Followers

Saturday, November 1, 2008

எந்த மசூதியை இடிப்பது-எந்த சர்ச்சுக்குத் தீ வைப்பது-எந்த முசுலிமையும், கிறித்துவனையும் தீர்த்துக் கட்டுவது என்பதற்கே நேரம் போதவில்லையே

பயங்கரவாதம் பற்றி வாய் கிழியப் பேசிய பா.ஜ. கட்சியினர் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.

"அற்புத விளக்கோ!"
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கைப் பிரச்சினையை ஆறே மாதத்தில் தீர்த்துவிடும் என்று சொல்லியிருப்பவர் தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. இல. கணேசன்.


அப்படி ஒரு "அலாவுதீன் அற்புத விளக்கை" ஜோல்னா பைக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் போலும்!

ஒரு சந்தேகம், அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்களே - அந்தக் காலகட்டத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரச்சினை இருந்ததாகவே அவர்களுக்குத் தெரியாதா? அப்பொழுது அவர்கள் நினைப்பெல்லாம் எங்கே மேயப் போனது?

எந்த மசூதியை இடிப்பது - எந்த சர்ச்சுக்குத் தீ வைப்பது - எந்த முசுலிமையும், கிறித்துவனையும் தீர்த்துக் கட்டுவது என்பதற்கே நேரம் போதவில்லையே - இதில் எல்லாம் எங்கே ஈடுபடப் போகிறார்கள்?

viduthalai/20081030/news
----------------------------------------------

பயங்கரவாதம் பற்றி வாய் கிழியப் பேசிய பா.ஜ. கட்சியினர் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.
மும்பை மாலேகான் வெடிகுண்டு வெடிப்புபெரும் சதிச் செயல்பற்றி அய்யம்
பயங்கரவாதத் தடுப்புக் காவல் பிரிவு தகவல்!

மும்பை, அக். 30- மாலேகான் பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு 6 பேர் இறக்கவும், 60 பேர் காயமடையவும் காரணமான நிகழ்ச்சி மாபெரும் சதித் திட்டத்தின் ஒரு பகுதி என்று மும்பைக் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கருதுகின்றனர்.

இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவப் படையினர்க்குப் பொய் பேசுவதைக் கண்டறியும் சோதனை நடத்திட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பா.ஜ. கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோருக்கு பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூருடன் உள்ள தொடர்புபற்றி விளக்கிடவேண்டும் என்று காங்கிரசுக் கட்சி கோரியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் அக்கட்சிக்கு உள்ள தொடர்புபற்றியும் கூறவேண்டும் என்றும் பயங்கரவாதம் பற்றி வாய் கிழியப் பேசிய பா.ஜ. கட்சியினர் அம்பலப்பட்டு நிற்கின்றனர் என்றும் காங்கிரசுச் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

பா.ஜ.க.வினர் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். குண்டு வைத்த பெண் துறவியுடன் பா.ஜ.கட்சிக்குள்ள தொடர்புகள் பற்றிய ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். viduthalai/20081030/news ----------------------------------------
படிக்கவும்


---------------------------------

No comments: