Followers

Thursday, September 18, 2008

இந்தியச் சுதந்திரம் பகலில் கிடைக்கவில்லை; பூனை பேசுகிறதாம்! பாட்டுப் பாடுகிறதாம்! கேழ்வரகில் நெய்?:

இந்தியச் சுதந்திரம் இரவில்தான் கிடைத்தது. இதற்குள்ளும் ஒரு மூடநம்பிக்கை புதைந்து கிடக்கிறது.ஆக.15 (1947) சுதந்திரம் இந்தியாவுக்கு என்று சட்டம் இயற்றியாகி விட்டது.

நம் நாட்டு வைதிகக் குடுக்கைகள் சும்மா இருக்குமா?

பஞ்சாங்கத்தைப் புரட்டினார்கள்; அய்யய்யோ ஆபத்து, ஆபத்து என்று கூக்குரல் போட்டனர். அன்று அஷ்டமி ஆயிற்றே - அபசகுனம் ஆயிற்றே - அன்று வேண்டாம் சுதந்திரம்! என்று எகிறிக் குதித்தனர்.

சட்டம் எல்லாம் வந்தாயிற்று - இனி மாற்றத்திற்கு இடமில்லை என்று கறாராகப் பதில் வந்துவிட்டது.

என்ன செய்யலாம்? ஆதாயத்துக்காக அதற்கும் ஒரு குயுக்தி வைத்திருப்பார்களே!

நள்ளிரவு 12 மணிக்குத்தானே சுதந்திரம் வாங்குகிறோம். 12 மணி என்பது வெள்ளையர்களுக்கு வேண்டுமானால் நாள் பிறக்கும் நேரமாக இருக்கலாம். நமக்கெல்லாம் நாள் பிறப்பு என்பது விடியற்காலை 5 மணிதான். அப்படிப் பார்க்கும்போது நமக்கு முந்தைய நாள்தான் (ஆகஸ்டு 14) அன்றைக்கு அஷ்டமி கிடையாது என்று சமாதானம் சொல்லி மெழுகிவிட்டனர்.

இவ்வளவுக்கும் பார்த்தால் அஷ்டமி என்பது இந்துக் கடவுளான கிருஷ்ணன் பிறந்த நாள். அது (கோகுலாஷ்டமி) ஓ, கடவுள் பிறந்த நாளே கெட்ட நாளோ!
http://files.periyar.org.in/viduthalai/20080815/news01.html

பூனை பேசுகிறதாம்! பாட்டுப் பாடுகிறதாம்!

திருச்சியில் நடக்குது ஒரு கூத்து!
காலையில் எனது தொலை பேசியில் ஒரு நண்பர் (வில்லியம்) பேசினார். அவர் கூறு கையில், பொன்மலைப்பட்டி வ.உ.சி. தெருவில் வசிக்கும் பாபு வீட்டில் வளர்க்கப்படும் பெண் பூனை பேசுகிறது, பாட்டுப் பாடுகிறது என்று கூறினார்.

உடனே, நான் பாபு வீட்டிற்குச் சென்றேன். திருச்சி பொன்மலைப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி பெயர் கவுரி, மகள் சரண்யா. பாபு இரயில்வே பணிமனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளராகப் பணி யாற்றி வருகிறார். அவரது வீட்டில் ஒரே கும்பல்! ஆம் ஆண்களும், பெண்களும் வந்த வண்ணம் இருந்தார்கள். நம்ம மக்கள் தான் எங்கு எது நடந்தாலும் சொல்லப்படுகிற செய்தி உண்மையா? பொய்யா? என்று ஆராய்ந்து பார்க்க மாட்டார்களே,

ஆட்டு மந்தையாக வந்துவிடுவார்களே! நான் மேற் கொண்டு விசாரித்தபோதும் இந்தப் பூனைக்கு பெயர் பூசியாம். 3 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்கள். மேலும், இப் பூனை இரண்டு நாள்களாகத் தூங்காமல் ஒரு மாதிரி கத்திக் கொண்டே இருந்ததாம். அதைத் தூங்க வைக்க ஸ்ரீராம் ஸ்ரீராம் எனப் பாடினார்களாம். உடனே இந்தப் பூனையும் ஸ்ரீராம் ஸ்ரீராம் என பதிலுக்குப் பாடியதாம்.

இதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம். மேலும் பேச்சு கொடுத்தோம். நாங்கள் எது சொன்னாலும் பதிலுக்குத் திரும்பச் சொல்லுது என்று சொன்னார்கள். நான் உடனே அந்தப் பூனையை பெரியார் என்று சொல்லச் சொல்லுங்கள் என்று அந்த அம்மா கவுரியிடம் சொன்னேன்; சொல்ல மறுத்துவிட்டார்கள்.

செல்போனை கிட்ட வைத்துப் பேசச் சொன்னால் தான் பேசும், பாடும் என அந்த அம்மாவும் அவரது மகள் சரண்யாவும் புருடா விட்டார்கள். நான் சிறிது நேரம் அங்கே நின்று என்ன நடக்கிறது? என்று கவனித்து வந்தேன். அந்த செல்போனை எடுத்து விட்டால் - ஒரு சவுண்டும் வர மாட்டேங்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்த செல்போனில் பாடல், பேச்சு பதிவு செய்து (ரெக்கார்டிங்) வைத்துக்கொண்டு, அந்தப் பூனையிடம் கிட்ட கொண்டு போய், செல்போனை இயக்கி பாட விடுகிறார்கள். ஆனால், அந்தப் பூனை வாயே திறக்க மாட்டேங்கிறது.

ஆனால், அந்த அம்மா கவுரியோ வாயை திறக்காமல் தான் பாடுது! பேசுது! என மீண்டும் மீண்டும் அங்கு வரும் மக்களை முட்டாளாக்கி பெரும் கூட்டத்தைக் கூட்டி வேடிக்கைக் காட்டி வருகிறார்.

மேலும், அங்கு வரும் மக் களுக்கு மனிதனுக்கு ஆறறிவு, மிருகத்துக்கு அய்ந்தறிவு?

பூனை மிருகம். அது எப்படிப் பேசும் என நான் எவ்வளவோ தெளிவுபடுத்தியும், கேட்காமல் இன்னும் மூட நம்பிக்கையை விலை கொடுத்து வாங்கி மடி யில் கட்டிக்கொண்டு வாழும் இந்த பாழாய்ப் போன மக்க ளைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? என அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினேன்.

பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலச் சந்தர் அவர்களைச் சந்தித்து - மேற்கண்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அல்லது எங்களது அமைப்பு ரீதியாக அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரம் இதே இடத்தில் செய்வோம் எனக் கூறியதன் பேரில்,

உடனே சம்பந்தப்பட்ட நபர் (பாபு) அவரது மனைவி கவுரி, மகள் சரண்யா ஆகியோரை காவல் நிலைய ஆய்வாளர் அழைத்து - நான் அறிவியல் படித்தவன். இதையெல்லாம் நம்ப முடியாது. சும்மா வேடிக்கைக் காட்டிக் கொண்டு இருந்தால், அனைவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுவேன். உடனே வீட்டைக் காலி செய்து எங்கேயாவது போய் இருங்கள் என காவல் துறை ஆய்வாளர் பாலச்சந்தர் எச்சரித்ததற்குப் பிறகு உடனடியாக வீட்டைக் காலி செய்யும் வேலையில் இறங்கி உள்ளனர் பாபு குடும்பத்தினர்.- மா. செந்தமிழ் இனியன்திருச்சி
viduthalai/20080820/news


கேழ்வரகில் நெய்?: கேழ்வரகில் நெய் வடிகிறது; ஆமாம், நம்பித்தான் தொலைக்கவேண்டும்; இல்லையெனின் கடவுள் சாபம்தான் கிட்டும்.
பரமக்குடி அருகே மென்னத்தி என்னும் ஊரில் வீரமாகாளி கோயில், அந்தக் கோயில் சாமிக்கு ஒரு சிம்மவாகனம், என்ன ஆச்சரியம்! அந்த வாகனத்திலிருந்து பால் வடிந்ததாம். கிளப்பி விட்டார் ஒரு செய்தியைப் பூசாரி.

அவ்வளவுதான் ஆட்டு மந்தைகள்போல, பக்தர்கள் கூட்டம் - அதன்பின் கேட்கவா வேண்டும் - கோயில் வசூல் களை கட்டியது.

அம்மன் கண்ணில் கண்ணீர் வடிந்தது - அம்மன் கண்கள் அகலத் திறந்தன கோயில் சுவரில் ஏசுநாதர் உருவம் தெரிந்தது - பிள்ளையார் பால் குடித்தார் - வேப்பமரத்தில் பால்- இப்படி மத வியாபாரிகள் தங்கள் கைகளில் தயாராக வைத்துள்ள கைச் சரக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தவணை முறையில் கிளப்பி விடுவார்கள்.

அண்மைக்காலமாக வெளிவரும் தகவல்களும், புள்ளி விவரங்களும் கோயில்களுக்குப் பக்திச் சிரத்தையோடு வருவோர் எண்ணிக்கை சரிந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றன. இந்தக் கூனை நிமிர்த்த வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் இந்தக் கிளுகிளுப்பு விநோதச் சேதிகள்!

இதுபோன்ற அதிசயங்களை அள்ளி விடுகிறார்களே - அந்தக் காட்சிகள் ஏன் தொடருவதில்லை? ஒரு சில மணிகளிலே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓய்ந்துவிடுவது ஏன்?கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள், என்றுதான் கெடு வைத்துள்ளார்கள்.

இந்த மூடநம்பிக்கைகளுக்கு கெடுவாவது - மண்ணாங்கட்டியாவது. அடுத்த சில மணிநேரங்களிலேயே மரணம்தான்!
viduthalai/20080811/news

No comments: