Followers

Friday, October 3, 2008

கருமாதியா? உங்கள் தன்மானத்தையும் உனது தாயின் தன்மானத்தையும் ஒரு சேரப் பறிக்க........

யாரிடமோ படுத்து உன்னைப் பெற்றதாக இருந்தாலும்...என்கிறது மந்திரம்!

செத்த மறுநாள்
சாம்பலை எடுத்துப்போய்
இராமேசுவரத்தில்
கரைத்து வந்தாயாமே !

ஊரை ஏமாற்றும் பார்ப்பானை அழைத்துவந்து
கருமாதிக்
காரியம் பண்ணப்போகிறாயாமே!

பார்ப்பானை அழைத்துவந்து
செய்யும்
கருமாதியிலா
இருக்கிறது பெற்றவளுக்கு நீ
செய்யும் நன்றிக்கடன்?

எனது கேள்விகளால்
நிலை குலைந்தான்
செத்துப்போன தாய்க்கு
கருமாதிக் கடிதம்
கொடுக்கவந்த
எனது பங்காளி!

தம்பி உனது வரலாறு
நான் அறிவேன்
சின்ன வயதில்
உங்க அப்பா
செத்த பிறகு
உன் தாய்தான்
உங்களைப் படிக்க வைத்தார் மாடாய் உழைப்பதிலும்
மணி மணியாய்
பிள்ளைகளை
வளர்ப்பதிலும்
வாழ்வைக் கழித்தவர் அவர்.

உழைப்புக்கு எடுத்துக்காட்டாய்
வாழ்ந்த உனது தாய்
இருக்கும்வரை
தனது தன்மானத்தை
ஒரு நாளும் இழந்ததில்லை
உஙகள் தன்மானத்தை
இழக்கவும்
ஒரு நாளும்
சம்மதித்தில்லை.

உங்கள்
தன்மானத்தையும்
உனது தாயின்
தன்மானத்தையும்
ஒரு சேரப் பறிக்க
கருமாதி மந்திரத்தோடு
காரியம் செய்ய
நீஅழைத்த பார்ப்பான்
வரப் போகிறான் .

நெருப்பாய்
வாழ்ந்த உன் தாயை
செத்த பின்பு
இழிவாய்க் காட்ட பார்ப்பான் வரப் போகிறான்
சம்மதம்தானா உனக்கு !

கருமாதிச் சடங்கில்
பார்ப்பான்
சொல்லும்
மந்திரத்தின்
அர்த்தம் தெரியுமா
உனக்கு !

ஏகமாதா பகுபிதா
ஒரு தாய்க்கும்
பல தகப்பனுக்கும்
பிறந்தவனே
என உன்னை
சொல்லப் போகிறான் சம்மதம்தானா உனக்கு !

யாரிடமோ
படுத்து
உன்னைப் பெற்றதாக
இருந்தாலும்...
என்கிறது மந்திரம்!

நெருப்பாய்
வாழ்ந்த
உன் தாயைப்
பழிப்பானே
பரவாயில்லையா?

தம்பி தாயின் நினைவைப்
போற்ற வேண்டும் !
அவ்வளவுதானே
உனக்கு வா!

உன் தாயின் நினைவு நாளில்
நம் ஊரில்
அரசு பள்ளியில்
படிக்கும்
ஏழைக் குழந்தைகளுக்கு
புத்தகம் கொடு,
நோட்டுக் கொடு.

நம் ஊரில்
உனது அம்மா
பெயரில்
நூலகம் கட்டு!

போட்டித்தேர்வில்
வெற்றிபெற்று
அரசாங்க வேலை
பார்ப்பவன் நீ

போட்டித் தேர்வில்
வெற்றிபெறுவது
எப்படி?


நம்ம ஊர்
பிள்ளைகளுக்கு
அம்மாவின்
பெயரால் சொல்லிக்கொடு

சொன்னதை
செவிமடுத்த
தம்பி
பார்ப்பானை அழைக்க மாட்டேன்
என ஒட்டுமொத்த
கருமாதிக் கடிதத்தையும்
கிழித்துப் போட்டான்


ஊருக்கு நல்லது
செய்வேன் என்தாய்

நினைவாக

என்றான்.

----வா நேரு

viduthalai/20080927/snews

-----------------------------------------------------

திதி காலத்தில் அவன் சொல்லும் மந்திரம் நமது தாய்மார்களின் நடத்தையைக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தவே உள்ளன.


அவை.1) `ஏகமாதா வெகு பிதா சத்சூத்ராய’’பொருள்:

ஒரு அம்மாவுக்கும், பல அப்பாக்களுக்கும் பிறந்த சூத்திரனே (சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று பொருள்)

2) ``
யன்மே மாதா பிப்ர மமதயச்சாரானனுவ் ரதம்தன்மே ரேத பிதாவ்ருங்க்தமாபூரன் யோப பதயதாம்பித்ருப்யஸ்வதா விப்ய: ஸ்வதா’’


பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழுதுமாக அனுசரிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்தத் தகப்பனார் வருவார்.

அப்படி அவர் வராமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர், அதாவது எனது தாயின் கணவர் இந்தப் பிண்டத்தைப் பெற வேண்டும்.

3) `
யதித்விபிதாஸ்யா தேகை கஸ்மின்பிண்டேத் வெனத் வாவு பல ஹ்யேக்’’


பொருள்: ஒருவனுக்கு இரண்டு தகப்பன்களிருந்தால் ஒரு பிண்டத்திலேயே அவ்விருவர்களையும் குறிக்க வேண் டும். பிண்டம் போடும்போது சொல்ல வேண்டிய `யேசத் வாமனு’’ என்கிற மந்திரத்தை `ஏதத்வாம் தாதன ரேசத் வாமனு’’ என்றிவ்வாறு சொல்ல வேண்டும்


(சிரார்த்த காலத்தில் உபஸ்தானமந் திரம்) எழுந்து நின்று `யன்மேமதா.. ஸ்வதா’’ என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டியது. (ஆபஸ்தம்பர்)

4) ``அனேன விதினா ஜாத:க்ஷத்ரினிபை ஸபவேத்ஸுத்’’

பொருள்: இங்கு `க்ஷத்ரிஎன்ற சொல்லிற்கு `நிலத்தின் சொந்தக்காரன்என்று பொருள் மக்களைப் பெறுதல் பயிர் தொழில் போன்றதால், தாயின் சரீரம் நிலமும், தந்தையின் வீரியம் வித்தும் என்பர் வடநூலார்.- யக்ஞவல்கியர்

-5) ``
என்மே மாதா ப்ரலு லோபசரதி அனனவ் வ்ரதா தன்மே ரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹாஅவபத்யதாம்’’
பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன், என் அப்பா யாரெனத் தெரியாது.

மற்றவர்கள் சொல்வதால் நம்ப வேண்டியுள்ளது. ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியைக் கொண்டு போய்ச் சேர்ப்பீர்.

மேற்கண்ட மந்திரங்களை, நம்மைச் சொல்லச் செய்து, நாமே நம் அம்மாவை இழிவுபடுத்தும் நிலையைப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து நம் இன மக்கள் திதி கொடுப்பது என்ற மூடப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். ARTICLE BY : >>---தஞ்சை நாராயணசாமி IN >>: " VIDUTHALAI.COM"

முழுவதும் படிக்க இங்கு செல்லவும்:-

மானமுள்ளவன் தாயை இழிவுபடுத்தும் திதி கொடுக்கலாமா? பார்ப்பானின் வயிறு என்ன பரலோகத் தபால் பெட்டியா?

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_11.html

---------------------------

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: