Followers

Thursday, October 9, 2008

கருவிகள் மனிதனின் அடிமைகளே !கடவுள்கள் அல்ல! ஆயுத பூசை தேவை தானா?

விளக்குமாறிலிருந்து செருப்புவரை முக்கியமான கருவிகள்தான். அதற்குப் பூஜை போடுவதுண்டா?

பக்தர்களே - பதறாமல் சிந்திப்பீர்!

ஆயுதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை - எந்த ஆண்டவனின் அருளாலும் கிடைக்கப் பெற்றதில்லை.

மனித நாகரிக வளர்ச்சி என்பதே - அவன் கண்டுபிடித்த கருவிகளால்தான். கருவிகள் மனிதனின் அடிமைகளே தவிர கடவுள்கள் அல்ல!

அப்படிப் பார்க்கப் போனால், எல்லாக் கருவிகளுக்கும் பூஜை போடுவீர்களா?
விளக்குமாறிலிருந்து செருப்புவரை முக்கியமான கருவிகள்தான். அதற்குப் பூஜை போடுவதுண்டா?

விபச்சாரம்கூட தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிலாளிகளின் நிலை என்ன?

நகர சுத்தித் தொழிலாளர்கள் என்ற நிலை இன்றைக்கும் இருக்கிறது. அவர்கள் எதை வைத்துப் படைப்பார்கள்?

கொலைகாரனுக்குப் பயன்படும் அரிவாளும், கத்தியும் கூடப் பூஜைக்குரிய பொருள்கள்தானா?

கொலையை ஒழுங்காகச் செய்ய சக்தித்தேவி அருள்பாலிப்பாளோ!

கள்ளச்சாவிப் போட்டு பூட்டைத் திறந்து கொள்ளை அடிப்பவன் - அன்று கள்ளச் சாவிக் கொத்தை வைத்துப் படைத்தால், அவன் தொழில் இலாபகரமாக நடக்க அம்பாள் துணையிருப்பாளோ!

கள்ளச் சாவி போட்டுத் திறந்து அம்பாளையே தூக்கிக் கொண்டு போய் விடுகிறானே - அப்படியானால் அம்பாளின் சக்தி அம்போதானா?
பக்தர்களே - பதறாமல் சிந்திப்பீர்!
viduthalai/20081008/news
ஆயுத பூசையால் அழிந்த ராஜ்ஜியம்
தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமல தாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத் தலைவன் வெங்காஜி என்பவனை வேண்டினான்.

வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படையெடுத்து வந்த சமயமானது ஆயுத பூசை சமயமாகும். படை வீரர்களின் படைக்கலங்கள் எல்லாம் ஆயுத பூசைக்காக கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.

மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன அமைச்சர்களையும், பார்ப்பன குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள்! ஆயுத பூசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன்.

படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ ஓர் இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக்கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.

மன்னனும், அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தானும் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஹரி பசனைச் செய்துகொண்டு இருந்தான்.

வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவிந்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கல்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.

இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன் வெங்காஜி சத்தியம் கெட்டவன், திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே, அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி, யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டான்.

வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.

நம் நாட்டிற்கு ஆயுத பூசை தேவை தானா? சிந்திப்பீர்!
viduthalai/20081008/news
--------------------------
மற்ற பதிவுகள்

No comments: