Followers

Saturday, November 1, 2008

இந்தச் "சாமி" போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ஆண் பெண் கடவுளர்களில் தமிழ்ச் சாமிகளாக...விலங்குகளில்...மனித குலத்தில்...

லிங்கம் (ஆண்) ஆவுடை (பெண் ) ஆவுடையில் பெரிய ஆவுடை, பொது ஆவுடை (இக்கடவுள் ஆவுடையார் கோவிலில் உள்ளது)


ஒரு புழுவை உண்டாக்க முடியாத இந்த மனிதர்கள்தான், ஆயிரக் கணக்கான கடவுள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருப்பது தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம். அதன் அருகே ஒரு வேப்ப மரம் உள்ளது. அந்தத் தெருவில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இருப்பினும் இந்த வேப்பமரம் இப்போது முக்கியத்துவம்(?) பெற்று வருகிறது.

சில நாள்களுக்கு முன்னர் வரை அது சாதாரண மரமாகவே இருந்தது. ஆனால் இப்போது இது சாமி மரமாக மாறிவிட்டது. பட்டுத்துணி கட்டி, மஞ்சள் பூசி, பொட்டு வைத்து மரத்தைக் கேவலப்படுத்தி வைத்திருக்கிறார்கள் மரத்துப் போன சில மனிதர்கள்.

இவ்வளவிற்கும் குடியிருப்புகள் குறைந்து, அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதி அது. அலுவலகங்களில் பணிபுரிவோரை சில நேரங்களில் அங்கு காண முடிகிறது. வாகனங்களில் போவோர், வருவோர் அம்மரத்தைப் பார்த்துக் கன்னத்தைத் தொட்டுக் கொள்கின்றனர். (அதாவது சாமி கும்பிடுறாங்களாம்!)

நம்முடைய கேள்வி என்னவென்றால், இருக்கிற சாமி போதாதா? மதம், ஜாதி, கடவுள் பெயரால் இந்நாடு கெட்டுச் சீரழிவது போதாதா? இப்படியே தினம், தினம் சாமிகள் உருவானால் இந்தியாவின் மக்கள் தொகையை விட பல மடங்கு சாமிகளின் எண்ணிக்கைப் பெருகிவிடுமே?

இப்பவே இந்த நாட்டில் எவ்வளவு சாமிகள் இருக்கிறது தெரியுமா?
இதோ... தெரிந்து கொள்ளுங்கள்!

முப்பத்து முக்கோடி தேவர்கள்
நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகள்
கின்னரர், கிம்புருடர், அஷ்டதிக்குப் பாலகர்,
நந்தி, நாரதர்,
லிங்கம் (ஆண் குறி)
ஆவுடை (பெண் குறி)
ஆவுடையில் பெரிய ஆவுடை, பொது ஆவுடை
(இக்கடவுள் ஆவுடையார் கோவிலில் உள்ளது)

இது தவிர ஆண் கடவுளர்களில்
சிவன், பிரம்மா, விஷ்ணு, விநாயகன், முருகன், அய்யப்பன் என நீண்ட வரிசை

பெண் கடவுளர்களில்...
லெட்சுமி, சரஸ்வதி, பார்வதி, ரம்பை, திலோத்தமை, ஊர்வசி, மேனகை... என நீண்ட பட்டியல்

இதில் தமிழ்ச் சாமிகளாக...
மாரியாயி, காளியாயி, பேச்சியம்மாள், நொண்டிமுனி, பெரிய கருப்பு, மதுரைவீரன், பாவாடை வீரன்...

விலங்குகளில்...
கழுதை, குதிரை, எருமை, சிங்கம், புலி, கரடி, நல்ல பாம்பு, தவளை, பன்றி, நாய், மீன், பல்லி, பூரான், தேள், ஆடு, மாடு, மாட்டுச் சாணி, மாட்டு மூத்திரம், செருப்பு (இராமன்) என ஏகப்பட்ட சாமிகள்...

விலங்குகளில்...
ஆலமரம், அரசமரம், புங்கமரம், புளியமரம், வேப்பமரம், வேலமரம், ஒதியமரம், கள்ளிச்செடி, எருக்கஞ்செடி, அருகம்புல் என இது ஒரு நீண்ட வரிசை.

இது தவிர...
காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி என வாயு பகவான், அக்னி பகவான், வருண பகவான், சூரிய பகவான், சந்திர பகவான், கங்காதேவி, பூமாதேவி என ஏகப்பட்டதுகள்...

இதோடு முடிந்ததா?

மனித குலத்தில்...
பார்ப்பன இனமே வழிபட வேண்டிய இனம் என்கிறான், தவிர சங்கராச்சாரி சாமி, சாய்பாபா சாமி, பிரேமானந்தா சாமி, கல்கி சாமி பிறகு மந்திரவாதி, கோடாங்கி, சாமியாடி, குருசாமி, கன்னிச்சாமி, மலைசாமி, குருக்கள், தந்திரி இவ்வளவும் இங்கு சாமிகள்.

அப்புறம் எல்லைக்கல் சாமி, அம்மிக்கல் சாமி, குழவிக்கல் சாமி, நடக்குற சாமி, ஓடுற சாமி, படுக்குற சாமி (சிறீரங்கம்), உட்கார்ந்திருக்கிற சாமி என இந்த நாட்டில் சாமிகளுக்கு ஏதாவது பஞ்சம் இருக்கிறதா? (சாமி பட்டியலில் பாதிதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது).

இந்நிலையில்தான் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே சாதாரண வேப்ப மரத்தைச் சாமி மரமாக மாற்றி உள்ளார்கள்.

இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. எல்லோரும் ஒரே மாதிரி தான். (மரம் மாதிரி என்று கூட சொல்லலாம்)

இப்படிப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு நாட்டில் எப்படி அறிவுப் புரட்சி மலரும்? எப்போது அமைதி திரும்பும்? அவர்கள் வாழ்விலே கூட எப்போது ஆனந்தம் பிறக்கும்?

ஒரு புழுவை உண்டாக்க முடியாத இந்த மனிதர்கள்தான், ஆயிரக் கணக்கான கடவுள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
viduthalai/20081029/news

காசேதான் கடவுளடா!திருப்பதி கோயில் பொம்மைக்குப் புதிய துணி அணிவிப்பது "வஸ்த்ரம்" எனும் சடங்கு. சிறீவாரி வஸ்த்ரம் என்று கூறப்படுவது.

அது போல, சிறீவாரி அபிசேகம் என்பது ஒரு சடங்கு.

அதன்படி பொம்மையைக் கழுவிக் குளிப்பாட்டித் துணி கட்டுவது இந்த இரண்டு சடங்குகளும். இந்தச் சடங்குகளைச் செய்திட இப்போது முடியாதாம்.

குளிப்பாட்டும் சடங்குக்குக் கட்டணம் 750 ரூபாய். இது 2028 முடிய புக் ஆகிவிட்டதாம்!

துணி கட்டும் சடங்குக்கு 12 ஆயிரத்து 250 ரூபாய் கட்டணம். இது 2042 வரை புக் ஆகிவிட்டதாம்!

ஆனால், குளிப்பாட்டும் சடங்குக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் தந்தால் சடங்கு செய்யலாம். துணி கட்டும் சடங்குக்கு 50 ஆயிரம் ரூபாய் தந்தால் செய்யலாம்!
பணம் உள்ளவர்களுக்குத்தான் பக்தி! பகவான் சடங்கு! எல்லாமே!

viduthalai/20081031/news

தலைமைச் செயலக வளாகத்துக்குள் புதிய கோயிலா?புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படுவதற்கான ஆயுத்தப் பணிகள் ஓமந்தூரார் தோட்டத்தில் (ஓ.பி. ராமசாமி ரெட்டியார்) பழைய கட்டடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டுவரும் நிலையில், அங்கிருந்த பிள்ளையார் கோயிலை மட்டும் இடிக்கக்கூடாது என்று பக்தர்கள் சொன்னதாகவும், அந்தக் கருத்து ஏற்கப்பட்டு, ரூபாய் 1.5 லட்சம் செலவில் புதிதாகக் கோயில் கட்டப்படும் என்று பொதுப்பணித்துறை செயலாளர் ஆதிசேஷைய்யா சொன்னதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

சம்பந்தப்பட்ட பிள்ளையார் அரசின் அனுமதியுடன் வைக்கப்பட்டதா?

அப்படி வைக்கப்படவில்லையெனில் அது சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு என்று பொருள்.

தலைமைச் செயலகம் பல கோடி ரூபாய் செலவில் உருவாக் கப்படும்பொழுது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது இயல்பான ஒன்றே. அது சாமி சிலை என்பதால் அகற்றப்படக் கூடாது என்பது சட்டப்படியும் சரியல்ல - நியாயப்படியும் சரியல்ல. அதற்குப் பதில் அரசு பணத்தில் (ரூ.1.5 லட்சம்) புதிதாகக் கோயில் கட்டப்படும் என்பது எப்படி சரியாகும்? மக்கள் வரிப் பணத்தை எடுத்துக் கோயில் கட்டுவது ஒரு அரசின் செயல்பாடாக இருக்க முடியாது.

ஏற்கெனவே திட்டமிட்ட வகையிலும், விஷமத்தனமாகவும் அரசு அலுவலக வளாகங்களில் குறிப்பிட்ட மதக் கோயில்கள் உருவாக் கப்பட்டு வருகின்றன. அதுபற்றி பலமுறை திராவிடர் கழகத்தின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது; அரசின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்ற தன்மைக்கேற்ப அரசு அலுவலகங்களும், வளாகங்களும் விளங்கவேண்டாமா?

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், முதல் ஆணையாக இந்த வகையில் பிறப்பித்ததை மறந்துவிட முடியுமா?

இந்த நிலையில், புதிதாகத் தலைமைச் செயலகம் உருவாக்கப் படும்பொழுது, கோயிலும் அங்கு உருவாக்கப்படுமானால், அதையே முன்மாதிரியாகக் கொண்டு, அரசு அலுவலக வளாகங் களில் ஏற்கெனவே இருக்கும் கோயில்கள் போதாதென்று, புது உற்சாகத்துடன் அந்த வேலையில் தீவிரமாக ஈடுபடமாட்டார்களா?

குறிப்பிட்ட ஒரு பிரிவு கோயிலை வைத்தால், மற்றவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென்று வழிபாட்டுச் சின்னங்களைக் கட்ட ஆரம்பித்தால், அதன் நிலை என்னவாகும் என்று சிந்திக்கவேண்டாமா?

மதச் சர்ச்சைகளை வீதிகளில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், அதனை அரசு அலுவலகம் வளாகங்களுக்குள்ளும் திணிக்கும் - விரிவாக்கும் ஒரு செயலுக்கு எந்த வகையிலும் அரசு சம்பந்தப்பட்ட துறை துணை போகக்கூடாது. தவறான முன் மாதிரிகளையும் உருவாக்கிக் கொடுக்கக்கூடாது.

அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை பூஜை, ஆயுத பூஜை, அதற்கான வசூல் என்பவையெல்லாம் அறிவார்ந்த சூழலை - மதச் சார்பற்ற தட்பவெப்பத்தை ஏற்படுத்திட உதவாது; மாறாக மாச்சரியங்களை விதைக்கத்தான் அது பயன்படும்.


அரசு அலுவலக நேரத்தை, அதற்குச் சம்பந்தம் இல்லாத ஒரு காரியத்துக்காகச் செலவழிப்பதும்கூடக் குற்றமே! அரசு விதிமுறைகளை அறிந்த அதிகாரிகளே, விதிகளுக்கு முரணாகச் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாது. ஒன்றில் விதியை மீறினால், மற்றவற்றிலும் விதிகளை மீறக்கூடிய மனோபாவம் ஏற்படத்தான் செய்யும்.

இதேபோல, நடைபாதைக் கோயில்கள் நாட்டில் பெருகிவரு கின்றன. நடைபாதைக் கோயில்களை அகற்றுவதுபற்றி மாநில, மத்திய அரசுகளின் ஆணைகளும், சுற்றறிக்கைகளும் தெளிவாக இருக்கின்றன.

நடைபாதைக் கடைகளையும், குடிசைகளையும் கறாராக இடித்துத் தள்ளும் அரசுத் துறை, கோயில் என்று வந்துவிட்டால் அதனை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை இடித்துத் தரைமட்ட மாக்குகிறார்கள்.

குறிப்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடைபாதையிலே ஒரு கோயில் மட்டும் கம்பீரமாக இன்றைக்கும் நின்றுகொண்டு இருக்கிறது; கடைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன.

அந்தப் பகுதியில் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய விமர்சனம் செய்யாமல் இருப்பதில்லை. அதுபோலவே, எழும்பூர் இரயில் நிலையத்திலும், சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத் துக்குள்ளேயே கோயில் கட்டி குடமுழுக்கும் செய்யப்பட்டுள்ளது.

அதுபற்றி ஆணையருக்கு தக்க நேரத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் செய்தும்கூட கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நடைபாதைக் கோயில்களுக்குத் திருட்டுத்தனமாக மின் இணைப்பு வேறு! இந்த விஷயத்தில் ஒன்றுக்கு மேல் இன்னொன்று என்று அடுக்கடுக்காக விதிமீறல்களும், முறைகேடுகளும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

தருமபுரி தீயணைப்புத் துறை அலுவலக வளாகத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்றால், அரசு அலுவலகங்களா, மத வழிபாட்டுச் சந்தைகளா என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது. இது கடவுள், பக்தி சம்பந்தப்பட்டது என்பதைவிட - கலாச்சார சம்பந்தப்பட்டது - வரலாற்றுப் பின்னணி யோடு சிந்தித்தால் இதன் நிலை புரியாமல் போகாது.

அரசமைப்புச் சட்டத்தின் மரியாதை காப்பாற்றப்பட, முதலமைச்சர் அண்ணாவின் ஆணை மதிக்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
இது அண்ணா நூற்றாண்டு - மறக்கவேண்டாம்!
viduthalai/20081027/news

வேலூர் நகராட்சி எங்கே போகிறது?வேலூர் நகராட்சி கற்காலத்துக்குப் போவதுபோல் தெரிகிறது.

கிடந்தது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பெயர்களை நீக்கிவிட்டு ஆன்மிகம் சம்பந்தமான பெயர்களைச் சூட்டிடும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் போகிறார்களாம்.
குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதையாக அல்லவா இது இருக்கிறது.

பெயர் மாற்றம் வேண்டியதுதான்; அது அறிவுக்கு ஏற்றதாகவும், முற்போக்குச் சிந்தனையுடையதாகவும் இருக்கவேண்டாமா?

மக்களை மடமைக்குழியில் தள்ளும் ஆன்மிகம், தமிழரைக் காட்டிக் கொடுத்த கம்பன், மூடத்தன வியாபாரியான வாரியார் ஆகியோர்களின் பெயர்களைச் சூட்டுவது எந்த வகையில் சரியானது - நியாயமானது?

எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த மாற்றங்கள் கூடாது என்று எச்சரிக்கின்றோம்.

viduthalai/20081030/news

------------------------------

2 comments:

periyaar said...

தெருக்கு தெரு கண்ட அறிவில்லாத அரசியல்வாதிகள் சிலைவைத்து கும்பிடும்போது சாமி சிலை வைத்து கும்பிடுவது ஒன்றும் தப்பில்லை.

Bhupathi said...

Tamil Nadu needs another Periyaar urgently.The foolish populations are shamelessly standing behind Aryans not knowing what they are doing to the future generations.They better kill themselves than doing injustice to their children. Bhakthi is nothing but foolishness.
I am pained to see the happenings in TN.I WISH, LIKE IN THE CASE OF LEMURIA CONTINENT, SOME DAY A TSUNAMI SWALLOWING THIS ENTIRE CONTINENT PUTTING AN END TO THIS MADNESS ONCE FOR ALL