Followers

Tuesday, September 2, 2008

பக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநாயகர் ஊர்வலத்தின் நோக்கம்.விளையும் கேடுகளும்.

விநாயகர் ஊர்வலமும் - விளையும் கேடுகளும்!

பக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநாயகர் ஊர்வலத்தின் நோக்கம்
இரசாயனக் கலவை முதலியவற்றால் பிள்ளையாரைச் செய்வது - கடலில் கரைப்பது, மாசு கட்டுப்பாட்டுக்கு விரோதமாகும்
நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக இருக்கின்றன; அதனைச் செயல்படுத்தவேண்டியது அரசின் - காவல்துறையின் கடமையல்லவா?

மத உணர்வு புண்படுகிறது என்பதைவிட -மக்களிடம் மதவெறியைப் புகுத்துவது மிகப்பெரிய ஆபத்தாகும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
விநாயகர் பெயரால் ஊர்வலம் நடத்துவதன் பின்னணி, விளைவு குறித்து - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 80 ஆண்டுகளுக்குமுன், மகாராஷ்டிர மாநிலத்தில் பாலகங்காதர திலகர் என்ற சித்பவன் பிரிவைச் சார்ந்த மராத்தியப் பார்ப்பனர் (காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே என்பவரும், இதே சித்பவன் பார்ப்பனர்தான் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை உருவாக்கிய டாக்டர் எட்கேவார், அடுத்தடுத்து வந்த கோல்வால்கர், தேவரஸ் ஆகிய மூவரும் கூட இதே பிரிவினைச் சார்ந்த மராத்தியப் பார்ப்பனர்கள்தான்!) இந்துத்துவா கலாச்சாரத்தை உருவாக்க மக்களின் மத நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, பிள்ளையாரை முதன்மைப்படுத்தி கணேசர் திருவிழா என்பதை - பாமர மக்களில் தொடங்கி படித்தவர்கள்வரை பக்திப் போதையை ஊட்டி, பார்ப்பனிய - இந்துராஷ்டிர சித்தாந்தத்தை - பண்டிகை வாயிலாகவே புகுத்த வழி செய்தார்!

மதவெறிப் பின்னணி!
ஏதுமறியாத பிற மக்களும் இந்த கணேசர் திருவிழாவைக் கொண்டாடினர்; பிரிட்டிஷ் அரசின் வெள்ளைக்காரக் கலெக்டர் ஒருவர் மகராஷ்டிரத்தில் பிளேக் என்ற கொள்ளை நோய் (எலி களால் பரப்பப்படும் கொடிய நோய்) தடுப்பாக எலிகளைக் கொன்றபோது,

விநாயகக் கடவுளின் வாகனமான எலி - மூஞ் சூறு இவைகளைக் கொல்லும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக்காரன் நம் இந்து - புராதனக் கலாச்சாரத்தை அழிக்க இந்துக் கடவுள் மத நம்பிக்கைக்கு எதிராக இப்படி ஒரு முயற்சி செய்கிறான் என்று ஆவேசமாக எழுதி, அப்பாவிகளைத் தூண்டி, தீவிர வாதத்தினை அன்றே விளைவித்ததின் விளைவு - பிளேக்கை ஒழித்த வெள்ளைக்கார கலெக்டரை - ஒரு மராத்தியன் சுட்டுக் கொன்றான்!

மணியாச்சியில் வாஞ்சிநாதன் என்ற பார்ப்பனர் இந்துத்துவ - மதவெறி உணர்வால் ஆஷ் என்ற தூத்துக்குடி கலெக்டரைக் கொன்றதும் தேச பக்திக்காக அல்ல; மதவெறியை, சனாதனத்தைக் காப்பாற்றவே என்பது மறைக்கப்பட்ட வரலாறு.

பிள்ளையார் வந்தவிதம்!
அந்தப் பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் மத்தியில் புகுத்தியது (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) பரஞ்சோதி என்ற பார்ப்பன தளகர்த்தன் ஆவார். (பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் பிறந்தது எப்படியோ? என்ற பல்கலைக் கழகப் பாட நூலில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது).

இங்கே பரவிய - பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக பிள்ளையார் வழிபாடு, விநாயகர் சதுர்த்தி - ஏதோ ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் பிள்ளையார்வரை களி மண்ணால் செய்யப்படுவதை வாங்கி வீட்டில் வழிபட்டு, ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போடுவது வழமை.
பிள்ளையார் ஊர்வலம் எதற்காக?

அண்மைக்காலங்களில் - வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகள் தாங்கள் பெறும் பெரும் பணத்திற்காக, வட முதலாளிகள் உதவியால் தமிழ்நாட்டில், மும்பையைப் போலவே, 10 அடி, 15 அடி ராட்சசப் பிள்ளையார் என்று வேடிக்கை - விநோத உருவங்களைச் செய்து, ரசாயனக் கலவைகள் - வண்ணங்களைப் பூசி, அப்பாவி ஏழை எளிய அடித்தட்டு வறுமையாளர்களான மக்களுக்கு கைநிறையப் பணம் கொடுத்து, அவர்களும் பக்தி - போதை - இரண்டுக்கும் ஆளாகி,

பெரும் பிரச்சினைகளை உருவாக்கி, கடலில் - ஆற்றில் கரைக்கும் வகையில், இந்து மதப் பண்டிகைகளால் தங்கள் கட்சிகளை வளர்த்து, மதவெறியைக் கிளப்பிடும் அருமையான, எளிமையான வழியாக ஆக்கி குளிர்காய்கின்றனர்!

இஸ்லாமியர்களைச் சீண்டுவதா?
வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் வழியே செல்வது, சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பது போன்ற அடா வடித்தனத்தில் ஈடுபட்டு, அரசுகளுக்கு மிகப்பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திடுவதை ஆண்டு தவறாத வாடிக்கையாக்கி வேடிக்கை காட்டுகின்றனர்!

மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?
வாக்கு வங்கிகளுக்கு அஞ்சி - பல அரசுகள் இது ஏற்படுத் தும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையோ, மாசு கட்டுப்பாட்டினைப் பற்றியோ கவலைப்படாது, சுற்றுச் சூழலைக் கெடுக்க பிள்ளை யாரைக் கரைக்கும் விசர்ஜன வேடிக்கைக் கூத்தினைத் தடுக்காமல், மயிலே, மயிலே இறகு போடு! என்கின்றனர்!

தீர்ப்புகள் இருக்கின்றன
உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பல தெளிவாகவே, கடலில் - ஆற்றில் இரசாயனக் கலவைப் பிள்ளையார்களைக் கரைத்து மாசுபடுத்தக் கூடாது என்று தீர்ப்புகள் - சட்டப்படி தடுக்க வாய்ப் பினை அள்ளித்தரும் வகையில் இருந்தும் கைபிசைந்து வேடிக்கை பார்க்கின்ற பரிதாப நிலையே நீடிக்கிறது!

மாசு கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி - வேண்டுகோள்தான் விடுக்கிறார். அவர் சட்டப்படி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாமே!

முன்பு தமிழ்நாட்டில் இருந்ததுபோல, சிறுசிறு பிள்ளையார் பொம்மைகளை வாங்கி வைத்து உங்கள் பிள்ளை விளையாட்டை, பக்தித் திருவிழாவான சதுர்த்தியைக் கொண்டாடலாமே தவிர, பொதுமக்களுக்கு இடையூறு, பொதுச்சொத்து நாசம், பொது அமைதிக்குக் கேடு - மத நல்லிணக்கத்திற்கு மாசு - இவைகள் கூடாது என அரசு கூறி அதைத் தடுக்க முன்வரவேண்டும்.
செயல்படுத்தவேண்டியது அரசே!

நீதிமன்றங்கள் ஆணையிட முடியும். அதனைச் செயல்படுத் தித் தடுப்பது அரசு அதிகாரிகள் - காவல்துறை அதிகாரிகள் - மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கையில்தான் உள்ளது. எனவே, பெரிய பெரிய கிரேன்கள், பல்லாயிரக்கணக்கில் காவல்துறைக் குவிப்பு இதனை மிச்சப்படுத்தலாமே!
எனவே, வருமுன்னர்க் காப்பது இத்துறையிலும் அவசியம்.

தேவை நடவடிக்கையே!
மத உணர்வு புண்படுகிறது என்பதைவிட, மதவெறியை மக்களிடையே பரப்புவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர வேண்டாமா? நடவடிக்கை தேவை! தேவை!!

சென்னை21.8.2008
தலைவர்,திராவிடர் கழகம்.
viduthalai/20080821/news02.

விநாயகர் ஊர்வலமும் - விளையும் கேடுகளும்!

கடவுள் அரூபி - அதாவது உருவமற்றவன் - என்று சொல்லும் மதங்கள் கடவுளுக்கு வடிவம் கற்பித்து விட்டன (இஸ்லாம் இதில் விதி விலக்கு!).

உருவங்கள் கற்பிக்கப்பட்ட பிறகு - அந்தக் கடவுள்களுக்கும் மனைவி, மக்கள் என்ற முறையில் குடும்பங்களும் கற்பிக்கப்பட்டன.குடும்பங்கள் கற்பிக்கப்பட்ட பிறகு - அவற்றின் பெருமைகளை, அற்புதங்களைப் பறைசாற்ற தலபுராணங்கள் உருவாக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட பிறகு, வழிபடுவதற்குச் சடங்குகள், நேர்த்திக் கடன்கள் ஏற்படுத்தப்பட்டன.

மக்கள் பொருள்கள் - கோயில்களுக்கு வந்து சேர ஆரம்பித்தன. புரோகிதன் என்கிற சுரண்டல்காரன் அதன் அதிகாரியாகி விட்டான்.

உண்டியல்கள் நிரம்பி வழிந்தன - சொத்துக்களும் வந்து குவிந்தன.இந்தச் சுரண்டல் முறை தொடரவேண்டும் என்பதற்காக - வழிபாட்டு நாள்களும், பண்டிகைகளும், தேர்த் திருவிழாக்களும், உற்சவமூர்த்தி ஊர்வலங்களும், கொடியேற்றங்களும் உண்டாக்கப்பட்டு மக்கள் மத்தியில் சதா கோயில், கடவுள், பக்தி, நேர்த்திக்கடன்கள் என்ற எண்ணங்களே ஆக்கிரமிப்புச் செய்யும் ஒரு உளவியல் நிலை அழுத்தமாக உருவாக்கப்பட்டு விட்டது.

எல்லாக் கஷ்டங்களுக்கும் சர்வ நிவாரணம் இந்தக் கோயிலுக்குள் சிற்பிகளால் அடித்து வைக்கப்பட்ட சிலைகளுக்கு - அவர்களின் கண்ணோட்டத்தில் கடவுள்களுக்கு - இருப்பதாக ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் ஆழ விதைக்கப்பட்டு,

அது நாளும் வளர்ந்த நிலை ஏற்பட்டு விட்டது.அச்சமும், பேராசையும் குடிகொண்ட மனிதனின் சிந்தனைகள் இந்த அறிவீனமான இருளுக்குள் சிக்கிக் கொண்டு விட்டன.

கடவுளைப்பற்றி எதைக் கூறினாலும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்புவதில்தான் பலனே இருக்கிறது என்கிற அளவுக்கு அவன் மூளைக்கு விலங்கிடப்பட்டு விட்டது.கற்பனைக்கும் எட்டாத வடிவத்தில் கடவுள் சிலைகள் உருவாக் கப்பட்டன - அது அவனுக்குப் பிரமிப்பை ஊட்டியதே தவிர, இது அறிவுக்குப் பொருந்துமா? என்கிற இடத்துக்கே அவன் போகவில்லை.இதில் கை வைக்க யாரும் துணியவில்லை.

அதில் கை வைக்க வந்தவர்களைக் கைவைக்க பக்திப் போதை ஏறிய மக்கள் கூட்டம் தயாராகி விட்டது.மனிதன் - தன் ஆசாபாசங்களை எல்லாம் தன்னால் உருவாக்கப் பட்ட கடவுள் மீது திணித்து விட்டான்.

கலவி செய்வது, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது, விலை மகள் வீட்டுக்குச் செல்வது, குடிப்பது, கூத்தாடுவது, சண்டை போடுவது, கொலை செய்வது இவை அத்தனையும் - மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள்களிடத்திலும் உள்ளதை கடவுளைப்பற்றிப் புகழ் பாடும் புராணங்கள் பேசுகின்றன.

இத்தகைய பாழடைந்த ஒரு சமூகத்தைத் திருத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் சீர்திருத்தவாதிகள் தோன்றியிருக்கின்றனர். தோல்விகளையே பெரும்பாலும் சந்தித்தனர்.

இந்தியாவின் தென்பகுதியில் தமிழ்நாட்டில் தோன்றிய ஒரு தலைவர் சீர்திருத்தவாதியல்ல; புரட்சியாளர் - மக்களின் மூளையையே களமாகக் கொண்டு அவரது பகுத்தறிவுப் போராட்டம் தொடங்கப்பட்டது.

எதிர்ப்புகள் விசையோடு கிளம்பின - அடிதடிகள் விழுந்தன - கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் உண்டு.அவற்றிற்கெல்லாம் முகங்கொடுத்து ஒரு மாறுதலை மக்கள் மனதில் ஏற்படுத்தியவர்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

தங்கள் கைமுதலான பக்தியை எப்படி புனருத்தாரணம் செய்வது என்கிற நெருக்கடிக்கு மதவாதிகள் - சுரண்டும் புரோகிதக் கூட்டம் ஆளானது.

மும்பையிலே பாலகங்காதர திலகர் என்ற பார்ப்பனர் விநாயகர் என்ற கடவுளைப் பிடித்துக் கொண்டு - அதை மய்யப்படுத்தி மக்கள் மத்தியில் புத்துயிர் கொடுக்க முன் வந்தார்.

விநாயகர் சதுர்த்தி என்று கூறி, அந்த மாநிலத்திலேயே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார் - பெரிய அளவு ஊர்வலங்களை நடத்தினார்.அதே முறையை அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி வகையறாக்கள் முன்னின்று தமிழ்நாட்டிலும் பிள்ளையார் ஊர்வலம் நடத்திட முற்பட்டுவிட்டன.

விநாயகர்பற்றி எந்த புராணத்திலும் கண்டிராத வகைகளில் எல்லாம் - புதுப்புது பெயர்களைச் சூட்டி - மிகப்பெரிய உருவத்தில், உயரத்தில் உருவங்களைச் செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லுகின்றனர்.

மக்கள் மத்தியில் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும்.

நீர் நிலைகளில், ஏரிகளில், குளத்தில், ஆற்றில், கடலில், கடைசியாக அந்தப் பிள்ளையார் உருவங்களைக் கரைக்கின்றனர். அதற்கு முன்பெல்லாம் வீட்டின் கொல்லைப் புறத்தில் உள்ள கிணறுகளில் போடுவார்கள்.

அதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தத்தான் பல இடங்களிலும் ஊர்வலமாக வந்து கடலில் கரைக்கும் ஒரு ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தனர்.சர்வசக்தி வாய்ந்ததாகப் பீற்றிக்கொள்ளும் மதவாதிகள், மக்களிடம் மகேசன்களைத் தூக்கிச் செல்லும் ஒரு பிரச்சார யுக்தியைக் கையாளுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

சுற்றுச்சூழல் பாதிப்பைப்பற்றியெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் பார்ப்பன ஏடுகள், இந்தப் பிள்ளையார் ஊர்வலத்தாலும், ரசாயனப்பூச்சு பூசப்பட்டுள்ள பிள்ளையார் உருவங்களை நீர் நிலைகளில் கரைப்பதாலும் ஏற்படுகின்ற பாதிப்பைப்பற்றி மூச்சுவிட மாட்டார்கள்.

காரணம், பார்ப்பான் உயிர் இந்தக் கடவுள் பொம்மைகளிடத்தில் தான் இருக்கிறது!

தந்தை பெரியார் கடவுள்மீது கை வைத்த இரகசியமும் இதுதான். கடவுள் நம்பிக்கையால் புத்தி பறிபோய், பொருளும் நாசமாகி, பொழுதும் விரயமாகிறதே - இதுபற்றி மக்கள் சிந்திப்பார்களாக!
viduthalai/20080819/news07.
படிக்கவும்:
பிள்ளையார் பிறந்தது எப்படி? விநாயக புராணம். விநாயக சதுர்த்தியாம்! பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்.

1 comment:

senthil said...

Saga manithanai mathikka therinthavan mattume MANITHAN....

Ulagil ethanayo valigalil suttru soolal maasupadugirathu, athai pattri yosipor ingu yyarum illai....

Aariyam aandugalaga intha Indiya naatin (sontha)Perumbanmayana makkalin (nambikkai) thiruvilava ga matume paarka vendum.....

engo irunthu ingu vantha vantherigalukum, ingu irukkum evanukkum ithai vimarchanam seyyum alavukku entha thaguthiyum illai......