Followers

Saturday, September 13, 2008

விநாயகனுக்கு கோழிக்கறி, மாட்டுக்கறியா? அறுத்துச் சமைத்த கோழி உயிர் பெறுமா? வாஸ்து மூடநம்பிக்கையால் ஊரே காலி!

பிள்ளையார், விஷ்ணு, தோர்பி+கர்ணம். !!!
மலிவு: இந்துக் கடவுள்களில் மலிவுக் கடவுள் (Cheap) செலவுக் கடவுள் (Costly) கள் எல்லாம் உண்டு.

அதில் பிள்ளையார் என்கிற விநாயகன்தான் மிகவும் மலிவுக் கடவுளாம். அவருக்கு ஆத்ம திருப்தி - கொழுக்கட்டை எல்லாம் அதற்கப்புறம்தான். அருகம்புல் கையில் கிடைத்து அவர் தொப்புளில் போட்டால் போதுமாம். அதுவும் கிடைக் காவிட்டால், எருக்கம்பூ! இது போதுமாம்.

கேட்டது கிடைக்குமாம்! அது சரி, அவர் கேட்டது ஒன்று, அது இதுவரை கிடைக்கவில்லையே - ஏன்? கிடைக்காதது - அவர் அம்மாவைப்போல் அழகான மனைவி!
பிள்ளையார் என்ற கடவுளை சைவர்கள் மலிவாக வைத்திருந்தால், வைணவர்கள் சும்மா இருந்துவிடுவார்களா?

எல்லாம் மதக்கடையின் வியாபாரப் போட்டிதானே!

கிருஷ்ண பரம ஆத்மா இருக்கிறாரே - அவருக்குப் படையல் என்ன? அவரே சொல்லுகிறார்.
எனக்கு ஒன்றும் அதிகம் வேண்டாம்; கொஞ்சம் புஷ்பம், கிடைக்காவிட்டால் கொஞ்சம் இலை; அதற்கும் பஞ்சமா?

பரவாயில்லை, கொஞ்சம் ஜலம் (தண்ணீர்) தெளித்தால் போதும். மோட்சத்தைக் கொடுத்துவிடுவாராம். மோட்சம் இவ்வளவு மலிவாக வைணவத்தில் கிடைக்கும் போது சைவ பிள்ளையாரை யார் தேடுவார்கள்?
________________________________________
தோர்பி+கர்ணம்: சைவர்களும் வைணவர்களும் ஒருவரை ஒருவர் சீண்டுவதில் சளைத்தவர்கள் அல்லர்.

விஷ்ணுவை மட்டம் தட்ட சைவர்கள் வசமும் கைச்சரக்குகள் உண்டு. ஒருமுறை விஷ்ணு தன் சகோதரியான பார்வதியைப் பார்க்கக் கயிலாயம் சென்றானாம்.
பார்வதியின் மகனான விநாயகன் விஷ்ணு கையில் இருந்த (சங்கு) சக் கரத்தை வாயில் போட்டு அடக்கிக் கொண்டுவிட்டானாம்!

மகாவிஷ்ணு கடைசியாக ஒரு யுக்தி செய்தானாம்.

இரு காதுகளையும் மாறு கைகளால் பிடித்துக் கொண்டு தோர்பி (கைகள்) கர்ணம் (காது) போட்டானாம். இதைத் தான் தோப்புக்கர்ணம் என்று சொல்லுவதாம்!

இந்தக் காட்சியைப் பார்த்த பிள்ளையாராகிய விநாயகனுக்கு சிரிப்பு அடக்க முடிய வில்லையாம். அப்படி சிரித்த போது கன்னத்தில் அடக்கி வைத்திருந்த அந்த (சங்கு) சக்கரம் வெளியில் பிதுங்கி வந்து விழுந்துவிட்டதாம்! உடனே விஷ்ணு லபக்கென்று அதை எடுத்துக்கொண்டு விட்டாராம்!

எப்படி? விநாயகனுக்கு விஷ்ணு தோப்புக்கரணம் போட்டவன் என்று சொல்லுவதிலே சைவர்களுக்கு ஒரு திருப்தி - அவ்வளவே!
viduthalai/20080831/news02.

விநாயகனுக்கு கோழிக்கறி, மாட்டுக்கறியா?
மீனும், இறாலும், பிராந்தியும் வைத்துப் படையலா?
கருநாடகாவில் கணபதிக்குக் கறியும் மீனும் வைத்துப் படையல் போட்டதோடு நிறுத்தாமல் பிராந்தியையும் தந்து பிறந்த நாள் விருந்து படைத்திருக்கிறார்கள்.

இராமகோபாலன்கள் விழி பிதுங்க, தினமலர் படித்து விட்டுக் கருவாடு பறி கொடுத்தாற்போல், கம்முனு கிடக்கிறார்கள்!

கணபதி தமிழ்நாட்டில், கல்யாணம் ஆகாத கடவுள்!

வடநாட்டில் சித்தி, புத்தி என்று ஒன்றுக்கு இரண்டு, உபத்திரவத்திற்கு மூன்று என்கிற பாணியில் வாழ்க்கை நடத்தும் கடவுள்!

அதேபோல, தமிழ்நாட்டில் மரக்கறி (சைவம்), கருநாடகாவில் மாட்டுக்கறி (அசைவம்) என இரட்டை வேடமோ?

பிள்ளையார் பெயரில் கலாட்டா செய்யும் பக்தர்கள் விளக்குவார்களா?
viduthalai/20080911/news21.

அறுத்துச் சமைத்த கோழி உயிர் பெறுமா?
பழனிக்குக் காவடி கொண்டு போனால், கொன்ற பாம்பு, அறுத்துச் சமைத்த கோழி, மீன் ஆகியவை உயிர்பெற்று விடுகின்றன என்று இன்றும் அநேகர் நம்புகிறார்கள். அநேகர் காவடி கொண்டும் போகிறார்கள்.

ஒரு சமயத்தில் நானும், முன் ஒரு தடவை முதன் மந்திரியாய் இருந்த முனுசாமி நாயுடு அவர்களும், எனது நண்பர் சி.எஸ்.இரத்தின சபாபதி முதலியார் அவர்களும் பழனிக்குப் போனோம். அப்போது நான் அடிவாரத்தில் இருந்து கொண்டேன். அவர்கள் மலை ஏறிவிட்டு இறங்கி வந்தார்கள்.

இந்தச் சமயத்தில் அடி வாரத்தில் ஒரு விபூதிக் கடைக்காரன் இரண்டு சேவல்களை தன் கடைமுன் கட்டி, அதன் மீது மஞ்சள், கும்குமம் தெளித்து, வெற் றிலை பாக்கை முன்னால் வைத்து, ஒரு உண்டியல் பெட்டியும் வைத்து இருந்தான். இங்கு ஜனங்கள் கூட்டமாக நின்று, சேவல்களைக் கும்பிட்டு, உண்டியல் கலயத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான், இதை என்ன என்று கேட்டேன். அதற்கு அந்தக் கடைக்காரன், என்னையும் ஒரு பக்தன் என்றும், மந்திரி என்றும் நினைத்துக்கொண்டு, பயபக்தியுடன் எழுந்து நின்று இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள் என்று சொன்னான்.

அதாவது அறுத்துச் சமைத்து காவடி கட்டிக் கொண்டு வந்த சேவல்கள், கடவுள் சன்னதியில் உயிர்ப் பெற்றுவிட்டன என்று விளக்கினான்.
இதை நான் இரு நண்பர்களுக்கும் காட்டி விளக்கினேன். அவர்கள் சிரித்து விட்டு இப்படிப்பட்ட ஆட்கள்தான் உங்கள் பிரச்சாரத்திற்கு அனுகூலம் செய்து விடுகிறார்கள் என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட்டோம் என்றும் சொல்லிச் சிரித்தார்கள். -தந்தை பெரியார் 'குடிஅரசு'- 19.1.1936
viduthalai/20080822/news21.
________________________________________
வாஸ்து மூடநம்பிக்கையால் ஊரே காலி!

வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரால் சுவரை இடித்து, கதவை மாற்றி அவதிப்படும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறோம். இப்பொழுது, ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் அதனால் ஒரு கிராமமே காலியாவது பற்றிய செய்தி வந்திருக்கிறது.

பெனு கொண்டா என்பது ஒரு மண்டலின் தலைமை இடம். அதிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இருப்பது கொண்டபள்ளி என்னும் சிற்றூர். அதில் ஒரு சில குடும்பங்களில் சிக்கல் காணப்பட்டது. இதை வைத்து, அந்த ஊரின் மீது அதற்குக் கிழக்கில் இருக்கும் மலையின் நிழல் விழுகிறது என்றும், வாஸ்து சாஸ்திரப்படி ஆகாது என்றும் புரளியைக் கிளப்பினர்.

அதன் பின்பு அந்தக் கிராமத்தில் உள்ள மொத்தம் 50 வீட்டாரும், வேறு இடத்தில் மனைகளை ஒதுக்க மண்டல் வருவாய்த்துறை அலுவலருக்கும், வருவாய்க் கோட்ட அலுவலருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அவர்களுடைய விண்ணப்பங்கள் கவனிக்கப்பட வில்லை. ஆகையால் இப்பொழுது அவர்களாகவே வீடுகளைக் காலி செய்து விட்டு வேறு இடங்களுக்குச் சென்று கொண்டு இருக்கிறார்களாம்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மூடநம்பிக் கையால் அவற்றின் தொல்லைகள் அதிகமாகின்றன என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.
viduthalai/20080822/news

No comments: