Followers

Friday, September 19, 2008

இந்த அநியாயத்தைப் பாரீர்! எங்களையும் வாழ வையுங்கள்?!!!!

1001 லிட்டர் பால் ஊற்றி சாமிக்கு அபிஷேகம் செய்தனராம். புதுச்சேரி அருகே பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நேற்று (4.8.2008) சிறப்பு பூஜை நடந்ததாம். அப்போது 1001 லிட்டர் பால் ஊற்றி சாமிக்கு அபிஷேகம் செய்தனராம்.

2004-05 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரத்துறை ஆய்வின்படி சராசரியாக 57.8 விழுக்காடு கர்ப்பிணிப் பெண்கள், 56.1 விழுக்காடு திருமணமான பெண்கள். 79.1 விழுக்காடு குழந்தைகள் இந்தியாவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர் என்று மக்களவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசு தெரிவித்துள்ளார் (தினமணி, 15.3.2007).

ஒரே ஆண்டில் உலக அளவில் மரணம் அடையும் குழந்தைகள் 1.25 கோடியாகும். அதில் இந்தியாவில் மட்டும் 25 லட்சம் குழந்தைகள் மரணம் அடைகின்றனர்.

முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் மரணம் அடையும் குழந்தைகள் இந்தியாவில் ஆயிரத்துக்கு 58 ஆகும். உலக அளவில் எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளில் 35 விழுக்காடு இந்தியாவில்தான்.

போதிய சத்துணவு கிடைக்காத கொடுமையால் ஏற்படும் மரணம் இது.இந்த யோக்கியதை உள்ள இந்தியாவில், குத்துக்கல்லு சாமிக்கு 1001 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் என்றால், இதைவிட ஈவு இரக்கமற்ற குரூரமான செயல் வேறு உண்டா?

பால் சத்துள்ள உணவு அல்லவா! அதை நாசப்படுத்தலாமா?

இத்தகைய பேர்வழிகளை கொலைக் குற்றத்துக்குச் சமமாக மதித்துத் தண்டனை கொடுக்கவேண்டாமா?

பக்தியின் பேரால் - உற்பத்தி நாசம் என்ற கொடுமையல்லவா இது? அத்தியாவசியப் பொருள் நாசத் தடுப்புச் சட்டம் என்ன செய்கிறது? நன்கு குறட்டை விட்டுத் தூங்குகிறதோ!
viduthalai/20080805/news



எங்களையும் வாழ வையுங்கள்?!!!!சதீஸ்குமார்.

கடவுளுக்கு பாலாபிசேகம் குடத்தில் என்றாலும் ஒரு குழந்தையின் தொண்டை நனைக்குமோ?!

வளர்ந்தும் வளராத மனிதனா இல்லை இருந்தும் உணர்ந்திடாத புனிதனா

இதற்கு பகுத்தறிவு தேவை இல்லை சற்று இதயத்தில் ஈரம் இருந்தால் போதும்

எலும்பும் தோலுமாய் வேடம் பூண்டுஎதைச் சாதிக்கப் பிறக்கிறோம்...?

வாழும் வரை துயரம் கண்டுஎச்சில் விழுங்க சத்தைக்கூட இழக்கிறோம்...

எங்கள் பசிக்குமருந்து கண்டு உயிர் காக்கக் கேட்கவில்லை...
சிறிது உணவு தந்தால்

எங்கேனும் ஓர் ஓரம் (தெருவோரம்) வாழ்ந்திடுவோம்....

நாங்களும் வாழ்ந்திடுவோம்..உணவளித்த மனிதமேஎங்கள் கடவுளாகிப் போவதால்...

உங்கள் கடவுள் தெரிவதில்லை..தெரிந்து கொள்ளவும் தோணவில்லை...

சுருக்கமாய்ச் சொன்னால்நடமாடும் கடவுளை வணங்கும் ஜாதிகளானோம் நாங்கள்...

நாங்கள் இருப்பதும் இறப்பதும் இனி உங்களிடம்...

எங்கள் விதி எழுத வாய்ப்பிருக்கும்கடவுளாகிப் போன மனிதர்களே உங்களிடம்...

உயிர் போகும் நேரத்தில் உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்கிறோம்

பசிக்காகக் கையேந்தும் குரல் கேட்கும் போதெல்லாம் இந்த வரிகள் மனச்சலவையாய் வந்துபோகட்டும்...

பிஞ்சு வயிறுகள் பசி ஆறட்டும்...
நாங்கள் கேட்பதெல்லாம் திக்கற்ற எங்களின்உயிரை நாளை வரை தள்ளிப் போட உதவுங்கள்...
viduthalai/20080809/snews

2 comments:

வள்ளி said...

//பால் சத்துள்ள உணவு அல்லவா! அதை நாசப்படுத்தலாமா?

இத்தகைய பேர்வழிகளை கொலைக் குற்றத்துக்குச் சமமாக மதித்துத் தண்டனை கொடுக்கவேண்டாமா?//

- சரியான கேள்வி!

ஆனால், மத மயக்கத்தில் உள்ளவர்கள் காதில் ஏறப் போவதில்லை!

Draco Virtus said...

மீண்டும் மீண்டும் எழுதுங்கள்.ஒரு சிலராவது விழித்தெழட்டும்.