Followers

Thursday, September 4, 2008

விரட்டி விரட்டி வேட்டையாடிய ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், சங் பரிவார் மதவெறி வன் முறை இயக்கங்களைத் தடை செய்க!

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!

கம்யூனலிசம் கம்பாட், ராம்விலாஸ் பாஸ்வான் கோரிக்கை
புதுடில்லி, செப். 3- லோக் ஜன சக்திக் கட்சித் தலைவரும், மய்ய அரசின் உர அமைச்சரு மான ராம்விலாஸ் பாஸ்வான் - ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், சங் பரிவார் ஆகிய அமைப்புகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரிசா மாநிலத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைக் கொலைச் செயல்களில் இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரவதால், தடை செய்யவேண்டும் எனக் கோரியுள்ளார்.

அத்துடன், இந்த அமைப்புகள்வன் முறையைத் தூண்டி, நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பாகச் சுயேச்சையான அமைப்பு ஒன்றின்மூலம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அவமானத்தைத் தேடித்தந்து, ஒற்றுமைக்கு உலை வைக்கும் இந்த அமைப்புகளைக் கண்டித்து வியாழக்கிழமையன்று அக்கட்சி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தார்.

இசுலாமிய மாணவர் அமைப்பு (சிமி) தடை செய்யப்படும்போது, ஏன் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளைத் தடை செய்யக்கூடாது? என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

பா.ஜ. கட்சிபற்றி மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக உத்தரப்பிர தேச முதலமைச்சர் மாயாவதி மீது அவர் குற்றம் சாற்றினார்.
viduthalai/20080903/news02 .

விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் அமைப்புகளை உடனே தடை செய்திடுகவட இந்தியப் பேராளர்கள் கோரிக்கை
புதுடில்லி, ஆக. 31- பஜ்ரங்தள் (குரங்குப்படை ), விசுவ இந்து பரிசத் ஆகிய
மதவெறி வன் முறை இயக்கங்களைத் தடை செய்ய வேண்டும் என்று
கம்யூனலிசம் கம்பாட் (Communalism Combat) என்ற இங்கிலீசு ஏடு கருத்து தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழித்துவிட்டிருக்கும் இந்த அமைப்புகள் தடை செய்யப்படவேண்டும் என ஏடு எழுதியுள்ளது.

நீதியரசரர் கோல்சே பட் டில், குஜராத் முன்னாள் டி.ஜி.பி. சிறீகுமார், சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட், சமூகத் தொண்டாளரும் ஏட்டின் ஆசிரியருமான டீஸ்டா செடல்வாய் ஆகியோர் கூட்டாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.

ஒரிசாவில் மட்டுமல்லாது உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில் வன்முறைச் யெல்களில் ஈடுபட்டிருக்கும் இந்த அமைப்புகளின் செயல்கள் இந்தக் கோரிக்கையை அவசரமாகத் தெரிவித்திடச் செய்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பகுதிகளில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக நடை பெறும் காவல்துறை விசார ணைகளை மேற்பார்வையிட உச்சநீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் அலுவல் குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்தக் கலவரங்ளில் பஜ்ரங்தள் ஈடுபட்டுள்ளது தொடர்பாக வலுவான ஆதாரங்கள் இருந்த போதிலும், ஒரு வழக்கு கூடப் பதிவு செய்யப்படாதது சரியல்ல என நீதியரசர் கோல்கா பட்டில் கூறினார்.

மகாராட்டிராவில் 2006 இல் ஆர்.எஸ்.எஸ். தொ(கு)ண்டர் ஒருவரின் வீட்டருகில் ஏற்பட்ட வெடி விபத்தில் பஜ்ரங் தளத்தினர் ஈடுபட்டது குறித்து வலுவான ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை சீஸ்டா செடல்வாட் சுட்டிக் காட்டினார்.

கான்பூரில் வெடி குண்டுகளைத் தயாரிக்கும் போது பஜ்ரங் ஆள்கள் இரண்டு பேர் இறந்தது அண்மையில் நடந்துள்ளது. பல தாக்குதல்களுக்குப் பயன்படுத் தக்கூடிய அளவுக்கு வெடிப் பொருள்கள் அங்கே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் ஆகியவற்றைச் சேர்ந்த நரேஷ் கொண்ட்வார், இமான்சு பான்சே ஆகியோர் வெடி விபத்தில் இறந்து போன சம்பவம் குறித்து செடல்வாட் விளக்கமாகக் கூறினார். 2006 மே மாதம் 4 ஆம் தேதி பயங்கரவாதத் தடுப்புக் காவல் துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையின்படி, அவர்கள் இருவரும் வெடி குண்டு தயாரித்து முசுலிம் பகுதிகளில் உள்ள வழி பாட்டு இடங்களைத் தாக்கத் திட்டம் போட்டு இருந்தனர்.

வெடி குண்டுகளை ஆர்.எஸ்.எஸ். ஆள் லட்சுமண் ராஜ் கொண்ட் வார் என்பவரின் வீட்டில் தயாரித்தனர். இதுபற்றிய டைரிகள், ஆவணங்கள், வரை படங்கள்,. செல்பேசி எண்கள் முதலியவை அந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.

இவை பர்பானி, ஜல்னா, பூர்னா ஆகிய இடங்களில் நடந்த கலவரத்துக்கு ஆதாரங்களாகும்.

இந்தக் குற்றப் பத்திரிகைகளின்படி 3 டஜன் பஜ்ரங்தள்காரர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்கள் வெடிகுண்டு செய் யும், அவற்றை வெடிக்கச் செய் யவும் பயிற்சி பெற்றதற்கான ஆதாரமும் உள்ளன.

இருந்தாலும், சி.பி.அய். காவல்துறை இதனை நீர்த்துப் போகச் செய்து 2008 இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததன் விளைவாகக் குற்றவாளிகள் ஜாமீனில் வந்து விட்டனர்.

ஆகவே, இவர்கள் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி, குற்றப் பத்திரி கைகளில் உள்ள கோளாறுகளைத் திருத்தி முறையான வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்று செடல்வாட் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்தள் ஆள்களைத் தப்பிக்க வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ள மகாராட்டிர மாநிலத்தைக் காங்கிரசுக் கட்சி ஆள்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
viduthalai/20080831/news04
-------------------------------------------------------------------------
படிக்கவும்.
எல்லாக் குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. தான் காரணம்.அம்பலப்படுத்துகிறார் திக்விஜய்சிங்


அட தினமலர், பைத்தியமே! நாங்கள் அடிப்போம் உச்சிக்குடுமித் தனத்தோடு - நீங்கள் அழக்கூடாது!

----------------------------------
விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!
உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!

ஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெருமெடுப்பிலான ஒரு இனப்படு கொலைகளுக்கான அசாதாரணமான ஆயத்தங்கள் அதில் தென்பட்டன.

ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத்திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வரலாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது.

3ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

சம்பல்பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.

பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட்டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.

ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.

கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சைகள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டையாடினர் வி.ஹெ.பியினர்.

ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.

அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத்தப்பட்டன.

முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.
6 மணிக்கு...

அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.

6.45 மணி...
பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

இரவு 7 மணிக்கு..
ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக்குள் சென்றனர்.

ஆகஸ்ட் 25, 2008...
வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.

காலை 7 மணி..
புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங்களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மையினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.

10.30 மணி..
பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.

முற்பகல் 11.30 மணி...
நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர்களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மணி..
ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.

தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.

2 மணி...
கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.

இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.

ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.
சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.

1. விஜய் பரிச்சா2. ஆர்.கே. நாயக்3. ஜோசப் நாயக்4. சூசன் நாயக்5. சந்தோஷ நாயக்6. ஹரி ஹர்தாஸ்7. மோசே நாயக்8. பிரகாஷ் நாயக்9. மோசே நாயக்10. ராஜு மற்றும் பலர்

ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.

பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.

குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சட்டத்தை கையிலெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.

முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச்சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.

இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக் கொன்றாய் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன. >>சர்ஜுன் .tmmkonline.

No comments: