Followers

Friday, October 31, 2008

தமிழ் பெயரை சொல்லி தமிழனிடமே காசு பார்த்துவிட்டு அவனையே விமர்சிக்கும் தமிழ் மணமே‍! எச்சரிக்கை‍!! பாரதி ராஜா.& குழு

தமிழ் பெயரை சொல்லி தமிழனிடமே காசு பார்த்துவிட்டு அவனையே விமர்சிக்கும் தமிழ் மணமே‍! எச்சரிக்கை‍!! பாரதி ராஜா  60 க்கும் மேற்பட்ட‌ டைரக்டர்ஸ் குழு
DOUBLE CLICK THE PICTURE TO SEE LARGE.
------------------------------------------

Wednesday, October 29, 2008

திருச்சியை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானம்-2 பேருக்கு பலன்


ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் சிறுநீரகங்களும், கண்களும் தானமாக தரப்பட்டுள்ளன.
ஜெய் சிறீ ராம் எனக் கத்திக் கொண்டு கத்திகள், துப்பாக்கிகள், மண்ணெண்ணெய் டின்கள் முதலியவற்றைத் தூக்கிக் கொண்டு... .

இட்லரை புகழ்கிறது. முசுலிம்களை இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்தவர்கள் எனக் கற்பிக்கப்பட்டுள்ளது.

கத்திகள், துப்பாக்கிகள், மண்ணெண்ணெய் டின்கள் முதலியவற்றைத் தூக்கிக் கொண்டு ஜெய் சிறீ ராம் எனக் கத்திக் கொண்டு தெருக்களில் கும்பலாக ஓடிவரும் கூலிப்படைகள் அடுத்த மதக்காரர்களை அடித்துக் கொல்வதைப் பார்க்கிறோம்.

Tuesday, October 28, 2008

கோட்சே முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்

ஊடகங்களில் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்


சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்

மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு.பெண்ணின் மாதவிலக்கு இரத்தம் பயன்படும். எதை தீட்டென்றும் அசூசை என்றும் சொல்லி வந்தார்களோ அதுவே உயிர்காக்கும் மருந்தாகிறது.

வேர்செல்களை உபயோகித்து உடலில் திசுக்களைப் புதுப்பிக்கும் சிகிச்சைமுறை உலகம் முழுவதும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

வளரும் கருவிலிருந்து வேர்செல்களை எடுத்துப் பயன்படுத்துவதில் சிசுக்கொலை என்ற தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது.

Monday, October 27, 2008

இசுலாமியர் பகுதிகளில் குண்டு வெடிப்பு

ஓய்வு பெற்ற 2 ஆர்.எஸ்.எஸ். ராணுவ அதிகாரிகளுடன் ஆர்.எஸ்.எஸ். பெண் சாமியார் கைது

புனே, அக். 27- மகாராட்டிர மாநிலம் மலேகானில் கடந்த மாதம் 29 ஆம் தேதி சிமி அலு வலகத்துக்கு முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

Sunday, October 26, 2008

``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''

``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''

"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''

"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''

"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''

"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''

"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''
"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''

**ஒருவருடைய உடம்பிலிருந்து தானமாக வழங்கக்கூடிய உறுப்புகளை பற்றிய விளக்கப்படம்

"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''

"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''

"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.

ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''

"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,

ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.

ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,

உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''

"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''

"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.

மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன

நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''

"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.

கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.

இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.

சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''

"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''

1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.

1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.

1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.

1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.

1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.

1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.

2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
***
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?

சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். INFO FROM INTERNET.
----------------------------------------
மற்ற பதிவுகள்

Saturday, October 25, 2008

ஒழிக நிரோத்!! ஒழிக குடும்பக் கட்டுப்பாடு. நான்கு பிள்ளைகள் பெற‌ வேண்டுமாம். விசுவ இந்து பரிசத். R.S.S.

இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடித்து வரும்போது முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தைப் பெருக்கி வருகிறார்கள்.

இந்து மக்களின் பெரும்பான்மையைத் தொடர்ந்து காப்பாற்றுவதாக ஒவ்வொரு இந்து குடும்பத்திற்கும் நான்கு பிள்ளைகள் இருக்குமாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விசுவ இந்து பரிசத் எனும் இந்து மத வெறி அமைப்பு தெரிவித்துள்ளது.

குடும்பக் கட்டுப்பாடு எனும் திட்டத்தை மூட்டைகட்டி வைத்திட வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது. இந்தக் கோரிக்கையை அவர்கள் அச்சுப்போட்டு ஒரு நூலாகவே தொகுத்துள்ளனர்.

2100-இல் பெரும்பான்மையராக இந்து மக்கள் இருக்கவேண்டும் என்றால் இதைச் செய்ய வேண்டும் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது. (பாரதத்திலே இந்துப் பெரும்பான்மை (பாரத் மே இந்து பகுமத்) என்பது நூலின் பெயர்.
இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடித்து வரும்போது முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தைப் பெருக்கி வருகிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை நாடு முழுவதும் பரப்பப் போகிறார்களாம். வீதி நாடகங்கள், கருத்தரங்கங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் இதனைப் பரப்பி, இந்து மக்கள் தொகையைக் குறைப்பதற்காகச் செய்யப்படும் சதியை அம்பலப் படுத்தப் போகிறார்களாம்.

அரசின் மனிதநேயக் கொள்கைக்கு எதிராக மட்டும் அல்ல, உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த கொள்கையை மதத்தைக் காட்டி இந்துமத வெறியர்கள் எதிர்க்கிறார்கள்.
viduthalai/20081023/news
---------------------------------
இதை படியுங்க..
அலறும் R.S.S. இந்து மதத்தில் குறைந்து வரும் எண்ணிக்கை பிற மதத்தில் வளர்வதால் ஒவ்வொரு இந்து பெண்ணும் மூன்று பிள்ளைகளை பெறவேண்டும் -ஒழிக நிரோத்!!
-------------------------------------
மற்ற பதிவுகள்

Wednesday, October 22, 2008

13 வயதில் மனைவியாகி தாயாகி வாழாவெட்டியாகும் மலை ராணிகளின் சோகம்

மைனர் பெண்ணுடன் உறவு வைத்தால் அது `ரேப்' என்று சட்டம் உறுதியாகச் சொல்கிறது. ஆனால் ஜமுனாமரத்தூர் பகுதியில் பள்ளிக்குச் செல்லும் பதினாலு வயசுப் பெண் கர்ப்பிணியாக மட்டுமல்ல வாழா வெட்டியாகவும் இருக்கிறாள்
ஜாதி, மதம், அந்தஸ்து என அதுஅதுக்கு ஏற்றமாதிரி பலவிதமான திருமணங்கள் நடக்கும். ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைகிராமப் பகுதியில் நடக்கும் திருமணங்கள் இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டது.
சடங்கு சம்பிரதாயம் ஒருபுறமிருக்க, சாந்தி முகூர்த்தத்திற்குப் பின்தான் கல்யாணமே... அதுவும் மறுநாள், சில நாள் கழித்து அல்ல... ஆறு மாதம்!``ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டா அவளைக் கட்டிக்க விரும்பும் பையன் நேரிடையாக அந்தப் பெண்ணின் வீட்டிற்குப்போய், `உங்க மகளை நான் கட்டிக்கலாம்னு இருக்கேன். ஆறுமாதம் என்னோட குடும்பம் நடத்த அனுப்பி வைங்க! பிடிச்சிருந்தா கல்யாணம். இல்லன்னா பத்திரமா திருப்பி அனுப்பிவிடறேன்!' என்று கேட்பான்.
பொண்ணைப் பெத்தவங்களும் அதுக்கு சம்மதப்பட்டு அந்தப் பையனுடன் அனுப்பி வைப்பாங்க.
பல சமயங்கள்ல அந்த ஜோடி அப்படியே கல்யாணம் பண்ணி குடும்ப நடத்த ஆரம்பிச்சிடும். சில சமயம் பிரச்னை வந்து பெண்ணை திருப்பியும் அனுப்பிவிடுவாங்க... காலங்காலமா இது நடந்து வந்தாலும் இப்போ போலீஸ்காரங்க அப்படி செய்யக் கூடாதுன்னு தொந்தரவு பண்றாங்க. அதனால நிறைய குறைஞ்சிருச்சி. அதோ அந்தப் பக்கம் போவுதே பொண்ணுக, அதுல நாகவேணின்னு ஒரு பொண்ணு இருக்கே, அதுக்கும் இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சி. இப்ப நல்லாத்தான் சேர்ந்து வாழ்ந்துகிட்டிருக்கா'' என்று ஜமுனா மாத்தூர் பகுதி சம்பிரதாயத்தை விளக்கமாகச் சொன்னார் பெருங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர்.
ஜமுனாமரத்தூர் ஒன்றி-யத்தைச் சேர்ந்த இதுபோன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பல திருமணங்கள் இப்படித்தான் நடக்கின்றன. `திருமண வயது பெண்களுக்குப் பதினெட்டு' என்று பின்புறம் எழுதிய ஆட்டோக்கள் நகரத்தில்தானே வலம் வருகின்றன. இதுபோன்ற மலைகிராமங்களில் இன்னமும் பூப்பெய்திவிட்டாலே கல்யாண வயதுதான்.
அந்தப் பெருங்காட்டூர் பெரியவர் காட்டிய நாகவேணியை நெருங்கி பேச்சுக் கொடுத்தோம்.
``எனக்கு போனவருஷம் கல்யாணமாச்சு. அவர் பேரு ராகவன். எங்க ஊருதான். ஆறுமாசம் கல்யாணத்துக்கு முன்னாடி அவரோடு சேர்ந்து வாழ்ந்தேன். அவருக்கும் என்னை பிடிச்சுப் போச்சு. கல்யாணமும் பண்ணிக்கிட்டார்...'' என்று வெட்கச் சிரிப்புடன் சொன்ன நாகவேணிக்கு அதிகபட்சம் பதினைந்து வயசு இருக்கலாம். அவரது கணவரைப் பற்றி கேட்டதும், ``அவர் விறகு உடைக்கப் போயிருக்கார். அவர் போனதும் கொரட்டுப் பழம் பறிக்க நாங்க காட்டுக்கு வந்துடுவோம். ஒரு நாள் முழுக்க பழம் பொறுக்கினா பத்து ரூபாய் கிடைக்கும்!'' என்று அப்பாவியாய் சொன்னாள் நாகவேணி.
அதென்ன கொரட்டுப் பழம் என்று அவர்கள் தலைச்-சுமையை இறக்கிப் பார்த்தோம். நாவல் பழம் மாதிரி இருந்தது. அதில் என்ன சிறப்பு என்று நமக்குப் புரியும்படி அவர்களால் சொல்ல இயலவில்லை.
மலைப்பாதையில் சிறிது தூரம் நடந்தோம். மற்றொரு பெரியவர் தென்பட்டார். அவருக்குப் பெயர் குழந்தையாம்.
``பையனுக்குப் பொண்ணை பிடிச்சிருந்தால் தானுங்க கல்யாணம் பண்ண முடியும். பொண்ணப் பார்த்து அதை முடிவு பண்றதைவிட பழகி முடிவு செய்யறதுதான் சரின்னு முன்னாடி இருந்தவங்க உருவாக்கின சம்பிரதாயம். காலம் காலமா குடும்பம் நடத்தறதுக்கு இதுதான் சரின்னு நாங்களும் தொடர்ந்து அப்படியே செய்யறோம்'' என்றார் குழந்தை.
இதில் எதாவது பிரச்னை வந்தால் பஞ்சாயத்தைக் கூட்டி விடுவார்களாம்... ``பஞ்சாயத்தில் பையன் ஏதாவது தப்பு செய்திருந்தாலோ, இல்லை அந்தப் பெண்ணுடன் வாழ விருப்பமில்லை என்று முரண்டு பிடித்தாலோ ஆறு மரக்கா அரிசியும் ஒரு பன்றியும் அபராதம் விதித்துவிடுவோம்... பன்றியை குழம்பு வைத்து அந்த அரிசியை பஞ்சாயத்துக்கு வந்திருந்தவர்களுக்குப் பொங்கிப்போட்டு விட்டால் பிரச்னை அத்துடன் தீர்ந்ததாக அர்த்தம்!'' என்று சின்னசாமி இந்த வேதனையான, நூதன திருமணத்தில் வில்லங்கம் வந்தால் தீர்க்கும் திகிலான தீர்ப்பைச் சொன்னார்.
மைனர் பெண்ணுடன் உறவு வைத்தால் அது `ரேப்' என்று சட்டம் உறுதியாகச் சொல்கிறது. ஆனால் ஜமுனாமரத்தூர் பகுதியில் பள்ளிக்குச் செல்லும் பதினாலு வயசுப் பெண் கர்ப்பிணியாக மட்டுமல்ல வாழா வெட்டியாகவும் இருக்கிறாள். இது சம்பிரதாயமா, யதார்த்தமா, மீறலா இல்லை அரசின் கவனக்குறைவா? சாதாரண மக்களைப் பற்றிய சமூகத்தின் அலட்சியமா? காரணம் தெரியாதவரை முடிவுகள் ஏற்பட போவதில்லை..
- புஷ்கின்ராஜ்குமார்.
http://www.kumudam.com/magazine/Kumudam/2008-10-22/pg3.php
----------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Tuesday, October 21, 2008

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பலித்த, அதிசயமான‌ தேள் கடி மந்திரம். "உன்னைக் கடிச்சா எனக்கென்ன?"--கற்றுக்கொள்ளுங்கள்.

கலைவாணரின் நகைச்சுவைத் திறன். மனிதநேயம். டைமிங் காமெடி.

"உன்னைக் கடிச்சா எனக்கென்ன?"

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சி. நாகர்கோவில் வீட்டு மாடியில் கலைவாணர் இருக்கின்றார், கீழே தளத்தில் பாட்டி படுத்துள்ளார்கள். தேள் பாட்டியை கடித்து விடுகிறது, பாட்டி அய்யோ! அம்மா! வலிக்குது எனத் துடிக்கிறார்! குரல் கேட்டு மாடியில் இருந்து கலைவாணர் இறங்கி வருகின்றார்.

மதுரத்தை அழைத்து மஞ்சள், வேப் பிலை, ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வா என்கிறார். அவர்களும் கொண்டு வந்தார்கள். மஞ்சளை எடுத்து தேள் கடித்த பகுதியில் தடவுகிறார்.

செம்பு தண்ணீரை பக்கத்தில் வைக்கின்றார். வேப்பிலையை எடுத்து கொத்தாக தேள் கடித்த பாட்டிமீது லேசாகத் தடவி மந்திரங்களை வேக வேகமாக உச்சரிக்கின்றார். வேப்பிலையை வேக வேகமாக அடிக்கிறார் தொடர்ந்து செய்து கொண்டே பாட்டி இப்போது வலி குறைந்து விட்டதா? குறைஞ்சு இருக்குமே! குறையணுமே! என்று மீண்டும் மந்திரம் சொல்லி பாட்டி இப்போ வலி எப்படி இருக்கு எனக் கேட்கிறார்! இப்போ வலி குறைஞ்சுள்ளது! வலி இல்லையப்பா! என்கிறார்.

நாளைக்கு ஒரு தரம் மந்திரிச்சா எல்லாம் சரியா போகும் - அப்படினு சொல்லிப் போய் படுங்க. படுத்து தூங்கு பாட்டி என்று சொல்லி விட்டு மாடிக்குச் செல்கிறார்.

உடன் சென்ற மதுரம், ஏங்க! என்ன சொல்லி மந்திரிச்சு போட்டீங்க! பாட்டிக்குச் சரியா போச்சு! என்கிறார். கலைவாணர் சிரித் துக் கொண்டே அது, தாரகமந்திரம் -வெளியே சொல்லாதே என்று சொல்லி உன்னைக் கடிச்சா எனக்கென்ன - உன்னைக் கடிச்சா எனக்கென்ன என்று வேகமாக சொன்னேன் என்றார். கேட்ட மதுரம் உட்பட அனைவரும் சிரித்தோம்!

குறிப்பு: கலைவாணர் மகன், என்.எஸ்.கே. நல்லதம்பி அவர்கள் கலைஞர் தொலைக் காட்சியில் கூறக் கேட்டேன்.

கலைவாணரின் மனிதநேயம்
உதவி என்று கேட்டு வந்துவிட்டால் அவருக்கு எந்த வகையிலாவது கொடுத்துஉதவ வேண்டும் என்று கொள்கை கொண்டவர் கலைவாணர்.

நாடக சபாவில் ஒரு நாள் ஒருவர் வந்து எனக்கு நல்லா நாதஸ்வரம் வாசிக்க தெரியும்; வாசிக்க அனுமதி வேண்டும் எனக் கேட்கிறார்.
உடன் இருந்தவர்கள் அவரை விரட்டுவதில் குறியாக இருந்தார்கள்.

கலைவாணர் அவரை அழைத்து நாதஸ்வரத்தை வாசிக்கக் கூறினார். அவரும் வாசிக்கின்றார், மற்றவர்கள் முகம் சுளிக்கின்றார்கள். ஆனால் கலைவாணர் அவர்கள் பிரமாதம்! ஆகா! அற்புதம்! நல்லா இருக்கே! பேஷ், பேஷ்! நல்லா வாசிக்கிறார் என்று ஒரே பாராட்டு மழை பொழிந்தார்.

அவரை அழைத்து பண உதவி செய்து அனுப்பி வைத்தார் சக நாடக சபாவினர் என்னத்தை வாசித்தார். இவருக்குப் போய் எதற்குப் பணம் கொடுத்தீர்கள் என்ற போது

கலைவாணர், அது எனக்கும் அவருக்கும்தான் தெரியும். அவரிடத்தில் வறுமை கண்டேன் உதவி செய்தேன் என்றார் கலைவாணர்.

கலைவாணர் டைமிங் காமெடி
நாடகங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்க நகைச்சுவை வழங்குவதில் கலைவாணர் சிறப்பு பெற்றவர் என்பதை அறிவோம் இருந்தபோதிலும் ஓர் செய்தி.

நாடக ரிகர்சல் நடைபெற்றுக் கொண்டுள்ளது. கலைவாணர் கோபமாக ஒருவரை அடித்து பல் 32-அய் தட்டி விடுவேன் எனக் கூற வேண்டும்.
கலைவாணர் கோபமாக நடிக்கிறார் அடிச்சு பல் 31-அய் தட்டி விடுவேன் எனக் கூறுகின்றார்.

அவர் உடனே கலைவாணரை குற்றம் சொல்வதாக எண்ணி பல் 32-க்கு பதில் 31 என கூறி விட்டீர்கள் என்கிறார்.

உடனே கலைவாணர் அந்த ஒரு பல்லை நான் ஏன் விட்டு வைத்தேன் தெரியுமா அந்த ஒரு பல்லில் வலி வந்து நீ சாகணும் அப்படினு சொல்வார். கேட்ட அனைவரும் சிரித்தோம்.- - தகவல்: மு. அன்புக்கரசு பெரியகுளம்
http://files.periyar.org.in/viduthalai/20081018/snews08.html
-------------------------------------------
படிக்கவும்:
நடிகர் சத்யராஜ்--போகாத கோயில் இல்லை, குளம் இல்லை.எந்த சாமியும் என் தலையில் முடியை வளர வைக்க முடியவில்லை!
-------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Monday, October 20, 2008

நடிகர் சத்யராஜ்--போகாத கோயில் இல்லை, குளம் இல்லை.எந்த சாமியும் என் தலையில் முடியை வளர வைக்க முடியவில்லை!

சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளர வை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன். ஒரு சாமியும் நான் சொன்னப் பேச்சைக் கேட்கவில்லை.

சென்னை - பெரியார் திடலில் "இனமுரசு" பேச்சு!
சென்னை, அக். 20- நான் போகாத கோயில் இல்லை, கும்பிடாத சாமி இல்லை.. எந்த சாமியும் என் தலையில் முடி வளர வைக்கவில்லை என்று பிரபல திரைப்பட நடிகர் சத்யாஜ் சென்னை - பெரியார் திடலில் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை - பெரியார் திடலில் செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு நடிகர் சத்யாஜ் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

எனக்கு இரண்டு ஆசிரியர்கள்
மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் அமர்ந்திருக் கின்ற தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கு என்னுடைய பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னை அறிமுகப் படுத்திய தோழர் ஒருவர் சொன்ன பொழுது, நான் தந்தை பெரியாராக சிறப்பாக நடித்தேன் என்று சொன்னார்.

பொதுவாக ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் அமைந்தாலே சிறப்பாக செய்தி போட்டுவிடுவான். ஆனால் எனக்கு இந்த பெரியார் படத்தில் நடிக்கும்பொழுது இரண்டு ஆசிரியர்கள் கிடைத்தார்கள் (பலத்த கைதட்டல்).

தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது வயிற்று வலியால் துடித்த காட்சியைப் பட மாக்கவேண்டும். பெரியார் எப்படி வலியால் துடித்தார் என்ற காட்சி எனக்குத் தெரியாது. அதைப்பற்றி நான் தெரிந்துகொள்ள நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களிடம் கேட்டேன்.

ஆசிரியர் நடித்துக் காட்டியபொழுது அழுதுவிட்டார்
இதைத் தெரிந்துகொள்வ தற்கு எதற்குங்க இன்னொருத்தர். நானே நடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி, அதை நடித்துக்காட்டும் பொழுது அப்படியே அழுது விட்டார் ஆசிரியர் அவர்கள். (கைதட்டல்) அது மாத்திரமல்ல, அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த எல்லாருமே அழுதுவிட்டோம்.

முதல்வர் கலைஞர் நடித்துக்காட்டினார்
அந்த அளவுக்கு அவருக்கு அய்யாமீது ஈடுபாடு. அதற்குப் பிறகு நமது தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பார்க்கச் சென்றோம். 1967-ல் முதல் தடவையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து, பேரறிஞர் அண்ணா அவர்களும், நாவலர் அவர்களும், பேராசிரியர் அவர்களும், டாக்டர் கலைஞர் அவர்களும், திருச்சிக்குச் சென்று அய்யா அவர்களைப் பார்த்தபொழுது அய்யா அவர்கள் எப்படி வர வேற்றார்? எப்படி பேசினார்? என்பதை முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் அப்படியே நடித்திக்காட்டினார்கள்.

இந்த இரண்டு பேருடைய நடிப்பைப் புரிந்து கொண்டு நான் நடித்துவிட்டேன் (கைத்தட்டல்). அதனால் இந்த பெரியார் படத்தில் நடித்ததற்கு எவ்வளவு சிறப்புகள் கிடைத் தாலும் அது தமிழர் தலை வரையும், தமிழினத் தலை வரையுமே அந்தப் பெருமை சாரும் (கைதட்டல்).

600 கோடி பெரியார் தொண்டர்களுக்கு நன்றி
நான் பொதுவாக இங்கு வந்திருக்கின்ற பெரியார் தொண்டர்களுக்கு வணக்கம், நன்றி என்று சொன்னேன். பெரியார் திடலில் இருக்கின்ற பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருக்கின்ற 600 கோடி பெரியார் தொண்டர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் (பலத்த கைதட்டல்).

600 கோடிபேரும் பெரியாரின் கொள்கையால் பின்பற்றுகின்ற பகுத்தறிவாளர்கள். எவன் ஒருவன் தலைவலி வந்தவுடன் ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டானோ அவனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை (பலத்த கைதட்டல்).

இங்கு மண்டபத்தில் உட் கார்ந்திருக்கின்ற கருப்புச் சட்டை போட்ட நாமெல்லாம் ரொம்ப சாதாரணமான பெரியார் தொண்டர்கள். நம்மைவிட பெரியார் தொண்டர்கள் இன்று பெரியார் கொள்கையை யார் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால்,

இன்றைக்கு பிள்ளையார் சிலையை கடலில் கொண்டு போய் போட்டு கரைக்கிறார்கள் - பாருங்கள். அவர்கள்தான் நம் எல்லோரையும் விட பெரிய பெரியார் தொண்டர்கள்.

நாமெல்லாம் அவர்கள் முன்னாலே கைகட்டி நிற்க வேண்டும் (கைதட்டல்). அய்யா எதற்காக பிள்ளையார் சிலையை வாங்கிப் போட்டு உடைத்தார்? அதற்கு எந்த சக்தியும் இல்லை.

பிள்ளையாரை உடைத்துப் பார்
அது ஒரு பொம்மைதான். நீ வேண்டுமானால், உடைத்துப் பார். அது திரும்ப ஒன்றுமே செய்யாது என்று நிரூபிப்பதற்காகத்தான் பிள்ளையாரை உடைத்தார். நாம் அதையெல்லாம் செய்யாமல் உட்கார்ந்திருக்கின்றோம். நாம் உடைத்த பிள்ளை யாரைக்கூட ஒட்ட வைத்து விடலாம். அந்த பிள்ளையாரைக் கொண்டுபோய் கடலில் போட்டுவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது.

பெரியார் சிலையை கடலில் கரைக்கும் பொழுது கிரேனை வைத்துத் தூக்குகி றார்கள். அந்தக் கிரேனை வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது.

அங்கே மத நல்லிணக்கம்
அவன் வேறு மதத்தைச் சார்ந்தவன். இப்படி ஒரு அந்த நிகழ்ச்சியிலே மத நல்லிணக்கம் நடந்துகொண்டிருக்கின்றது. அதற்கெல்லாம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நிகழ்ச்சியை நான் ஆரம்பிக்கின்றேன் (கைதட்டல்).

600 கோடி பேரும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லுவதற்கு இது ஒன்று தான் காரணம்.

இளைஞர்களிடையே ஒரு மோகம்

இன்றைக்கு இளைஞர்களிடையே ஒரு மிகப்பெரிய மோகம். இருக்கிறது. ஜிம்முக்குப் போய் உடம்பைத் தேறச் செய்து கட்டுடலாக்க வேண்டு மென்று கடவுள் நம்பிக்கை உள்ள இளைஞர்களுக்கு ஒரு டெஸ்ட்டு வைக்க விரும்புகிறேன்.

வெளிநாட்டில் இருக்கிற இரண்டு வெள்ளை எலியைப் பிடித்து ஒரு எலிக்கு ஒரு மருந்தை கொடுப்பான், இன்னொரு எலிக்கு அந்த மருந்தை கொடுக்காமல் விட்டுவிடுவான். அது மாதிரி நான் எல்லோரிடமும் சொல்லுகின்றேன்.

நீ ஒரு காரியம் செய்தால்தான் முடியும் உடலில் கட்டுடலான தசைகள் வேண்டுமென்று நினைக்கின்ற ஒருவன் ஜிம்முக்கே போகாமல் தினமும் கோயிலுக்குப் போய்விட்டு வாருங்கள் - பிறந்ததிலிருந்து.

இன்னொருவர் கோவிலுக்கே போகாமல் தினமும் ஜிம்முக்குப் போய் எக் சசைஸ் செய்யுங்கள். யாருக்கு கட்டுடல் வருகிறது என்று பாருங்கள் (கைதட்டல்). இதிலிருந்து நீ இறங்கிவந்து ஒரு காரியம் செய்தால் மட்டும் தான் முன்னேற முடியும் (கை தட்டல்).

நீ படித்தால்தான் பாஸ் பண்ணமுடியும்
நீ படித்தால்தான் பாஸ் பண்ண முடியும். நீ எக்சசைஸ் பண்ணினால்தான் மசில்ஸ் வரும் (கைதட்டல்). நீ மாத்திரை சாப்பிட்டால்தான் தலைவலி போகுமே ஒழிய இந்தக் கடவுள் என்ற கற்பனையினாலே எதுவுமே நடக்காது. அதை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்துவிட்டேன்.

எனக்குத் தலையில் முடி கொட்ட ஆரம்பித்தவுடன்
எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே (பலத்த கைதட்டல் - சிரிப்பு) நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை. எல்லா கோவிலுக்கும் போனேன்.

சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளரவை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லாகோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன்.

ஒரு சாமியும் நான் சொன்னப் பேச்சைக் கேட்கவில்லை. தலைக்குமேலே முடி வளர வில்லை. அப்பொழுது கருப்புச் சட்டைப்போட்ட தொண்டர் ஒருவர் வந்து என்ன பிரச்சினைங்க என்று கேட்டார். இல்லீங்க, தலையில் முடி கொட்டியதுங்க என்று சொன்னேன். அவர் கேட்டார் - நீங்கள் என்ன தொழில் பண்ணுகிறீர்கள் என்று. நான் சினிமாவிலே நடிக்கிறேன் என்று சொன்னேன்.

முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்?
சினிமாவில் டோப்பாவை வாங்கிவைத்துக் கொள்ளலாமே, தலையில் முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள் நான் ஒரு சாமியிடம் அழைத்துக் கொண்டு போகின்றேன். அந்த சாமி தலைக்கு மேலே முடியை வளர வைக்குமோ? என்று தெரியவில்லை.

தலைக்கு உள்ளே இருக்கிற மூளையை வளரவைக்கும் (கைதட்டல்), அப்படின்னு சொல்லி ஒரு சாமிக்கிட்டே அழைத்துக் கொண்டு போனார். அந்த சாமிதான் தந்தை பெரியார் என்ற ஈ.வெ. ராமசாமி (பலத்த கைதட்டல்) பெரியாருடைய புத்தகங்களைப் படித்தேன்

அந்த உருவத்தைக் கும்பிடவில்லை. கும்பிட வேண்டிய அவசியமில்லை. அவர் சொன்ன விசயங்களையும், அவருடைய தத்துவங்களையும், அவருடைய புத்தகங்களையும் படித்தேன். தலைக்கு மேலே வளருதோ இல்லையோ தலைக்கு உள்ளே வளர்ந்து விட்டது (கைதட்டல்) .

ஆகையினாலே மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களாகட்டும், மற்று முள்ள தொண்டர்களாகட்டும், நாம் எல்லோருமே தலைக்கு உள்ளே இருப்பதை நம்பி வாழ்கிறவர்கள். தலைக்கு வெளியே இருப்பதை நம்பி வாழ்கிறவர்கள் இல்லை (கைதட்டல்).


மதத் தலைவர்களுக்கும் சவால் விடுகிறேன் - என் சார்பிலும் அமைச்சர் சார்பிலும் நீங்கள் கூப்பிடுகின்ற எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் வருகின்றோம். எந்த சாமியிலும் வேண்டுமானாலும் வருகின்றோம்

எங்கத் தலையில் மட்டும் முடியை முளைக்க வைத்து விட்டீர்களேயானால், நாங்கள் ஒத்துக் கொள்கின்றோம். (பலத்த கைதட்டல்). அமைச்சர் அவர்களுக்கு நான் இரண்டு, மூன்று விசயங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஒரு விஷயத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். முதலில் நன்றி!

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
தமிழ்நாட்டில் வாழும் ஒரு தமிழன் என்ற முறையில் தமிழனுக்கெல்லாம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப் பதற்கு டாக்டர் கலைஞர் உறுதுணையாக இருந்தாரே, தம்பி உடையான் படைக்கஞ் சான் என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்ட ஒரு தம்பியை உடைய டாக்டர் கலைஞர் அவர்கள் எந்தவித மான தமிழர்களுக்கு செய்யும் நன்மைகளுக்கும் அவர் அஞ்ச மாட்டார்.

ஏனென்றால் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பொழுதே, இது எப்படி சாத்தியப்படும் என்று நினைத்தேன் ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்திருக்கிறார் என்றால் இப்படிப்பட்ட தம்பிகள் இருப்பதனால்தான் அதற்கு அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் (கைதட்டல்).

அடுத்த நன்றி அநேகமாக அவரைவிட வயதில் நான் பெரியவனாகத்தான் இருப்பேன். ஆசிரியரை அண்ணன் வீரமணி அவர்கள் என்று சொல்லியிருக்கின்றார். என்னை மட்டும் சகோதரர் சத்யராஜ் - அதாவது எதற்கு அண்ணன் என்று சொல்லி, தம்பி என்று சொல்லி என்று சொன்னாரல்லவா அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
------------------------------------
படிக்கவும்:கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பலித்த, அதிசயமான‌ தேள் கடி மந்திரம். "உன்னைக் கடிச்சா எனக்கென்ன?"--கற்றுக்கொள்ளுங்கள்.
------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Friday, October 17, 2008

படுகொலையான "பலான" பாதிரியார்.முக‌ம் சுளிக்க‌ வைக்கும் பின்ன‌ணி க‌தைக‌ள்

வேளாங்கண்ணி திருத்தல ஆலய விடுதியில், பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பெண் ஒருவருடன் (!) இவர் இந்த விடுதியில் தங்கியிருந்தபோது, அந்தப் பெண்ணே இவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடி விட்டதாகவும், பாதிரியார் வைத்திருந்த ஏழு லட்ச ரூபாய் பணத்தை லவட்டிக் கொண்டு சென்றிருக்கலாம் எனவும் பல்வேறு தகவல்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தப் பாதிரியாரின் பெயர் செல்வராஜ். ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குக்குரு இவர்.

கடந்த 5-ம்தேதி ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணுடன் நாகப்பட்டினம் வந்த இவர், வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் சொந்தமான சிறுமலர் (லிட்டில் ஃபிளவர்) விடுதியில் ஸ்டெல்லா மேரியை `சகோதரி'(!) என்று கூறி தங்க வைத்திருக்கிறார்.

8-ம்தேதியன்று பாதிரியார் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரே துர்நாற்றம் கிளம்ப, கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய.... குளியலறையில் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடந்திருக்கிறது பாதிரியாரின் உடல்.

உடனடியாக மேலிடத்துக்குத் தகவல் போய், பாதிரியார் உடல் தேவாலய பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. வேளாங்கண்ணி ஆலய வட்டாரத்துக்கு நெருக்கமான ஓர் அரசு உயர் அதிகாரி, பெண் எஸ்.ஐ. கரோலின் ஆகியோர் பாதிரியாரின் உறவினர்களை உடனே வரவழைத்து, `மாரடைப்பு காரணமாக' மரணம் சம்பவித்ததாக எழுதி வாங்கியிருக்கிறார்கள்.

இருந்தும் விஷயம் வெளியே லீக் ஆகிவிட, பத்திரிகையாளர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து விட்டனர்.அப்படிச் சென்றிருந்த நாகை மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் புகழேந்தி, நகர பா.ஜ.க. செயலாளர் மகாதேவன் ஆகியோரிடம் நாம் பேசினோம்.``மாரடைப்பில் இறந்தவர் எப்படி அறைக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்ட முடியும்? இறந்த பாதிரியாரின் உடலில் காயங்கள் வந்தது எப்படி? நாங்கள் அங்குபோய் எதிர்ப்புத் தெரிவித்த பிறகுதான், `மர்ம மரணம்' என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்தப் பாதிரியாருடன் ஒரு பெண் அல்ல, சில பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடி தனிப்படை ஒன்று ராமநாதபுரம் சென்றுள்ளது.

வி.ஐ.பி., மற்றும் வெளியூர் பாதிரிகளுக்கு இந்த சிறுமலர் விடுதிதான் ஒரு முக்கிய தங்குமிடம். ஏற்கெனவே மரியசூசை என்ற பாதிரியார் இங்கே மர்மமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

ஆலய நிர்வாகத்தில் பணியாற்றிய ஒரு முக்கிய நபர் தேவாலயத்தில் இருந்த பக்தர்களின் காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது.

`புனிதம் புனிதம்' என்று சொல்லப்படும் இடங்களில் இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்து மூடி மறைக்கப்படுகின்றன.

செல்வராஜ் கொலையையும் அதுபோல மூடிமறைக்க முயன்றால், நாங்கள் சும்மா விடமாட்டோம்'' என்றனர் அவர்கள்.வேளாங்கண்ணி பகுதியில் நாம் விசாரித்த போது, ``பாதிரியார் செல்வராஜ் அடிக்கடி பல பெண்களுடன் சிறுமலர் விடுதியில் தங்குவார்.

அந்தப் பெண்களை மற்ற பாதிரியார்களுக்கும் சப்ளை செய்வார். அவர் வயாகரா, போதைப்பொருள் பயன்படுத்துவார். அவருடன் வந்த பெண்கள் இவர் தந்த செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல் இவரது உயிர்நிலையை நசுக்கிவிட்டு ஓடிவிட்டனர்'' என்று பகீர் தகவல்களை அளித்தனர்.

வேளாங்கண்ணி காவல்நிலைய பெண் எஸ்.ஐ. கரோலினிடம் நாம் பேசியபோது, ``ஃபாதர் பல பெண்களுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுவது பொய். ஒரேஒரு(!) பெண்ணுடன்தான் அவர் தங்கியிருந்தார்.

முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்த பிறகுதான் சிவகங்கையைச் சேர்ந்த அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தோம். ஃபாதரின் உடலில் எந்தக் காயமும் இருக்கவில்லை. மதுவில் விஷத்தைக் கலந்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம்.

ஃபாதருடன் தங்கியிருந்த முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேடி வருகிறோம்'' என்றார் அவர்.பாதிரியாரைப் பற்றி நாம் ராமநாதபுரம் பகுதியில் விசாரித்துப் பார்த்தோம். அவரது சொந்த ஊர் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள எட்டியவயல். மூக்கையூர், ஓரிக்கோட்டை ஆலயங்களில் இவர் பங்குத் தந்தையாக இருந்து செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கி விரட்டியடிக்கப்பட்டு கடைசியாக முத்துப்பேட்டை ஆலய பங்குக் குருவாக இவர் இருந்திருக்கிறார்.

`உள்ளூர் டாஸ்மாக் கடைகளில் அமர்ந்து உற்சாக பானம் சாப்பிடுவது, குடித்து விட்டு தெருவோரம் குப்புற விழுந்து கிடப்பது' இவரது வாடிக்கையாம்.

முத்துப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது முகம் சுளித்தபடி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் அவர்கள்.

``செல்வராஜ் இங்கே வரும்முன் பாதிரியார்களுக்கு சமைத்துப் போட ஆண் சமையல்காரர்தான் இருந்தார். இவர் வந்தபிறகு பெண் சமையல்காரியை நியமித்து இதுவரை ஏழு பெண்களை மாற்றிவிட்டார். சமையல் செய்யும் பெண்ணை அறைக்குள் அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது இவரது பழக்கம்.

`நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)' என்று கூறுவது இவரது ஸ்டைல்.

இவருடைய தொல்லை தாங்காமலேயே ஆறு சமையல்காரிகள் மாறிவிட்டார்கள். இவரைப் பற்றி ஆயரிடம் புகார் தந்து இவரை மாற்றுவதாக அவர் உறுதி கூறியிருந்த நிலையில்தான், இந்தப் படுகொலை நடந்து விட்டது'' என்ற அவர்கள்,

இன்னொரு திடுக் தகவலையும் சொன்னார்கள். ``ஓரியூர் தேவாலய சிறப்பு ஆராதனைக்குச் செல்வதாக செல்வராஜ் எங்களிடம் கூறிவிட்டு அன்று (4_ம்தேதி) மதியம், ராமநாதபுரம் தனியார் வங்கி ஒன்றில் ஏழு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்குப் போயிருக்கிறார். சிறுமலர் விடுதியில் செல்வராஜுடன் நான்கு பெண்கள் தங்கியிருக்கிறார்கள்.

பாதிரியார் படுகொலைக்குப் பின் அந்தப் பெண்களையும், ஏழு லட்ச ரூபாய் பணத்தையும் காணவில்லை. கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் சம்பவம் வெளியே தெரிந்திருக்கிறது.

பணத்துக்காக இந்தக் கொலையை நடத்திய அந்தப் பெண்கள், முத்துப்பேட்டைக்கு வந்து பாதிரியார் தங்கியிருந்த இடத்திலிருந்த அவர்கள் தொடர்பான டாக்குமெண்ட்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்றிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்'' என்றனர்.

பாதிரியார் செல்வராஜிடம் சிலகாலம் சமையல் பணிபுரிந்த பெண் ஒருவரைச் சந்தித்தோம். பேசவே தயங்கிய அவர், ``பாதிரியார் ஒருமாதிரியானவர்தான். விஸ்கி, பிராந்தி குடித்தபடி என்னை மீன்வறுவல் செய்து எடுத்துவரச் சொல்வார். கையைப் பிடித்து இழுத்து அருகே உட்காரச் சொல்வார்.

ம். அதெல்லாம் இப்போ எதற்கு? செத்துப் போனவரைப் பற்றி குறைசொல்லிப் பேசுறது மனுஷத்தன்மை இல்லீங்க'' என்றார்.

ஆலய வட்டாரத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, ``இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் அந்தப் பாதிரியாருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயைத் தந்திருக்கின்றன'' என்றனர்.

இதற்கிடையே பாதிரியாருடன் தங்கியிருந்த நான்கு பெண்களையும் அடையாளம் காட்டுவதற்காக சிறுமலர் விடுதி வார்டனையும் கையோடு கூட்டிக்கொண்டு ராமநாதபுரம் வந்திருக்கும் நாகை போலீஸார், நேருநகர், முத்துப்பேட்டை, சேதுநகர், மண்டபம் அகதிகள் முகாம் போன்றவற்றில் அந்தப் பெண்களை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

பாதிரியார் செல்வராஜ் மரணம் குறித்து நாம் வேளாங்கண்ணி பேராலய அதிபர் சேவியர் அடிகளிடம் விசாரித்தபோது, ``போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நான் உங்களிடம் பேச முடியாது. செல்வராஜ் வேறு மறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், எங்களுக்கு அவரைப்பற்றி எதுவும் தெரியாது. பாதிரியார்களுக்கான அறையில் தங்கியதாக செல்வராஜ் போக்குக் காட்டிவிட்டு அந்தப் பெண்கள் தங்கியிருந்த அறைக்கு விசிட் செய்திருக்கிறார்.

சிறுமலர் விடுதியில் இப்படியொரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை'' என்றார் அமைதி ததும்பும் குரலில்.எது எப்படியோ? வேளாங்கண்ணி சிறுமலர் விடுதியை இப்போது வேதனை கலந்த சந்தேகத்துடன் பார்த்தபடி செல்கிறார்கள், அங்குள்ள கிறிஸ்துவ மக்கள். --விவேக், வல்லம் மகேசு
THANKS TO :http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-19/pg2.php
------------------------------

Thursday, October 16, 2008

பேய் இரவில் மட்டும் நடமாடுவது ஏன்?

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரிய வந்துள்ளது.

பேய் அல்லது ஆவியைப் பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த் திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத்தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லது ஆவிக்கு வெளிச்சத்தைக் கண்டால் பயமா?

உண்மையில் அப்படி இல்லை. மனிதர்களுக்குத்தான் இருளைக் கண்டால் மனபிராந்தி ஏற்படுகிறது. இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது, இலண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆராய்ச்சிக்குழு. இருள் சூழ்ந்து இருக்கும் போது, நிழலைப் பார்த்து, இல்லாத ஒரு உருவத்தை மூளை உருவாக்கிக் கொள்கிறது.

கண்களால் காணும் காட்சி, முழுமையாக மூளைக்குச் சென்றடைவதற்குள் ஏற்படும் மாயத் தோற்றம் இது.

இருளில் ஒன்றன்பின் ஒன்றாக, இரண்டு பந்துகளை வீசச் செய்த போது, வீசப்படாத மூன்றாவது பந்து ஒன்றும் வந்து மறையும். இது கண்களையும், மூளையையும் ஏமாற்றும் செயல்.

உண்மையில் மூன்றாவது பந்து வீசப் படாத போது, அப்படி ஒரு பந்து வீசப்பட்டதாகவும், வீசப்பட்ட பந்து, மற்ற இரு பந்துகளைப் போல மறைந்து விடுவதாகவும் மூளை உருவகப் படுத்திக் கொள்கிறது.

இது மட்டுமின்றி, கணினித் திரைகள் மூலமும், மூளையைக் கண்கள் ஏமாற்றும் சோதனைகள் நிரூபிக் கப்பட்டுள்ளன.

ஒரு அறையில் உள்ள கணினித் திரையின் மத்தியில், 80 மில்லி விநாடிகள் மட்டுமே தோன்றும் சிறிய, பழுப்பு நிறத்திலான முக்கோணம் இன்னொரு அறையில் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சோதனையின் போது, உண்மையில் திரையில் தோன்றிய முக் கோணத்தை விட, அதிக எண்ணிக்கையில் முக்கோணங்களை, அடுத்த அறையில் இருந்த விஞ்ஞானிகளின் மூளை பதிவு செய்தது தெரிய வந்தது.

இதன் மூலம் ஒளி இல்லாத இடங்களில் காணப்படும் காட்சிகள், மூளையை ஏமாற்றும் விதமான உருவங்களில் தோன்றுகிறது. இதைத்தான் பேய் என்றும் ஆவி என்றும் மூளை கற்பனை செய்து கொள்கிறது.
http://www.unmaionline.com/20080701/page21.html

Tuesday, October 14, 2008

பார்ப்பனியம் பல்லக்கில் ஏறி சவாரி செய்ய - எங்கே அந்த அத்வானி?

இவர்தான் பா.ஜ.க. அறிவித்துள்ள அடுத்த பிரதமராம்! வெட்கக்கேடு! படு வெட்கக்கேடு!!

குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முசுலிம்களுக்கு எதிராக நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி கோர யுத்தத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரிசா மாநிலத்தில் அதற்கான ஒத்திகையை மேற்கொண்டார்கள்.

1999 ஜனவரி 23 ஆம் தேதியன்று - ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் (வயது 58) அவரின் இரு மழலைச் செல்வங்களையும் ஜீப்போடு வைத்துக் கொளுத்தி, தங்களின் வெறித்தனப் பசியை ஆற்றிக் கொண்டது பஜ்ரங் தள் என்ற குரங்குப்படை.

அதனைத் தொடர்ந்து 1999 ஆகஸ்ட் 29 ஆம் தேதி அதே ஒரிசா மாநிலம் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் தாகூர் முண்டா பகுதியில் ஷேக் ரகுமான் என்ற முப்பத்திரண்டு வயது நிறைந்த ஆயத்த உடை (Ready Made) வணிகரைப் பட்டப்பகலில் அதே பஜ்ரங் தள் கும்பல் - ஸ்டெயின்ஸ் பாதிரியாரைக் கொன்ற அதே தாராசிங் கும்பல் கொலை செய்த முறைகூட நினைத்தே பார்க்க முடியாத குரூரமாகும்.

முதலில் கையை வெட்டினார்கள்; அவ்விளைஞன் துடிக்கத் துடிக்கக் கதறியபோது, தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

அதே ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியன்று அதே பாசிசக் கும்பல் இன்னொரு படுகொலையைச் செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் அவர், பெயர் அருள்தாஸ். அவரை எப்படிக் கொன்றார்கள் தெரியுமா?

காட்டுவிலங்காண்டிக் காலத்துக்குச் சென்று அம்பு எய்து, உடலை சல்லடை சல்லடையாகப் பொத்து உயிரைக் குடித்தார்கள்.

அந்த நேரத்தில், மத்தியில் உள்துறை அமைச்சராக இருந்த திருவாளர் லால்கிஷன் அத்வானி என்ன சொன்னார் தெரியுமா? பஜ்ரங்தள்காரர்கள் மிகவும் நல்லவர்கள்; அவர்கள் அது மாதிரியான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள் என்று நற்சான்றுப் பத்திரம் வாசித்துக் கொடுத்தார்.

தாம் இருக்கும் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பைக் கூட மறந்துவிட்டு புலன் விசாரணையைக் காவல்துறை எப்படி நடத்தவேண்டும் என்று அதன்மூலம் ஜாடை காட்டினார்.

அதோடு அவர் நின்றுவிடவில்லை; பழியை ஒரிசாவை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியின்மீது திணித்தார்.

கொலை பாதகர்களை ஒரிசா காங்கிரஸ் ஆட்சி கைது செய்ய வில்லை; மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது; உடனே ஒரிசா மாநில காங்கிரஸ் ஆட்சி பதவி விலகவேண்டும் என்று கூறினார் - மத்தியில் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி.

சட்டம் ஒழுங்கு கெடுவதற்குக் காரணமாக இருந்துவிட்டு, அவர்களே குற்றப் பத்திரிகை படிக்கும் நயவஞ்சகத்தைக் கவனிக்கவேண்டும்.

எவ்வளவு நரித்தனமான பேச்சு என்பது ஒருபுறம் இருக் கட்டும். குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

பிரதமராக இருந்த வாஜ்பேயி, முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்திய நேரத்தில், அதே அத்வானி என்ன சொன்னார்?
மோடி வெகு திறமையாக சில நாள்களிலேயே கலவரத்தை அடக்கிவிட்டார் என்று மோடிக்கு நற்சான்றுப் பத்திரம் அளித்தார்.

படுகொலைகளைக்கூட அவர்கள் அரசியல் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையா?

1999 இல் ஒரிசாவில் நடைபெற்ற படுகொலை என்பது விரல் விட்டு எண்ணக் கூடியதாகும். அதற்கே பதவி விலகவேண்டும் என்றார் உள்துறை அமைச்சர்; இப்பொழுதோ ஒட்டுமொத்தமாக கிறித்தவர்களுக்கு எதிராகப் பெரும் யுத்தம் ஒன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். காவல்துறை வன்முறையாளர்களுக்குத் துணை போகிறது. ஒரிசா மாநில ஆட்சி பதவி விலகவேண்டும் என்று திருவாளர் அத்வானி திருவாய் மலரவில்லையே - ஏன்?

இவர்தான் பா.ஜ.க. அறிவித்துள்ள அடுத்த பிரதமராம்! வெட்கக்கேடு! படு வெட்கக்கேடு!!

இவர்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தால்,

மதச்சார்பின்மை தூக்கி எறியப்படும்;
பாடத் திட்டங்கள் எல்லாம் மனுதர்ம அடிப்படையில் மாற்றப்படும்;
பெண்கள் உரிமைகள் எல்லாம் பாதிக்கப்படும்.
நாடெங்கும் சதி மாதாக் கோயில்கள் உருவாக்கப்படும்;
பார்ப்பனியம் பல்லக்கில் ஏறி சவாரி செய்யும்.

இத்தகைய ஒரு சூழ்நிலை உருவாகவேண்டுமா என்பதை முற்போக்குச் சிந்தனையாளர்கள் - தொலைநோக்கோடு சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

வேறு காரணங்களை முன்னிறுத்தி, அரசியல் கூட்டணியை உருவாக்கி, அதன்மூலம் அத்வானி வகையறாக்கள் ஆட்சிக் கட்டிலில் அமர வாய்ப்புக் கொடுக்கப்படுமேயானால், அந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்தக் காலகட்டத்திலும் மன்னிக்கப்பட முடியாதவர்களாகவே ஆகி விடுவார்கள் - எச்சரிக்கை!
viduthalai/20081007/news
------------------------------

கருநாடகாவில் "சர்ச்"கள் மீதான தாக்குதல் புதிய முறைத் தாக்குதலுக்கான தொடக்கமே - எஸ். ராஜசேகரா.

கருநாடகாவில் ஆட்சிக்கு பா.ஜ. கட்சி வந்து அய்ந்து மாதங்கள் கூட நிறையாத நிலையில், தங்கள் வலுவைக் காட்ட "சங்பரி வார்கள்" முஷ்டியை முறுக்கிக் காட்டுகிறார்கள்.

கடல் ஓரப்பகுதிகளில் உள்ள கிறித்துவ வழிபாட்டு இடங்களில் முதலில் தொடங்கி பிறகு பல பாகங்களுக்கும் தாக்குதல் பரவத் தொடங்கியது.

சாதாரணமாகவே, இயல்பான வாழ்க்கைக்குப் பழகிப்போன அந்த மாநில மக்கள், திடீரென சகிப்புத் தன்மையற்ற இடமாக மாறிப் போன அபாயத்தை உணர்ந்தார்கள்.

இந்துக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாகச் சொல்லப்பட்டாலும், இதை நம்புவதற்கு வழி இல்லை.

பத்திரிகையாளர்களும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடும் கொமு சவுகார்த வேதிக எனும் அமைப்பின் அமைப்பாளருமான கவுரி லங்கேஷ் என்பவரும் கட்டாய மதமாற்றம் பற்றிப் பேசுபவர்கள் ஆதாரம் காட்ட வேண்டாமா எனக் கேட்கிறார்கள்!

கட்டாய மத மாற்றம் பற்றி எத்தனை வழக்குகள் தாக்கலாகி இருக்கின்றன எனக் கேட்கிறார் கவுரி லங்கேஷ்.

வெளிப்படையான வன்செயல்கள் அந்தப் பகுதியில் விசுவ இந்து பரிசத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தளம் உள்பட சங்பரிவார் களின் வலு கூடியிருக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. மேற்கு மலைத் தொடர்ப் பகுதிகளில் கடலோரக் கிராமங்களில் சர்ச்களை வி.எச்.பி. ஏற்கெனவே தாக்கியிருக்கிறது.

அமைப்பு ரீதியாக உருவாகாமல் இருந்துவந்த பஜ்ரங்தள் கூட்டம். அம்மாநிலத்தில் கால் ஊன்ற முடியாமல் 1996 வரை இருந்தது. அந்தக் கொடிய இந்துத்துவ முக அமைப்பு 1996-இல்தான் தன் முதல் பயணத்தைத் தொடங்கியது.

அப்போது இருந்த நிலை இப்போது மாறலாம். ஏனென்றால், ஆட்சி அதிகாரம் எப்போதும் துணை புரியாது என்றாலும்கூட, இப்போது அவர் களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

சிக்மகளூர் பகுதியில் இந்துக்களும் இசுலாமியர்களும் உரிமை கொண்டாடும் பாபா புதங்கிரி தத்தா பீடம் பற்றிய பிரச்சினை, பசுவதை ஆகியவை சங்பரிவாரங்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வரும் முக்கியப் பிரச்சினைகள். மதமாற்றம் என்பது மற்றொரு விசயம் என்றாலும், பஜ்ரங்தள் இதனை ஊதிப் பெரிதாக்கி சமூக இறுக்கத்தை உண்டாக்கிச் சுமுக சூழ்நிலையைக் கெடுத்துக் கடலோரப் பகுதியில் வேரூன்ற முயல்கிறது.

குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசில் இரண்டாண்டுக் காலம் பங்கு பெற்று அரசியல் வளர்ச்சியை பா.ஜ. கட்சி பெற்று விட்ட கால கட்டத்தில் பஜ்ரங்தளமும் தன் செயல்பாடுகளை வளர்த்துக் கொண்டு விட்டது.

இருந்தாலும் இந்த முறை வழக்கமான இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையேயான தாக்குதலுக்குப் பதிலாக கிறித்துவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள்.

எல்லாமே செப்டம்பர் 14-ஆம் தேதியன்று மாறி விட்டது. புது வாழ்க்கை அமைப்பின் ஒன்பது சர்ச்கள் பஜ்ரங்தள் ஆள்களால் தாக்கப்பட்டன. மங்களூர், உடுப்பி, சிக்மகளூர் ஆகிய மூன்று ஊர்களில் ஜெபத்திற்கு முன்பே அவர்களை விரட்டி விட்டுச் சூறையாடி விட்டனர். வேறு சில இடங்களிலும் வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன.

பங்களூருவில் இரண்டு இடங்களில் தாக்குதல்கள்.
பெங்களூரு பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஜி. கிருஷ்ணன், தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல, ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருப்பவைதான்; கமுக்கமாக நடந்து கொண்டிருந்தவைதான் என்கிறார்.

இந்து அடிப்படைவாதிகள் கிறித்துவ மிசினரிகளை அதிகம் வெறுப்பவர்கள், ஏனென்றால் அவை மக்களுக்குக் கல்வியையும் மருத்துவத்தையும் சிறந்த முறையில் தருகின்றன என்பதால் என்றே அவர் தெளிவாக கூறுகிறார்.

கடந்த காலங்களில் செய்யப்பட்ட மாதிரி இல்லாமல், இப்போது திட்டமிட்டுத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இவை எதிர்காலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிறார் கவுரி லங்கேஷ்.
இவர்களைப் போலவே புத்தி கொண்ட ஆள்கள்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.

ஆதலால் பஜ்ரங்தள் துணிச்சலாக எதையும் செய்யலாம், செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் என்று டாக்டர் சந்தீப் சாஸ்திரி என்பவர் கூறுகிறார்.

ஆக்கப்பூர்வ கல்வி முறைக்கான அனைத்துலக அகாடெமியின் அரசியல் விமர்சகராக இருக்கிறார். சர்ச்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அரசாங்கத்தில் மந்தமான நடவடிக்கைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு செய்தி அளித்த பஜ்ரங்தள் அமைப்பாளர் மகேந்திர குமாரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் எட்டு நாள்கள் எடுத்துக் கொண்டது; பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுத்தது.

இந்தத் தாக்குதல்களை நடத்திய நேரம் காலம் ஆகியவை பற்றியும் கவனிக்க வேண்டும். பெங்களூருவில் நடந்த பா.ஜ. கட்சி செயற்குழுக் கூட்டத்தின் இறுதி நாளன்று நடந்துள்ளது.

அந்தச் சமயத்தில் அந்தக் கட்சியின் பெருந் தலைகள் அத்வானி, ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி, ஜஸ்வந்த் சிங் முதலிய எல்லோருமே மாநிலத் தலைநகரில் இருந்த நேரத்தில் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எட்டியூரப்பா, உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யாவுடன் சென்று பார்வையிட்டார் என்றாலும், தாக்குதல்களை மறைமுகமாக நியாயப்படுத்தினார்.

பெருமளவில் மதமாற்றங்கள் நடந்துள்ளன. அவற்றின் எதிர் விளைவுதான் தாக்குதல்கள் என்றே அவர் கூறினார்.

தெரிந்தோ தெரியாமலோ அவருடைய சாக்குப் பையிலிருந்து பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. பா.ஜ. கட்சியின் நிலைப்பாடு பட்டவர்த்தன மாகத் தெரிந்து விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இக்கட்சியின் மறைமுகச் செயல் திட்டம் அம்பலமாகி விட்டது. ஆனாலும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களின் உள்ளக் கிடக்கை வெளியே தெரிந்து விட்டது. பா.ஜ. கட்சி ஆட்சியில் இருப்பதால், சகோதரக் கட்சிகள் சிறுபான்மையரைத் தாக்கி ஆதாயம் காண்பதற்கான முயற்சிகளுக்கு நிறைய சலுகைகளை எதிர்பார்க்கின்றன.

கருநாடகத்தின் மூலம் தென் இந்தியாவில் வெற்றி பெற நினைக்கும் பாஜ கட்சி, குஜராத் பாணியைக் கடைப்பிடிக்க நினைக்கிறது.

அந்த முறைதான் சிறு பான்மை மக்களை அச்சுறுத்தும் முறை என அவர்கள் நினைக்கிறார்கள்.

சிறுபான்மையினரை ஒன்று சேர விடாமல் தாக்குதல்களை நடத்துவதற்கு இந்த மாதிரியான செயல்முறைதான் லாயக்கு என்று பா.ஜ. கட்சி வெளிப்படையாகக் கூறுகிறது. சங்பரிவார்கள் மாநிலத்தைக் காவிமயமாக்கிட இதுவே வழி என்று நினைக்கிறது.

கருநாடகாவை மற்றொரு குஜராத் ஆக மாற்ற நினைக்கிறார்கள். இந்த வழி தான் சரியானது என்பதை அது நிரூபிக்கிறது என்கிறார் கவுரி லங்கேஷ்.

2001-இல் நரேந்திர மோடி முதன் முதல் குஜராத்தில் பதவிக்கு வந்தபோது சர்ச்கள்தான் அடித்து நொறுக்கப்பட்டன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கி அச்சமூட்டி இந்து மதத்தைக் காப்பாற்றப் பிறந்தவர்கள்போல் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் மதவெறியர்கள், ஜாதி முறைக்கும், ஏற்றத் தாழ்வான சமூக அமைப்புக்கும் வக்காலத்து வாங்குபவர்கள் என்று கடுமையாகச் சாடுகிறார் பேரா. கிருஷ்ணன்.

முதலில் தனக்குச் சம்பந்தம் இல்லாதது போல் காட்டிக் கொண்ட விசுவ இந்து பரிசத் இப்போது ஆதரிக்கிறது. காரணம், பா.ஜ. கட்சி மதமாற்றத்தைக் காரணம் காட்டி ஆதரித்துள்ளது தான்.

ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கி விடுவதற்கு மிசினரிகள் செய்யும் செயல்களில் தவறு ஏதும் இல்லை என்றே பேரா. கிருஷ்ணன் கூறுகிறார். நான் கிறித்துவன் ஆனால், அவர்களுக்கு என்ன?

தேவைப்படும் வசதி வாய்ப்புகளைத் தந்து தங்கள் மதத்தின்மீது பற்றுக் கொள்ள வைக்கிறார்கள். இது உலகம் முழுவதும் நடை பெறும் செயல்தான்.

இந்த இந்துமதக் காவலர்கள் - உணவும் கல்வியும் ஏழை மக்களுக்குத் தருவார்களேயானால், யார்தான் வேறு மதத்திற்குப் போவார்கள்? என்கிற அறிவார்ந்த வினாவை எழுப்புகிறார் அவர்.

பரிவார்களின் செயல்களை கிரிஷ்கர்நாட், யுஆர்அனந்த மூர்த்தி போன்றவர்கள் கண்டிக்கிறார்கள். இவர்களைக் கண்டித்து ஏழை மக்களைக் கிறித்துவ மிசினரிகள் கெடுக்கிறார்கள் என்கிறாராம்

சிதார்ந்தானந்த மூர்த்தி எனும் ஆராய்ச்சியாளர். இவர் சிறுவனாக இருந்தபோது தாவணகரே எனும் ஊரில் சர்ச்சே கிடையாதாம். இப்போது 150 இருக்கின்றனவாம். மதமாற்றம் பெரிய ஆபத்து என்கிறார். சர்ச்கள்மீதான தாக்குதலைக் கண்டிக்கத் தயங்கு கிறார்; அரை மனத்தோடு குற்றம் கூற விரும்புகிறார் எனினும் சங்பரிவார்களுக்கு வலுவூட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருப்பது தெரிகிறது.
நன்றி: "சண்டே எக்ஸ்பிரஸ்" 28.9.2008
viduthalai/20081007/news
----------------------------------------
மற்ற பதிவுகள்

Monday, October 13, 2008

பார்ப்பனர்களின் உச்சக்கட்ட ஆட்டம்..சிறீரங்கம்: ஆண்டுக்கு ரூ.5 கோடி கொள்ளை!

கோடியாகக் கொள்ளை அடிக்கிறது பார்ப்பனக் கூடாரம், அதில் போய் கை வைத்தால் அவர்களுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்?

திருச்சி அருகே இருப்பது சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவில். இக்கோவிலின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக இருப்பவர் மா.கவிதா. நேர்மையான, செயல்திறன் மிக்க அதிகாரி எனப் பெயர் பெற்றவர்.
சென்னையில் இவர் உதவி ஆணையராக இருந்த போது, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் 15 நாள்கள் செயல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டின் முதல் பெண் செயல் அலுவலர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் சிறீரங்கம் கோவில் செயல் அலுவலராக கவிதா நியமிக்கப்பட்டார். இவரை உடனடியாக மாற்ற வேண்டும் என சிறீரங்கத்துப் பார்ப்பனர்கள் போராடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் இப்பிரச்சினையில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் சமரசம் பேசி வருகின்றனர்.

பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல் அலுவலர் கவிதாவுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்?

இப்பிரச்சினை திருச்சி முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுவதன் பின்னணி என்ன? என்பது குறித்து அறிய சிறீரங்கம் கோவிலுக்குச் சென்றோம். அங்கு கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் பேசிய போது நமக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் எனும் சட்டம், அமைதிப் புரட்சியாக இங்கே அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 இடங்களில் இப்பயிற்சிக் கூடம் உள்ளது. இதில் 3 சிவன் கோவிலிலும், 2 வைணவக் கோவிலிலும் உள்ளது. இதில் சிறீரங்கம் கோவிலும் ஒன்று.

சிறீரங்கத்தில் உள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பள்ளியைச் சட்டத்திற்கு உட்பட்டு திறன்பட செயற்படுத்தி வருபவர் செயல் அலுவலர் கவிதா. ஆடு மேய்த்த தமிழர் கூட, அழகழகாய் மந்திரம் சொல்கிறார் சிறீரங்கத்தில்!

மொத்தம் 30 பேர் பயிலும் இப்பயிற்சிக் கூடத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் 12, பார்ப்பனர் 1, மற்றவர்கள் 17 என்ற விகிதத்தில் பயின்று வருகின்றனர்.
இவர்கள் இன்னும் சில நாள்களில் பார்ப்பனர்களின் கோட்டையாகத் திகழும் அரங்கநாதசாமி கோவிலுக்குள் நுழைய இருக்கிறார்கள். அதற்குரிய ஏற்பாட்டை முனைப்புடன் செயல்படுத்தும் செயல் அலுவலர் கவிதா மீது குடுமிகளுக்குக் கோபம்.

இதுமட்டுமின்றி கவிதா அவர்கள் பணிக்குச் சேர்ந்தது முதலே பார்ப்பனர்களுக்கும், இவருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது.
அதாவது சாமியைத் தோளில் சுமந்து கொண்டு புறப்பாடு என்ற பெயரில் தெருத் தெருவாக வீதி உலா வருவார்கள். அப்போது பார்ப்பனர்கள் தீர்த்தம், திருநீறு, துளசி என அனைத்தும் கொடுப்பார்கள். ஆனால் பெண்களுக்கு மட்டும் கொடுக்க மாட்டார்கள்.

இதை முதன் முதலில் தட்டிக் கேட்டுள்ளார் கவிதா. ஆனால் பார்ப்பனர்கள் மறுத்துள்ளனர். எல்லோருக்குமுள்ள உரிமையைப் பெண்ணுக்கும் கொடு, இல்லையெனில் செயல் அலுவலர் என்பதற்காகவாவது கொடு எனக் கேட்டுள்ளார்.

ஆனால் பார்ப்பனர்கள், ஆகம விதி இடம் கொடுக்காது என மறுத்துவிட்டனர். அப்படியானால் 106 விதியின் படி (இந்து அறநிலையத்துறை சட்டம்) நடவடிக்கை எடுப்பேன் என்றதும் பார்ப்பனர்கள் அலறியடித்து இறங்கி வந்துள்ளனர்.ஆகம விதி, ஆகம விதி என அடிக்கடி கூறும் பார்ப்பனர்கள் ஆகம விதிப்படி நடந்து கொள்வதில்லை என்கிறார் மற்றொரு கோவில் ஊழியர்.

ஆகம விதிப்படி சொந்தமாக (ளநடக) முகத்தை மழிக்கக் கூடாது, ஆனால் இவர்கள் மழிக்கிறார்கள். உடல் முழுவதும் உள்ள ரோமத்தை மழிக்க வேண்டும், இவர்கள் செய்வதில்லை.

வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது, ஆனால் வளர்க்கிறார்கள்.இவ்வளவு ஏன்?

உண்மையான பார்ப்பனர் கடல் கடந்து வெளிநாடு போகக் கூடாது. ஆனால் குடும்பத்துக்கு ஒரு பார்ப்பனர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இதில் பெரிய கொடுமையும் ஸ்ரீரங்கத்தில் நடந்துள்ளது.

ரெ.நரசிம்ம பட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகராக இருந்துள்ளார். பின்னர் கடல் கடந்து அமெரிக்கா சென்றுவிட்டார். ( ஆகம விதியை மீறியது வெட்கம் கெட்ட செயல் என்றால், கிறித்துவ நாட்டுக்கு சென்றது மானம் கெட்ட செயல்) இவர் அமெரிக்காவில் வசித்தாலும் கோவிலில் வேலை செய்வதாகத் தினமும் நோட்டில் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த கவிதா இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

நரசிம்மா பட்டரின் இரண்டு சகோதரர்களான ரெ.நந்தகுமார் என்கிற சுரேஷ் பட்டர், ரெ.முரளி பட்டர் ஆகிய இருவரும் இதே கோவிலில் பட்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். ( இந்த இரண்டு பட்டர்கள் மட்டும் யோக்கியமா என்ன? இவர்கள் பட்டராக இருந்து கொண்டே, திருவெறும்பூர் பெல் தொழிற்சாலையில் வேலையும் பார்த்து வருகின்றனர்)

இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் நரசிம்ம பட்டரின் கையெழுத்தை மோசடியாகப் போட்டு வந்துள்ளனர். இது ஒரு கிரிமினல் குற்றமாகும். இதைக் கண்டுபிடித்து 15.04.2008 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதனால் செயல் அலுவலர் கவிதா மீது நந்தகுமார் பட்டர் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்த இடத்திலிருந்து உங்களை வேறொரு இடத்திற்கு மாற்றுகிறேன் எனச் சபதமும் இட்டுள்ளார்.

பொதுவாக இக்கோவிலில் 18 பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் காலம் காலமாக இக்கோவிலின் சொத்துகளை அனுபவித்து வருகின்றனர். தந்தை அர்ச்சகராக இருந்தால் அவரின் பிள்ளையும் அர்ச்சகராக இருக்க முடியாது. இதற்குச் சட்டத்திலும் இடமில்லை. ஆனால் ஸ்ரீரங்கத்துப் பார்ப்பனர்கள் பல ஆண்டுகளாகக் குடும்பம் குடும்பமாக மக்கள் சொத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள்.

அண்மையில் கூட கோவில் நிலங்களில் குடியிருப்பதற்கு வாடகை செலுத்த வேண்டும் என அரசு அறிவிப்பு செய்தது. அதுவும் 100 ரூபாய்க்கு 1 பைசாதான். இப்பணத்தை வாடகையாகக் கட்டுவதில் பார்ப்பனர்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் அவர்கள் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?

நாங்கள் ஏன் வாடகை செலுத்த வேண்டும்? இது எங்கள் இடம், எங்களுக்கு உரிமையான இடம், காலம் காலமாக நாங்கள் வசித்து வருகிறோம், அதனால் நாங்கள் வரி செலுத்த மாட்டோம் என அடம்பிடித்து வருகின்றனர்.

கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள், குறைந்தபட்சம் வரியைக் கட்டிவிட்டு, தொடர்ந்து அங்கேயே இருக்கலாம் என்றுதான் அரசு அறிவித்தது.

ஆனால் பார்ப்பனர்களோ, அது எங்கள் இடம், நாங்கள் வரி செலுத்த மாட்டோம் எனத் தலைவிரி கோலத்தில் ஆடியுள்ளனர் (தமிழ்நாட்டில் எந்த இடத்தையும் இது எங்கள் இடம் என்று சொல்லிக் கொள்வதற்குப் பார்ப்பனர்களுக்கு அருகதை கிடையாது) இதுமட்டுமின்றி, சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவிலில் மொத்தம் 52 சன்னதிகள் உண்டு. இதில் 35 சன்னதிகள் பார்ப்பனர்களின் தனி ராஜ்ஜியத்தில் செயல்படுகின்றன.

அங்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செல்வதில்லை. அந்த 35 சன்னதிகளில் நடைபெறும் பூஜை, புனஸ்காரம், வசூல், இத்யாதிகள் அனைத்தும் பார்ப்பனர்களின் தனிக் கணக்கிற்குச் சென்றுவிடுகின்றன.

இதில் தன்வந்திரி சன்னதி என்று ஒன்றுண்டு. தன்வந்திரி என்றால் மருத்துவக் கடவுள் என்று பெயர் ( ஆயுர்வேதம், சித்தா மற்றும் மருந்துக் கடைகளுக்குத் தன்வந்திரி என்ற பெயரை இதனால்தான் வைக்கின்றனர்)
இதுவரை இப்படி கொட்டமடித்த இவர்களுக்கு, இப்போது 35 சன்னதிகளுக்குரிய கணக்குகளை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றதும் மேலும் கோபமாகிவிட்டது. இது மட்டுமின்றி கோவிலுக்குள் உண்டியலை மக்கள் பார்வையில் படாதவாறு வைப்பார்களாம்.

அப்போதுதான் அதற்குள் பணத்தைப் போடாமல், தட்சணைத் தட்டில் போடுவார்களாம். இப்போது கோவில் நிருவாகத்தால் அந்த உண்டியலை மக்கள் பார்வையில் படுமாறு வைத்துள்ளார்களாம். ( உண்டியலில் இருந்து பல்வேறு வகைகளில் பணத்தை எடுப்பதில் கூட பலர் கில்லாடிகளாம்)அதேபோல கோவிலுக்குள் புறப்பாடு என்ற ஏற்பாட்டை செய்வதிற்கு ஒருவரை நியமிப்பார்கள். அவருக்குப் பெயர் மணியக்காரர். இதை முறைப்படி ஏலத்தில்தான் விடவேண்டும். ஆனால் கடந்த 15 ஆண்டு காலமாக ஒரே நபர்தான் ஏலம் எடுத்து மணியக்காரராக இருந்துள்ளார்.

இதில் வரும் இலட்சக்கணக்கான பணத்தைப் பார்ப்பனர்களே பிரித்துக் கொண்டு, மீதமுள்ள சொற்ப பணத்தைக் கோவில் நிருவாகத்திடம் கொடுப்பார்களாம். அலுவலர் கவிதா பொறுப்பேற்றவுடன் முறைப்படி இதை ஏலம் விட்டுள்ளார்கள். அதற்கு முன்பு 15 இலட்சம் வரை ஏலம் போனது, சென்ற ஆண்டு 24 இலட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

இதையும் அதே பழைய மணியக்காரர்தான் எடுத்துள்ளார். நாளொன்றுக்கு ரூ.15000 வரை இதில் இலாபம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மணியக்காரர் தெருவில் வடை சுட்டு வியாபாரம் செய்தவராம். இன்று மக்கள் பணத்தில் இலட்சாதிபதி.

அதேபோல தெருக்களில் புறப்பாடு போகும் போது முறைப்படி செல்ல வேண்டிய பாதைகளில் செல்லாமல், யார் அதிகம் பணம் தருவார்களே அப்பாதையில் சென்று, அப்பணத்தைச் சொந்தமாக வைத்துக் கொள்வது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கும், பணக்காரர் வீடுகளுக்கும் சென்று சிறீரங்கம் கோவில் பெயரைக் கூறி யாகம், பூஜை நடத்தி பலப்பல ஆயிரங்களை இவர்கள் சுருட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கவிதா பொறுப்பேற்றவுடன் பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்குக் காசோலையாகக் கொடுத்துள்ளார். ஆனால் பல பார்ப்பனர்கள் காசோலையை வாங்க மறுத்துள்ளனர். காரணம் காசோலையை வாங்கினால் முறைப்படி கணக்குக் காட்ட வேண்டி வரும். அப்படி வரும் போது பலரும் வருமான வரி கட்ட வேண்டிய நிலை வரும்.

அதேபோல் அடையாள அட்டைக்காக அர்ச்சகப் பார்ப்பனர்களின் பெயர், வயது, முகவரி, பணிகள், மார்பளவுப் புகைப்படம் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. ஆனால் அவற்றைத் தர இன்று வரை அவர்கள் மறுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சிறீரங்கத்திற்கு அறங்காவலர் குழுத் தலைவர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. 60 வயதுக்கு மேல் அர்ச்ச கராக இருக்கக் கூடாது என்பதையும் இவர்கள் பின்பற்றுவதில்லை.

கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் பார்ப்பனக் கொள்ளைகள் ஏராளம்! கோவில் நிலத்தில் குடியிருந்து, பின்னர் யாருக்கும் தெரியாமல் மோசடி வேலைகள் செய்து, அந்த இடத்தோடு சேர்த்து வீட்டையும் விற்ற பார்ப்பனர்கள் அதிகம் பேர். சற்றொப்ப 3300க்கும் மேற்பட்ட பார்ப்பனக் குடும்பங்கள் அங்கே ஆக்கிரமித்து வசிக்கின்றனர்.

ஒரே ஒரு பார்ப்பனரிடம் மட்டும் 1000 ஏக்கர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்மை யில் கோவில் இடத்தை ரூ. 40 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயலும் போது ஒரு பார்ப்பனர் பிடிபட்டுள்ளார். கட்டளைச் சொத்து, தர்மச் சொத்து, பட்டா சொத்து என ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இதுமட்டுமின்றி ஆந்திரா தொடங்கி தென்காசி முழுவதும் ஏராளமான சொத்துகள் பரவிக் கிடக்கின்றன.

இவையனைத்தையும் ஏக போகமாக அனுபவித்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் உண்டு கொழுக்கின்றனர். ஆனால் இதே கோவில் நிலத்தில் பூ கட்டும் தொழிலாளர்கள் உரிய வாடகை, வரி செலுத்தி நாணயமாக வசித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் ஆக்கிரமிப்பை அகற்றுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டுமாம். இக்கோவிலைச் சுற்றி 7 பிரகாரம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு மதில் சுவற்றின் ஓரத்திலும் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக் கொண்டு, பார்ப்பனர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் எங்குமே பாதாளச் சாக்கடைத் திட்டம், மலத் தொட்டிகள் (செப்டிக் டேங்க்) கிடையாது. பெருமாள் இவ்வீதிகள் வழியாக வருவதால் இத்திட்டத்தைப் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள். எனவே சற்றொப்ப 2000 பேரின் மனிதக் கழிவும் திறந்த வெளியில்தான் ஓடுகின்றன.

ஒவ்வொரு மதில் சுவர் அருகிலும் சாக்கடை, மலம், சிறுநீர் எனச் சுகாதாரக் கேட்டின் முக்கிய ஸ்தலமாக சிறீரங்கம் விளங்குகிறது. மழைக் காலங்களில் தண்ணீரோடு சேர்ந்து இந்த மலக்கழிவுகள் தமிழர்கள் வாழும் பகுதிக்குப் போகிறது. அச்சமயங்களில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு அவர்களால் காரணம் அறிய முடியவில்லை. இப்போதுதான் இந்த அசிங்கங்கள் மெல்ல தெரியத் தொடங்கியுள்ளன.

இதை விடக் கொடுமையும் இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உண்டு.
பெரும்பாலான பார்ப்பனர்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கும். கருவறைக்குள் எவ்வளவு நேரம் தான் அடக்க முடியும்?

அதனால் கோவில் கருவறை அருகிலுள்ள மடப்பள்ளி என்ற இடத்தைச் சிறுநீர் கழிக்கப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல அச்சுவர் முழுக்கப் பான்பராக் கறைகளையும் பார்க்க முடியும். அண்மையில் கூட கோவிலின் பின்புறம் ஏராளமான மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டு, அப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.

இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு பார்ப்பனர் மதுபோதையில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க, அப்பகுதி மக்கள் அப்பார்ப்பனரை அடித்து உதைத்துள்ளனர்.

ஆக பார்ப்பனர்களின் மோசடி, பித்தலாட்டம், ஒழுங்கீனம், கேவலத்தன்மை மற்றும் ஏராளமான இத்யாதிகளின் கூடாரமாக அக்கோவில் உள்ளது. இப்படிப்பட்ட சுகபோகமான இடத்தில் கவிதா என்ற அதிகாரி வந்து ஆகம விதியை, அறநிலையத்துறைச் சட்டத்தை, ஒழுங்கை, நேர்மையைப் பறைசாற்றவதுப் பார்ப்பனர்களுக்கு அறவே பிடிக்கவில்லை.

இந்தச் சிரமங்கள் எல்லாம் இருப்பதால்தான் கோவில்களை பார்ப்பனர்களின் சொத்தாக்க வேண்டும் எனக் கொக்கரிக்கின்றனர். சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவில் செயல் அலுவலர் கவிதாவை உடனடியாக மாற்ற வேண்டும் எனப் பார்ப்பனர்கள் கொதித்துப் போயிருப்பதற்கு ஒரே வரியில் இப்படிக் கூட சொல்லலாம்.

2006 - 07-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவில் வருமானம் சுமார் 5 கோடி. இவர் பொறுப்பேற்றதும் 2007 - 08-ஆம் ஆண்டு சுமார் 10 கோடி. இரண்டு மடங்காகியுள்ளது. அதிகம் என்றால் என்ன பொருள்?

பார்ப்பனர்கள் கொள்ளையடித்த 5 கோடியை அதிகாரி கவிதா தமிழ்நாடு அரசுக்கு ஈட்டித் தந்திருக்கிறார். ஆக அவர் மீட்டது இவ்வளவு என்றால், இதுதவிர மேற்சொன்ன, நடைமுறையிலுள்ள கொள்ளை மதிப்பையும் சேர்த்தால் எத்தனை கோடி வரும்?

தமிழ்நாட்டில் வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பணத்தை இப்படி கோடி, கோடியாகக் கொள்ளை அடிக்கிறது பார்ப்பனக் கூடாரம், அதில் போய் கை வைத்தால் அவர்களுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்?

அரசு, சட்டம், நீதிமன்றம் எதற்கும் நாங்களும், எங்கள் ஆகமமும் கட்டுப்படாது என்கிறார்கள். கோடி, கோடியாய் அள்ளிக் கொடுக்கும் பொது மக்கள்தான் இதற்குகொரு முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் பொது மக்களுக்காக பாடுபடும் கவிதா போன்ற அதிகாரிகளுக்கு அவர்கள் முடிவு கட்டிவிடுவார்கள். - வி.சி. வில்வம்.

viduthalai/20081012/news
------------------------------
மற்ற பதிவுகள்

Sunday, October 12, 2008

தினமணி அய்யரின் அருள்வாக்கு! சன்மார்க்கமா? - மதச்சார்பின்மையா?

தினமணி ஏட்டின் ஆசிரியரான திருவாளர் வைத்திய நாதய்யர் தினமணி அலுவலகத்தில் பணியாற்றுவதைவிட உபந்நியாசம் என்பதில்தான் அதிகக் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

அத்தகைய சொற்பொழிவுகளில் எல்லாம் சன்னமாக ஒன்று இழையோடுவது மட்டும் உண்மை. அதுதான் பச்சையான ஆர்.எஸ்.எஸ். என்ற அருவருப்புக் குப்பை - அதற்கு விளக்கம் வேண்டும் என்றால் பார்ப்பனப் புத்தி!
வடலூர் வள்ளலார் விழா ஒன்றில் பங்கு கொண்ட அவர் ஒரு போடு போட்டு இருக்கிறார் பாருங்கள் - படிப்பவர்கள் யாரும் அசந்து போய்விடுவார்கள்.

வாயைத் திறந்தவுடனேயே ஒரு அருமுத்து.
1) வள்ளலாரும், மகாத்மா காந்தியும் இந்து மத நம்பிக்கை உடையவர்கள். ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். நாத்திகத்தை வெறுத்தவர்கள் - தினமணி ஆசிரியர்.இதே தினமணி -இராமலிங்க அடிகளார் வரலாறு (ஊரன் அடிகள்) நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளது (7.5.1971)

சீர்திருத்த சைவ வழி கண்டவர் வள்ளலார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.அப்படியிருக்கும் பொழுது அன்றைய தினமணி ஏட்டின் கூற்றுக்கு முரணாக வள்ளலாரை இந்து என்று கூறுவது எத்து வேலையல்லவா!

சைவம் வேறு - இந்து மதம் வேறு என்பதை மறைமலை அடிகளார் போன்றவர்கள் நிறுவியுள்ள நிலையில், இந்தக் குட்டை குழப்பும் வேலை ஏன்?

ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரின் வாய் இந்து மதத்துக்கு முட்டுக் கொடுக்கத்தானே செய்யும்! அதைத்தான் திரு. வைத்தியநாதய்யரும் சன்னமாக செய்துள்ளார்.

இன்றைக்கு இராமலிங்க அடிகளைத் தூக்கிச் சுமக்கும் இந்தப் பேர் வழிகளின் முன்னோர்கள் அவரை எப்படியெல்லாம் சிதம்பரத்தில் அவமானப்படுத்தினர். உண்மையான தில்லை நடராசன் சிதம்பரத்தில் இல்லை; இங்கு தானிருக்கிறார் என்று வடலூரைக் கண்டவர் அல்லவா அடிகளார்.
வள்ளலார் ஒரு இந்துவாக இருந்தால் கடவுள் ஒருவர் - அதுவும் அருட்பெருஞ்ஜோதி என்று கூறியிருப்பாரா?

இருட்சாதித் தத்துவ சாத்திரக்குப்பைஇருவாய்ப்புப்புன்செய்யில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களைச் சிரம வழக்கெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு என்று தன் நிலையைத் தெளிவாக்கியிருக்கிறாரே!

சமயங்கள், மதங்களை மண் மூடிப் போகச் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துச் சென்றுள்ள இராமலிங்க அடிகளாரை இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று தினமணி வைத்தியநாதன்கள் சொல்லுவது அசல் ஆர்.எஸ்.எஸ். பாணிப் புத்திதானே!

சிதம்பரத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வேதனை யுற்று வடலூரில் ஒரு கோயில் நிறுவி அதற்கு உத்தர ஞான சிதம்பரம் என்று பெயர் சூட்டினாரே - உருவ வழிபாடு கூடாது என்பதற்காகத்தானே ஒளி (ஜோதி) வழிபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடவுள்கள் - மனைவிமார்கள், கூத்தியர்கள் என்று பட்டியல் போட்டு உருவங்களைப் படைத்திருக்கும் இந்து மதத்தோடு கடவுளுக்கு உருவமே கூடாது என்று உறுதியாகக் கூறி அதற்குச் சான்றாக அருட்பெருஞ் ஜோதி தனிப் பெரும் கருணை என்று மதமற்ற, உருவமற்ற ஒன்றை உருவாக்கியவரை, எவ்வளவு தில்லுமுல்லுத் தனத்தில் ஊறியிருந்தால் ஒரு இந்து மதக்காரர் என்று நாக்கூசாமல் பேசியிருப்பார்?

காந்தியாரைச் சுட்டு கொன்றவன்கூட தன்னை இந்து என்றுதான் பெருமையாகக் கூறிக் கொண்டான்.

இந்தியா மதச் சார்பற்றது என்று காந்தியார் சொன்ன 50 நாள்களிலேயே இந்து வெறியனின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தியாரின் மார்பைத் துளைக்கவில்லையா?

பார்ப்பனரை எதிர்த்து வருணாசிரமக் குப்பைகளை எரியூட்டச் சொன்ன இராமலிங்கனாரை சூடம் வைத்துக் கொளுத்தி ஜோதியாகி விட்டார் என்று அவர் கதையை முடித்த கூட்டம் இராமலிங்கனாரைப் புகழ்வது போல காட்டிக் கொள்ள முன்வருகிறது. இதற்கு பெயர்தான் பார்ப்பனியம் என்பது.

காந்தியாரும் இராமலிங்க அடிகளாரும் நாத்திகத்தை வெறுத்ததாகக் கூறியுள்ளார்.நாத்திகம் என்பதும் இந்து மதத்தில் உள்ள ஒன்றுதான்;

தசரதனின் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகர் இருந்தார் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் கூட்டத்தினர் இப்பொழுது நாத்திகர் என்று குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றது போல் பேசுவது ஏன்?

இந்து மதத்துக்காக வக்காலத்து வாங்கும் வைத்தியநாதய்யர்வாளுக்கு இந்து மதத்தைப் பற்றிக்கூட சரியாகத் தெரியவில்லை என்பதுதான் சரியான தமாஷ்!

இந்துமதத்தில் கடவுள் இல்லை என்பதற்கும், நாத்திகத்துக்கும் சம்பந்தம் கிடையாது; மாறாக இந்து மதத்தில் யார் நாத்திகர் என்றால் வேதங்களை மறுப்பவன் தான் - வருணாசிரம தர்மத்தை மறுப்பவன்தான் நாத்திகன்.
இதுபற்றி விவரம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் காஞ்சி சங்கராச்சாரியார் - மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதி வெளிவந்துள்ள தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் (பக்கம் 407-408-இல்) காணலாம்.

கடவுளை மறுத்தால் கூட பார்ப்பனர்களுக்குக் கஷ்டம் இல்லை. மாறாக வேதங்களை, சாத்திர சம்பிரதாயங்களை எதிர்க்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு;

காரணம் ஜாதிதானே அவர்களை உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து சுரண்டல் தொழிலுக்கு லைசென்சு கொடுத்துள்ளது.

இந்துமத வேதங்களையும், வருணத்தையும் வள்ளலார் எதிர்ப்பதால் அவரும்கூட அவாள் பார்வையில் நாத்திகர்தானே!

2) மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்துக்குத் தீர்வு சமரச சன்மார்க்கம்தானே தவிர, இறைமறுப்புக் கொள்கையை ஒற்றிய மதச் சார்பின்மையில்லை என்று ஒரு புதிய தத்துவத்தை உதிர்த்திருக்கிறார்.

சரிதான். இதன் மூலம் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மதத்தின் பெயரால் தீவிரவாதம் - அதாவது வன்முறைகள் நடக் கின்றன என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் - (எங்கே சுற்றினாலும் கடைசியில் ஈரோட்டுச் சந்திப்புக்குத்தானே வர வேண்டும்)மதச்சார்பின்மை என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் ஒரு கால கட்டத்தில் ஒரு கூட்டம் மிகவும் மிரண்டு போய்த் தானிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது.

மதச்சார்பற்ற தன்மை என்பது இறைமறுப்பு என்பதும் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரிந்து விட்டது. அதனால்தான் இப்பொழுது இப்படியெல்லாம் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டனர்.

மதச்சார்பின்மையை எடுத்து விட்டு அந்த இடத்தில் வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தை வைத்து விடலாமா?

இது குறித்து அவாளின் பார்ப்பன சங்கத்தில் ஒரு தீர்மானம் போடச் செய்யட்டுமே! சங்கராச்சாரியாரின் திருவாயை மலரச் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா பூணூல் திருமேனியார்?

அவர் சொல்லும் சன்மார்க்கத்தில் கடவுள் கிடையாது. அதாவது உருவம் கிடையாது - வெறும் ஜோதிதான் - மதம் கிடையாது - ஜாதி கிடையாது - ஏற்றுக் கொள்கிறார்களா?

அப்படி ஏற்றுக் கொண்டால் தினமணி ஆசிரியர் முதலில் தன் பூணூலை அறுத்து வள்ளலாரின் ஜோதியில் பஸ்பமாக்க வேண்டும்.

சங்கர மடத்தில் இப்பொழுது இருப்பவர்களுக்குக் கல்தா கொடுத்து சுப்பனுக்கும், குப்பனுக்கும் பயிற்சி கொடுத்து சங்கராச்சாரிகளாக ஆக்கிட வேண்டும் - தயார்தானா?

3) இறை உணர்வு இந்த நாகரிக உலகுக்குப் பொருந்தாது என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவிலே நோட்டுகளில் கடவுளிடம் நம்பிக்கை வைக்கிறோம் என்கிற வாசகம் இருப்பதைக் காணலாம்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் என்று பேசியிருக்கிறார். இறை நம்பிக்கையை காப்பாற்ற இப்படி ஒரு கரடியை அவிழ்த்து விடுகிறார். அமெரிக்காவின் டாலர் நோட்டில் கடவுள் நம்பிக்கை இடம் பெற்று இருக்கிறது என்பதால் அதனை எல்லா நாட்டினரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

பார்ப்பனர்களுக்கு அமெரிக்கா என்றால் அப்படி ஒரு ஆசையும் பற்றும் - அதனால்தான் அமெரிக்கா எது செய்தாலும் தோள் கொடுக்க சோ முதல் ஆசாமியாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்.

சந்தடி சாக்காக கந்தகப் பொடி தூவுவதுபோல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான் என்கிறார்.
அதுகூட உண்மையல்ல அப்பட்டமான புளுகுதான்!

அய்யர்வாள் கூறும் அதே அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நேச்சர் (சூயவரசந) இதழில் வெளிவந்த தகவலை ராணி இதழ் (18.7.1999) வெளியிட்டுள்ளதே!

1914-இல் கடவுளை நம்பாத விஞ்ஞானிகள் 72 விழுக்காடு; 1993-இல் 85 விழுக்காடு; 1999-இல் 90 விழுக்காடு. போதுமா?

கடவுள் நம்பிக்கையும் போய், மதமும் மண்டையைப் போட்டு, ஜாதியும் சாவுக் குழிக்குச் சென்று விடுமானால் பார்ப்பனர் பிராமணனாக இருக்க முடியாது - மனிதனாக இருக்கலாம் - என்ன சம்மதம் தானா? –மின்சாரம்.
viduthalai/20081012/news
---------------------------------
மற்ற பதிவுகள்

Saturday, October 11, 2008

தமிழரை நடுங்க வைக்க வகுத்திட்ட பார்ப்பனரின் சூதினை பார்த்தீர்களா?

மனையடி சாத்திரத்திலும் வருண தர்மம்!
கட்டடம் கட்டும்போது பார்ப்பனர்கள் தர்ப்பையிலான முப்புரி கொள்ள வேண்டும்.

சூத்திரர்கள் (தமிழர்) ஆக்தி யினால் இருபுரி கொள்ள வேண்டும். மூங்கிலால் ஆன முழக்கோலும் பார்ப்பனர்க் காம். உத்திர வேங்கை மரத் தினாலான கோல் சூத்திரர்க் காம் - சங்கு செய் மரம் –

பார்ப்பனர்க்கு கருங்காலி மரம், சூத்திரர்க்கு (தமிழர்க்கு) புளியின்.. இன்னும் பாருங்கள்.

நிலத்தை அளக்க சூத்தி ரர்க்கு நூல் கயிற்றினாலும், பார்ப்பனர் திரிக்க தர்ப்பையினாலும் அளக்க வேண்டும்! இவை மட்டுமா?

அதன் சார்பாய் வடக்கு பார்த்த வாசல் மனை பார்ப்பனர்க்காம்.

கீழ் சார்பாய் மேற்கு பார்த்த வாசல் மனை சூத்திரர்க்காம்; இன்னும் கேளுங்கள்..

இனிப்பானமண் பார்ப்பனர்க்காம். கசப்பான மண் சூத்திரர்க்காம்!

இன்னும் பல உண்டு. பார்ப்பனரை உயர்த்தி தமிழர்களைத் தாழ்த்திக் கூறியவை.

நல்ல நாள் பார்த்து கூறுங்கோ சாமிவாள் என்று தங்களை கேட்க வேண்டும். அதனால் தம் ஆதிக்கத்தை நிலை நாட்டில் கொள்ள வேண்டும் என்பதற்காக, கீழ்க் காணும் பயத்தை ஏற்படுத்தக் கூறுவதைப் பாருங்கள்.

கூர்த்த நாண் முகூர்த்தந் தன்னை குறைவறப் பார்த்துக் கொண்டு வாஸ்துவின் இடையறிந்து மனைதனைக் கோணனாகில் சீர்த்தன பெருங் கேடாம்; செய்தவை அனைத்தும் பாழாம்; மூர்த்தமாய் நாசஞ் செய்து முனியையுந் தொடருமன்றே!

தமிழரை நடுங்க வைக்க வகுத்திட்ட பார்ப்பனரின் சூதினை பார்த்தீர்களா? பார்ப்பனர்கள் வகுத்த நாளில் வீடு கட்டத் தவறினால் வீடும் பொருளும் பாழாகும்.

தமிழர்களை எப்படியெல்லாம் கோழைகளாக்கி வைத்துள்ளார்கள் பார்ப்பனர்கள் என்பதை தமிழர்கள் உணரும் காலம் எப்போது?
ஆதாரம்: "சிற்ப நூல்" என்னும் மனையடி சாஸ்திரம்
viduthalai/20081010/news
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Thursday, October 9, 2008

கருவிகள் மனிதனின் அடிமைகளே !கடவுள்கள் அல்ல! ஆயுத பூசை தேவை தானா?

விளக்குமாறிலிருந்து செருப்புவரை முக்கியமான கருவிகள்தான். அதற்குப் பூஜை போடுவதுண்டா?

பக்தர்களே - பதறாமல் சிந்திப்பீர்!

ஆயுதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை - எந்த ஆண்டவனின் அருளாலும் கிடைக்கப் பெற்றதில்லை.

மனித நாகரிக வளர்ச்சி என்பதே - அவன் கண்டுபிடித்த கருவிகளால்தான். கருவிகள் மனிதனின் அடிமைகளே தவிர கடவுள்கள் அல்ல!

அப்படிப் பார்க்கப் போனால், எல்லாக் கருவிகளுக்கும் பூஜை போடுவீர்களா?
விளக்குமாறிலிருந்து செருப்புவரை முக்கியமான கருவிகள்தான். அதற்குப் பூஜை போடுவதுண்டா?

விபச்சாரம்கூட தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிலாளிகளின் நிலை என்ன?

நகர சுத்தித் தொழிலாளர்கள் என்ற நிலை இன்றைக்கும் இருக்கிறது. அவர்கள் எதை வைத்துப் படைப்பார்கள்?

கொலைகாரனுக்குப் பயன்படும் அரிவாளும், கத்தியும் கூடப் பூஜைக்குரிய பொருள்கள்தானா?

கொலையை ஒழுங்காகச் செய்ய சக்தித்தேவி அருள்பாலிப்பாளோ!

கள்ளச்சாவிப் போட்டு பூட்டைத் திறந்து கொள்ளை அடிப்பவன் - அன்று கள்ளச் சாவிக் கொத்தை வைத்துப் படைத்தால், அவன் தொழில் இலாபகரமாக நடக்க அம்பாள் துணையிருப்பாளோ!

கள்ளச் சாவி போட்டுத் திறந்து அம்பாளையே தூக்கிக் கொண்டு போய் விடுகிறானே - அப்படியானால் அம்பாளின் சக்தி அம்போதானா?
பக்தர்களே - பதறாமல் சிந்திப்பீர்!
viduthalai/20081008/news
ஆயுத பூசையால் அழிந்த ராஜ்ஜியம்
தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமல தாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத் தலைவன் வெங்காஜி என்பவனை வேண்டினான்.

வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படையெடுத்து வந்த சமயமானது ஆயுத பூசை சமயமாகும். படை வீரர்களின் படைக்கலங்கள் எல்லாம் ஆயுத பூசைக்காக கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.

மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன அமைச்சர்களையும், பார்ப்பன குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள்! ஆயுத பூசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன்.

படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ ஓர் இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக்கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.

மன்னனும், அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தானும் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஹரி பசனைச் செய்துகொண்டு இருந்தான்.

வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவிந்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கல்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.

இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன் வெங்காஜி சத்தியம் கெட்டவன், திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே, அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி, யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டான்.

வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.

நம் நாட்டிற்கு ஆயுத பூசை தேவை தானா? சிந்திப்பீர்!
viduthalai/20081008/news
--------------------------
மற்ற பதிவுகள்

Wednesday, October 8, 2008

கிறித்தவப் பெண் என்று நினைத்து இந்துப் பெண் வன்கலவி செய்யப்பட்டுக் கொலை!

ஒரிசா கலவரத்தில் இந்து மதவெறியர்களின் காலித்தனம்.
பஜ்ரங் தளத்தைத் தடை செய்யவேண்டும். தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை

ஒரிசா கலவரத்தில் இந்து மதவெறியர்களின் காலித்தனம்.

புவனேசுவர், அக். 6- ஒரிசாவில் கிறித்தவப் பெண் என நினைத்து இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண்ணைக் கலவரக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்துக் கொன்ற நிகழ்ச்சி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பினர் கிறித்தவ தேவாலயங்களை அடித்து நொறுக்கியதோடு கிறித்தவ மக்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய வன்முறை வெறியாட்டம் தற்போதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் எதிரொலியாக கடந்த மாதம் கந்தமால் மாவட்டத்தில் 28 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கலவரக் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த கன்னியாஸ்திரியைக் காப்பாற்ற முயன்ற பாதிரியாரையும் அந்தக் கும்பல் அடித்து உதைத்து நிர்வாணமாக்கியது.

இதற்கிடையே கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த மற்றொரு பாலியல் வன்கொடுமையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரிசாவின் பர்கத் மாவட்டத்தில் கிறித்தவ தேவாலயத்தில் உள்ள ஓர் ஆதரவற்றோர் விடுதியில் ரஜனி என்ற 20 வயது மாணவி பணியாற்றி வந்தார். இந்த ஆதரவற்றோர் விடுதிக்குள் புகுந்த கலவரக் கும்பல், ரஜனியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற பாதிரியாரை அடித்து உதைத்து பக்கத்து அறையில் போட்டு பூட்டியது.

பலாத்காரத்தின் போது ரஜனியின் அலறல் அந்த கிறித்தவ தேவாலயம் முழுவதும் எதிரொலித்துள்ளது. எனினும் அவரைக் காப்பாற்ற காவல்துறையினர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. வன் கலவி முடிந்ததும் அந்தக் கும்பல் ரஜனி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றது.

ரஜனி ஒரு கிறித்தவப் பெண் என நினைத்து அந்தக் கும்பல் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்த ரஜனி ஒரு கல்லூரி மாணவி. அவர் தனது படிப்புத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அந்த ஆதரவற்றோர் விடுதியில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார்.

ஆதரவற்ற ரஜனியைக் குழந்தை இல்லாத ஓர் இணையர் எடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் தான் பட்டப் பகலில் கிறித்தவ ஆதரவற்றோர் இல்லத்துக்குள் பலாத் காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், "மாநில அரசு மீது எங் களுக்கு நம்பிக்கை இல்லை. இதே போன்று வெளியே வராத பல கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்துள்ளனர்.
viduthalai/20081006/news
பஜ்ரங் தளத்தைத் தடை செய்யவேண்டும்
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை.

புதுடில்லி, அக். 6- பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற வன்முறை நிகழ்ச்சிகளில் பஜ்ரங்தளம் தீவிரப் பங்கு வகித்துள்ளது என்றும், மதநல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் இது போன்ற அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

தேசிய சிறுபான்மை ஆணையம் சில நாட்களுக்கு முன்பு சங் பரிவாரங்கள் நடத்தி வரும் மத வெறியாட்டங்கள் குறித்த அறிக்கையொன்றை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அளித்துள்ளது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

அந்த அமைப்புகளுக்குத் தடை விதிப்பது, சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு விலை கொடுத்தும் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்படவேண்டும் என்று அது கூறியிருந்தது.

சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் முகமது சபி குரேஷி மங்களூர், பெங்களூர், மற்றும் உடுப்பி ஆகிய நகரங்களைப் பார்வையிட்டு செப்டம்பர் 16 ஆம் தேதிமுதல் 18 வரை நடைபெற்ற கிறித்தவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து மதிப்பீடு செய்தபின் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளார்.

உடுப்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள். வன்முறைக்குப் பொறுப்பு ஏற்பதாக பஜ்ரங் தளத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரகுமார் கூறியுள்ளார். ஆனால் இன்றுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வன்முறை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 பேரில் 36 பேர் பஜ் ரங்தள உறுப்பினர்கள் என்று பெங்களூர் நிர்வாகம் கூறியுள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படவேண்டும். மங்களூரில் கிறித்தவப் பெண் களைத் தாக்கிய ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
< viduthalai/20081006/news
---------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Tuesday, October 7, 2008

மானமுள்ள திராவிடன் இவற்றையெல்லாம் விழாவாகக் கொண்டாடலாமா?

மந்திரம் சொல்லி மலத்தைக் கொடுத்தால் அதனைத் தின்னும் காட்டு விலங்காண்டித்தனத்துக்கு ஒத்ததாகும். இந்த 2008-லும் இந்த அருவருக்கத்தக்க புழுத்த மூடநம்பிக்கைகளை விரிவாக ஏடுகள் வெளியிடுகின்றனவே எண்ணிப் பார்க்க வேண்டாமா?

நவராத்திரி விழாவும் திராவிடரும்
இந்துப் பண்டிகைகள் என்றால் - அதன் பின்னணியில் "அசுரன்" ஒருவன் அழிக்கப்பட்ட ஒரு கதை (வதம்) கண்டிப்பாக இருக்கும்.

தீபாவளியென்றால் நரகாசுரன் வதம் வருவதுபோல சூரசம் ஹாரம் என்றால் சூரபத்மன் சொல்லப்படுவதுபோல இராமாயணம் என்றால் இராவணன் அரக்கன் என்று அழிக்கப்பட்டது போலவே!

நவராத்திரி! அதுவும் ஒன்பது இரவு விழாக்கள் என்றால் அசுரன் அழிக்கப்படாமலா?

அசுரன், அரக்கன் ராட்சதன் என்று சொல்லப்படுவது எல்லாம் - திராவிடர்களைத்தான். பூதேவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் சாட்சாத் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் அறுதியிட்டு உறுதி செய்துள்ளார்கள்.

சீனிவாச அய்யங்கார்களிலிருந்து, பண்டித ஜவகர்லால் நேரு வரை எழுதியிருக்கிறார்களே.

இந்த வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அறிவைத் துலக்கிப் பார்த்தால் திராவிடர்கள் இத்தகைய பண்டிகைகளைக் கொண் டாடுவது முட்டாள்தனம் என்பதைவிட மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்!

மந்திரம் சொல்லி மலத்தைக் கொடுத்தால் அதனைத் தின்னும் காட்டு விலங்காண்டித்தனத்துக்கு ஒத்ததாகும்.

நம் இன மக்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இதுபோன்ற நாள்களில் இயல்பாக வர வேண்டும். அப்படி வராவிட்டாலும் அத்தகு பண்டிகைகளை குறைந்தபட்சம் புறக்கணிக்க வேண்டாமா?

ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்ட துரோணாச்சாரியை எதிர்த்து நடத்திய பழங்குடி மக்களின் ஒரு கலை நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பிரதமர் நேரு அவர்கள், அந்தவுணர்ச்சியைப் பாராட்டினார், வரவேற்கவும் செய்தார்.

அதே உணர்ச்சி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பண்டிகைகளின் போது திராவிடர்களுக்கு வருவது தானே நியாயம்!

மானமும், அறிவும் மனிதர்க்கழகு என்று தந்தை பெரியார் கூறியது இந்த அடிப்படையில்தானே!

இந்த நவராத்திரி பண்டிகைதான் என்ன? முதல் மூன்று நாள்கள் துர்க்கைக்குப் பூஜை; அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்குப் பூஜை; கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்குப் பூஜையாம்.

இதில் சக்தி பூஜையாக துர்க்கையை வழிபடுவதற்குச் சொல்லப்படும் புராணம்.

ரம்பன் என்னும் அசுரன் அக்னி தேவனை நோக்கி கடும் தவம் புரிந்தானாம்! மிகப் பலசாலியான மகனைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தவத்தின் நோக்கமாம்.

அவ்வாறே வரமும் அளிக்கப்பட்டதாம். ரம்பனே நீ விரும்பிய படியே உனக்கொரு மகன் பிறப்பான். நீ எந்த மங்கையைக் கண்டு முதன் முதலில் ஆசை கொள்கிறாயோ, அவளிடமிருந்தே அப்புத்திரன் தோன்றுவான்! என்றானாம்.

மகிழ்ச்சி அடைந்த ரம்பன் முதன் முதலில் கண்டு மோகித்தது ஒரு பெண் எருமை மாடாம் (அறிவுக்குப் பொருத்தமற்றது ஒருபுறம் இருக்கட்டும்; அசுரன் என்றால் அவனை எந்த அளவு கேவலப் படுத்துகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்)
வரம் கொடுத்தபடியே எருமைக்கும், ரம்பனுக்கும் எருமைத் தலையையும் அசுரன் உடலையும் கொண்டு ஒரு மகன் பிறந்தானாம். அவனுக்குப் பெயர் மகிஷாசுரனாம்.

அவனும் பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தானாம். ஒரு கன்னிகையைத் தவிர வேறு யாராலும் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்ற வரத்தைப் பெற்றுக் கொண்டானாம்.
மகிஷாசுரன் அட்டகாசங்களைத் தாங்க முடியாத தவர்களும் (பூதேவர்களாகிய பார்ப்பனர்தான்) முனிவர்களும் மும்மூர்த்திகளை சரணடைந்தனராம் (சிவன், விஷ்ணு, பிர்மா ஆகியோர்தான் மும்மூர்த்திகள்)

மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து பிரார்த்திக்க, ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களும் ஒருங்கேயமைந்து எழில் கோலத்துடன் பராசக்தி துர்க்கையானவள் அவதரித்தாளாம் (மும்மூர்த்திகளின் சக்தி அவ்வளவுதானா?)

தேவி ஒன்பது நாள் தவமிருந்து ஒன்பதாம் நாள் மகிஷா சுரனையும், அவன் பரிவாரங்களையும் வாதம் செய்து உலகிற்கு நன்மை விளைவித்தாளாம் - இந்த நாள்களே, நவராத்திரி நாள்களாம்!

இந்தக் கதை கடுகளவாவது அறிவுக்குப் பொருந்தி வருகிறதா?

இந்த 2008-லும் இந்த அருவருக்கத்தக்க புழுத்த மூடநம்பிக்கைகளை விரிவாக ஏடுகள் வெளியிடுகின்றனவே எண்ணிப் பார்க்க வேண்டாமா?

கதை மூடத்தனத்தில் குளித்தெழுந்தாலும் கதையின் நோக்கம் திராவிடர்களை வதம் செய்வதும், அதற்காக பார்ப்பனர்கள் கொண்டாடுவதும்தானே!

மானமுள்ள திராவிடன் இவற்றையெல்லாம் விழாவாகக் கொண்டாடலாமா?
viduthalai/20081006/news
------------------------
மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

Monday, October 6, 2008

கிறித்துவர்களைத் தாக்குவதற்குப் பெயர் மக்களைக் காப்பாற்றுவதாம்!

பஜ்ரங் தளத்தின் நோக்கம், இலட்சியம் எல்லாமே இந்து ராஷட்ரத்தை ஏற்படுத்துவதுதான் என்று அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

பஜ்ரங் தள் தலைவரின் உளறல்!

புதுடில்லி, அக். 5- மக்களைக் காப்பாற்றத்தான் பஜ்ரங் தள் அமைப்புக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

கான்பூரில் தனியார் விடுதியில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்துபோன பூபிந்தர் சிங் என்பவர் பஜ்ரங் தளத்தின் தீவிர தொண்டர் எனவும் அவர் தற்போது ஒதுங்கியிருப்பதால், அவருடைய செயல்களுக்கு பஜ்ரங் தளம் காரணமாக்கப் படக்கூடாது என்றும் அதன் தலைவர் பிரகாஷ் சர்மா கூறுகிறார்.

விசுவ இந்துபரிசத்தின் இளைஞர் பிரிவாக பஜ்ரங் தளம் உருவாக்கப்பட்ட போது கான்பூரின் அமைப்பாளராக பிரகாஷ் சர்மா நியமிக்கப்பட்டார். அப்போது உத்தரப்பிர தேசத்தின் சில பகுதிகளில் மட்டுமே பஜ்ரங் தளம் செயல்பட்டது. தற்போது அதில் 13 லட்சம் தீவிர தொண்டர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே உள்ளனர்.

பஜ்ரங் தளத்தின் நோக்கமெல்லாம் இந்திய நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பஜ்ரங் தளத்தின் கிளைகள் இருக்க வேண்டும் என்பதுதான் என்கிறார் இவர்.

கான்பூரில் வெடி விபத்து நடந்த இடத்தில் 11 நாட்டுத் துப்பாக்கிகள், வெடிப்பொருள்கள், பாட்டரிகள், ஜெலட்டின் குச்சிகள், நேரம் குறிப்பான்கள் போன்றவை காணக் கிடைத்தன. இங்கு வெடி விபத்தில் இறந்த ராஜீவ் மிஸ்ர என்பவர் யார் எனத் தெரியாது எனக் கூறி விட்டார் பிரகாஷ் சர்மா.

ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்திலோ, கருநாடக மாநிலம் மங்களூரிலோ வேறு எங்குமோ தமது பஜ்ரங் தளம், கிறித்துவர்களுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபடவில்லை என முழுப் பூணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்.

கருநாடகா மாநில பஜ்ரங் தளத்தின் தலைவர் மகேந்திர குமார் வன் செயல்களைத் தம் அமைப்பு செய்ததாக ஏற்கெனவே ஒத்துக் கொண்டு கைதாகியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

அவர் கூறியது தவறு என்கிறார் பிரகாஷ் சர்மா. இந்துக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று எப்படி நீங்கள் கூற முடியும்?

ஒருவரையொருவர் கிறித்துவர்கள் தாக்கிக் கொள்ளவில்லை என்று கூற முடியுமா?

இரண்டு கிறித்துவர்கள் ஒரு தேவாலயத்திற்குத் தீ வைத்தது எனக்குத் தெரியும் என்றெல்லாம் இவர் சவடாலாகப் பேசுகிறார்.

அங்கே இருந்த விசுவ இந்து பரிசத்தின் வயதான தலைவர் கிரிராஜ் கிஷோர் என்பவர் கூறுகையில், அந்தப் பகுதியில் பணியாற்றிய லட்சுமணானந்தா கொல்லப்பட்டதால் எதிர் விளைவுகள் இருக்கத் தான் செய்யும் எனக் குறிப்பிட்டார்.

ஒரிசாவில் பா.ஜ. கட்சிக் கூட்டணி ஆட்சி நடந்தாலும், கொலை செய்தவர்களை இன்னும் கைது செய்யவில்லை என்று கூறினார்.
மக்களைக் காப்பாற்றும் கடமை பஜ்ரங் தளக்காரர்களுக்கு இருப்பதாகவும் இதற்காக அவர்களுக்குக் கடும் பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரகாஷ் சர்மா தெரிவித்தார்.

பஜ்ரங் தளத்தின் நோக்கம், இலட்சியம் எல்லாமே இந்து ராஷட்ரத்தை ஏற்படுத்துவதுதான் என்று அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இந்து ராஷ்டிரத்தில் சிறுபான்மையர் வசிக்கலாம்; மசூதிக்கோ, சர்ச்சுக்கோ போக வேண்டாம் எனக் கூறவில்லை.

மத மாற்றம் நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு அவர்களை மாற்றிக் கொண்டு வந்துள்ளோம். (இது மத மாற்றம் அல்லவா?) எனக் கூறிய பிரகாஷ் சர்மா,

தாம் பஜ்ரங் தளத்தின் அமைப்பாளராக வந்த பிறகு 10 அல்லது 15 ஆயிரம் பேரை மத மாற்றம் செய்திருப்பதாகப் பெருமை பேசிக்கொண்டார்.

இவ்வளவு வெளிப்படையாக இந்து மதவெறிப் பேச்சும், பிற மத வெறுப்பும் கொண் டுள்ள இந்த அமைப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச் சார்பின்மைக்கு எதிராக, இந்து மத ஆட்சியை நிறுவத் துடிக்கும் பஜ்ரங் தளத் துக்குத் தடை விதிக்க வேண்டும் எனப் பல அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.

viduthalai/20081005/news --------------------------------------------
ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள்!
மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

Saturday, October 4, 2008

வால்மீகியின் வாய்மையும் கம்பனின் புளுகும்!

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?

அறுபதாயிரத்து மூன்று மனைவி மார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக் கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத் தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார். Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குள் இராச பாரியை களைப் புணர்ந்தார்கள். இதன் காரண மாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்?

யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?
viduthalai/20081003/news
----------------------------------------

படிக்கவும்:
அரசியின் பெண்குறிக்குள் புகுந்தால் அஸ்வமேத யாகம்
குதிரையின் ஆண்குறி........................
-----------------------------------

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Friday, October 3, 2008

கருமாதியா? உங்கள் தன்மானத்தையும் உனது தாயின் தன்மானத்தையும் ஒரு சேரப் பறிக்க........

யாரிடமோ படுத்து உன்னைப் பெற்றதாக இருந்தாலும்...என்கிறது மந்திரம்!

செத்த மறுநாள்
சாம்பலை எடுத்துப்போய்
இராமேசுவரத்தில்
கரைத்து வந்தாயாமே !

ஊரை ஏமாற்றும் பார்ப்பானை அழைத்துவந்து
கருமாதிக்
காரியம் பண்ணப்போகிறாயாமே!

பார்ப்பானை அழைத்துவந்து
செய்யும்
கருமாதியிலா
இருக்கிறது பெற்றவளுக்கு நீ
செய்யும் நன்றிக்கடன்?

எனது கேள்விகளால்
நிலை குலைந்தான்
செத்துப்போன தாய்க்கு
கருமாதிக் கடிதம்
கொடுக்கவந்த
எனது பங்காளி!

தம்பி உனது வரலாறு
நான் அறிவேன்
சின்ன வயதில்
உங்க அப்பா
செத்த பிறகு
உன் தாய்தான்
உங்களைப் படிக்க வைத்தார் மாடாய் உழைப்பதிலும்
மணி மணியாய்
பிள்ளைகளை
வளர்ப்பதிலும்
வாழ்வைக் கழித்தவர் அவர்.

உழைப்புக்கு எடுத்துக்காட்டாய்
வாழ்ந்த உனது தாய்
இருக்கும்வரை
தனது தன்மானத்தை
ஒரு நாளும் இழந்ததில்லை
உஙகள் தன்மானத்தை
இழக்கவும்
ஒரு நாளும்
சம்மதித்தில்லை.

உங்கள்
தன்மானத்தையும்
உனது தாயின்
தன்மானத்தையும்
ஒரு சேரப் பறிக்க
கருமாதி மந்திரத்தோடு
காரியம் செய்ய
நீஅழைத்த பார்ப்பான்
வரப் போகிறான் .

நெருப்பாய்
வாழ்ந்த உன் தாயை
செத்த பின்பு
இழிவாய்க் காட்ட பார்ப்பான் வரப் போகிறான்
சம்மதம்தானா உனக்கு !

கருமாதிச் சடங்கில்
பார்ப்பான்
சொல்லும்
மந்திரத்தின்
அர்த்தம் தெரியுமா
உனக்கு !

ஏகமாதா பகுபிதா
ஒரு தாய்க்கும்
பல தகப்பனுக்கும்
பிறந்தவனே
என உன்னை
சொல்லப் போகிறான் சம்மதம்தானா உனக்கு !

யாரிடமோ
படுத்து
உன்னைப் பெற்றதாக
இருந்தாலும்...
என்கிறது மந்திரம்!

நெருப்பாய்
வாழ்ந்த
உன் தாயைப்
பழிப்பானே
பரவாயில்லையா?

தம்பி தாயின் நினைவைப்
போற்ற வேண்டும் !
அவ்வளவுதானே
உனக்கு வா!

உன் தாயின் நினைவு நாளில்
நம் ஊரில்
அரசு பள்ளியில்
படிக்கும்
ஏழைக் குழந்தைகளுக்கு
புத்தகம் கொடு,
நோட்டுக் கொடு.

நம் ஊரில்
உனது அம்மா
பெயரில்
நூலகம் கட்டு!

போட்டித்தேர்வில்
வெற்றிபெற்று
அரசாங்க வேலை
பார்ப்பவன் நீ

போட்டித் தேர்வில்
வெற்றிபெறுவது
எப்படி?


நம்ம ஊர்
பிள்ளைகளுக்கு
அம்மாவின்
பெயரால் சொல்லிக்கொடு

சொன்னதை
செவிமடுத்த
தம்பி
பார்ப்பானை அழைக்க மாட்டேன்
என ஒட்டுமொத்த
கருமாதிக் கடிதத்தையும்
கிழித்துப் போட்டான்


ஊருக்கு நல்லது
செய்வேன் என்தாய்

நினைவாக

என்றான்.

----வா நேரு

viduthalai/20080927/snews

-----------------------------------------------------

திதி காலத்தில் அவன் சொல்லும் மந்திரம் நமது தாய்மார்களின் நடத்தையைக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தவே உள்ளன.


அவை.1) `ஏகமாதா வெகு பிதா சத்சூத்ராய’’பொருள்:

ஒரு அம்மாவுக்கும், பல அப்பாக்களுக்கும் பிறந்த சூத்திரனே (சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று பொருள்)

2) ``
யன்மே மாதா பிப்ர மமதயச்சாரானனுவ் ரதம்தன்மே ரேத பிதாவ்ருங்க்தமாபூரன் யோப பதயதாம்பித்ருப்யஸ்வதா விப்ய: ஸ்வதா’’


பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழுதுமாக அனுசரிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்தத் தகப்பனார் வருவார்.

அப்படி அவர் வராமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர், அதாவது எனது தாயின் கணவர் இந்தப் பிண்டத்தைப் பெற வேண்டும்.

3) `
யதித்விபிதாஸ்யா தேகை கஸ்மின்பிண்டேத் வெனத் வாவு பல ஹ்யேக்’’


பொருள்: ஒருவனுக்கு இரண்டு தகப்பன்களிருந்தால் ஒரு பிண்டத்திலேயே அவ்விருவர்களையும் குறிக்க வேண் டும். பிண்டம் போடும்போது சொல்ல வேண்டிய `யேசத் வாமனு’’ என்கிற மந்திரத்தை `ஏதத்வாம் தாதன ரேசத் வாமனு’’ என்றிவ்வாறு சொல்ல வேண்டும்


(சிரார்த்த காலத்தில் உபஸ்தானமந் திரம்) எழுந்து நின்று `யன்மேமதா.. ஸ்வதா’’ என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டியது. (ஆபஸ்தம்பர்)

4) ``அனேன விதினா ஜாத:க்ஷத்ரினிபை ஸபவேத்ஸுத்’’

பொருள்: இங்கு `க்ஷத்ரிஎன்ற சொல்லிற்கு `நிலத்தின் சொந்தக்காரன்என்று பொருள் மக்களைப் பெறுதல் பயிர் தொழில் போன்றதால், தாயின் சரீரம் நிலமும், தந்தையின் வீரியம் வித்தும் என்பர் வடநூலார்.- யக்ஞவல்கியர்

-5) ``
என்மே மாதா ப்ரலு லோபசரதி அனனவ் வ்ரதா தன்மே ரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹாஅவபத்யதாம்’’
பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன், என் அப்பா யாரெனத் தெரியாது.

மற்றவர்கள் சொல்வதால் நம்ப வேண்டியுள்ளது. ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியைக் கொண்டு போய்ச் சேர்ப்பீர்.

மேற்கண்ட மந்திரங்களை, நம்மைச் சொல்லச் செய்து, நாமே நம் அம்மாவை இழிவுபடுத்தும் நிலையைப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து நம் இன மக்கள் திதி கொடுப்பது என்ற மூடப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். ARTICLE BY : >>---தஞ்சை நாராயணசாமி IN >>: " VIDUTHALAI.COM"

முழுவதும் படிக்க இங்கு செல்லவும்:-

மானமுள்ளவன் தாயை இழிவுபடுத்தும் திதி கொடுக்கலாமா? பார்ப்பானின் வயிறு என்ன பரலோகத் தபால் பெட்டியா?

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_11.html

---------------------------

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்