Followers

Wednesday, September 3, 2008

ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ! படித்த பார்ப்பன நண்பரே!


பிராமணரல்லாதவர்கள் தீண்டின குளத்து ஜலத்தை ஒருங்கே இறைத்து அதில் ஜனிக்கும் ஊற்று நீரை எடுத்துப் பானஞ்செய்வது அதிக கஷ்டமானதால் அது தீட்டல்லவென்றும் முகந்துவைத்த குடத்தின் ஜலத்தை அச்சூத்திரர். தீண்டின் அதைக் கொட்டிவிட்டுமீண்டும் சுலபத்தில் முகந்து கொள்ளக் கூடுமாதலால் அதைமட்டும் தீட்டெனவும் பிராமணர் கூறுகின்றனர். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

நியாயாதிபதிகளால் குற்றவாளிகளென்று தீர்மானிக்கப்பட்டு சிறைச்சாலைகளில்அடைக்கப்படும் பிராமணர்களென்போர் சிறைச்சாலைகளில் தாங்களுண்டபாத்திரங்களைநாடோறும் அலம்பி அவற்றிலேயே போஜனமுண்டு வருவதும்அவற்றை யெச்சாதியார்த் தீண்டினும் அவற்றிலேயே போஜன முண்பதும் தீட்டல்லவா?

சிறைச் சாலைகளினின்று விடுதலையான பின் அப்பிராமணர் சமையல் செய்யும் பாத்திரங்களைப் பிராமணரல்லாதவர்கள் பார்க்கின்பார்த்த மாத்திரத்தில் அவை தீட்டாயினவெனக் கூறி அவற்றை உடைத்தெறிய வேண்டுமாம். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?

பிராமணர் தாம் கருதிய விடத்திற்குச் செல்ல இரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கட் வாங்கும்போது பறையரென்றும் சக்கிலியரென்றும் பாராமல் ஒருவர் மீதொருவர் நெருக்கவும் ஒருவர் வேர்வை ஒருவர் மீது வடியவும் மிக்க வருத்தத்துடன் நின்று டிக்கட்டு வாங்கிக் கொண்டு வண்டியின் மீது உட்கார்ந்த பின் அப்பிராமணர் தம் பக்கம் உட்கார்ந்துள்ள அப்பறையர் சக்கிலியரை நோக்கி அடா ஈன ஜாதிப் பயலே மேலே விழாதடா தொடாதடா எனத் தமது ஜாதியினை மேம்படுத்திக் கொள்வதை நாம் பன்முறையும் பார்த்து வருகிறோமே.

ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?

கடவுளைச் சொப்பனத்தில் பார்ப்பவர்களாகிய பிராமணர் தாங்கள் இருப்புப்பாதை மார்க்கமாக நெடுங்தூரஞ் செல்ல நேரிட்டபோது புளியோரை ததியோதனம் முதலிய போஜன வகைகளுடன் வண்டியேறிச் செல்லுகையில் தம் அருகில் உட்கார்ந்திருக்கும் எச்சாதியாரையும் கவனியாமல் தாம் கொண்டு வந்த போஜனத்தை யுண்பதை மற்றெச்சாதியார் தீண்டியும் பார்த்துமிருந்தும் போஜனமுண்டு - தம் மனைக்கு சென்ற பின் தாமுண்ணும் போஜனத்தை காவலர்களும் பார்க்கலாகாதென்று பெருமைபேசிக் கொள்ளுகிறார்கள்.

ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?

பிராமணர் தாம் ஸ்நானஞ்செய்த பின் ஸ்நானஞ் செய்யாதிருக்கும் தம்மினத்தவரே தம்மைத் தீண்டலாகாதென இதர ஜாதியாரிடத்தும் வாசகம் படித்து தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளும் விவேகிகளாகிய பிராமணரில் திரளான பெயர் எவர்களிலும் இழி குலத்தாராகிய விலைமாதர் மனைகளிலும் ஓட்டல்களிலும் மது மாமிசாதிகளுடன் போஜனமுண்டு வருகின்றனர்.

ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?

சமையல் செய்யும் மட்பாத்திரங்கள் மிகவும் அற்பக்கிரயமுடையன ஆதலால் பிராமணரல்லாதவர்களால் பார்க்கப்படுவதினாலேயே தீட்டாயினவென பெருமை சொல்லிக் கொண்டு அவற்றை உடைத்தெறிய வேண்டுமென மொழிகின்றனர்.

மட்பாத்திரங்களிலும் விலை மிகுந்த செப்புப் பித்தளை பாத்திரங்களோ சூத்திரர் தீண்டத் தீட்டாயினும் அவற்றை உடைத்தெறியாது புளிசாம்பராதிகளால் தேய்த்து அலம்புவதே போதுமானதாம்.

அவற்றிலும் விலையேறப் பெற்ற வெள்ளிப் பாத்திரங்கள் சூத்திரரால் தீண்டப்படினும் புளிசாம்பராதிகளால் தேய்க்கின் தேய்ந்து நஷ்டமாகுமெனக் கருதி ஜலத்தினால் அலம்புவதே போதுமெனவும் அதிலும் விலை மிகுந்த பொன் இரத்தின பாணங்கள் ஜலம் படுமாயின் அவற்றின் பளபளப்புப் போய் விடுமென வெண்ணி அவற்றிற்குத் தீட்டில்லை யெனவும் வீதிகளிலும் கடைகளிலும் உத்தியோக சாலைகளிலும் ஜலம் தேடி அலம்பி வாங்க அனுகூலிக்காதிருக்கும் ரூபா பைசாக்களும் ஜலம் பட்டவுடன் பயன் படாதழிந்துபோகும் நோட்டுகளுக்கும் முத்திரை காகிதங்களுக்கும் தீட்டில்லையாம்.

ஆசாரம்அல்லது தீட்டென்பது இதுதானோ?

பிராமணரல்லாதவர்கள் தீண்டின ஜலத்தையும் தீண்டோமென்று பெருமை படைத்துக்கொள்ளும் பிராமணரில் அநேகர் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும் ஆடு மாடு கோழிகளின் மாமிசங்களால் செய்தனுப்பப்படும் பிஸ்கட் முதலிய தின்பண்டங்களையும் பிராந்தி உஸ்கி முதலிய மயக்கத் திராவகங்களையும் உண்ணுவதே சுகிர்தமாம்.

ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?

துரைத்தன வைத்திய கலாசாலையில் வைத்திய சாஸ்திரங் கற்றுப் பரீட்சையில் தேர்ந்து வைத்திய உத்தியோகத்திலமர்ந்திருக்கும் பிராமண வைத்தியர்கள் மூலம் பவுத்திரம் நீரடைப்பு முதலிய வியாதிகளில் வருந்தும் பிராமணரல்லாதவர்கள் பறையர் சக்கிலியர் முதலியவரின் வியாதிகளைப் பரிசோதித்தும் கத்தியால் வகுத்தும் கழுவியும் அவிழ்தப் பிரயோகஞ் செய்தும் பரிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோமே.

ஆசாரம் அல்லதுதீட்டென்பது இதுதானோ!

டி.என். அநுமந்து உபாஸகர்திராவிடன்
17.8.1917viduthalai/20080831/news14.

படித்த பார்ப்பன நண்பரே!

தன்மான இயக்கத்தின் தன்மை உணர பறையனாய் இருந்து பார் கவிஞர் ஒருவர் சொன்னதை நான் சொன்ன போது பதை பதைத்துப் போனாயாம்

நண்பர் சொன்னார் எதிர்பார்க்கவில்லை - நான் பறையனாய் வாழ்வதாய் நினைத்துப்பார் என்றாலே நெருப்பிலே குளிப்பது போல் படபடப்பாய் நீ என்று எதிர்பார்க்கவில்லை - நான்.

அவா - அவா பூர்வ ஜென்மப் பலனாலே அந்த அந்தச் சாதியிலே பிறந்திருக்கா போன ஜென்மத்திலே புண்ணியம் செய்தவா நான் பூணூல் சாதியிலே பிறந்திருக்கிறேன் அட என்னைப் போய் பறையனாய் இருந்து பார் என்று சொல்லி விட்டாரே கிசுகிசு செய்திபோல எனது செவிக்குள்ளும் வந்தது ரத்தம் கொதிக்கிறது!

இருப்பது ஆம் நூற்றாண்டுதானே பூணூல் சாதியிலே பிறந்தது பூர்வ ஜென்மப் பலனா எவன் சொன்னான்?

உனது உடம்பிலே நீ போட்டிருக்கும் பூணூல் எத்தனை உயிர்களை வதைத்தது உடல் ரீதியாய் உள ரீதியாய்?

பூணூல் வரலாறு முழுக்க வன்மம் - வஞ்சனை உழைக்காமல் உண்டு கொழுக்க பூர்வ ஜென்மம் ஜோதிடம் கடவுள் அவதாரம் கத்திரிக்காய் எல்லாம்!

ராபின் சர்மாவின் புத்தகத்தைப் படித்து ஆகா என்னமாய் சொல்லியிருக்கின்றார் சிம்பதிக்கும் எம்பதிக்கும் வேறுபாட்டை சிலிர்த்து சிலிர்த்து சொல்வாயே! சிம்பதி என்றால் பரிதாப்படுவது எம்பதி

என்றால் இன்னொருவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது. அட எம்பதி அடிப்படையில் கொஞ்ச நாள் பூணூலைக் கழட்டிப் போட்டு விட்டு பறையனாய்த்தான் வாழ்ந்து பார்க்க கழனிக்கு வாயேன்!

உழைக்கும் மக்கள் படும் பாட்டைப் பாரேன்! உண்ண உணவு இருக்கிறதா ?
பார்! உடுக்க உடை இருக்கிறதா ? பார்! இருக்க இடம்
இருக்கிறதா ? பார்! எதுவுமே இல்லாத இவனுக்கு பூணூல் கற்பித்த புடலங்காய் கடவுள்கள் மட்டும் எதற்கு என்று யோசித்துப பார் அப்போது தன்மான இயக்கத்தின் தன்மை உணரப் பறையனாய் இருந்து பார்" என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும் பூணூல் என்பது பூர்வ ஜென்ம அரண் அல்ல. அசிங்கம் என்பதும் புரியும்.
வா நேரு.

SOURCE:VIDUTHALAI.COM

No comments: