Followers

Sunday, November 2, 2008

பார்ப்பனர்கள் அர்த்தமும் வேறுதான் - அகராதியும் வேறுதான்!

பார்ப்பனரைப் பகைத்தால், மழை கிடையாது .பார்ப்பனர்களின் பிழைக்கும் வழி இதுதான்!

பார்ப்பனர்கள் திறமைசாலிகள்தான். ஆனாலும் தம் முதுகில் சுமந்து கொண்டிருக்கிற வெற்றுச் சுமைகள் அவர்களைப் பின்னிழுக்கின்றன.
(வெற்றுக் கவுரவத்தைக் குறிப்பிடுகிறார்)


எடுத்துக்காட்டாக

1) மூடநம்பிக்கைகளை மதாச்சாரம் என்பது
2) ஏறுமாறாகச் செய்வதைச் சகிப்புத்தன்மை என்பது
3) பழையனவற்றை அப்படியே கடைப்பிடிப்பதைப் பாரம்பர்யம் என்பது 4) பகுத்தறிவற்ற பழக்கங்களை நம்பிக்கை என்பது
5) ஒற்றுமை இல்லாத தன்மையைத் தனித்துவம் என்பது
6) அகங்காரத்தைத் தன்னம்பிக்கை என்பது
7) பொறாமையைப் போட்டி என்பது
8) விளக்கம் கூற முடியாதபோது தெளிவான ஆதாரம் உள்ளது என்பது
9) புத்திசாதுர்யத்தை அறிவு என்பது
10) செய்திகளைக் குவித்து வைத்துக் கொண்டு அதுதான் ஞானம் என்பது
11) (அசட்டுத்) துணிச்சலை உள்ள உரம் (தைரியம்) என்பது
12) இருப்பதை அப்படியே நீடிக்கவிடுவதைப் பண்பாட்டைக் கடைப்பிடித்தல் என்பது
13) பாசாங்கு செய்வதைச் செயல்திறமை என்பது போன்ற பல கூறலாம்,

முடிவே இல்லாமல். இவ்வளவுப் பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துக் காட்டுபவர் பேரா. என். சுப்ரமணியம் (அய்யர்) அவர்கள்.

மெக்காலே ஏன் கண்டிக்கப்படுகிறார்?
கடைந்தெடுத்த பிற்போக்காளர்களான ஆர்.எஸ்.எஸ். கும்பல் மெக்காலே எனும் அந்தக் கால சட்டம், கல்வி அமைச்சரைத் திட்டித் தீர்ப்பார்கள். அவர்தான் ஜாதிக் கொரு நீதி என்று இருந்ததை மாற்றிப் பொதுவான கிரிமினல் சட்டத்தை இந்தியாவுக்கு எழுதிக் கொடுத்தார். எல்லாரும் படிக்க வேண்டும், அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாடத் திட் டத்தைக் கொண்டு வந்தார்.

இங்கிலீசுக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி கவர்னர் ஜெனரல் லார்டு வில்லியம் பென்டிங் அவர்களுக்குக் கூறியதுதான் ஆர்எஸ்எஸ்-சுக்கான ஆத்திரத்தின் காரணம்.

30 அடி உயரமுள்ள மன்னர்கள், 30 ஆயிரம் ஆண்டுகள் ஆண்டார்கள் என்கிற வரலாறு சொல்லித் தருவதா?

பாற்கடல், தேன்கடல், வெண்ணெய்க் கடல் என்றெல்லாம் பூகோளம் சொல்லித் தருவதா?

மாட்டை அறுத்து விட்டால் பாபம் நீங்க என்ன வேத மந்திரம் சொல்வது?

கழுதையைத் தொட்டுவிட்டால் சுத்தப் படுத்திக் கொள்ள எதை உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித் தருவதற்காகவா, மக்களின் வரிப் பணத்தை விரயமாக்க வேண்டும்? என்று மெக்காலே கேட்டார்.

அதன் பிறகுதான் 7.3.1835-இல் இங்கிலீசு இந்தியாவின் பாட, ஆட்சி மொழியாக ஆக்கப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டது.
viduthalai/20081025/snews

நிறம் மாறும் பூதேவர்கள்.

மராத்தியர்கள் தஞ்சையைப் பிடித்து ஆளத் தொடங்கியதும் பார்ப்பனர்கள் மராத்திய மொழியைப் படித்து மன்னரிடம் வேலை செய்து பிழைத்தார்கள். ஆர்க்காடு பகுதியை நவாப்கள் ஆண்டபோது, அவாள்கள் பாரசீக மொழியைப் படித்து அவரிடம் வேலை பார்த்துப் பிழைப்பு நடத்தினார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி நடந்தபோது இங்கிலீசு படித்து ஆங்கிலேயர்களிடமும், ஃபிரெஞ்ச் படித்து ஃபிரான்சு நாட்டவர்களிடம் வேலை செய்து பிழைத்துக் கொண்டனர். இட்லர் ஜெயிக்கிறார் என்றவுடன் ஜெர்மனி மொழி படிக்கத் தொடங்கினார்கள். பார்ப்பனர்களின் பிழைக்கும் வழி இதுதான்!
viduthalai/20081018/snews


பைத்தியம் பிடிப்பது எப்படி என்பதுபற்றிய ஆய்வுதமிழ்நாட்டுப் பார்ப்பனர்களிடம் நடத்தப்பட்டது.

பார்ப்பனர்களுக்குப் பைத்தியம் பிடித்தால், வீதியில் இருப்பதை வீட்டுக்குள் எடுத்துப் போடுவார்கள் என்று பெரியார் பார்ப்பனர்களில் உள்ள பைத்தியங்களைப்பற்றிக் கூறுவார்

காரணமான மரபணு கண்டறியப்பட்டது
சென்னை, அக். 18- மனநோய்ப் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது, அதற்குக் காரணமான மரபணு எது? என்பதுபற்றிய ஆய்வு கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஸ்கார்ஃப் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பு இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இதற்காகத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் 441 பேரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இவர்கள்தான் யாரிடமும் நெருங்காமல் ஒதுங்கித் தனித்து வாழும் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், முதிய, வயதான பார்ப்பனர்களிடையே மட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்கிறார் இதன் இயக்குநரான மருத்துவர் தாரா ரங்கசாமி.

ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வு மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சீனர்கள், காகேசிய இனத்தைச் சேர்ந்த அய்ரோப்பியர்கள் ஆகியோரிடம் செய்யப்பட்டுள்ளது. சில அறிகுறிகள் தென்பட்டன என்றாலும், தமிழகப் பார்ப்பனர்களிடம் கிடைத்தவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன.

உலக மக்களில் ஒரு விழுக்காட்டினர்க்கு மனநோய்ப் பாதிப்பு உள்ளது. இளம் வயதில் உள்ளோர்க்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கான மரபணு 1 என்பதுபற்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவைபற்றி விரிவான ஆய்வுகள் மற்ற இனத்தவரிடமும் மேற்கொள்ளப்படுமாம்.

மக்களுக்குப் பைத்தியம் பிடித்தால் வீட்டில் இருப்பதை வீதியில் எறிவார்கள்; பார்ப்பனர்களுக்குப் பைத்தியம் பிடித்தால், வீதியில் இருப்பதை வீட்டுக்குள் எடுத்துப் போடுவார்கள் என்று பெரியார் பார்ப்பனர்களில் உள்ள பைத்தியங்களைப்பற்றிக் கூறுவார்.

மனநோய் மருத்துவமனையில் கூடப் பார்ப்பனப் பைத்தியங்களுக்குத் தனி வார்டு இருந்தது என்பது வரலாறு. இப்போது, பைத்தியம் பிடிக்கக் காரணம் எது என்பதைப் பார்ப்பனர்களிடையே மட்டும் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்கிறது செய்தி!

இதிலும்கூட "அவாள்" தனித்தன்மை பெற்றவர்கள்தான் போலிருக்கிறது.
viduthalai/20081018/news


பார்ப்பனரைப் பகைத்தால், மழை கிடையாது ..

குலபூஷண பாண்டியன் என்ற ஒரு மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டான். பெரிய சிவபக்தன். திங்கள்கிழமை தோறும் விரதம் இருந்தவன். விரதம் என்றால் சோறுக்குப் பதில் பலகாரங்கள், பழங்கள், பால் என வெளுத்துக் கட்டும் விரதம். அதற்குப் பெயர் சோமவார விரதம்.

பக்திப் பூஷணமாக இருந்தாலும், அவன் பூசுரர்களை மதிக்காதவன். பார்ப்பனர்களுக்குப் பாதந்தங்கியாக வாழ விரும்பாதவன். அதனாலேயே பார்ப்பனர்களுக்கு மன்னனைப் பிடிக்காது.அந்நிலையில் நாட்டில் மழை இல்லாததால் விளைச்சல் இல்லை. பசி, பட்டினி, வறுமையின் கொடுமை மக்களை வாட்டியது.

மன்னனும் மனக்கவலை கொண்டான். சிவனிடம் விரத நாளில் முறையிட்டான். என் கஜானாப் பண முழுவதையும் உனக்கே செலவு செய்து விட்டேன். என்னிடம் பணமும் இல்லை, மக்களுக்கு உதவ முடியவில்லை, எனக்கொரு வழிகாட்டு எனக் கடவுளிடம் கதறினான்.
கடவுள் கம்முனு கிடந்தது. ஒன்றுமே பேசவில்லை. கல் சிலை எப்படிப் பேசும்?

சில நாள் கழித்து, மன்னனின் கனவில் தோன்றிய சிவன் மழை பெய்யாத காரணத்தைப் போட்டு உடைத்தான். பாண்டியா, நீ எம் பால் அன்பு கொண்டவன், சிறந்த பக்திமான், நீதிநெறி தவறாதவன். ஆனாலும் நீ, வேதம் ஓதும் வேதியரை மதிக்கவில்லை.

அவர்களின் வேள்விப் புகையால்தான் மழையே பொழிகிறது. அவர்களின் மனக் கோபத்தால்தான் உன் நாட்டில் மழை பொழியவில்லை. இனி மேலாவது நீ உன்னைத் திருத்திக் கொள்.

பார்ப்பனர்கள் மனம் நோகாமல் நடந்து கொள். இந்தா, இந்தப் பொற்கிழியில் இருக்கும் பொன்னும் பொருளும் அள்ள அள்ளக் குறையாது. பெற்றுக் கொள். நாட்டு மக்கள் அனைவரின் வாட்டத்தையும் போக்கிக் கொள் என்று கூறிவிட்டு மறைந்து போனான்.

கனவு கலைந்ததும் மன்னன் விழித்துப் பார்த்தான். படுக்கைக்குப் பக்கத்தில் பொற்கிழி இருந்தது. விடிந்ததும் மக்களுக்கு வாரிவாரி வழங்கினான்.
பொற்கிழியில் இருந்தது குறையவே இல்லை, வளர்ந்து கொண்டே இருந்தது. பார்ப் பனர்களின் வாட்டத்தையும் போக்கினான் என்பதைச் சொல்லாமலே விளங்கிக் கொள்ளலாம்.

கோயில் விமானத்தைப் பொன்னால் இழைத்தான். சிவன் மனைவி அங்கயற்கண்ணியின் கோயிலையும் புதுப்பித்துக் கட்டினான். மழையும் பெய்தது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

கதைகூறும் நீதி இது: பார்ப்பனர்களை மன்னனாக இருந்தாலும் வணங்கிப் பணிய வேண்டும். திருவிளையாடலின் மூலம் சிவன் கற்பித்த பாடம் இது எனத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ---------செங்கோ viduthalai/20080802/snews

மழை வேண்டி மரங்களுக்கு திருமணம்.
செப்டம்பர் 05,2008,19:46 மண்டபம்: மழை வேண்டி அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கும் ஊர்மக்களால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பாம்பன் நடுத்தெரு மற்றும் தெற்குவாடி பகுதி பொது மக்கள் சார்பில் மழை வேண்டி அங்குள்ள அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக திருமண பத்திரிக்கைகளும் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன. அதன்படி காலை அங்குள்ள இலங்கை முத்துமாரியம்மன் கோயிலில் ஊர் தலைவர் தேவி ராஜன் தலைமையில் திருமணம் நடந்தது .

பூசாரி முத்தழகு வேப்ப மரத்துக்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார்.இதை தொடர்ந்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு விருந்து வைபவம் நடந்தது.

தெற்கு வாடியை சேர்ந்த ராஜேஸ்வரி கூறுகையில்," அரச மரத்தை ஆணாகவும்,வேப்ப மரத்தை பெண்ணாக பாவித்து தான் இந்த திருமணத்தை நடத்தி உள்ளோம்.

மரங்களுக்கிடையே திருமணம் நடத்தி வைத்தால் நல்லது என்பது ஐதீகம்.
எங்கள் பகுதியில் முன்பு போல் மீன் பிடி தொழில் சரியில்லை. இந்த திருமணத்துக்கு பிறகாவது தொழில் சிறக்கும் என்பது எங்கள் நம்பிக்கை' என்றார்.
www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=459
------------------------------------------

மற்ற பதிவுகள்

No comments: