Followers

Wednesday, October 8, 2008

கிறித்தவப் பெண் என்று நினைத்து இந்துப் பெண் வன்கலவி செய்யப்பட்டுக் கொலை!

ஒரிசா கலவரத்தில் இந்து மதவெறியர்களின் காலித்தனம்.
பஜ்ரங் தளத்தைத் தடை செய்யவேண்டும். தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை

ஒரிசா கலவரத்தில் இந்து மதவெறியர்களின் காலித்தனம்.

புவனேசுவர், அக். 6- ஒரிசாவில் கிறித்தவப் பெண் என நினைத்து இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண்ணைக் கலவரக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்துக் கொன்ற நிகழ்ச்சி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பினர் கிறித்தவ தேவாலயங்களை அடித்து நொறுக்கியதோடு கிறித்தவ மக்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய வன்முறை வெறியாட்டம் தற்போதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் எதிரொலியாக கடந்த மாதம் கந்தமால் மாவட்டத்தில் 28 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கலவரக் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த கன்னியாஸ்திரியைக் காப்பாற்ற முயன்ற பாதிரியாரையும் அந்தக் கும்பல் அடித்து உதைத்து நிர்வாணமாக்கியது.

இதற்கிடையே கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த மற்றொரு பாலியல் வன்கொடுமையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரிசாவின் பர்கத் மாவட்டத்தில் கிறித்தவ தேவாலயத்தில் உள்ள ஓர் ஆதரவற்றோர் விடுதியில் ரஜனி என்ற 20 வயது மாணவி பணியாற்றி வந்தார். இந்த ஆதரவற்றோர் விடுதிக்குள் புகுந்த கலவரக் கும்பல், ரஜனியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற பாதிரியாரை அடித்து உதைத்து பக்கத்து அறையில் போட்டு பூட்டியது.

பலாத்காரத்தின் போது ரஜனியின் அலறல் அந்த கிறித்தவ தேவாலயம் முழுவதும் எதிரொலித்துள்ளது. எனினும் அவரைக் காப்பாற்ற காவல்துறையினர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. வன் கலவி முடிந்ததும் அந்தக் கும்பல் ரஜனி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றது.

ரஜனி ஒரு கிறித்தவப் பெண் என நினைத்து அந்தக் கும்பல் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்த ரஜனி ஒரு கல்லூரி மாணவி. அவர் தனது படிப்புத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அந்த ஆதரவற்றோர் விடுதியில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார்.

ஆதரவற்ற ரஜனியைக் குழந்தை இல்லாத ஓர் இணையர் எடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் தான் பட்டப் பகலில் கிறித்தவ ஆதரவற்றோர் இல்லத்துக்குள் பலாத் காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், "மாநில அரசு மீது எங் களுக்கு நம்பிக்கை இல்லை. இதே போன்று வெளியே வராத பல கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்துள்ளனர்.
viduthalai/20081006/news
பஜ்ரங் தளத்தைத் தடை செய்யவேண்டும்
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை.

புதுடில்லி, அக். 6- பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற வன்முறை நிகழ்ச்சிகளில் பஜ்ரங்தளம் தீவிரப் பங்கு வகித்துள்ளது என்றும், மதநல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் இது போன்ற அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

தேசிய சிறுபான்மை ஆணையம் சில நாட்களுக்கு முன்பு சங் பரிவாரங்கள் நடத்தி வரும் மத வெறியாட்டங்கள் குறித்த அறிக்கையொன்றை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அளித்துள்ளது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

அந்த அமைப்புகளுக்குத் தடை விதிப்பது, சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு விலை கொடுத்தும் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்படவேண்டும் என்று அது கூறியிருந்தது.

சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் முகமது சபி குரேஷி மங்களூர், பெங்களூர், மற்றும் உடுப்பி ஆகிய நகரங்களைப் பார்வையிட்டு செப்டம்பர் 16 ஆம் தேதிமுதல் 18 வரை நடைபெற்ற கிறித்தவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து மதிப்பீடு செய்தபின் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளார்.

உடுப்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள். வன்முறைக்குப் பொறுப்பு ஏற்பதாக பஜ்ரங் தளத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரகுமார் கூறியுள்ளார். ஆனால் இன்றுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வன்முறை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 பேரில் 36 பேர் பஜ் ரங்தள உறுப்பினர்கள் என்று பெங்களூர் நிர்வாகம் கூறியுள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படவேண்டும். மங்களூரில் கிறித்தவப் பெண் களைத் தாக்கிய ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
< viduthalai/20081006/news
---------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

4 comments:

Robin said...

ஒரிசாவில் காவிகள் பயங்கரவாதத்தில் ஈடுபட காரணங்கள்.
1. காவிகள் பழங்குடியினரிடையே வெறுப்பை உண்டாக்கியது மட்டுமல்லாமல் அவர்களை மேலும் கண்டுமிராண்டிகளைப்போல ஆக்கியது ஒரு காரணம. பெண்கள் கூட கத்திகளையும் கம்புகளையும் தூக்கிக்கொண்டு கொலைவெறியுடன் அலைந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நாகரீகம் உள்ளவர்கள் இப்படி நடக்கமாட்டார்கள்.

Robin said...

2. பலர் கிறிஸ்தவர்களாக மாறியதும், அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டதால் அவர்கள் வாழ்க்கைதரம் மாறியதால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையும் ஒரு முக்கியமான காரணம். கிறிஸ்தவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதும், கிறிஸ்தவர்கள் கணிசமான அளவில் இருக்கும் இடங்களில் கல்விகற்றவர்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என்பதும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

Robin said...

3. கிறிஸ்தவர்கள் அதிகமாகியதால் தங்கள் வாக்கு வங்கி குறைந்துவிடுமோ என்று அச்சப்பட்டு பாஜக என்ற பாசிச கட்சி தன் அடியாட்களான காவி படைகளை வன்முறைக்கு ஏவி விட்டதும் ஒரு காரணம்.

Robin said...

4. பாஜக தயவில் ஆட்சி செய்யும் நவீன் பட்நாயக் மைனாரிட்டியினர்தானே செத்து ஒழியட்டும் என்று இருப்பதும் ஒரு காரணம்.