டு கேட்கப்பட்டன. இரண்டாம் முறையாகவும் இச் சோதனை நடத்தப்படுமா என்பது இனிமேல் தெரியும்.

அத்வானி பேச்சு
இந்நிலையில் பிரதமர் கனவில் பவனி வரும் அத்வானி, பெண் சாமியார் பிரக்யாவுக் குப் பரிந்து பேசியுள்ளார். அவர் மீதான குற்றச்சாற்று களைக் காவல்துறை விசா ரணை செய்யக் கூடாது என்றும் நீதி விசாரணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

1992 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பற்றிய நீதி விசாரணை 16 ஆண்டுகளாக முடியாமல் இழுத்தடித்துக் கொண்டு வரப்படுகிறது. அதில் குற்றம் சாற்றப் பெற்ற அத்வானி - வழக்கைச் சந்திக்காமலே வலம் வந்து கொண்டிருக்கிறார். குற்ற வாளிகள் தப்பிக்கும் மார்க்கம் நீதி விசாரணையில் இருப்ப தால் இதைக் கேட்கிறார் போலும் viduthalai/20081120/

இந்துத்வ பயங்கரவாதம்அபிநவ் பாரத் தேசிய ஒருங்கிணைப்பாளர்சுதாகர் சதுர்வேதி கைது செய்யப்படுவார்

மும்பை, நவ.20- மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதியில் தாம் ஈடுபட்டதாக ஒத்துக் கொண் டுள்ள சுதாகர் சதுர்வேதி எனும் பார்ப்பனர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை, பயங்கரவாதத் தடுப்புக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆள் அபிநவ் பாரத் அமைப்பின் கூட்டங்களை தேவ்லாலி, இந்தூர், குஜராத், பஞ்ச்சமதி, ஜபல்பூர், ஃபரிதாபாத், அரியானா முதலிய இடங்களில் ஏற்பாடு செய்து பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டதை ஒத்துக் கொண்டு விட்டார்.

லெப்டினன்ட் கர்னல் புரோகித் சதி யைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்துச் செய்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவுறுத்தலின் பேரில் பா.ஜ. கட்சியின் ராஜ்நாத் சிங்கும் அத்வானியும் புரோகித்துக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்டதும் புரோகித் தன் பங்குக்குத் தன் உயிருக்கு ஆபத்து வந்தால் மராட்டிய காவல்துறைதான் அதற்குக் காரணம் என்று கூற ஆரம்பித்து விட்டார்.viduthalai/20081120/

ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு!காலங்கடந்தாலும் மிக முக்கியமான செயலில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் இறங்கியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

ஆர்.எஸ்.எஸ். நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. சரசுவதி சிசு மந்திர், பிரகாஷன், வித்யா பாரதி போன்ற பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன.

இந்தக் கல்வி நிறுவனங்களில் வரலாறுகளை திரித்து, மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா வெறியைத் திணிக்கும் வகையிலும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்மீது வெறுப்பு நச்சு விதைகளை ஊன்றும் வகையிலும் பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாற்றுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன.

இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன்சிங் ஆணை பிறப்பித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளில் ஏதோ இப்பொழுதுதான் இந்த வகையில் பாடத் திட்டங்கள் அமைந்துள்ளன என்று கருதக்கூடாது.

தொடக்க முதலே இதே வேலையைத்தான் அவர்கள் செய்து வருகிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்ததுண்டு.

1992 இல் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போதே அய்ம்பது வரலாற்றுப் பேராசிரியர்கள் கையெழுத்திட்டு இந்த உண்மையை வெளிப்படுத்தினர்.

20.11.1998 நாளிட்ட ஃப்ரண்ட் லைன் ஏடு பின்வருமாறு எழுதியது:
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கல்வித் திட்டத்தில் வரலாற்றுத் தவறுகள், ஒரு பக்கம் சார்ந்த பொய்கள், மாச்சர்யங்கள் காலத்தால் உண்மைக்குப் புறம்பானவை என எடுத்து வீசப்பட்டவை, கோட்பாடுகள், கற்பனைகள் இவை யெல்லாம் அப்படியே விட்டு வைக்கப்படவில்லை.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இவை அவ்வப்பொழுது அதிக பொய்களைக் கொண்டு வலுவூட்டப்படுகின்றன என்று ஃப்ரண்ட் லைன் இதழே எழுதியதே!

ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவை ஆக்கிரமிப்புச் செய்தனர்!

இந்தியாவின் பூர்வீகக் குடிமக்களான திராவிடர்களைத் தென் பகுதிக்கு விரட்டினர் என்பது பொய்; ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள்!
என்று பாடத் திட்டத்தில் வெளியிடப்பட்டிருந்தன
.

உத்தரப்பிரதேசத்தில் சங் பரிவாரின் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளி - ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற ஒரு விவரம்:

முலாயம்சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சார்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப் பட்டனர்?


கணக்குப் பாடத்திலும்கூட இதே போக்குதான்.

10 கரசேவகர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் 15 நாள்கள் ஆகும். 20 கரசேவகர்கள் இடித்தால் எத்தனை நாள்களாகும்

என்பன போன்ற வினாக்கள்! எதிலும் இந்து நஞ்சை விதைத்து, எதிர்கால நம்பிக்கைக்குரிய சிற்பிகளை விஷ விருட்சமாக வளர்த்திட திட்டமிட்டுச் செயல்பட்டனர் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து!

அடால்ப் ஹிட்லர் பாடத் திட்டங்களில் யூதர்கள் மீதான வெறுப்பைக் கக்கும் நஞ்சுகளைத் திணித்தனர்.

ஒரு யூதன் ஒரு பசுவை 100 (மார்க்) வாங்கி 150 மார்க்குக்கு விற்றால் யூதன் பெற்ற லாபம் என்ன என்பதற்குப் பதிலாக, யூதன் அடித்த கொள்ளை எவ்வளவு?என்று வினாக்கள் அமையும்.

இட்லரைப் பல வழிகளிலும் பின்பற்றும் கூட்டம்தானே (கொடி ஸ்வஸ்திக் முதற்கொண்டு) இந்த இந்துத்துவா பாசிசக் கும்பல்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இந்தப் பிரச்சினையை தலையாயதாகக் கருதி, ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களை வன்முறை என்னும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக மாற்றிவரும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்.

தெரிந்தே, திட்டமிட்ட வகையில் இந்த மாபெரும் குற்றத்தைச் செய்யும் நிருவாகத்தின்மீது சட்டப்படியான நடவடிக் கைகளை எடுக்கவேண்டும் என்றும்வலியுறுத்துகிறோம்.viduthalai/20081120/news

No comments: