Followers

Monday, September 1, 2008

எல்லாக் குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. தான் காரணம்.அம்பலப்படுத்துகிறார் திக்விஜய்சிங்

தந்தை பெரியார் ஒரு கதை சொல்வார். வீட்டின் தோட்டப் பகுதியில் இருந்த பித்தளைச் செம்பைக் காணோம் என்று வீட்டுக்காரன் கத்திக் கொண்டே தெருவில் ஓடினானாம்; செம்பைத் திருடியவனும் பிடி, பிடி என்று கத்திக் கொண்டே கூட்டத்தில் ஓடினானாம். அதைப் போன்று, சதிகாரர் களே - சதிகாரர்களைக் கைது செய் எனக் கத்தும் சதி வடக்கே நடக்கிறது. குறிப்பாக குஜராத்தில் நடக்கிறது.

பி.ஜே.பி.காரர்கள் லஞ்சம் வாங்கியதைக் கையும் களவு மாகக் காமிராவில் படம் பிடித்த டெகல்கா விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதத் திற்கு வந்தபோது, நாடாளு மன்றக் கட்டடத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சமீபத்திய கருநாடகத் தேர்தலின் வாக்குப் பதிவு நடந்த முதல் நாளிலேயே, ஹூப்ளி யில் வெடிகுண்டு வெடித்தது.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது, ஜெய்பூர் நகரில் வெடிகுண்டு வெடித்தது.

இதற்கெல்லாம் காங்கிரசுக் கட்சிதான் காரணம் என சுஷ்மா சுவராஜ் கூறியதைப் போல, திக்விஜய்சிங் கூறாமல், இதற்கெல்லாம் விசாரணை வேண்டும் என்கிறார்.

ஒருபடி மேலே போய், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., அமைப்புகள் வெடிகுண்டுகளைத் தயாரிக்கின்றன என்றும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்றும் ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.


1992 இல் மத்தியப் பிரதேச விசுவ ஹிந்து பரிஷத் அலு வலகத்தில் குண்டுவெடித்தது.

ஒரு வி.எச்.பி.காரர் இறந்து போனார்; இரண்டு பேர் காயமடைந்தனர். இவர்கள் வெடி குண்டு தயாரிக்கும்போதுதான் இச்சம்பவம் நடந்தது.

2002 இல் மோவ் எனும் ஊரிலுள்ள கோயிலில் வெடி குண்டு வெடித்தது. இது தொடர்பாக விசுவ இந்து பரிசத் தொ(கு)ண்டர்களை தீவிர விசாரணைக்குப் பிறகு காவல் துறை கைது செய்தது.

இவர்கள் அனைவரும் தாங்கள் வெடிகுண்டு தயாரித்ததை ஒப்புக்கொண்டனர். இதற்கான பயிற்சியை அந்த அமைப்புதான் இவர்களுக்கு அளித்தது. இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு திக்விஜய்சிங்கிடம் உள்ளது.

2006 இல் நான்டட் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். தொ(கு)ண் டர் ஒருவரின் வீட்டில் குண்டு வெடித்தது. இரண்டு ஆர்.எஸ்.எஸ். ஆசாமிகள் இறந்து போயினர்.

2008 இல் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. வி.எச்.பி. ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெடிகுண்டு வைத் ததை ஒப்புக்கொண்டனர்.

இப்போது குஜராத் மாநிலத்தில் 18 வெடிகுண்டுகளை எப்படி சூரத் நகரில் மட்டும் கண்டெடுத்தார்கள்? மரங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளை இவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

இதனால் நான் சொல்ல வருவது, குண்டு வெடிக்கும் நேரங்கள் விநோதமாக பொருந்தி அமைந்திருக்கின்றனவே என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. ஆள் கள் குண்டு தயாரித்ததற்காகக் கைது செய்யப்படுகிறார்கள்; அவர்களின் அலுவலகங்களில், வீடுகளில் என்று குண்டுகள் வெடிக்கின்றன. இதுபற்றி மூன்று, நான்கு வழக்குகளும் பதிவாகி உள்ளன. ஏன் இதை யாரும் கவனிக்கமாட்டேன் என்கிறார்கள்?

இதற்காக இசுலாமியர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல.
தேசியம், தேசப்பற்று என் றெல்லாம் பேசிக் கொண்டிருப்பவர்கள் வெடிகுண்டுகளைத் தயாரிக்கக் கூடாது.

அவர்கள் எதையும் வித்தியாசப்படுத்திப் பிரித்தே பேசிப் பழக்கப்பட்டவர்கள். இந்துக்களையும், இசுலாமியர்களையும் பேதப்படுத்தாமல் அவர்களால் கட்சி நடத்த முடியாது.

ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும்போதும், அவர்கள் இந்துத்துவா எனக் கத்துவார்கள்.

மத்தியப் பிரதேச மேனாள் முதலமைச்சர் திக்விஜய்சிங் டெகல்கா ஏட்டுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தவை இவை!

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் யோக்கியதையைக் கிழித்துக் காட்டுகிறார். யோக்கியர்கள் போல வேடம் போடும் அவர்களின் பொய் முகத்தைக் கிழித்து மெய்த் தோற்றத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கூடுதலாக - சென்னை, பா.ஜ.க. அலுவலகக் குண்டு வெடிப்புகூட, அவர்களாகவே செய்துகொண்டதாகத்தான் இருக்கும்!

நாதுராம் விநாயக் கோட்சே எனும் மராத்திப் பார்ப்பனன் காந்தியாரைக் கொல்ல முடிவு செய்து, பழியை இசுலாமியர் மீது போடுவதற்காகத் தன் கையில் இசுமாயில் எனப் பச்சை குத்திக் கொண்டு, தன் குறியை சுன்னத் செய்து கொண்டான் அல்லவா!

அதே வழிமுறையை இன்னமும் கையாள்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
viduthalai/20080823/news03.

No comments: