Followers

Saturday, October 25, 2008

ஒழிக நிரோத்!! ஒழிக குடும்பக் கட்டுப்பாடு. நான்கு பிள்ளைகள் பெற‌ வேண்டுமாம். விசுவ இந்து பரிசத். R.S.S.

இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடித்து வரும்போது முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தைப் பெருக்கி வருகிறார்கள்.

இந்து மக்களின் பெரும்பான்மையைத் தொடர்ந்து காப்பாற்றுவதாக ஒவ்வொரு இந்து குடும்பத்திற்கும் நான்கு பிள்ளைகள் இருக்குமாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விசுவ இந்து பரிசத் எனும் இந்து மத வெறி அமைப்பு தெரிவித்துள்ளது.

குடும்பக் கட்டுப்பாடு எனும் திட்டத்தை மூட்டைகட்டி வைத்திட வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது. இந்தக் கோரிக்கையை அவர்கள் அச்சுப்போட்டு ஒரு நூலாகவே தொகுத்துள்ளனர்.

2100-இல் பெரும்பான்மையராக இந்து மக்கள் இருக்கவேண்டும் என்றால் இதைச் செய்ய வேண்டும் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது. (பாரதத்திலே இந்துப் பெரும்பான்மை (பாரத் மே இந்து பகுமத்) என்பது நூலின் பெயர்.
இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடித்து வரும்போது முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தைப் பெருக்கி வருகிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை நாடு முழுவதும் பரப்பப் போகிறார்களாம். வீதி நாடகங்கள், கருத்தரங்கங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் இதனைப் பரப்பி, இந்து மக்கள் தொகையைக் குறைப்பதற்காகச் செய்யப்படும் சதியை அம்பலப் படுத்தப் போகிறார்களாம்.

அரசின் மனிதநேயக் கொள்கைக்கு எதிராக மட்டும் அல்ல, உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த கொள்கையை மதத்தைக் காட்டி இந்துமத வெறியர்கள் எதிர்க்கிறார்கள்.
viduthalai/20081023/news
---------------------------------
இதை படியுங்க..
அலறும் R.S.S. இந்து மதத்தில் குறைந்து வரும் எண்ணிக்கை பிற மதத்தில் வளர்வதால் ஒவ்வொரு இந்து பெண்ணும் மூன்று பிள்ளைகளை பெறவேண்டும் -ஒழிக நிரோத்!!
-------------------------------------
மற்ற பதிவுகள்

1 comment:

Muthukumar said...

அதே மதத்தைக்காட்டி "அரசின் மனித நேயக்கொள்கையை" கடைபிடிக்காமலே இருக்கும் மதத்தவரை - "உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த கொள்கையை" தங்கள் மதத்திற்கு எதிரானது என்று சொல்பவரிடம் போய் கொஞ்சம் இந்த உபதேசத்தை செய்துபாருங்களேன், நெஞ்சில் உரமும் நேர்மைத்துணிவுமிருந்தால்.