Followers

Monday, September 8, 2008

செருப்புக்காகக் காலை வெட்டும் செயல்

செருப்பின் அளவுக்கேற்ப, காலை வெட்டும் மடையர்களைப் பார்த்திருக்கிறோமா? பார்க்க விரும்பினால் மும்பை போங்கள்; பார்க்கலாம். மும்பை மாநகராட்சியில் இருக்கிறார்கள்.

மும்பையில் கடவுளின் பெயரால் சாந்த் தியானேஸ்வர் மேம்பாலம் உள்ளது. 18 அடி உயரத்தில் உள்ள பாலம். இதன் கீழே உள்ள சாலை யில் பிள்ளையார் பொம்மையைத் தூக்கிக்கொண்டு போவார்கள். பொம்மை 12 அடி உயரம்; லாரி 7 அடி உயரம்., மொத்தம் 19 அடி. பாலத்தின் உயரம் 18 அடிதான். என்ன செய்வது?

என்ன செய்தார்கள், சென்னையில்? இந்த மாதிரிப் பிரச்சினை திருவல்லிக்கேணியில் வந்தபோது, பிள்ளையார் பொம்மை ரம்பம் கொண்டு அறுக்கப் பட்டுத் துண்டு பண்ணித் தூக்கிக்கொண்டு போனார்கள்.

மும்பையில் என்ன செய்கிறார்கள்? இவர்கள் வைத்திருக்கும் செருப்பிற்கேற்ப கால் பாதங்களை வெட்டிக் கொள்கிறார்கள். பிள்ளையார் பொம்மையை வெட்ட முடியாதாம். ஆகவே மேம் பாலத்தை இடிக்கப் போகிறார்கள்.

24 அடி உயர மேம்பாலம் கட்டப் போகிறோம் என்கிறது மாநகராட்சி. சிவசேனாக் கட்சியின் ஆதிக்கத்தில் உள்ள மாநகராட்சி. எனவே இந்த முடிவு.

பாலம் கட்ட எத்தனைக் கோடி செலவு? மக்கள் வரிப் பணம் அல்லவா பாழாகும்? இவர்களுக்கு அதை விடப் பிள்ளையார் பொம்மை முக்கியம்! பிள்ளையார் பொம்மையை பத்து அடி உயரத்தில் செய்தால் பிரச்சினை தீருமல்லவா? ஏன் செய்யவில்லை? பிரச்சினையை உருவாக்கத்தானே இதையே செய்கிறார்கள்!

இந்தப் பிள்ளையாரைத் தான் இரண்டரைக் கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறார்கள். சில லட்சம் பிரிமியம் செலுத்திய இந்து மத வெறியர்கள், மாநகராட்சிக்கு வைக்கும் செலவு பலநூறு கோடிகள்!
மதம் மூளையைப் பாதித்து விட்டது அல்லவா!>> viduthalai/20080907/news05.html
----------------------------------

படிக்கவும்:
பக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநாயகர் ஊர்வலத்தின் நோக்கம்.விளையும் கேடுகளும்.

பிள்ளையார் பிறந்தது எப்படி? விநாயக புராணம். விநாயக சதுர்த்தியாம்! பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்.

No comments: