Followers

Friday, November 14, 2008

இந்து சாமியார்களைச் சிக்க வைக்க சோனியா காந்தியின் திட்டம். சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு.

இந்துப் பயங்கரவாதம் வெளிச்சத்துக்கு வந்ததால் இந்துத்துவக் கட்சிகள் அலறுகின்றன. இராணுவமே இந்து மயமாகிவிட்டதோ - இந்துப் பயங்கரவாதத்திற்குத் காரணமான சாமியார்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் அகப்பட்டுக் கொண்டு சிறை வாசம் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டு விட்ட பிறகும் பா.ஜ. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பற்றிக் குறிப்பிட்டு இம்மாதிரிச் செயல்கள் இந்துக்களின் மனதில் காங்கிரசு அரசுமீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
விசுவ இந்து பரிசத்தின் தலைவர் அசோக் சிங்கால் இந்து சாமியார்களைச் சிக்க வைக்க சோனியா காந்தியின் திட்டம் என்று கூறி சாமியார்கள் உத்தமர்கள் என்பது போல் பேசியுள்ளார்.

குற்றம் புரிந்தது எண்பிக்கப்பட்டால், சாத்லி பிரதிக்யா தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்று எல்.கே. அத்வானி முன்பே கூறிவிட்டார். சாத்வி குற்றம் புரிந்தது அம்பலமான நிலையில் இதுபற்றிக் கருத்து கூறாமல் நோ கமென்ட்ஸ் எனக் கூறித் தப்பிக்கிறார்.

ஃபரிதாபாதில் உள்ள ஆன்மிக குரு ஒருவர் கூறிய அறிவுரைப்படியே தாம் வெடி குண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்டுள்ள புரோகித், நார்கோ அனலைசிஸ் சோதனையில் ஒப்புக் கொண்டுவிட்டார்.

பணம் படைத்த இந்து மத வெறியர்களின் நிதி உதவியால் சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

பயங்கரவாதிகள் நாட் டுக்கே எதிரானவைகள். அவர்களின் விசயத்தில் நான் ஏன் பா.ஜ. கட்சி சாதகமான அணுகு முறையைக் கையாள்கிறது என்று காங்கிரசுக் கட்சி கேட் டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் படை தன் கடமையைச் செய்யும் போது பா.ஜ. கட்சிஏன் அதிர்ச்சி அடைகிறது என்றும் காங்கிரசுச் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கேட்டுள்ளார்.

பயங்கரவாதிகளுடைய , பயங்கரவாத அமைப்புகளும் நாடு முழுக்க மத ரீதியான கலவரங்களை உருவாக்கத் திட்டமிட்டு இருப்பதைக் குறிப்பிட்டும், ஒரிசா, கரு நாடகா மாநிலங்களில் நடந்தவற்றை எடுத்துக்காட்டியும், எல்லா முதலமைச்சர்களுக்கும் இந்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சூழலில் சுற்றறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பஜ்ரங்தள் அமைப்பு தடை செய்யப்படும் என்றும் சேதிகள் வெளியாகியுள்ளன.
viduthalai/20081114/news

இந்துப் பயங்கரவாதம் கைது செய்யப்பட்ட"சங்கராச்சாரியா" முன்னாள் ராணுவத்தினர்

இராணுவமே இந்து மயமாகிவிட்டதோ!

லக்னவ், மும்பை நவ. 14- ஜம்மு பகுதியில் சங்கராச்சார்யா என்று கூறிக் கொண்டு இந்துப் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்த சுதாகர் துவிவேதி, தயா னந்த பாண்டே என்னும் சுவாமி அம்ருதானந்ததேவ் தீர்த்த மகராஜ் என்றும் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் பாண்டே சங்கராச்சாரியா மும்பைக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மும்பைக்குக் கொண்டு வரப்படுகிறார். சிறீகாந்த் பிரசாத் புரோகித் எனும் போர்ப்படை அதிகாரியை இந்துப் பயங்கரவாதத்தில் ஈடுபடத் தூண்டியவர் இவர்தான் எனக் காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

புரோகித்தின் குரு
இவரைத்தான் குரு என்று புரோகித் கூறியுள்ளார். டெல்லிக்குப் பக்கத்தில் எட்டு ஏக்கர் பரப்பில் ஆசிரமம் கட்டிக் கொண்டு இந்துக்களுக்குக் கொடுமை செய்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்று தூண்டி வந்தவர். மாலேகான் குண்டுவெடிப்புச் சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவருமே இந்த பாண்டேவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்தான் சதிச் செயலில் ஈடுபடத் தூண்டு கோல் என்றே கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் இந்து மதப் பெருமைகளைப் பரப்பிடவும் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அபாய நிலையை நாடு முழுவதும் பரப்பிடவும் காஷ்மீரை விட்டு வெளியேறியுள்ள இந்துப் பார்ப்பனர்களின் மறு வாழ்வுக்கு உதவிடவும் என்கிற நோக்கங்களுடன் இவர் செயல் டுவதாகத் தெரிவித்துக் கொண்டுள்ளார். காஷ்மீர்ப் பகுதியில் போர்ப்படையில் கைதான புரோகித் பணியாற்றி உள்ளார். அங்குதான் பான்டேயைத் தன் குருவாக புரோகித் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்துப் பயங்கரவாதியான இந்தச் சங்கராச்சார்யா தனது குருவாக வாரணாசியிலுள்ள நரேந்திரானந்த் சரசுவதியைக் கூறுகிறார். ஆனால் அவரோ இவரைத் தன் சீடன் அல்ல என்கிறார் இந்த நபர். 5-6 மாதம் விமானப் படையில் பணி புரிந்து நிதிக் கையாடல் ஒழுங் கீனங்களுக்காக வெளியேற்றப்பட்டவர் என்று நரேந்திரானந்த சரசுவதி கூறியுள்ளார்.

68 பேர் சாவுக்கும் காரணம்

இந்நிலையில் மற்றும் ஒரு இந்து பயங்கரவாதக் குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சதிச் செயலுக்காக இவர்களை விசாரிக்க அரியானா மாநிலக் காவல் துறை முயல்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடிக் கொண்டிருக்கும் சம் ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் 68 பேர் கொல்லப் பட்ட சதிகளில் பான்டே, புரோகித், பிரக்யா ஆகியோர் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.

இந்தக் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சூட்கேஸ் குண்டுகள் பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம் இந்தூரில் தயாரிக்கப்பட்டவை எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இவர்கள் மீது விசாரணை நடத்த அரியானா மாநிலக் காவல்துறை முடிவு செய்துள்ளது.

கேரளாவில் குண்டுகள்
கடந்த 11 ஆம் தேதி கேரள மாநிலம் கன்னூரில் இரண்டு ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெடி குண்டு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு இறந்து போனார்கள். அந்தப் பகுதியில் கேரளக் காவல் துறையினர் விசாரணை செய்தபோது, இந்துக் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 125 வெடி குண்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த இடமும் வெடி குண்டு வெடிப்பு நடந்த இடமும் பக்கத்துப் பக்கத்து இடங்களாகும். இந்துக் கோயில் இந்தச் செயல்களுக்கு பாது காப்பு தந்துள்ளதோ?

இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் 12 அய்ஸ்கிரீம் வெடி குண்டு களைக் கைப்பற்றி கேரளக் காவல்துறை விசாரித்து வருகிறது. இப்படியாக இந்தியா முழுவதுமே வெடிகுண்டுக் கலாச்சாரத்தை விதைத்து வளர்த்து வரும் இந்து மத வெளி ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்கள். இந்த ஆபத்திலிருந்து மீளும் நடவடிக்கைகள் எப்போது எடுக்கப்படும் என்பது கேள்வி.
viduthalai/20081114/news

இந்துப் பயங்கரவாதம் மாலேகான் குண்டுவெடிப்புச் சதி தொடர்பாக மேலும் ஒரு சாமியார் கைது

இந்து மதத்தவரின் தொடர்புகள் அம்பலம்
லக்னோ, நவ. 13- மாலேகான் குண்டுவெடிப்புச் சதி தொடர்பாக தயானந்த பான்டே என் பவரை மும்பை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக் காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.

இந்த ஆள், அம்ருதானந்த் என்று பெயர் வைத்துக் கொண்டு ஆன்மிகக் குருவாகச் சொல்லிக் கொண்டிருப்பவர். அத்துடன் ஜம்முவில் சாரதா சர்வக்ய பீடம் என்று ஒரு மடம் கட்டிக்கொண்டு அதன் மடாதிபதியாகவும் இருக் கிறார். செப்டம்பர் 27 இல் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசக் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இவரைக் கைது செய்துள்ளனர். கான்பூர் நகருக் கருகில் ராவல்பூர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார். இவர் காசியைச் சேர்ந்தவர். ஜம்மு வில் திருகாட நகர் பகுதியில் தங்கியிருந்தவர். கான்பூருக்குச் சில நாள்களுக்கு முன்பு தான் வந்தார். இவரைக் கைது செய்து விசாரிக்க நாசிக் நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இவருக்கு சுதாகர் துவி வேதி என்ற பெயரும் உள்ளது.

தயானந்த பான்டேயின் ஆடிட்டர் வி.கே.கபூர் என்ப வரும், அவரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போன்சலா மிலிட்டரி பள்ளியின் நிருவாகி ஓய்வு பெற்ற மேஜர் சைலேஷ் ராய்கார் அப் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு
முன்னதாகக் கைது செய்யப்பட்ட சிறீகாந்த் பிரசாத் புரோகித் பயன்படுத்திய மடிக் கணினி கைப்பற்றப்பட்டு விட்டது. குற்ற அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நார்கோ அனலைசிஸ் சோதனையின்போது இவர் -சங்கராச்சாரியாரிடமிருந்து அறிவுரைகள் வழங்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.

இது பற்றிக் காவல்துறை ஆய்வு செய்தபோது தயானந்த் பான் டேதான் சங்கராச்சாரி எனக் கண்டுபிடித்துள்ளனர். இவர் தன்னை ஆதிசங்கரனின் வாரிசு எனக் கூறிக்கொண்டு பான்டே சங்கராச்சாரியார் எனக் கூறிக் கொள்வாராம். புரோகித் சம் ஜவுதா விரைவு வண்டியில் ஏற்பட்ட இரண்டு குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட் டுள்ளாரா என்பதுபற்றியும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குண்டு வெடிப்பில் 68 பேர் இறந்து விட்டனர்.

மற்றொரு சாமியாரும் மாட்டுவார்
உத்தரப்பிரதேசம், காசியில் உள்ள சுமேரு பீட மடாதிபதி சுவாமி நரேந்திரானந்த் என்ப வருக்குச் சதிச் செயல்களில் உள்ள தொடர்புபற்றியும் விசா ரிக்கப்பட்டு வருகிறது.

அதுபோலவே, கைது செய்யப்பட்ட புரோகித் போர்ப் படை அதிகாரியாக இருந்து கொண்டே இந்துப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதை, ராணுவ உயர் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் விசாணை நடத்தப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாகக் கமுக்கமாகச் செயல்பட்டு வந்த இந்துப் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளின் முனை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முழு வதும் வெளிக்கொண்டு வரப்படவேண்டும் என்று அமைதியை விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
viduthalai/20081113/news

1 comment:

Thamizhan said...

உயர் நீதி ம்மன்றங்கள்,உச்ச நீதி மன்றம் இவற்றில் பாதிக்கப் பட்டவர்கள் சார்பிலே வழக்குகள் போடப்பட்டு உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.
அரசும்,அதிகாரிகளும் செய்வார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.