Followers

Thursday, September 11, 2008

ருது கால-திருமண ஜாதகப் பொருத்தம் !! ?? !!

சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத்திருக்கின்றீர்கள் என்று திருமண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார்கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம்.

திருமணப் பொருத்தம் என்பது ஜெனன ஜாதகம் எனப்படுகின்ற பிறக்கும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்து மட்டுமல்ல,ஒரு பெண் ருதுவாகும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்தும் பார்க்கப்படுகின்றது.

ருது ஆதல் என்றால் என்ன? சடங்காகுதல், பெண் பெரிய பிள்ளை ஆதல்,பூப்பு அடைதல் என்று பல பெயர் களில் அழைக்கப் படுகின்ற ஒரு நிகழ்வு. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு 12 அல்லது 13 வயதில் ஏற்படுகின்ற முதல் மாத விடாய்.

குழந்தையாக இருந்தவள் வளர்ந்து கர்ப்பப் பையில் முட்டைகள் உற்பத்தியாகி, முழுமை பெறாத முட்டைகள் இரத்தத்தோடு கழிவாக வெளியேறும் நிகழ்வு. 12,13 வயதில் பையனுக்கு மீசை வளர ஆரம்பிக்கின்றது. குரல் மாறுகின்றது. அதனைப் போலவே பெண்ணுக்கு உடம்பு ரீதியாக மாதவிடாய் என்பது ஆரம்பிக்கின்றது.

இந்த ருது ஆதல் என்பதை வைத்து எத்தனை விதமான மூடநம்பிக்கைகள் அந்த பிஞ்சுகளின் மனதில் ஏற்படுத்தப்படுகின்றது. உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றத் தினால் பயந்து போயிருக்கும் அந்த பிஞ்சுகளை மனரீதியாக பயமுறுத்தும் எத்தனை நிகழ்வுகள்-

முதல் மாதவிடாய் ஏற்பட்டவுடனேயே வீட்டில் ஒதுக்குப் புறமாய் அல்லது தனி அறையில் உட்கார வைத்தல், நீ படித்தது போதும் என்று படிப்பை நிறுத்துதல், முறை மாப்பிள்ளைகள் வந்து குச்சு கட்டுகிறார்கள் என்று சொல்லி பெற்றோர்களுக்குத் தெரிந்தே அந்தப் பெண் - பெண் கேலிக்கு ஆளாதல்,

பூப்புனித நன்னீராட்டு விழா என்ற பெயரில் வீட்டில் நிகழ்ந்த இயற்கை நிகழ்வை ஊருக்கெல்லாம் தெரியப்படுத்தல், இந்த முதன் முதல் மாத விடாய் நிகழ்வைத்தான் பார்ப்பனர்கள் ருது ஆதல் என்கின்றார்கள்.

ஒரு பெண் ருது ஆனவுடனேயே நேரத்தை குறித்து வைக்கின்றார்கள். நாளைக் குறிக்கின்றார்கள். நட்சத்திரத்தைக் குறிக்கின்றார்கள். ருது ஜாதகம் தயார் பண்ணி வைத்து விடுகின்றார்கள் .

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ருது ஜாதகத்தையும் பார்க்க வேண்டும் என்கின்றார்கள்.

அப்பொழுதே அவள் 'பெண்' என அழைக்கப்படும் பெண்மைக்கு உரியவளாகையால் அந்த முதல் ருது காலத்திற்கு அமைக்கப்படும் ஜாதகமும் முக்கியமானது போலும்.

சோதிடர்கள் இந்த ருது ஆதல் என்பதையே வகை வகையாகப் பிரிக்கின்றார்கள். ருது காலத்திலே லக்னத்தில் அல்லது 7வது இடத்தில் செவ்வாய் நின்றால் பக்குவ காலத்திய ருது, குரு நின்றால் விவாக கால ருது, சுக்ரன் நின்றால் ஸம்யோக கால ருது என்கின்றார்கள். (ஸம்யோகம் என்றால் கணவனோடு சேர்வது ).

இதுவெல்லாம் கிரகப் பலன். உத்திராடம் முதல் மிருக சீருடம் வரை ருதுவானால் மிக விசேடம். சில நட்சத்திரங்களுக்கு மத்திமம், சில நட்சத்திரங்களுக்கு திருப்தி அளிக்காது எனச் சொல்கின்றார்கள்.

சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை,மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஒரு பெண் ருதுவானால் மாங்கல்ய பலம் குறைவு என்கின்றார்கள். மாங்கல்ய பலம் குறைவு என்றால் ருதுவாகும் நேர நட்சத்திரத்தை வைத்து அவளுக்கு வரப் போகும் கணவன் அற்ப ஆயுளில் செத்துப் போய்விடுவான் என்கின்றார்கள். இது சரியா?.

ஒரு பெண் ருதுவாகும் நேரத்திற்கும் அவளுக்கு பின்னால் வரப்போகும் கணவனின் ஆயுளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? எப்படி அறிவியல்? விளக்கம் உண்டா?

அடுத்து ருது வாரப்பலன் சொல்கின்றார்கள் பாருங்கள்- கொடுமையிலும் கொடுமை. ஞாயிறு ருதுவானால் புத்திரர் குறைவாக இருப்பர். திங்கள் பதிவிரதையாக இருப்பாள்.

செவ்வாய் மாங்கல்ய பலம் குறைவு,புதன் விசேஷ சம்பத்து உண்டாகும். வியாழன் நல்ல செல்வம் படைத்தாவளாவாள், வெள்ளி ஆரோக்கியமாக இருப்பாள், சனி சோரம் போவாள்.

சனிக்கிழமை ருதுவானாள் சோரம் போவாளாம். பெண்களை கேவலப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற இந்த ஜாதகத்தை நம்பலாமா?

ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றதாம். நம்பத்தான் வேண்டுமாம். ஏண்டா? சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத்திருக்கின்றீர்கள் என்று திருமண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார்கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம். வா. நேரு> viduthalai/20080726/snews08.html


படிக்கவும்:


ஜாதகப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் என்றால் என்ன? - பொருத்தமில்லையே!


ஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத்தம்.அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா!


மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .

No comments: