Followers

Monday, September 8, 2008

அமர்நாத் ( FRAUD ) ஃபிராடு லிங்கம். < படத்துடன்

இமயமலையில் அமர்நாத் குகையில் பனி லிங்கம். ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் முடிய உள்ள கால கட்டத்தில் அதனைத் தரிசிக்கலாம்.

அதன் மூலம் அதிகப் பலன்களை வாழ்வில் பெறலாம் என்று கதை கட்டிப் பல ஆண்டுகளாக இந்துக்களை ஏமாற்றி வருகிறது இந்து மதம்.

அந்தக் குகையில்தான் வாழ்க்கை ரகசியங்களைப் பார்வதிக்கும் பரமசிவன் காண்பித்தான் என்று கதை எழுதிக் கொண்டார்கள்.

அதைப் பார்ப்பதற்குச் சென்ற ஆண்டு, இரண்டு லட்சத்து 14 ஆயிரம் பேர் சென்றனர். இந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் சென்றனர் - ஜூன் மாதம் வரையிலும்! இவர்களுக்கு அரசு எல்லா உதவிகளை யும் செய்து தருகிறது. இதற்காக ஒரு வாரியத்தை அமைத்துள்ளது. அதன் தலைவராக மாநில ஆளுநர் இருக்கிறார்.

கேரளக் கம்யூனிஸ்ட் அரசுகூட விளம்பரம் செய்கிறது. கடவுளின் சொந்த நாட்டைப் பார்க்க வாருங்கள் என்று!

சுற்றுலாப் பயணிகளைக் கவர மூடநம்பிக்கைகளைக் கருவியாகக் கொள்கிறது.

அதுபோலவே, ஜம்முகாஷ்மீர் மாநிலமும் இந்தக் குகையையும் அதன் பனி லிங்கத்தைப் பற்றியும் ஏகமாகப் புளுகித் தள்ளி விளம்பரம் தருகிறது.
சுற்றுலாக் கையேட்டில், பனி லிங்கம் 15 நாள்கள் வளர்கிறது, 15 நாள்கள் தேய்கிறது என்று எழுதித் தள்ளுகிறார்கள். நம்பிப் போனவர்கள் ஏமாறுகிறார்கள்!

இந்த ஆண்டு, பனிலிங்கம் 12 அடிக்கு மேல் 15 அடி வரை உள்ளது என்றெல் லாம் பெருத்த விளம்பரம் செய்தது மாநில அரசு. நம்பிப் பார்க்கப் போனார்கள். ஜூன் 15 முதல் 28 நாள்கள் வரைதான் போனார்கள்.

கடைசியில் பனி லிங்கத்தைக் காணோம். ஆளுநர் போய்ப் பார்த்த அன்று 7 அங்குலப் பனிதான் ஒட்டிக் கொண்டிருந்தது. ஏன் ஏமாற்றுகிறது ஜம்மு காஷ்மீர் மாநில அரசு?

ஆகஸ்ட் வரை பனிலிங்கம் இருக்கும் என்று அச்சு போட்டுக் கொடுத்து விட்டு ஜூலை மத்தியிலேயே 7 அங்குலம் என்றால், இந்த ஏமாற்று வேலையில் மாநில அரசே ஈடுபடலாமா?

எப்படிக் கரைந்தது பனி லிங்கம்? அமர்நாத் பனிலிங்க வாரியத்தின் துணை நிருவாக அதிகாரி எஸ்.பி. சிங் கூறுகிறார்: நிறைய மக்கள் வந்து பார்த்தார்கள், அவர்களின் மூச்சுக் காற்றில் இருந்த வெப்பம் சிவலிங்கத்தைக் கரைத்து விட்டது!

அப்படியானால், கடவுள் சிவனுக்கு இருக்கும் (இருந்த) சக்தியைவிட மக்கள் விடும் கார்பன் - டை - ஆக்ஸைடு அதிகச் சக்தி வய்ந்தது தானே!
அதையாவது ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் உண்டா இந்து மதக்காரர்களுக்கு?

உப்புக் கண்டம் பறி கொடுத்தப் பார்ப்பனத்தி போல இருக்கும் இந்துக்கள் ஒரு காரியம் செய்து வைத்திருக்கிறார்கள். 800 கிலோ எடையில் பளிங்குக் கல்லில் லிங்கம் செதுக்கிக் குகைக்குள் வைத்திருக்கிறார்கள்.

பக்தர்களின் பக்தியோடு விளையாடுகிறார்கள் என்று பனிலிங்க வாரியத்தின்மீது வழக்கு போட்டு விட்டார்கள். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம், பனிலிங்க வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இவர்கள் கொண்டு வந்து வைத்து விட்டுச் சுயம்புலிங்கம் என்றுகூடக் கதை கட்டுவார்கள்.

குகையில் ஏர்கூலர் வைத்துக் குறைந்த டெம்பரேச்சரில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டால், பனி கரையாதே என்று யோசனை கூறினர் - அரசால் நியமிக்கப்பட்ட குழுவினர். இதனைச் சில பார்ப்பனர்களும் அர்ச்சகர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

கடவுளைக் காப்பாற்ற இப்படி ஒரு ஏற்பாட்டை (மோசடியை) எப்படி அரசு நியமித்த குழுவே கூறலாம்?

பனிலிங்கம் இந்த நூற்றாண்டில் கிளம்பவில்லை; பகவானுக்குப் பக்தர்கள்மீது கோபம், அதற்குப் பரிகாரம் செய்வோம் என்று ஏமாற்றக் கூடப் பலர் கிளம்பலாம். எதையும் செய்வார்களே, இவர்கள்!

அறிவியலின்படி சுண்ணாம்புக் கல் குகையில் சொட்டும் நீர் பனிக்கட்டியாக வளர்கிறது, இதற்கு ஸ்டாலக்மைட் என்று பெயர்.

அமர்நாத்தில் இருப்பதும் அப்படிப்பட்டதுதான்.

சிவனும் கிடையாது, லிங்கமும் கிடையாது என அறிவு நாணயத்தோடு ஒத்துக் கொண்டு போகலாம்.

ஜம்மு காஷ்மீர் அரசு முன்வருமா? இந்து மதப் பித்தலாட்டக் கும்பல் செய்யுமா? நமக்கு நம்பிக்கையில்லை!
viduthalai/20080802/snews08

1 comment:

Anonymous said...

Hello Reader
All your comments and articles are really very good.

The fact is I am also a brahmin, where as I am trying to find what is the truth and non truth.

Its really important for everyone the knowledge of "Sixth sense" (which is developed further by Periyar)

I am appreaciating your all efforts for collecting the facts. They are really worth reading.

I have a request. The Articles titles are seems to be very rough. Pls keep a diplamatic titles regardless of Caste Titles.

Ofcourse another important rule for any organisation is to give respect to anyone's freedom, where us Periyar or his followers are not the sole proprieter for Hindu, Muslim, Christian.

If you call them as "PARPANAN" its again the unlawful against our India LAW. its defined by Periyar like none of them are should not be called by their CAST. As a periyarism follower are you keeping the diploat character with your organization?

As long as a particular people of th society discouraged their nativity they will be developed in someother powerful way. Its quite common law in the world as Neuton said "For every Action there will be an equivallent reaction"
so as long as you protest "PARPANAN" he will find another way for his survival, its quite simple.

So try to give the people and society a worthy knowledge rather pointing out a particular cast or community who are nevertheless a matter in this world.

If you go ROM be a roman. If you go ROM and say JESUS is FRAUD.. Your ase hole will be tared.

If you go Arab countries and say ALLAH is FRAUD.. Your Penis will be cut. This is fact.

which confirms that people are very confident about their religious. so Never hurt their feelings. Rather try to write worth articles like how to remove "MOODA NAMBIKAIGAL"

Thiravidan endru sollikollum Karunidhi kooda oru PARAPANA pennaithan thannudaiya marumagan "DHAYANIDHIKU" thirumanam seithu veithar. Are you able to stop that? no you cannot.
you can bark only at tamil nadu.

All the best and keep writing statistical and scitific proofs rather than politics.

Regards,