Followers

Thursday, September 11, 2008

காந்தியாரின் வயதும் சோதிடமும்.

காந்தியடிகள் நீடூழி வாழ பகவானைப் பிரார்த்திப்போமாக! அனுமான் சிகரெட் பிடித்தது!! விசித்திரமான மூடத்தனம்!!!.

காந்தியார் பிறந்தது 2.10.1869. கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டது. 30.1.1948-ல். 781/2 ஆண்டுகள் தான் உயிருடன் இருந்தார். ஆனால் திருத்தணி சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் 15.8.1947 பாரத தேவி இதழில் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

காந்தியார் பிறந்தது சிம்ஹ லக்கினம், மக நட்சத்திரம். விடியற்காலம், மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு தீர்க்காயுள் யோகம் உண்டு. இதே போல், சிம்ஹ லக்னமும் நீண்ட ஆயுள் தரக்கூடியது.

மேலும் ஜன்ம லக்னம் சிம்ஹமாகவும் அதில் சந்திரன் தனித்து இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு தசமகேந்திரத்தில் நின்று லக்னாதிபதியான சூரியனை யும் ஆயுஷ்காரகனாதிய சனியையும் பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற கணக்கான 120 வருஷங்கள் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு.

தவிர, முன் காலத்தில் தப ஸ்ரேஷ்டர்களான ரிஷீஸ்வரர்கள் தமது தபோ மகிமையாலும், யோகாசன அனுஷ்டான ஆகார நியமங்களினாலும் தமது ஆயுளைப் பெருக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கான வருஷங்கள் ஜீவித்திருந்ததாக நமது புராணங்களின் வாயிலாக அறிகிறோம்.

இதேபோல காந்தியடிகளும் தமது ஆகார, அனுஷ்டான நிர்ணயங்களாலும் தெய்வ பிரார்த்தனையாலும் தமது ஆயுளை விருத்தி செய்து கொண்டு, ஜாதக ரீதியாக ஏற்படும் பரமாயுள் 120 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பாரென்பது எனது திடமான அபிப்பிராயம். மகாத்மா காந்தியடிகள் நீடூழி வாழ பகவானைப் பிரார்த்திப்போமாக!

இவ்வாறு சோதிடர் கூறினாரே - காந்தியார் 120 ஆண்டு காலம் வாழ்ந்தாரா? சோதிடம் - ஒரு மோசடி என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?
------------------------------------
அனுமான் சிகரெட் பிடித்தது.
லக்னவ்: வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன் கஷ்டங்கள் தீர்வதற்கு என்ன வழி என ஜோதிடன் ஒருவனிடம் யோசனை கேட்டான். அனுமானைச் சிகரெட் பிடிக்க வைத்தால் உன் கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு வரும் என்றானாம் ஜோதிடன்.

ராஜேஷ் எனும் அந்த இளைஞன் சிகரெட் பற்ற வைத்து அதை அனுமான் வாயில் செருகி வைப்பதை ஆறு நாட்களாகச் செய்து வந்தான். ஒரு பக்தனும், இதைக் கவனிக்கவில்லை. பூசாரியும் பார்க்கவில்லை.

ஏழாம் நாள் சிகரெட்டைப் பற்ற வைத்து அனுமான் வாயில் வைத்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியே போன இரண்டு பேர் கவனித்து விட்டார்கள். பூசாரியிடம் சொல்லி விட்டனர்.

ராஜேஷை தாக்கியுள்ளனர். காவலர்களிடம் ஒப்படைக்கவில்லை.அனுமான் சக்தி வாய்ந்த கோபக்காரச் சாமி, பாதகம் செய்வாரை மோதி மிதித்து விடும் என்றெல்லாம் கதை கட்டுகிறார்களே, இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு 7 நாள்கள் இருந்திருக்கிறதே! இதற்குப் பிறகாவது வைணவர்களுக்குப் பித்தம் தெளியுமா? viduthalai/20080801/news18.html

விசித்திரமான மூடத்தனம்.
சென்னையில் சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தின் அருகே பொரி விற்பனை செய்து வரும் முருகன் என்பவருக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொரி விற்பனையில் இவர் 30 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருகிறார். அவர் இனிமேல், மணிலா கடலைதான் விற்கவேண்டுமே தவிர, பொரி விற்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

காரணம் என்ன? ஒரு ஜோசியர் சொன்னதால் தடை வந்ததாம். சத்தியமூர்த்தி பவன் கூட்டத்தில் பொரி விற்பதால்தான் கெட்ட காரியங்கள் நடக்கின்றன; 40 ஆண்டுகளாகக் கட்சி - ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஜோசியர் சொல்லி விட்டாராம்.

ஜோசியரின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து பொரி விற்பனையைத் தடை செய்த காங்கிரசுக் கட்சித் தோழரின் கருத்தை ஏற்காத முருகன் - காங்கிரசுக் கட்சி மாநிலத் தலைவரைச் சந்தித்து முறையிடப் போகிறாராம். இந்த வேடிக்கையான செய்தி இங்கிலீசு நாளேடு ஒன்றில் வெளியாகியுள்ளது.
viduthalai/20080807/news
படிக்கவும்:
ஜாதகப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் என்றால் என்ன? - பொருத்தமில்லையே!

ஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத்தம்.அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா!

மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .

ருது கால-திருமண ஜாதகப் பொருத்தம் !! ?? !!

No comments: