Followers

Monday, September 8, 2008

விநாயகன் சிலையுடன் மசூதி வழியாக இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் செல்ல முயற்சி: கைதாகி விடுதலை

சென்னை, செப். 8- விநாயகர் சிலையுடன் மசூதி வழியாக செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்து முடிந்த பின்பு, இரவு 7 மணியளவில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் - திருவெட்டீஸ்வரர் கோவில் தேரடி பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளுடன் திடீரென்று ஊர்வலமாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு வந்தாராம்!

இதனை தொடர்ந்து அய்ஸ் அவுஸ் மசூதி வழியாக ராமகோபாலன் செல்ல முற்பட்டார். அப்போது காவல்துறை இணை ஆணையர் பாலசுப்பிரமணியன், துணை ஆணையர் லட்சுமி ஆகியோர் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் ராமகோபாலனை தடுத்து நிறுத்தினர்.

ஊர்வலமாகச் செல்ல முயன்ற ராமகோபாலன் மற்றும் மாநில அமைப்பாளர் முருகானந்தம், இந்து முன்னணி நிர்வாகிகள் கார்த்திகேயன், அரசு ராஜா உள்பட 27 பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.>>viduthalai/20080908/news10.html

படிக்கவும்.

பக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநாயகர் ஊர்வலத்தின் நோக்கம்.விளையும் கேடுகளும்.

பிள்ளையார் பிறந்தது எப்படி? விநாயக புராணம். விநாயக சதுர்த்தியாம்! பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்.

No comments: