Followers

Saturday, November 15, 2008

பூணூலுக்குள் இவ்வளவு அசிங்கமா? "அண்ணா திமுகவும் பூணூலும்!"

"அண்ணா திமுகவும் - தொழில் எழுத்தாளர்களும்" தலையங்கம் (திருச்சி (10.112008), "பூணூல்" பற்றிய புரிதலை அதிமுகவினருக்கு நன்கு புகட்டியுள்ளது எனலாம்.

தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதைபோல, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான் இந்தப் பூணூல் விவகாரமாகும்.

பூணூல் அணிவது என்பது துவிஜர் - எனப்படும் இரு பிறப்பாளர்களுக்கு உரிய மதச் சடங்காகும். இப்பூணூல் அணிவதற்குக் கால வரையறையுண்டு. இச்சடங்கை உபநயன சமஸ்காரச் சடங்கு என்றும் கூறுவதுண்டு.


பார்ப்பனர்கள் கருவறையிலிருந்து 8 வயது முதல் 16 வயதிற்குள்ளும், சத்திரியர்கள் 11 வயது முதல் 22 வயதிற்குள்ளும், வைசியர்கள் 12 வயது முதல் 24 வயதிற்குள்ளும் பூணூல் அணியும் சடங்கை பூர்த்தி செய்திட வேண்டும். இதன்பிறகு தான் ஒருவனுக்கு சமிதாதானம் முதலிய விரதா நுஷ்டானமும் வேதாந்திய யனமும் கிரமமாக விதிக்கப் பட்டிருப்பதாக மனுதர்மம் (அத்:2, சுலோ: 173) கூறுகிறது.

உரிய வயதிற்குள் ஒருவன் இப்பூணூல் சடங்கை மேற் கொள்ளாவிட்டால் விராத்தி சாதியினர் எனப்படும் புறச் சாதியினராக் கருதப்பட்டு, குடிநீக்கம் செய்யப்படுவர். மேலும், இவர்கள் காயத்திரி மந்திரத்தின் நலன் பெற (!)
தகுதியற்றவர்களாவதோடு, வைதிகக் காரியங்களையும் செய்ய தகுதியற்றவர்களாகி விடுவர்.

ஒருவன் பூணூல் அணிவதற்கு முன்பு அவனுக்குப் பெற்றோர்கள் தாயும் தந்தையுமாவர். இது அவனுக்கு முதல் பிறப்பு. பூணூல் அணியும் சடங்கு முடிந்துவிட்டால், அது அவனுக்கு இரண்டாவது பிறப்பாகும்.

இப்போது அவனுக்குத் தாய் காயத்திரி, தந்தை ஆசாரியான் என்பது மனுதர்மத்தின் (அத்;2, சுலோ: 170) விளக்க மாகும். மேலும், அவன் சர்ம நாமம் என்னும் இரண்டாவது பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையும் பெற்றவனாகி விடுகிறான்.

எவன், உபநயனம் செய்து வித்து, யாக மந்திரங்களையும் வேத வேதாந்தங்களையும் ஓதுவிக்கிறானோ, அவனை ஆசாரியனென்று சொல்கிறார்கள் என்று சொல்கிறது மனுதர்மம் (அத்: 2, சுலோ: 140) என்பது உணரத்தக்கதாகும்.

கோயில் கருவறைக்குள் பூணூல் போடும் பார்ப்பான் தான் போக முடியுமே தவிர, பூணூல் போட்ட செட்டியாரோ, ஆசாரியாரோ செல்ல முடிவதில்லையே என்னும் தலையங்க விளக்கத்தை அந்த அண்ணா திமுக தொழில் எழுத்தாளர் விளங்கிக் கொண்டால், நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியேயாகும்.

ஆசாரிகள் பூணூல் அணிந்து கொள்வது தொடர்பான ஒரு வரலாற்றுச் செய்தியை, அந்த அண்ணா திமுக தொழில் எழுத்தாளருக்கு நினைவுபடுத்துவது, அவர் இன்னும் தெளிவு பெற உதவும் என நம்புவோமாக!

பொற்கொல்லர்களான ஆசாரிகள் பார்ப்பனர்களைப் போல பூணூல் அணிந்து கொள்ளும் உரிமை வேண்டி அரசனிடம் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை பரிசீலிக்குமாறு அரசன், பார்ப்பனர்கள் அடங்கிய சபைக்குத் தெரிவித்தான். அப்பார்ப்பனச் சபையினர், ஆசாரிகள் எங்களுக்குப் பிறந்த அநுமோலர்கள் என்பதால் (பார்ப்பானுக்கும், ஆசாரிப் பெண்ணுக்கும் பிறந்தவர்கள்) அவர்களுக்கு பூணூல் அணிந்து கொள்ளும் உரிமை மட்டும் உண்டு.

அதுவும் அப்பூணூல் பருத்தி, சணல் ஆகியவற்றால் இருக்கக் கூடாது. மேலும், இச்சடங்கை பார்ப்பனர்களைப் போன்று காயத்திரி மந்திரம் ஓதி செய்யக் கூடாது. அக்கினி கோத்திரம், அவ்பாசனம் முதலியவற்றையும் செய்யக் கூடாது.

இவ்வுண்மையை, திருச்சிராப்பள்ளி உய்யக் கொண்டான் திருமலை எனப்படும் திருக்கற்குடிக்கோயிலில், முதற் குலோத்துங்கனது 48-ஆம் ஆட்சியாண்டுக் கல் வெட்டு ஒன்றில், இன்றும் காணலாம் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

வேதங்கள் கற்கவும், ஓதவும் உரிமைப் பெற்றவர்களுக்கான அடையாளமே பூணூல் ஆகும். இந்த அடையாளம் குறிப்பாக ஆசாரிகளுக்கு அறவே இல்லை என்பதோடு, பூணூல் அணிய அவர்களுக்குக் கூறப்படும் காரணம்

பூணூலுக்குள் இவ்வளவு அசிங்கமா? எனவும் எண்ணத் தோன்றுகிறதல்லவா! அதிமுக தொழில் எழுத்தாளர் புரிந்து கொண்டால் சரி!
"சுரண்டல் சுயநலம் சூழ்ச்சி மயக்குதல்ஆரியக் கூத்தாம் அறி"viduthalai/20081115/snews .

2 comments:

வான்முகிலன் said...

புணூல் என்பதே அசிங்கம்.

அசிங்கத்திற்குள் அசிங்கம் இல்லாமல் வேறென்ன இருக்க முடியும்?

வான்முகிலன் said...

புணூல் என்பதே அசிங்கம்.

அசிங்கத்திற்குள் அசிங்கம் இல்லாமல் வேறென்ன இருக்க முடியும்?