Followers

Sunday, November 9, 2008

பணம் சம்பாதிக்கும் இலகு வழி. பேய் விரட்ட இலகு முறை.

தேவை சவுக்கு, சூடம், ஒரு பிளாஸ்டிக் தட்டு. எப்படிபட்ட பேயும் என்னை விட்டு விடுங்கள். நான் போய் விடுகிறேன் என்று கதறிக்கொண்டோடிவிடும்.

சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விழாவாம்.



 திருச்சி மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் உள்ள அச்சப்பன் கோவிலில், விஜயதசமியையொட்டி பேய் விரட்டும் திருவிழா நடந்தது. பேய் பிடித்த பெண்கள் வரிசையாக அமர்ந்து இருக்க, கோவில் பூசாரி அவர்கள் கையில் சாட்டையால் அடித்து பேய் விரட்டிய காட்சி.
viduthalai/20081010/news 


மூடத் தீ சுட்டது!


என் பெயர் சுப்புலட்சுமி. நான் வீட்டு வேலை செய்து கொண்டு, தீப்பெட்டியும் ஒட்டி வருகிறேன்.


எனக்குத் திருமணமான புதிதில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பிரமை பிடித்தவள் போல இருப்பேன். இதைப் பார்த்த என் கணவரும், பெற்றோரும் எனக்கு பேய் பிடித்திருக்கிறது என்று நினைத்தார்கள். எனவே சாமி கொண்டாடி அல்லது கோடங்கி ஒருவரை அழைத்து வந்து திருநீரு மந்திரித்துப் போட்டு என்னைப் பிடித்த பேயை விரட்ட வேண்டும் எனத் தீர்மானித்தார்கள்.

எங்கள் குலதெய்வம் பரமேஸ்வரி அம்மன். எங்கள் பாட்டிக்கு குல தெய்வத்தின்மீது அளவு வயது கடந்த பக்தி. அவருக்கு 72. எனவே ஒரு வெள்ளிக் கிழமை என்னை அவரிடம் அழைத்துச் சென்றார் கள். வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம், விபூதி ஆகியவைகளை கொண்டு சென்று பயபக்தியுடன் எங்கள் பாட்டி முன் உட்கார்ந்தேன். அவர் பூஜை செய்தார்.

அவர்கள் திடீரென்று சூடத்தைக் கொண்டு வா... என அதட்டினார்கள்.

என் தங்கை ஒரு பிளாஸ்டிக் தட்டில் திருநீறைச் சிறிது போட்டு அதன் மேல் பெரிய ஒரு சூடக் கட்டியை வைத்து கொடுத்தாள். எங்கள் பாட்டி சூடத்தைக் கொளுத்தி அதே தட்டில் வைத்து என் தலை மீது வைத்தார். உம்... நீ யார்..? இந்தக் கட்டையை விட்டுப் போய் விடு... என்று அதட்டினார். அதே தட்டை என் தலையில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்.

சூடம் எரிய, எரிய பிளாஸ்டிக் தட்டு இளகி என் தலையில் சுட ஆரம்பித்தது. அதிகமாக சுட்டவுடன், அய்யோ... என்னை விட்டு விடுங்கள். நான் போய் விடுகிறேன்.. என்று உடம்பை நெளித்துக் கொண்டு அலறினேன். அருகில் நின்ற இருவர் நான் பேய் வந்து ஆடுவதாக நினைத்துக் கொண்டு என்னைக் கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்.

சூடம் எரிந்து முடிந்தபின் பிளாஸ்டிக் தட்டை என் தலையிலிருந்து எடுக்க முயன்றபோது தலைமுடி கருகி தலையில் புண்ணாகிவிட்டது. பின் மெதுவாக தட்டை பிய்த்து எடுத்தார்கள். பின்னர் நான் சூடம் எரிந்து சுட்டதால்தான் நான் அலறினேன் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

பேயினால் நான் அலறவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். இப்பொழுது அருள் வந்த சாமியையும், பேய் பிடித்து யாராவது ஆடுவதையும் பார்க்கும்பொழுது எனக்கு சூடம் சுட்ட ஞாபகம் வந்து, அனைவரும் சிரித்துக் கொள்வோம். - த. சுப்புலட்சுமி, கடம்பூர்
viduthalai/20081031/news.

No comments: