Followers

Wednesday, September 3, 2008

அட தினமலர், பைத்தியமே! நாங்கள் அடிப்போம் உச்சிக்குடுமித் தனத்தோடு - நீங்கள் அழக்கூடாது!

வழக்கம்போல டவுட் தனபாலு என்ற தினமலர் அக்கப்போர் பகுதியில் இன்றைக்கும் உச்சிக்குடுமித் தனத்தோடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி தமிழக செயலாளர் வரதராஜன்: ஒரிசா வன்முறைகளைக் கண்டித்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராக பா.ஜ.க. வினர் போட்டியாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, தமிழகத்திலும் கலவரங்களை அரங்கேற்றும் ஒத்திகையோ என்ற அய்யப்பாடு எழுகிறது.

டவுட் தனபாலு: உங்க லாஜிக்கையே புரிஞ்சுக்க முடியலையே... ஒரிசாவுல நடந்த ஒரு பிரச்சினையை, தேவையில்லாம தமிழகத்துக்குக் கொண்டு வந்து, அதுவும் மாணவர்கள்ட்ட அதைப்பத்தி பிரச்சாரம் பண்ணலாமான்னு கேட்டா, அதையும் கலவரத்துக்கு ஒத்திகைன்னா என்னங்க அர்த்தம்...?

அவங்க பண்ணா, ஜனநாயக நடவடிக்கை; இவங்க பண்ணா கலவர ஒத்திகையா...? ("தினமலர்", 1.9.2008).

அடிபட்டவன் அழுவது என்பது இயற்கை;
ஒரிசாவில் சிறுபான்மை மக்களான கிறித்தவர்கள் வன்கொடுமைக்கு ஆளான நிலையில்,
தமிழகத்தில் கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில்,
ஒரு நாள் விடுமுறை விட்டது என்பது அந்த வகையைச் சேர்ந்ததாகும்.

அதனை எதிர்த்து பா.ஜ.க.வினர் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது - நாங்கள் அடிப்போம் - நீங்கள் அழக்கூடாது! என்கிற அராஜகம் - இந்துத்துவாவைச் சேர்ந்தது. வெண்ணெய்யும் - சுண்ணாம்பும் ஒன்றல்ல!
>>>http://files.periyar.org.in/viduthalai/20080901/news05.html
------------------------------------------

ஒரிசாவில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் வன்முறைகள்.

சாமியாரைக் கொன்றதாகப் பழிபோட்டு கிறிஸ்தவர்கள், கன்னியாஸ்திரிகள், தேவலாயங்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர்சிறுபான்மை மக்கள் அடித்து விரட்டப்படுகின்றனர்.

கூடுதல் இராணுவத்தை அனுப்பி சிறுபான்மை மக்களைக் காப்பாற்றுக!மத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்.

பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்த பிஜு ஜனதா தள முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி நடைபெறும் ஒரிசாவில் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் கிறித்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளை - கூடுதல் இராணுவத்தை அனுப்பி கலவரத்தை ஒடுக்கி, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

ஒரிசா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்சின் துணைப் பிரிவுகளான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளின் வன்முறை வெறியாட்டங்கள் எல்லை கடந்து சென்று கொண்டுள்ளன!

பா.ஜ.க.வுடன் உள்ள உறவே மூலகாரணம்நவீன் பட்நாய்க் தலைமையில் உள்ள ஒரிசா மாநில அரசு, பா.ஜ.க.வுடன் உறவு பூண்ட கூட்டணியின் தைரியமும், கண்டும் காணாத அரசின் போக்கும்தான் இதற்குக் காரணமா என்று தெரியவில்லை; என்றாலும் மூலகாரணம் இதுதான் என்பது வெளிப்படையாகும்!

கிறித்தவர்களின் மாதா கோயில்களை இடிப்பதோடு, கிறித்தவப் பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் மற்றவர்களை மேற்கூறிய இந்து தீவிரவாத அமைப்பினர் ஊர்களிலிருந்து அடித்து விரட்டுவது, தீயிட்டுக் கொளுத்துவது போன்ற வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அற்ற தன்மை நீடிக்கிறது!

மதத் தீவிரவாதத்தை எம்மதத்தினர் கிளப்பினாலும் மனித நேயர்கள் சகிக்கமாட்டார்கள் - கண்டிக்கவே செய்வர்.ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து தொழுநோயாளிகளுக்கு கிராமங்களில் சிகிச்சை அளித்த கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டேன்ஸ் பாதிரியாரையும் அவரின் இரு குழந்தைகளையும் சேர்த்து உயிருடன் - அவருடைய ஜீப்பில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர் பஜ்ரங் தளம் என்ற அமைப்பினர்! 1999ஆம் ஆண்டில் (ஜனவரி 23).

அதே ஒரிசாவில் கன்னியாஸ்திரிகளை, பெண் வேடமிட்டுச் சென்று கடத்திக் கொலை செய்த கூட்டம்தான் அது!

இதை எப்படி ஒரிசா மாநில அரசு தடுக்காமல் - வேடிக்கை பார்க்கிறது?
பழிபோட்டு கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள்!சில தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு காவிச் சாமியாரைக் காட்டி, (மாவோயிஸ்டுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது) அப்பழியை கிறித்தவர் மீது போட்டு, இப்படி ஒரு வன்முறை வெறியாட்டத்தை அங்கு இந்துத் தீவிரவாதிகள் - மதவெறியர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்!

மதத்தை ஏற்காதவர்கள் நாம் என்றாலும், மனித நேய மனித உரிமை அடிப்படையில் அத்தகைய கொடுஞ்செயல்களைக் கண்டிக்கத் தவறமாட்டோம்!

சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு - கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் திராவிடர் கழகத்தவர்கள்.மேலும் இராணுவத்தை அனுப்புக!மத்திய அரசு இதைக் கண்ட பிறகும் சும்மா இருக்கக் கூடாது. எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் - மேலும் கூடுதலாக இராணுவத்தை அங்கு அனுப்பி, பாதித்த சிறுபான்மை மக்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
சென்னை 31.8.2008
தலைவர், திராவிடர் கழகம்
>>>>viduthalai/20080831/news03.html

No comments: