Followers

Tuesday, September 2, 2008

பிள்ளையார் பிறந்தது எப்படி? விநாயக புராணம். விநாயக சதுர்த்தியாம்! பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்.

பிள்ளையார் பிறந்தது எப்படி? விநாயகன் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதையும் தமிழின அறிவுநெறி நாகரிகப் பண்பாட்டுக் கொள்கைக்கு ஒத்து வராது என்பதையும் அய்யா பெரியார் காலம் தொட்டே விளக்கி வருகிறோம்.

எனினும் நம் கருத்துக்கு ஆதரவு தந்து வலியுறுத்தும் வகையில், பிற துறை அறிஞர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன என்பது கண்டு ஓரளவு மன ஆறுதல் அடையும் நாம் அவ்வாராய்ச்சி அறிஞர்களின் சிந்தனைக் கருத்துகளை தமிழக மக்கள் பார்வைக்கு படைக்கிறேன்.

பிள்ளையார்பற்றிய கற்பனைக் கதையை விளக்க வேண்டியது இந்த நவீன காலத்திலும் அவசியமாயிற்று. இந்த உண்மையை உணர்ந்தபின், பிள்ளையார் கடவுள்தானா? என்பதை உணர வேண்டும். பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் என்ன ஒவ்வாத செயலை செய்து விட்டார் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். புராணக் கதைகளில் கணபதியின் பிறப்போ பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. அயோக்கியர்களின் அறியாமைக் கற்பனையின் விளைவே இந்தக் கணபதியின் கதை. இவனுடைய பல கதைகளில் சில பகுத்தறிவுச் சிந்தனை துளிகள்.

பார்வதிதன் உடம்பில் உள்ள அழுக்கை திரட்டி பிள்ளையாரை உருவாக்கிக் கொடுத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

சிறிய குழந்தையின் உடலுக்கு - பத்து அடி நீளமுள்ள யானையின் தும்பிக்கை பொருந்துமா?

தலைவேறாக உடல் வேறாக வெட்டிய பிறகு, ஒட்டி வைத்தால் உயிர் பிழைக்க முடியுமா?

யானையின் உருவத்தோடு எந்தவொரு பெண்ணுக்காவது குழந்தை பிறக்க முடியுமா?விநாயகன், பார்வதியினுடைய கர்ப்பத்தில் இருக்கும்போது - ஒரு அசுரன் வயிற்றுக்குள் சென்று விநாயகன் தலையை வெட்டி விட்டான் என்பது அறிவுடையவன் ஏற்கக் கூடிய செயலா?

தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்குச் சென்று அழிக்க முடியாத பிள்ளையார் என்ற முதன்மைக் கடவுள், மாறாக தக்கனிடம் வெட்டுப்பட்டு தலையில்லா முண்டமாக கிடந்தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

சிதம்பரம் கோயிலில் யானை முகங்கொண்ட பிள்ளையார் தன் தும்பிக்கையை எங்கு வைத்துள்ளான் என்பதும் எவ்வளவு ஆபாசத்துடன் இருக்கிறது என்பதும் உங்களுக்கு தெரியுமா?

இதுபோன்ற ஆபாச, அசிங்கமான காட்சிகளை ஆண், பெண் பக்தர்கள் தரிசித்து கும்பிட்டு வருகின்றனர் என்பது பக்திப் போதையில் புத்தியை இழந்த செயல்தானே!

தன்னுடைய அம்மா பார்வதியை போலவே தனக்கு அழகான பொண்ணு வேணும்னு சொன்ன அயோக்கியக் கடவுள்தான் விநாயகர் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிள்ளையாரின் வாகனம் எலியாம். இந்த தொந்தி பிள்ளையார் எலியின்மேல் ஏறி அமர்ந்தால் எலி, தக்காளி சட்டினி போல ஆகிவிடும் என்பது அவனுக்கு தெரியவில்லையே - ஏன்?

தம்பி முருகனை ஏமாற்றி பழத்தை யாருக்கும் தராமல் முழுவதையும் தின்னவன்தானே தொந்தி கணபதி என்பது உங்களுக்கு தெரியுமா?

பிள்ளையாரின் பிறப்புக் கதைகள் அனைத்தும் எல்லா விதத்திலும் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், உயிர் கொடுத்ததாகவும் உள்ளபோது இவன் எப்படி சக்தி உள்ள கடவுளானான்?

இது போன்ற கடவுள்களை நூற்றுக்கணக்கில் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றன.

தந்தை பெரியார் தன்னுடைய செலவில் கையடக்கப் பிள்ளையார் பொம்மையை உடைத்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு இருந்தும் செய்தும் காட்டினார். ஆனால் இன்று ஆத்திகர்களாகிய நீங்கள் எண்பதாயிரம் கிலோ எடையுள்ள பிள்ளையார் சிலையை உடைத்து நாத்திகர்களாகியுள்ளீர்கள் என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
தொகுப்பு: வெங்கட இராசா ம. பொடையூர்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
viduthalai/20080831/news06.

விநாயக சதுர்த்தியாம்! விநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை.

விநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதைகாரவன் ஏட்டில் ஆதாரத்துடன் விளக்கம்.

கடவுள்கள், தெய்வங்கள் என்பவற்றை மய்யமாக வைத்து சுற்றி வளைத்துப் புனையப்பட்டுள்ள கதைகளை நுணுகிப் பார்த்தால் அந்தக் கடவுள்கள், கடவுளச்சிகள் எல்லாம் அடிப்படையில் ஒரு மனிதனாகவும் பெண்ணாகவும் இருப்பது வெட்ட வெளிச்சமாகும்.

கிருஷ்ணாவதாரம் என்ற பெயரில் வழக்கறிஞர் திரு கே.எம். முன்ஷி எழுதிய விளக்க நூலில் கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதன். கிருஷ்ண லீலைகள் என்பன குழந்தை விளையாட்டுகள், காளைப் பருவக் குறும்புக் கூத்துக்கள் என்று விளக்கியுள்ளார்.

இதே போன்றே விநாயகன் என்று பூஜிக்கப்படும் யானைமுக அலங்கோல உருவ தெய்வம் என்பதும் அடிநாளில் தண்டச்சோற்று ஊராரை மிரட்டி வயிறு வளர்த்த ஒரு ரவுடியை அடிப்படையாகக் கொண்டது. விநாயகபுராணம் அவனுடைய ரவுடித் தனத்தை விவரிப்பது என்று உண்மை விளக்கம் செய்கிறார் திரு கே.விசுவநாதன் என்பவர்.

டில்லி ஆங்கில மாதம் இருமுறை ஏடு காரவனில் செப்டம்பர் 1 ஆம் தேதி இதழில்.தந்தை பெரியாரவர்களின் பகுத்தறிவுக்காவனம் எவ்வளவு தொலைவுக்குப் பரந்து வளர்ந்து பூத்துக் காய்த்து நற்பலனளித்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகிறது.

மனிதனையே கடவுளாக்குகின்றனர்நம் நாட்டுக் கெட்ட வழக்கங்களில் முக்கியமான ஒன்று மனிதர்களை எல்லாம் கடவுள்களாக்க முற்படுவதும், அவற்றுக்குக் கும்பிடு போட கோயில்கள் கட்டி வைப்பதுமாகும்.

எனவே, ஒருவன் தன் சொந்த உருவத்தில் சொந்த கதையில், அந்தக் கதையில் தனக்கு மதிப்புச் சேர்க்க தன்கிட்டவும் நெருங்காத சில தெய்வீக குணபாவங்களைச் சேர்த்தும் கோயில்கள் அமைத்தும் வந்ததன் காரணமாக ஒரே பெயர் முதலியன உள்ள நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோயில்கள் இப்போது நமக்கு உள்ளன.

புராணக் கதைகளில் ஆதாரப் புலன்
இந்தக் கடவுள் என்பவைகளைச் சுற்றிப் புனையப்பட்டிருக்கும் அந்தக் கதைகளை நாம் நுணுகி காரண காரிய புலனாய்வு செய்து பார்த்தால் அந்தக் கதைகள் குறிப்பிடும் அந்தக் கடவுள்கள் என்பன அடிநாளில் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதைக் கண்டறியலாம்.

தலைமைக் கடவுள்கள் என்று கூறப்பட்டவைகளின் அடிப்படையும் கூட இப்படி மனிதனை மூலாதாரமாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.இவ்விதம் மனிதரைக் கொண்டு கடவுள்களை மனிதர்கள் சிருஷ்டி செய்யும் திருப்பணி இன்றும் கூட தொடர்ந்து நடக்கிறது.

இப்போது உயிருடன் இருப்பவர்களில் அல்லது அண்மை யில் செத்துப் போனவர்களில் யாராவது தங்களுக்கு விருப்பமான வராக இருந்தால் கடவுள் தன்மை கற்பனை செய்து கூறி அவர் களையும் தெய்வமாக்கி சிலை வைத்துக் கோயில் கட்டி தெய்வமாக்கிவிடுகின்றார்கள்

.ஏன் தடைப்படுத்தவில்லை?
விஞ்ஞானப் புதுமை அறிவுவளம் கண்ட இந்த காலத்திலும் இவ்விதம் இந்த ஏமாற்றுத்தனமான - மோசடியான சட்டப்படி குற்றமான இந்தச் செயல்களுக்கு நமது சமுதாயம் இன்னும் முடிவு கட்டாதது விசித்திர விபரீதமாகத்தான் இருக்கிறது.இப்படி ஏன் தடைப்படுத்தப்படவில்லை?

ஏனென்றால் இவ்விதம் செய்வதை மத விரோதமாகவும் நாத்திகமாகவும் கடவுள் துவேஷமாகவும் இப்போது படித்தவர்கள் என்பவர் களும் கருதி பயந்து ஒதுங்கி ஒருங்கி இருக்கின்றனர்.ஆயினும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளவும் உண் மையை அறியவும் விரும்புகிறவர்கள் இந்த அறிவொளிப் பணி செய்வதனின்றும் தடைப்பட்டு நிற்கமாட்டார்கள்.

துணிவுடன் இந்த தெய்வ மோசடிகளை அம்பலப் படுத்தி உண்மையை உலகோர் அறியச் செய்ய துணிவுடன் செயலில் ஈடுபட்டுத்தான் தீர்வார்கள்.

விகனேசுவரன் யார்?
ஒரு வேலையைத் துவங்கும் முன் அன்றாடம் பூசை போடுகிறார்களே - விநாயகர் சதுர்த்தி என்று ஆண்டு தோறும் ஒரு நாளில் கொண்டாடுகிறார்கள் - இந்த விக்னேசுவரன் யார்? இவன் அடிப்படைப் பிறப்பு - வாழ்க்கை - அடிப்படை -வரலாறு -கதை என்ன? இவனை ஏன் கும்பிடவேண்டும் - அருள் பெறத் துடிக்க வேண்டும்?

புராணங்களும் கதைகளும் தவிர்த்து இவனைப் பற்றிய உண்மைகளை அறிய வேறு உண்மையான - ஆதாரங்கள் உள்ளனவா? அறிவியல் கொண்டு கணித்துப் பார்ப்போம்.

புராணக் கதைகளில் இந்த விக்நேசுவரைப் பற்றி குற்றிப்பிட்டுள்ளவற்றில் முக்கியமானவை -
(1) இவருக்குள்ள பெயர்களில் முக்கியமானவை விக்நேசுவரன் ; கணபதி - விநாயகர்.(2) அவலட்சம் - அசாதாரண நீண்ட மூக்கு - யானைத் துதிக்கை போல் தோற்றம்(3) ஒரே ஒரு பல்-தந்தம்(4) பெருச்சாளி வாகனம்இந்த இலட்சணங்களை ஆதாரமாகக் கொண்டு அவனுடைய மனித வாழ்க்கைக் கதையை யூகித்துக் கொள்ளலாம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தவன் சின்னஞ்சிறு வயதிலிருந்து பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் (சிவன் பிச்சையாண்டி என்பது புராணம்).

இவனது அவலட்சணம் கண்டு ஊரார் இவனை அறுவறுத்து ஒதுக்கினர் - விரட்டினர் - பிச்சைத் தொழிலும் வயிற்றுப் பாட் டுக்கு உதவியாகவில்லை. பட்டினி வேதனையால் பரிதவித்தான். இருந்தாலும் நல்ல மூளை - புத்திசாலி - சிந்தனா சக்தி அதிகம்.வயிற்றுப் பாட்டுக்கு ஒரு உபாயம் வகுத்துச் செயல்படுத்தினான்.

அவனைப் போன்ற ஏழை எளியவரும் விஷமிகளுமான சிறுவர்களை கோஷ்டியாகச் சேர்த்துக் கொண்டான். இந்த விஷமச் சிறுவர் கூட்டம் சூழ வீடுதோறும் பிச்சைக்குச் சென்றான் பிச்சை போடாவிட்டால் . . . கூச்சல் - ரகளை செய்தனர். இவர்கள் வீட்டு வாசலை விட்டு அகன்றால் போதும் என்ற வேதனையால் வீட்டுக்காரர்களும் சாப்பாட்டைப் போட்டு அனுப்பி வைப்பார்கள்.

இது மாதிரி ரகளைக் கும்பல் பிச்சைக்காரர்கள் இப்போதும் இல்லாமல் போகவில்லை. வயதடைந்ததும் இந்தச் சிறுவன் பிச்சைக்கு கொஞ்சம் கவுரவமான - சிரமமில்லாத - முறையை தேர்ந்தெடுத்தான்.

திருமணம் மற்ற வகை விசேஷங்கள் நடக்கும் வீடுகளில் முற்றுகை இடுவான். இவன் கோஷ்டிக்கு தண்டியான சாப்பாடு போட வற்புறுத்தல் - இன்றேல் கூச்சல் - ரகளை - அந்த விசேஷ நிகழ்ச்சிகள் அமைதியாக நடக்காது செய்வோம் என்று பயமுறுத்தல்.இந்த எச்சரிக்கை பயமுறுத்தல்களுக்கு அந்த வீட்டுக்காரர் பணிந்து வராவிட்டால், மற்றொரு தொல்லை முறையைக் கையாண்டான்.

பெருச்சாளிகளைப் பிடித்து வைத்திருந்தனர் இந்த வாலிபக் கூட்டதினால் விசேஷ நிகழ்ச்சிகளில் தங்களுக்கு விருந்துச் சாப்பாடு போடாவிட்டால் தங்களிடம் இருந்த பெருச்சாளிகள் எலிகளை அந்த விருந்து வீட்டுக்குள் போட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் கலைந்து ஓடும்படி செய்வார்கள் துவக்கத்தில் அடிபட நேர்ந்ததென்றாலும் நாளடைவில் இந்த முறை அவனுக்கு நல்ல வெற்றி தேடித் தந்தது; சுகமாக விருந்து சாப்பாடு கிடைக்கச் செய்தது.

இவன் ஒரு விருந்து வீட்டில் தலைகாட்டினால் போதும் - முதலில் இவனுக்கு வலிய விருந்துபச்சாரம் நடத்தி வைத்து அனுப்பிவிடுவர் - சடங்குகளை அமைதியாக நடத்திக் கொள்ள வழி செய்து கொள்வர்.நாளேற வேற, இவனுக்கு விருந்து வைப்பது அவ்வூரின் ஒரு வழக்கமாகிவிட்டது.

திருமணம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு இந்தப் போக்கிரி விஷமம் ஏதாவது விளைவித்து தடை ஏற்படச் செய்வானோ என்ற பயமே இவன் வயிற்றை முதலில் நிரப்பி அனுப்பி விடுவதற்கு முக்கிய காரணம்.

நாளாவட்டத்தில் இவனை அடிப்படையாகக் கொண்டு ஒரு மூடநம்பிக்கை எண்ணத்தை இட்டுக் கட்டி பரப்பி விட்டனர். இவனுக்கு முதலில் சாப்பாடு போட்டால் தொல்லைகள் தடைகள் - விக்கினங்கள் நேரிடாது என்று கூறிவைத்தனர். எனவே பல ஆண்டுகள் தொடர்ந்து இவனுக்கு சுகபோஜன உபசாரம் ஊரார் பலரும் நடத்தி வைத்தனர். அயலூரார் கேட் டால் இவன் தெய்வீக சக்தி கொண்டவன் - சாமியார் போன்றவன்.

முதலில் இவனுக்கு சோறு போட்டு திருப்திப்படுத்தினால் கல்யாண காட்சி விசேஷங்கள் - மற்ற எல்லா காரியங்களும் விக்கினமின்றி நடக்கிறது. இவனுக்கு முதலில் சோறு போடா விட்டால் இவனிடமுள்ள தெய்வீக சக்தி காரணமாக நமக்கு விக்கினம் விளைகிறது என்று கூறி வைக்கலாயினர். இந்தப் பிரசாரத்தால் இவனை ஒரு மகான் என நினைக்கச் செய்துவிட்டனர். அப்படியே நடத்தவும் செய்தனர்.

வயது அதிகரித்ததும் கல்யாணக் காட்சிகளுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் அவனை அழைத்து முதன்மை மதிப்பு இடத்தில் அமர்த்தி உபசாரம் நடத்தினர். அவனிடம் ஆசிகளும் பெற்றனர் - தண்டியாக விருந்து சாப்பாடும் போட்டனர்.

உழைக்காமல் உண்டு களித்து திண்ணை தூங்கி வாழ்க்கை நடத்த வாய்த்ததால் உடலும் வயிறும் பெருத்து பானை வயிறும் யானை உடலும் பெற்றான்.

வயது முதிர்ந்ததும் அவன் செத்து வைத்தான். அவன் சாதாரண மனிதல் அல்ல - தெய்வீக சக்தி வாய்ந்த மகான் என்ற கட்டுக் கதை அவன் செத்ததும் பலவித உருவங்களில் பலவித அசாதாரண கற்பனை தெய்வீக நிகழ்ச்சி ஒட்டுக்களுடன் தீவிரமாகப் பரப்பப் பட்டது. முக்கியமாக உழைக்காமல் உண்டு களிக்க திட்டமிட்ட சோம்பேறிக் கூட்டத்தினர் இவனை தெய்வமாக்கிப் பிரச்சாரம் செய்து சுகமாக வயிறு பிழைக்க வழி செய்து கொள்ளலாயினர்.

இவனைப் போல உருவங்கள் செய்து வைத்து பூசைகள் பெயரால் சாப்பாடு கொழுக்கட்டை வகைகளும் படையல் போடச் செய்து படையல் போட்டவர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் சிறிதளவு கொடுத்துவிட்டு பாக்கியை உண்டு வைத்தனர். இந்த வகையில் அந்த ரவுடித் தலைவன் நிரந்தரத் தெய்வமாக - கடவுளாக ஆக்கப்பட்டுவிட்டான். இவனுக்கு பாவர்வதி விஷ்ணு போன்ற பழைய தெய்வங்களை உறவு காட்டி கதைகளும் பாட்டுகளும் புனைந்து பரப்பினர்.

பிற்காலத்தில் புராணங்கள் என்ற கதைகள் புனையப்பட்ட போது, இந்த தண்டச் சோற்று ரவுடியின் வரலாறும் விநாயக புராணமாகப் பாடி வைக்கப்பட்டது. கோயில் வாசல்களில் - குளம் ஆறு கிணற்றங்கரைகளில் ஜனங்கள் நடமாடும் வழியில் மரத்தடியில் இவனுடைய அவலட்சண உருவச் சிலைகள் செய்து வைத்து விக்கினம் தவிர்க்க பூசை நடத்திக் காணிக்கை செலுத்தும் - படையல் போடும் முறையையும் ஏற்படுத்தினர்.

அன்றாட அலுவலர் துவங்கும் முன் குளிப்பது முதல் கடமை - இந்த முதல் கடமையை அடுத்து மற்ற வேலைகள் செய்வது வழக்கம். வேலை துவங்கும் முன் முதலில் குளித்தும் முதலில் காட்சி தருவது விக்கின விநாயகன் அவலட்சண சிலை (வைதீகர் கூற்றுப்படி சகுனப் பீடையைப் போல்) எனவே தங்களது அன்றைய வேலைக்கு விக்கினம் ஏற்படாதிருக்க, விக்கினேசுவர சிலைக்குக் கும்பிடு போடும் பூசை போடும் முறை பரம்பரையாக்கப்பட்டு விட்டது.

பெயர்கள் காரணம்போக்கிரி சிறுவர் கும்பலின் தலைவரான இருந்ததால் இவனுக்கு விநாயகர் - கணபதி - கூட்டத் தலைவன் - என்றும் தொல் லைகள் விஷமங்கள் விளையாது தடுப்பவன் என்ற எண்ணத்தால் விக்னேசுவரன் என்றும் காரண இடுகுறிப் பெயர்கள் இட்டனர்.

பெரிய சட்டித் தலையும் நீண்ட மூக்கும் சின்னஞ்சிறு குழிக்கண்களும் தொந்தி வயிறும் கொண்டிருந்ததால், பிற்காலப் புராணக் கதைக்காரர்கள் இவன் தலையை சீவன் வெட்டியதாகவும் . . . பார்வதி அழுத்தாலும் வெட்டிய தலை காணாமல் போனதாலும், யானைத் தலையை வெட்டி சேர்த்து சிநவனால் உயிர் ஊட்டியதாகவும் - யானைகள் கலவி செய்ததைப் பார்த்தபடி சிவன் - பார்வதி கூடியதால் அல்லது யானை உருக்கொண்டு கூடியதால் யானைக் குழந்தை பிறந்து வைத்தது என்றும் கதை புனைந்தனர்.

கிழ வயதில் எல்லா பற்களும் உதிர்ந்து ஒரே பல்லையுடையவன் என்றும் கிழவயதில் மூலையில் முடங்கிக் கிடந்தபோது இவனைச் சுற்றி எலி, பெருச்சாளிகள் ஓடியாடி இவனுக்குப் பிச்சையாகப் போடும் உணவில் பங்கு கொண்டதாலோ - இவன் அடிநாளில் பெருச்சாளிகளைக் கொண்டும் விருந்து வீடுகளில் விஷமம் செய்து வயிறு வளர்க்க இவனுக்கு பெருச்சாரி சாதனமாக இருந்ததாலோ இவனுக்கு வாகனம் எலி பெருச்சாளி என்றும் பிற்காலப் புராணக்காரர்கள் இட்டுக் கட்டிக் கதை புனைந்து வைத்துவிட்டனர்!
(விடுதலை 7-9-1969) viduthalai/20080824/news

விநாயக சதுர்த்தியாம்!
பிறப்பு - இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். இந்து மதத்திலோ கடவுளுக்குப் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு.

கடவுளுக்குப் பிறப்பை வைத்தால், அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி, புரோகிதச் சுரண்டலுக்கு விரிவான ஏற்பாட்டைச் செய்துகொள்ளலாம் அல்லவா!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கன்னி ராசியில் விருச்சிகம் லக்னத்தில் சதுர்த்தி திதியில் அவதரித்தாராம் விநாயகர். எப்படி அவதரித்தாராம்?

பார்வதி தேவியார் குளிக்கச் சென்றபோது, தன் உடலில் தேங்கிக் கிடந்த அழுக்கையெல்லாம் திரட்டி, அதை ஒரு உருவமாக்கி, காவலுக்கு வைத்தாராம். அப்பொழுது அங்கு வந்த சிவனை அந்த அழுக்குருண்டை தடுத்ததாம்; சிவனைத் தடுப்பது என்பது சாதாரணமா?

சினம் கொண்ட சிவன் சூலாயுதத்தினால் அந்த அழுக்குருண்டையின் தலையைக் கொய்தானாம். முண்டமான தன் பாலகனைப் பார்த்து பார்வதி தேவியார் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினாளாம்.
வடக்கே தலை வைத்துப் படுத்துக் கிடந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்தனராம் கணநாதர்கள்.

சிவன் என்ன செய்தான்? அறுவை சிகிச்சை நிபுணர்போல அந்த முண்டத்தின் உடலோடு யானைத் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து கணங்களுக்குத் தலைவன் ஆக்கினானாம்.

பார்வதி உடலின் அழுக்கு என்று சொன்னால், அருவருப்பாக இருக்கிறது என்றவுடன், பார்ப்பனர்கள் என்ன வியாக்கியானம் சொன் னார்கள் தெரியுமா? பார்வதி தன் உடலில் உள்ள சக்தியையெல்லாம் திரட்டி ஒரு உருவமாக்கினாள் என்று கதை கூற ஆரம்பித்துவிட்டனர்.

காரணம், எல்லாம் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் பயந்துதான்.

இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு ஒரு கதையல்ல, இரு கதையல்ல, பல கதைகள் உண்டு. கதைக்குத்தான் கண் இல்லை என்று வசதியாகச் சொல்லி வைத்துவிட்டார்களே!

பகவான் விநாயகரைக் கும்பிட்டுச் சென்றால், எல்லாக் காரியமும் ஜெயம்தானாம். விக்னம் இல்லாமல் காப்பாற்றுவாராம் - அதனால்தான் அந்த அழுக்குருண்டைக்கு விக்னேஸ்வரன் என்று பெயராம்.

இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிமார்கள் உண்டு என்று இன்னொரு கதை. உண்மை யிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏனிப்படி முரண்பாடான கதைகள் - மாறுபாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்?

கடவுள் விஷயம் என்பதால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற துணிவில் உளறி வைத்துவிட்டனர்.

தனக்கு அம்மாவைப்போல அழகான மனைவிவேண்டும் என்று உலகிலேயே கேட்ட கயவாளி இந்த விநாயகனாகத்தான் இருப்பான்.
விநாயகர் என்று பெயர் இந்தப் பிள்ளையாருக்கு வந்ததற்கெல்லாம் ஒரு சதி - பின்னணியில் இருக்கிறது.

புத்தருக்கு விநாயகர் என்றும், சாஸ்தா என்றும் பெயருண்டு. பிற்காலத்தில் புத்தர் கோயில்களை இந்துமதவாதிகள் தங்கள் கோயில்களாக உருமாற்றி விட்டனர். புத்தருக்கு இருந்த விநாயகர் என்ற பெயரை இந்தப் பிள்ளையாருக்குச் சூட்டி, புத்த விகாரங்களை மோசடி செய்துவிட்டனர்.

இந்துக் கோயில்களாக்கிவிட்டனர். அது போலவே, புத்தருக்கு சாஸ்தா என்ற பெயருண்டு, பிற்காலத்தில் அய்யப்பனுக்கு சாஸ்தா என்ற பெயர் சூட்டி புத்த விகாரங்களை அய்யனார் - அய்யப்பன் என்ற கோயில்களாக உருமாற்றம் செய்தனர்.

இதுபற்றி ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட பவுத்தமும் - தமிழும் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இந்து மதம் பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், அந்த மதத்தை உண்டாக்கின புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அஃதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக் கொண்டு விட்டது. ஏன் ஒப்புக்கொண்டது?

புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்!

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டதுபோலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும், புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. சாஸ்தா, அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர் அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது.

புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பவுத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர்.

அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளை யார்) கோயிலாகவும் மாற்றி விட்டார்கள். துடித லோகத்தில் எழுந்த ருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதிசத்துவர், புத்தராக மாயா தேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பவுத்த நூல்கள் கூறுகின்றன.

பவுத்த மதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயரு டைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ மதத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. (“பவுத்தமும் - தமிழும்”, பக்கம் 77)

பக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் பிள்ளையாரை கும்பிடப் போகிறீர்களா? இங்கு பக்தி என்பது பார்ப்பனர் நலம் என்பதைப் புரிந்துகொள்வீர்!
viduthalai/20080828/news07.

விநாயக சதுர்த்தியாம்....
விநாயகன், விக்னேசுவரன், கணபதி, கணேசன் என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளையாரின் பிறந்தநாள் விரைந்துவருகிறதாம். எப்படிப் பிறந்த நாளைக் கண்டறிந்தார்கள் என்பதே விளங்கவில்லை. ஏன் என்றால் பிள்ளையாரின் பிறப்பு, பல வகைகளில் பல கதைகளில் கூறப்பட்டுள்ளது.

அதில், ஒருவகை, சிவ மகாபுராணத்தில் கூறப்பட்ட கதைச் சுருக்கம் இது:
பார்வதியுடன் (சிவனின் மனைவி) பேசிக் கொண்டிருந்த அவள் தோழி விஜயை என்பவள் கேட்டாளாம், உங்கள் கணவருக்கு மட்டும் ஏராளமான வேலைக்காரர்கள் (கணங்கள்) இருக்கும்போது - உங்களுக்கு யாருமே இல்லையே என்று!

அவள் தன் உடலில் சிறிது நீர் தெளித்து ஈரமாக்கி அழுக்கைத் திரட்டி எடுத்து மூன்று கண்களும் யானை முகமும் உடைய உருவத்தை உண்டாக்கிக் காவலுக்கு வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள்.

அங்கே வந்த சிவன் உள்ளே போக முயல, அழுக்குருண்ண்டைக் கணபதி தடுக்க, நான்தான் சிவன் எனக் கூறிக் கொண்டே உள்ளே போக முயல, கணபதி தன் தண்டாயுதத்தால் சிவனை அடித்துவிட்டது. இவனைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று சிவன் தன் பிரதம கணங்களுக்குக் கூடி, சிவ கணங்கள் கணபதியை நெருங்க, அவர்களையும் அடித்து விரட்டிவிட்டது.

சிவனுக்கு ஈகோ கிளம்பி, சண்டைபோட முடிவெடுத்து பிரம்மா, இந்திரன் முதலியோரைச் சேர்த்துக் கொண்டு போர் முஸ்தீபு செய்யும் போது விஷ்ணு , நான் மாயையால் கணபதியை வெல்கிறேன் எனச் சவடால் அடித்தார். போர் நடக்கும் போது சிவன், பின்புறம் இருந்து பிள்ளையாரைத் தாக்கியதால் அது மூர்ச்சை அடைந்தது. இது விவரத்தை நாரதர் பார்வதியிடம் போட்டுக் கொடுக்க அவளும் தன் பங்குக்குப் போராடத் தொடங்கினாள்.

பயந்துபோன சிவனும் மற்றவர்களும் துரோணாகலம் எனும் மருந்து மலையை வரவழைத்து சிகிச்சை செய்ததும் கணபதிக்குத் தெளிவு வந்தது.இதன்படி பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையாரை உருவாக்கும் போதே யானை முகத்தை வைத்தாள் என்றாகிறது.

ஆனால், சிவ புராணத்தில் கணபதியை மனிதத் தலையோடு உருவாக்கியதாக வருகிறது. சண்டையில் பிள்ளையாரின் தலை துண்டிக்கப்பட்டுவிட்டது. அது கண்டு பார்வதி அழுதுபுரளவே, ஒரு கொம்பு இருந்த யானைத் தலையைக் கொய்து வந்து பிள்ளையாரின் தலையில் பொருத்தி வைக்கப்பட்டது என்று உள்ளது.எதை நம்புவது? பிள்ளையார் பக்தர்களும் பிள்ளையாரின் பிறந்த நாள் கொண்டாடுபவர்களும் பதில் கூறுவார்களா?
viduthalai/20080822/news29.

பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்
பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டியதில்லை.பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.
நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்யைர் கடவுளல்ல!வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது - கணபதி கடவுளல்ல!கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன்.

இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டன்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்பவர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.(7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை)
viduthalai/20080817/news05.

படிக்கவும்
பக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநாயகர் ஊர்வலத்தின் நோக்கம்.விளையும் கேடுகளும்.

1 comment:

suji said...

your articals very best but i can't belive this.are these really true?