Followers

Tuesday, September 30, 2008

மீண்டும் "பொடா" வேண்டுமா?

அத்வானி முதல் செல்வி ஜெயலலிதாவரை இந்தப் பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டு இருக்கின்றனர்.

சேலத்திற்கு சனிக்கிழமை வந்த பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் பயங்கரவாதத்தைத் தடுக்க, மீண்டும் "பொடா" சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இவர் மட்டுமல்ல, அத்வானிமுதல் செல்வி ஜெயலலிதாவரை இந்தப் பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டு இருக்கின்றனர்.

பொடா வந்தால் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு விடும் என்பது இவர்களின் கணிப்பு. ஆனால், இதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்பதுபற்றி முதலில் சிந்திக்கவேண்டும்.

2002 மார்ச்சில் பா.ஜ.க. ஆட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் 2004 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது அகற்றப்பட்டது.

பா.ஜ.க. ஆட்சியின்போது மாநிலங்களவையில் இந்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இரு அவைகளையும் ஒன்றாகக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்த வகையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்று 2000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர்.

எந்தப் பா.ஜ.க. இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முனைப்பாக இருந்ததோ, அதே பா.ஜ.க. ஆண்ட குஜராத்தில்தான் இந்த அலங்கோலம் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்!

அப்படியானால் இந்தச் சட்டத்தை குஜராத் பா.ஜ.க. அரசு பயன்படுத்தவில்லையா?

அவர்களே கொண்டு வந்த சட்டத்தைப் பயன்படுத்தாமல் இருப்பார்களா? தாராளமாகவே பயன்படுத்தினார்கள்.

287 பேர்மீது இந்தச் சட்டம் ஏவப்பட்டு, சிறைச்சாலையில் நெட்டித் தள்ளப்பட்டனர்.

இந்த 287 இல் 286 பேர் முசுலிம்கள் - ஒருவர் சீக்கியர்.
இன்னும் புரியும்படியாகச் சொல்லவேண்டுமானால் எந்த மக்கள் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டார்களோ, அந்த மக்களைச் சேர்ந்தவர்களே பொடாவின் வழியாக சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள், தான் குற்றமற்றவர் என்று (Burden of Proof) நிரூபிக்கவேண்டும்.

காவல் துறையில் அச்சுறுத்தலின்கீழ் குற்றம் சாற்றப்பட்டவர் கொடுக்கும் வாக்குமூலத்தை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வெள்ளைக்காரன் கொண்டு வந்த ரவுலட் சட்டம்தான் நினைவுக்கு வருகிறது.
இந்தக் கொடிய - மனித உரிமைக்கு எதிரான இந்தச் சட்டத்தை தீவிரமாக - சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பயன் படுத்திய ஆட்சி பா.ஜ.க. ஆட்சிதான். ஜார்க்கண்ட் மாநிலம் இதில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் 30 விழுக்காட்டினர் யார் தெரியுமா? 12 வயதுக்கும் உள்பட்ட சிறுவர்கள்.

இந்தச் சட்டத்தின்கீழ் 301 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1160 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒரு சதவிகித வழக்குக்கூட நிரூபிக்கப்படவில்லை என்பதிலிருந்தே இந்தச் சட்டத்தின் போர்வைக்குள் பதுங்கியிருந்த கேவலமான வெட்கக்கேட்டை நிர்வாணமாகத் தெரிந்துகொள்ளலாம்.

அதற்குமுன் நிறைவேற்றப்பட்ட தடா சட்டம்கூட (20.5.1985) அந்தத் தரத்தில் தானிருந்தது. வெறும் ஆறு மாதத்துக்குத்தான் அது அமலில் இருக்கும் என்று ஆரம்பத்தில் சமாதானம் சொல்லப்பட்டது. ஆனால், பத்தாண்டுக்காலம் அது ராஜநடை போட்டது!

இன்றைக்குப் பொடா தேவை பொடா தேவை என்று கூச்சல் போடும் ராஜ்நாத்சிங் கட்சி, மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.

சிறையில் இருந்த பயங்கரவாதிகளை விடுவித்து, அவர்களின் நாட்டுக்கே - பாதுகாப்பு அமைச்சரே உடன் சென்று பாதுகாப்பாக விட்டு வந்தவர்கள்தான் இந்தப் பா.ஜ.க. பயங்கரவாதிகள்.

தடா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்கவேண்டுமானால், நியாயமாக அத்வானி அண்ட் கம்பெனிகள் 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதியை இடித்தனரே -

அவர்கள்மீதுதான் பாய்ந்து பிராண்டியிருக்கவேண்டும். அந்தக் கஷ்டங்களை அவர்கள் அனுபவித்திருந்தால், இந்தச் சட்டத்துக்கு இப்பொழுது பராக்குக் கூற முன்வர மாட்டார்கள்.

மனித உரிமையின் மகத்துவத்தைப் புரியாத பாசிஸ்டுகள் தான் தடா, பொடா சட்டங்களை வரவேற்பார்கள். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முற்போக்கு என்கிற முத்திரையைக் காப்பாற்றிக் கொள்ளும் என்று நம்புகிறோம்.http://files.periyar.org.in/viduthalai/20080929/news06.html

Monday, September 29, 2008

பார்ப்பனர் அடிக்கும் கொள்ளை. அறிவாளிகளே கவனியுங்கள். சிரார்த்தக் கொள்ளை.

கடவுளா? கல்லா? இராமேசுவர தீர்த்த மோசடி. எத்தனை தெய்வம்? எல்லாம் மோசம்; எல்லாம் வஞ்சகம். லிங்க மோசடி. எத்தனை லிங்கம்?

வித்தியாதரப் புராணம்.

ரயில்வே பிரயாணம் வெகு ஜனக்கூட்டம், சாஸ்திர சம்பந்தமான தர்க்கம். ஒன்றுக்கொன்று தகவலில்லாப் போராட்டம் பிரயாணிகளிலொருவன் எழுந்து நின்று மகா ஜனங்களே! ஈ.தென்ன ஏக தடபுடல் எல்லோரும் பேசுகின்றீர்களே?

யார் வார்த்தையை யார் கேட்கின்றது. நம் தேசாசாரமிப்படி கெட்டுப் போய்விட்டது. யாராவது ஒருவர் பேசினால் அதை முற்றிலும் கவனித்து ஆராய்ச்சி செய்து இதன் பிழை இன்னதென்றறிந்து பதில் சொல்லுகின்றதேயில்லை.

ஒருவர் பேசும்பொழுது பின்னால் சில சங்கதிகளை சொல்ல எண்ணி அதற்காதரவாய் முன்னால் சிலவற்றை சொல்ல வேண்டியதாகவரும், அங்ஙனம் வார்த்தை பயனற்றதாயுமுள்ள அதைக் கவனியாது உடனே தர்க்கம்; அதனால் சண்டை; ஒற்றுமையென்பது செத்தே போய் விட்டது.

உபயோகமான வஸ்து இன்னதென்பது கனவிலும் கூட ஞாபகமில்லை. ஆராய்ச்சியின் குணம் அடியோடு நாசம் யார் எதைச் சொன்னாலும் உடனே நம்பிக்கை. மறு நிமிஷத்திலேயே முற்றிலும் கை விட்டு விடுகின்றோம்.

ஆரிய தந்திரமென்னும் பாதாளத்தில் அமிழ்ந்துவிட்டோம். கண்டதெல்லாம் தெய்வம், சொன்னதெல்லாம் மந்திரம்; கட்டுவதெல்லாம் கோவில், சோம்பேறியாய் திரிவதே ஞானம்; ஆத்மா ஆரியற்குதானுள்ளதாம்.

அவர்கள் சொன்னதே வேதம்; தெய்வ பேதமோ கோடி ஜாதி பேதமோ அதற்கு அதிகம் அய்யோ பாவம் ஆரிய தந்திரிகளே! இம்மட்டிலாவது தேச விர்த்தியைத் தேடப்படாதா? உம் மோசத்தை வெளியாக்கலாகாதா? தேசம் க்ஷணித்து சாம்பலாய் போயினபின் யாரை வஞ்சிப்பீர்கள்? எங்கிருந்து பிழைப்பீர்கள்?

தீயைக் கக்கின மூங்கில் போல நீங்களும் சேர்ந்துதானே அழிய வேண்டும்! என்ன அறிவு! என்ன சக்தி! எப்படி பிழைப்போம். எந்நாட் கரையேறுவோம். இது யார் செய்த மோசம்,

ஆ! தெய்வமே, எங்கள் தேசத்தை வெறுத்தாயோ. பன்னாட்டுக்கும் கப்பல் கப்பலாய் போகின்றனையே. எங்களை முற்றிலும் கைவிட்டுவிடுவாயோ. நினைக்க நினைக்க நெருப்பாய் எரிகின்றதே. அம்மா உலக மாதாவே! உன் பிள்ளைகளை ஏனிப்படி வதைக்கின்றாய். துஷ்டப்பிள்ளைகளை இரக்ஷிக்க வேண்டிய அவசியமானாலும் பட்டினி போட்டுக் கொல்லாதே.ஒரே முகூர்த்தத்தில் விழுங்கிவிடு. இன்னும் நல்ல பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வாய்.

எல்லாம் மோசம்; எல்லாம் வஞ்சகம்; எத்தனை தெய்வம்; எத்தனை லிங்கம்? எங்கிருக்கின்றது? அக்னி லிங்கமாம்! அதிலிருக்கும் அதிசயம் விக்கிரகத்தில் சந்தனம் பூசினால் காய்ந்து போகின்றதாம்.

இதிருக்குமிடம் இயற்கையாகவே எரிமலை. ஒர் வகையான அந்தக் கல்லினாலடித்தது விக்கிரகம் இதில் பூசிய சந்தனம் காய்ந்து விட்டதாம்; கண்டவர்கள் இதயங்களித்துவிட்டது.

லிங்க மோசடி
நமக்கென்னத்துக்குப் பணம் போட்டுவிடுங்கள் சாமிக்கே யென்று கொட்டி விட்டு வருகின்றோம். வாய்வு லிங்கமாம், அதிலுண்டாகும் அதிசயம் லிங்கத்தின் சமீபத்தில் எரிகின்ற விளக்கு வாய்வு லிங்கத்தின் விசேடத்தால் ஆடுகின்றதாம் என்ன தீக்ஷண்யம்!

லிங்கத்தின் இரு பக்கத்திலும் பொடித் துவாரங்களிட்டிருக்கின்றன. அடி பக்கத்தில் மேலேயிருந்து வாய்வு செல்லும்படியான துவாரமிருக்கின்றன. அதன் வழியே காற்று பிரவேசித்து உச்சியிலுள்ள சிறு துவாரத்தின் வழியாயோடுகின்றது எந்த அறிவாளிகளாவது லிங்கத்தின் மேல்புறத்தை செவ்வனே அடைத்துக் கொண்டு விளக்கு ஆடுகின்றதா என்று பார்த்தீர்களா?

பிள்ளை எப்படி விசுவாசித்தீர்கள்? ஆரியருக்கு கேட்டதை கொடுப்பதைதானா விசுவாசித்தீர்கள்?

அப்புலிங்கமாம்! அதிலுள்ள அதிசயங்கள் ஜலமூறிக் கொண்டே யிருக்கின்றதாம். மூலஸ்தானத்துக்கு மேல்புரம் தெப்பமொன்றிருக்கிறது. இரண்டிடங்களுக்கும் சுமார் 10 அடி ஏற்றத்தாழ்ட்சியுள்ளது. தெப்பத்திலிருந்து லிங்கத்துக்கு தண்ணீருறும்படி முன்னமே செய்து வைத்த ஆரிய தந்திரத்தை இப்பொழுதுள்ள ஸ்தானீசுர் முதலாய் மறந்து போய்விட்டார்கள்.

சமீபத்தில் இடித்து கட்டிய காலத்தில் மேல் பக்கத்து சுவரை வானம் தோண்டி கான்கிரீட் பலமாய் கட்டியதால் நீருற்று நின்று விட்டது. என்ன லிங்கம், எங்கே போயிருக்கின்றார்!

உடனிருந்து செலவிட்டு கட்டிய மஹா புண்ணியவான்களே தெரியாமல் நின்று விழிக்கும் பொழுது மற்றாரை நொந்து கொள்வதில் என்ன பிரயோஜனம்?

இன்னும் பரங்குன்றமென்றது அந்த அடையாளமுமிருக்கின்றது. சிலகாலம் விஷ்ணு கோவிலாயிருந்த அடையாளமுமிருக்கின்றது. தற்காலம் சுப்பிரமணியர் முளைத்திருக்கிறார்.

இன்னும் எவனை புதைத்துக் கொண்டு திண்டாடுகின்னோமோ தெரியவில்லை. இந்த பயித்தியங்களெல்லாம் விட்டு எந்த காலம் முன்னுக்கு வருவோமோ அறிவாளிகளே கவனியுங்கள்.

ஒரு பிரபலஸ்தன் வந்துபுதைத்த இடத்தில் ஆரியர்கள் கூடிப் பெரிய கட்டடங்களை கட்டும்படி ஏமாளியரசர்களை ஏய்த்து கம்மியர்களால் விக்கிரங்களை வார்த்தும் அடிப்பித்தும் வைத்துக் கொண்டு தாங்களே பூசாரிகளாக யேற்பட்டு வரும் காணிக்கைகளை யெல்லாம் விழுங்கி விட்டு, நரரீக்கிரக பிரவேசராய் வேண்டிய சுகத்துடன் இருக்கின்றார்கள். நாமோ ஏமாளிகளாய் அரை வயிறும் கால் வயிறுமாக சாப்பிட்டு மீந்ததை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தூங்குகின்றோம்.

கடவுளா? கல்லா?
எவரேனும் கொஞ்சம் விபரந்தெரிந்தோர் அய்யா இதென்ன கல்லை நட்டு வைத்துக் கொண்டு சுவாமி என்கிறீர்களே! கும்பிட பணமும் கேட்கின்றீர்களே. சுவாமியென்றால் எனக்கல்லவா கொடுக்கும்?

என்னிடத்தில் வாங்கி பிழைப்பது பயித்தியக்காரனாக்கி பார்வைக்குதான் கல்போலத் தெரியும், அதிலே யிருக்கின்ற உருவென்ன சாமான்யமானதா?
பஞ்சாக்ஷரம் பீஜாக்ஷரம் அஷ்டாக்ஷரம் இன்னும் எத்தனையோ மந்திரம் ஏறி ஜோதி சொரூபமாய் பிரகாசிக்கின்றதாவது தெரியவில்லையா?

மந்திர சக்தி என்ன சாமான்யமானதா? அப்படியில்லையானால் இத்தனை அபஷேகங்களையும் இத்தனை நிவேத்தியங்களையும் சாதாரணமான கல் தாங்குமா? வென்று சாங்கோப சாங்கமாய் பேசி வாயெடுக்க வொட்டாமல் செய்து விடுகின்றார்கள்.

அதிலும் என்போல வாயாடி உங்களூருவும் மந்திரமும் ஏறியதற்கு இதுதானா சாக்ஷி? இதை யார் ஒப்புக் கொள்வார்? முன்னேறிய உருவுடன் இன்னும் ஏற்றிக் கொண்டே நீங்களுக பக்கத்தே இருங்கள் நான் ஒரு கட்டப் பாறையினால் அக்கல்லின் தலையில் ஓங்கி அடிக்கின்றேன்.

அதனை தடுக்க அக்கல்லுக்கு சக்தி ஏற்பட்டாலல்லவா சரி? ஒரு வேளை இது கலிகாலம். அப்படியெல்லாம் வரமாட்டாதென்பீர்கள். போகட்டும் அக்கல்லாவது உடைந்து போகாமலிருக்குமா?

விடாது படித்தால் ரிஷி மூலம் நதி மூலங்களை விசாரிக்கப்படாதென்று பழைய கந்தபுராணம் கூறுகின்ற தென்கிறார்கள். இது நிற்க புதைக்கப்பட்டவன் மீனாட்சி மகனாகிய உக்ர வீரபாண்டியன் என்ற சுப்பிரமணியன்றானே.

தனக்கே சந்ததி யில்லாமல் இரண்டு பத்தினிகளை கட்டியும் பின்னும் காணாமல் பழைய தந்திரிகள் நட்டு வைத்த காளி கோவிலண்டையே காத்திருந்தும் பாரிகளிம்சை பொறுக்க மாட்டாமல் சந்யாசம் பூண்டும் படாத பாடெல்லாம் பட்டு இறந்து போனவன் தானே. இஃதாரறியார்?

உயிரோடிருக்கும் போது தன்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டாமல் இத்தனை பாடுபட்டவன் செத்து பல்லாண்டவன்றபின் ஆரிய தந்திரிகளால் அடித்து வைக்கப்பட்ட கல்லில் நுழைந்து கொண்டு நம்மை ரக்ஷிப் பானாக்கும்! என்ன அறிவு?

நாமும் மனுஷ ஜென்மந்தானோ? நம்மைப் போல மனிதன் தானே ஆரியன். இப்படியெல்லாம் ஏமாற்றி சகஜீவியாய் வசிக்கின்றான் அல்லவா? என்றால் அவர்களால் என்ன இருக்கிறது. பாடல் பெற்ற ஸ்தலமல்லவா என்கிறீர்கள்.

பாடல் பெற்றதுதானே பொய் என்பதற்கு போதுமான சாக்ஷி கூறும் உண்மையுள்ளவனை உண்மையுள்ளவன் என்று சாக்ஷிகளும் ரிகார்டுகளும் செய்து வைக்க வேண்டுமா?

ஐயோ! பேதை ஜனங்களே மூளையை தின்று விட்டீர்களா?

ஒவ்வொன்றையும் கவனித்துப் பாருங்களேன். இஃதிருக்க பழனியில் மச்சகாவடி, சர்க்கரை காவடி, கதை கேட்டதில்லையா?

சாவடி எடுத்துச் செல்வோன் கொண்டு போயங்கொரு மண்டபமிருக்கின்றது. அதிலிறக்கி வைத்துவிட வேண்டியது. சுவாமி யுத்தாவானபின் வாவென்றனுப்பிவிட்டு திரையை போட்டு விடுகிறார்கள்.

இராமேசுவர தீர்த்த மோசடி

ஆரிய தந்திரிகள் திரையுட்சென்று காவடியை அவிழ்த்து மணலுக்கு சர்க்கரையையும், கரிமீனுக்கு உயிர்மீனும் வைத்து மறுபடியும் கட்டிவிட்டு உத்திரவாய் விட்டது ஓடிவா? என்று ஓலமிட்டு பேமாயாண்டியின் தோளில் தூக்கி வைத்தோட்டுகின்றார்கள்.

நடந்த வேலை என்னவென்று கவனிப்பாரைக் காணோம். சர்க்கரை இருந்தது. மீன் துள்ளினது. கொண்டுவந்த பணத்தை கொட்டடா கொட்டு, என்று கொடுத்துவிட்டு வந்தால் எப்படி பிழைப்போம்! எந்நாள் முன்னுக்கு வருவோம்.

இன்னும் ராமேஸ்வர மென்னும் பாழாழியின் சரிதம் தெரியுமா?

மந்திரமில்லை; தந்திரமில்லை; சமுத்திரக்கரையின் பக்கமுள்ள தண்ணீர் கிடங்குகளுக்கு இராமதீர்த்தம்; லக்ஷ்மண தீர்த்தம்; அனுமார்தீர்த்தம் என்று கணக்கிலடங்கா பெயரிட்டு உப்பு தண்ணீரில் மூழ்கடா முழுகு; உங்களப்பனுக்கு உள்ளதை கொட்டடா கொட்டு உள்ளது உரியதை கொடுத்துவிட்டு திரும்பி பாராமல் ஒடடாஓடு என்று வழிப்பறி செய்த சாடையாக ஜனங்களை ஏமாற்றி கூட்டி வந்தவருக்கு பாதி; தங்களுக்குப் பாதியாய் பங்கிட்டு பிழைக்கிறார்கள். எதை சொல்வது; எவரை நோவது?

ஐயோ பாவிகள் உயிரோடுதான் இருக்கின்றீர்களா? நடைபிணமாய் அலைகின்றீர்களா? எனக்கு ஒன்றும் தெரிய வில்லையே?

இன்னும் ஆகாய லிங்கமொன்று ஒன்று இருக்கிறது. அங்கு செய்வதோ அரைப்பாவாடை, கால்பாவாடை, மூக்கால் பாவாடை, முழப் பாவாடையென்றேய்த்து ஆயிரக்கணக்காய் அபகரிக்கின்றார்கள்.

பொருள் கொடுத்தோரையும் பலனோ காலித்திரையொன்று கட்டியிருக்கின்றது. திறந்து பார்த்தால் ஆங்காங்கு நட்டிருக்கும் கல்லையும்கூட அங்கு காணோம். தனி ஆகாயந்தான் இருக்கின்றது. இதைப் பார்க்க ஜீவாதாரமாக இருந்த இத்தனை பணத்தையும் செலவிட வேண்டும்.

ஐயோ! ஏழை ஜனங்களே! ஏக வெளியில் நின்று கொண்டு யாதொரு செலவில்லாமல் அண்ணாந்து பாருங்களேன்! ஆகாயம் முழுவதும் தெரியுமே. என்னமதி! எந்நாட்கதி! இது யார் தலைவிதி!

இன்னும் கழுக்குன்ற மென்றொன்றிருக்கின்றதே. அதையும் கவனியுங்கள். ஆங்கிரண்டு கழுகுகளுக்கு இரை கொடுத்து காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். அதுவும் வேளைக் கிரமப்படி வந்து தின்றுவிட்டு போகின்றது.

ஒவ்வொரு வேளைகளிலே வராமலும் போகின்றது. இதிலென்ன அதிசயமென்று பணத்தை கொட்டுகின்றீர்கள்? கழுகும் ஒருவகை கோழியின் இனந்தானே கோழி வளர்க்கும் வீட்டில் இரை வைக்கும் பெண்களைக் கண்டவுடன் ஓடி வருவதும், காலை காலை சுற்றுவதும் வைத்தவுடன் தின்பதையும் பார்த்தில்லையா?

பார்ப்பனர் அடிக்கும் கொள்ளை.
அய்யோ! ஜனங்களே, நம்மிடமே குங்குமம் மணங்கு ஒன்றுக்கு ரூபாய் ஆறு வீதமும், விபூதிபடி ஒன்றுக்கு ஒரு அணா வீதமும் வாங்கிப் போய் அதை மறுபடியும் நமக்கே ஒரு குண்டுமணி எடை விபூதியையும், ஒரு குண்டுமணி எடை குங்குமத்தையும் வைத்து அரை ரூபாய்க்கு விற்று முதல் செய்கின்றார்கள்.

இதில் ஏற்படக் கூடிய லாபத்தை பார்த்தீர்களா?
நாம் ஒரு ரூபாய்க்கு 1 அணா சம்பாதிப்பது எவ்வளவோ கடினம். ஆரிய தந்திரிகள் யாதொரு சிரமமின்றி ஒரு ரூபாய்க்கு 170 ரூபாய் வீதம் நாளடைவில் இதை விற்று சம்பாதிக்கிறார்கள். (1000 ரூ. எடை குங்குமம் விலை ரூ.6-0-0) நம்மிடம் விற்கும் ஒரு குண்டுமணி எடையின் விலையை கவனித்து பாருங்கள்.

இதைப் போன்ற லாபம் இவ்வுலகத்தில் யாராவது அடைந்ததாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவ்விதம் குங்குமத்தை நாம் மணங்கு 1-க்கு 6 ரூபாய்க்கு விற்று அதை மறுபடியும் நாமே மணங்கு ஒன்றுக்கு 1000 ரூபாய் கிரயத்துக்கு வாங்கினால் நாம் எந்த காலம் பணத்தை சம்பாதித்து முன்னுக்கு வருவோம்?

சிரார்த்தக் கொள்ளை.
இன்னும் எத்தனை மோசம்! எத்தனை தந்திரம்! எதற்குத் தப்புவது? கோர்ட்டெல்லாமவர்கள்; நாடெல்லாம் அவர் வைத்த கண்ணி. அதிகாரஸ்தானமெல்லாம் அவர்கள் பார்த்த விடமெல்லாம் படுகுழி, ஐயோ! ஏழை ஜனங்கள் எப்படி கரையேறும்? திதியாம்; சிரார்த்தமாம்; திவசமாம்; நமது பிதாக்களிறந்து மோட்ச லோகத்தில் தொங்குகிறார்களாம்.

பசி பொறுக்க முடியாமல் இவர்களிடத்தில் சொல்லியனுப்பினார்களாம். அதற்காக நம் பிதுர்க்கள் இறந்த தேதியன்று ஆரியற்கு அரிசி, நெய், பருப்பு, உளுந்து மற்றும் காய்கறி சாமான்களும் சுமக்கு மட்டும் கொடுத்தால் இறந்தோர் பசி தீர்ந்து திருப்தியாவார்களாம். என்ன மதியீனம்!

யார் சாப்பிடுகின்றது! யார் பசியடங்குகின்றது! உமக்கென்ன உணர்ச்சியில்லையா? யாராவது சோதித்துப் பார்த்தீர்களா?

ஐயரை ஒரு அறையில் அடைத்து வைத்துக் கொண்டு மேற்படி யார் மகனையே திதிகட்கு தலைவனாக்கி மற்றொரு பிராமணனுக்கு வேண்டிய சாப்பாடு போடும்படி செய்து சில வாரங்கள் சென்று அடைபட்டவரை திறந்து விட்டு திருப்தியாயிருக்கிறதா என்று கேட்டால் அல்லவா சிரார்த்த மகிமை வெளியாகும்?

பின்னை எப்படி தேசத்தில் ஆராய்ச்சியின் குணம் பரந்து உண்மை வெளியாகும். அறிவாளிகளே! வேதத்தை மாற்றார் பார்க்கப் படாதென்று வைத்த சட்டம் உங்கள் புத்திக்கு சரியாக இருக்கின்றதா?

ஆனாலும் இவைகளையெல்லாம் முற்றிலும் கலைந்துவிட வேண்டுமென்ற தென் கருத்தன்று. வீண் மயக்கம் கொள்ளாமல் தேசம் நாகரிகமடைந்து முன்னுக்கு வரும் வழியைத் தேட வேண்டும் என்பதே என்னோக்கம்.

இப்பொழுது நான் சொல்லியவைகளைக் கவனித்துக் கொண்டு வந்த ஆரியர்களெல்லாம் என்னென்னவோ நயன பாஷையில் பேசிக் கொண்டு வருகின்றார்கள்.

என்ன செய்தாலும் செய்யட்டும் உண்மையைத்தான் பேசுவேன். இதோ பரங்குன்றம் ஸ்டேஷன் வந்து விட்டது. அநேகமாய் எல்லோரும் இறங்கி விட்டோம். ஊருக்குட் செல்கின்றேன். இந்நேரம் தாழ்ந்தது. ஆரிய தந்திரம் பலமாய் நடந்தது. பழைய வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
திராவிடன் 30.7.1917.--

viduthalai/20080928/news

Sunday, September 28, 2008

இந்துத்துவாவாதிகள் கக்கும் நஞ்சு. கொடிகட்டும் குண்டாயிசம்!

இந்துத்துவாவாதிகள் கக்கும் நஞ்சு இப்பொழுது புரையேறும் ஒரு கட்டத்தை அடைந்துவிட்டது. உத்தரப்பிர தேசத்தில் இப்பொழுது அது ஒரு புதுத் திருப்பத்தோடு முறுக்கேறி மீசையை முறுக்கிக் கொண்டு திமிருகிறது.
வழக்கறிஞர்களை வகுப்புவாதம் என்கிற கோடரியால் பிளந்து கொண்டு இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் வன்முறையாளர்கள் என்று முத்திரை பொறிக்கப்பட்ட முசுலிம்களுக்கு ஆதரவாக எந்த வழக்குரைஞரும் வாதிடக்கூடாது; மீறி வாதிட முன்வந்தால் அவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்படுவார்கள் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.

பயங்கரவாதி என்று தவறாகக் குற்றம்சாற்றப்பட்ட ஒரு முசுலிமுக்காக வாதாடி வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வருவதற்குக் காரணமாக இருந்த வழக்குரைஞர் முகமது ஷோயாப் என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட வழக்குரைஞர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்; என்ன கொடுமை! அந்தப் புகாரைப் பதிவு செய்ய காவல் நிலையம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில், லக்னோவில் உள்ள காவல்துறை மூத்த அதிகாரியிடமும், மாவட்ட நீதிபதியிடமும் எழுத்து மூலமாகப் புகார் கொடுத்துள்ளார் என்ற செய்தியைத் தெரிந்து கொண்டதும் அந்தப் பாசிசக் கும்பல் மீண்டும் அந்த வழக்கறிஞரை நையப் புடைத்தது;

ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தி நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனராம் (வெட்கம்! மகாவெட்கம்!! ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமோ?)

இவ்வளவுக்கும் மாயாவதி தலைமையிலான ஆட்சியின் காவல்துறை இந்த அருவருப்பான செயல்களுக்கு வெறும் பார்வையாளராகவே இருந்திருக்கின்றது.

மாவட்ட நீதிபதி ஒருவர், நடுநிலை பிறழாத தன்மை யோடு, இந்தச் சட்ட விரோத, நியாய விரோத அராஜகம்பற்றி உயர்நீதிமன்றத்துக்கு எழுத்து மூலமாகவே புகார் கொடுத்துள்ளார் என்பது ஒரு ஆறுதலான தகவலாகும்.
மற்றொரு வழக்கறிஞர் ஏ.எம். பஃரிடி என்பவர் பயங்கர வாதி என்று முத்திரை குத்தப்பட்ட இன்னொரு இசுலாமியருக்காக வாதாடி,

அவர் பக்கம் உள்ள நியாயத்தால் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் தீர்ப்புப் பெற்றுத் தந்தவர் என்பதற்காக அவரும் அந்த இந்துத்துவா கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இவர் கொடுத்த புகார் மனுவையும் காவல்துறை பதிவு செய்ய மறுத்து விட்டது.

முசுலிம் பர்சனல் லா போர்டு சட்ட ஆலோசகரான சஃரிபாப் ஷிலானியும், வேறு சிலரும் லக்னோ உயர்நீதி மன்றத்துக்கு முறையீடு செய்யச் சென்றபோது, அவர்களும் வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளனர்.

வழக்குரைஞர் ஏ.எம். பஃரிடி தங்கியிருந்த அறைக்குத் தீ மூட்டி அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர்; அவர் எப்படியோ தப்பிப் பிழைத்திருக்கிறார்.

இதற்குமேல் நினைத்தே பார்க்க முடியாத ஒரு செயலில் காவல்துறை இறங்கியது.

லக்னோ வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக உள்ள வெறிபிடித்த ஒரு இந்துத்துவாவாதி கொடுத்த புகாரின் அடிப்படையில், அடி உதைப்பட்ட ஷிலானி, பஃரிடி, ஷோயாப் ஆகியோர்மீது குற்றம் சுமத்தப் பட்டு முதல் தகவல் அறிக்கை (எஃப்.அய்.ஆர்.) தயார் செய்யப்பட்டு விட்டது.

இப்படிக் கூட நடக்குமா என்றுதான் எவரும் நினைப்பார்கள்; என்ன செய்வது! அப்படியேதான் நடந்திருக்கிறது.

இந்து வெறிக் கூட்டத்தின் நடத்தை ஒரு பக்கம் எப்படியோ இருந்தாலும், உ.பி.யை ஆளும் மாயாவதி ஆட்சி - அதன் காவல்துறை காக்கி உடையில் துள்ளித் திரியும் கா(லி)வி களாக இருப்பது சகிக்க முடியாத அவமானகரமானதாகும்.

உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. இந்த நிலையிலேயே இவ்வளவுக் கொடூரம் என்றால், இவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், சந்தேகம் ஏதும் வேண்டாம் - பச்சையான பார்ப்பனிய மனுதர்மக் கொடிதான் பயங்கர வேகத்தில் பறக்கும் குண்டாயிசம் தான் அவர்களின் அணுகுமுறையாகவும் இருக்கும். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

viduthalai/20080927/news

Saturday, September 27, 2008

நரம்புச் சிலந்தியும்..தீவிரவாதமும்: கருணாநிதி.

தீவிரவாதத்தை தீவிர நடவடிக்கையால் மட்டும் ஒழித்து விட முடியாது. தீவிரவாதம் உருவாகக் காரணமான மனித நேயமற்ற, மத வெறி எண்ணங்கள் மாய்க்கப்பட்டால் தான் அதை ஒடுக்க முடியும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை:அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக மாணிக்கவேலர் பொறுப்பேற்றிருந்தார்.

ஆழ்ந்த அரசியல் அனுபவம்- மக்கள் பிரச்சினைகளை அக்கறையுடன் அவ்வப்போது அணுகி, அவற்றுக்கு பரிகாரம் காணும் பரிவு- அரசியல்ரீதியாக அவரிடம் மாறுபாடு கொள்பவர்கள் கூட, அன்பு காட்டும் அளவுக்கு அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்ற அகந்தை அணுவளவும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகிடும் பண்பாடு- இவ்வளவு சிறப்பு பெற்றவராகத் திகழ்ந்தவர் என்பதோடு;

காமராஜரின் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக, அதுவும் அவரது நல்லெண்ணத்தைப் பெற்ற அமைச்சராக இருக்கிறார் என்னும் பாராட்டையும் பெற்றவர்.எதிர்க் கட்சிகளிடமிருந்து சூடாகக் கிளம்பும் கேள்விகளுக்குக் கூட, சுவையான பதில்களை அளித்து சட்டமன்றத்தை கலகலப்பாக்கி விடுவார்.

அவ்வளவு திறமை பெற்றவரையும், அந்த காலத்திலே ஒரு பிரச்சினை திக்குமுக்காட வைத்தது.

"இந்த பிரச்சினை வந்தாலும் வந்தது; பிராணனை வாங்குகிறது'' என்று அமைச்சர்கள் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள், ஊர்ப் பெரியவர்கள், குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்கள்- பெரிதும் சஞ்சலத்தில் ஆழ்ந்தனர்.

அத்தகைய பிரச்சினை தான் என்ன?அன்றைய பிரிக்கப்படாத தென்னாற்காடு மாவட்டத்தில் பல கிராமப் பகுதிகளிலும்- வட ஆற்காட்டிலே கூட சில பகுதிகளிலும் பயங்கரமானதும், அதிர்ச்சி தரக் கூடியதும்- பெயர் சொன்னாலே மக்கள் நடுங்கி அலறிடக் கூடியதுமான ஒரு வார்த்தை; புராண காலத்துப் போராட்டங்களில் பேசப்படும் நாகாஸ்திரத்தைப் போலப் பேசப்பட்டது.

அந்த வார்த்தை தான் 'நரம்புச் சிலந்தி'.பாழுங் கிணறுகள், பழைய குட்டை குளங்கள், பாசி பிடித்த நீர் நிலைகள்- இவற்றிலிருந்து இந்த ஆட்கொல்லி நோய் மனிதர்களைப் பற்றும். மரண வாசலில் கொண்டு போய் அவர்களைச் சேர்க்கும்.

அண்ணாவும், நாங்களும் சட்டமன்றத்தில் எதிர் வரிசையில் அமர்ந்திடும் வாய்ப்பு பெற்ற 1960ம் ஆண்டுவாக்கில் கூட இந்த நரம்புச் சிலந்தி நோயை ஒழிக்கும் போராட்டத்தில் மிக மிக வேகமாக அன்றிருந்த காமராஜர் ஆட்சியும், மாணிக்கவேலரது மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஈடுபட்டது என்பதை அனைவரும் அறிவர்.

நரம்புச் சிலந்தி நோயின் விளைவென்ன? அது பற்றிய விவரம் தான் என்ன?

அந்த கிருமிகள் இருக்கக் கூடிய கிணற்று நீரையோ- குளம், குட்டைகளின் நீரையோ- குடித்து விட நேரின்; அந்த ஆபத்தான கிருமி; மனிதனின் உடலுக்குள் நுழைந்து நரம்புகளில் ஒட்டிக் கொண்டு விடும்.புழு போன்ற- அந்தக் கிருமி, மனித உடலில் ஒட்டிக் கொண்டால்- அதை உடலிலிருந்து இழுப்பதற்கும்,

வெளியே எடுத்துப் போடுவதற்கும் இயலாதபடி, இழுக்க இழுக்க 'நாக்குப் பூச்சி' போன்ற அந்த சிலந்தி வந்து கொண்டேயிருக்கும்.அந்த கொடிய புழுவின் கடிக்கு உள்ளானவர்கள், பகல் முழுதும் படாத பாடுபட்டு, இரவில் தூங்கும் போது அந்தப் புழு உடலுக்குள் புகுந்து தசைக்குள் அழுந்திப் புதைந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க; அந்த புழுவின் மறு முனையை முடிந்து போட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

அவ்வளவு எச்சரிக்கையாக இருந்து, அப்போதும் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.அந்த விஷப் பூச்சிகளை அழிக்க எத்தனையோ முயற்சிகள், நடவடிக்கைகள், அந்த சமயத்தில்தான் 1967ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியும் அமைந்தது.

காமராஜர் அவர்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணிக்கவேலர் துறையின் மூலம் தொடர்ந்த 'நரம்புச் சிலந்தி' ஒழிப்புப் பணியை கழக ஆட்சியும் தொடர்ந்து மேற்கொண்டது.அண்ணா மறைவுக்குப் பிறகு, முதல்வர் பொறுப்பை ஏற்ற நான்,

தென் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவருமான ஏ.கோவிந்தசாமியுடன் 'நரம்புச் சிலந்தி' தாக்கிடும் கிராமப் பகுதிகளான பண்ருட்டி, காடாம்புலியூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், புத்தாண்டிக்குப்பம், காட்டுக் கூடலூர், காட்டுப்பாளையம், மேட்டுக் குப்பம், அன்னதானக் குப்பம், முத்தாண்டிக் குப்பம், மருங்கூர் போன்ற ஏராளமான இடங்களுக்குச் சென்று நரம்புச் சிலந்தியால் தாக்குண்ட மக்களைச் சந்தித்து விவரங்கள் அறிந்தோம்.

நரம்புச் சிலந்தியை ஒழித்திட அந்த சிலந்தியோடு நேரடிப் போர் நடத்துவதை விட; அவை உருவாகிடக் காரணமாக இருக்கும்- குளம், குட்டைகள், நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தி அந்த கிருமிகள் தோன்றுவதற்கே இடமில்லாமல் செய்து விடுவதே- சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டோம்.

அவ்வழியே செயல்பட்டோம். நரம்புச் சிலந்தி ஒழிவதற்கு நீர் நிலைகள் தூய்மையாவதே முக்கியம் என்பதை உணர்ந்து அம்முறையில் நடவடிக்கை எடுத்தது வெற்றியைத் தந்தது. நரம்புச் சிலந்தி ஒழிந்தது.

இப்போது சிந்திப்போம்; நரம்புச் சிலந்திக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் என்ன வேறுபாடு?

இரண்டுமே ஆட்கொல்லி தான். குளம் குட்டைகளில் உருவாகும் அசுத்தம்- அந்த அசுத்தத்தில் அவதரிக்கும் சிலந்திப் புழு - அந்தப் புழு வழங்கும் நோய் தானே நரம்புச் சிலந்தி.

அதை ஒழிக்க முதற் கட்ட 'சிகிச்சை' குளம் குட்டைகளுக்கல்லவா செய்ய வேண்டியிருக்கிறது. அதுபோல - தீவிரவாதத்தை தீவிர நடவடிக்கையால் ஒழித்து விட முடியுமா?

அதுவும் தேவை தான்.ஆனாலும் தீவிரவாதம் உருவாகிடக் காரணமான மனித நேயமற்ற, மத வெறி எண்ணங்கள் மாய்க்கப்பட்டால் தானே நீர் நிலைகள் சுத்தமாகி ஊர்ப் புறங்களில் 'நரம்புச் சிலந்தி' தாக்குதல் நேராமல் இருக்கும்.

மூல காரணத்தை அறிந்து, அதனை முழுமையாக அகற்றினால்தான் சமுதாயம் முன்னேற முடியும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
------------------------------------------

படித்துவிட்டீர்க‌ளா?
எதிர்வினையா? படிக்கும் போது வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது.

குஜராத், ஒரிசா ... அடுத்து கருநாடகமா?

இட ஒதுக்கீடு இல்லாத உயர்ஜாதியினருக்கு 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடா?

தி.நகராம்! எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்.

பன்றிக்குப் படையல்.!! பன்றியின் ஆண் பெண் 'அது ' அவ்வளவு புனிதம்.? அக்கினியின் ஆசை.

----------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Friday, September 26, 2008

இட ஒதுக்கீடு இல்லாத உயர்ஜாதியினருக்கு 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடா?

இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமை. உயர்ஜாதியினருக்கே தாரை வார்ப்பா?மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமை.

மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமையைச் சுட்டிக்காட்டி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதில் நியாயம் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மருத்துவக் கல்வித் துறையில் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில், இட ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பெருந்தவறையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி அளிக்கிறதுஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இதற்கான தேர்வு நடைபெறுவது வழக்கமாகும். அதற்கான விண்ணப்பம் இம்மாதம் (செப்டம்பரில்) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல் அறிக்கையில் (Prospectus)வெளியிடப்பட்டுள்ள விவரம் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எத்தனை விழுக்காடு என்று குறிப்பிடப்படவில்லை என்பது முதலாவது அம்சமாகும்.இரண்டாவதாக அதில் காணப்பட்டிருப்பதாவது:The Counselling shall only be done according to the category Rank (Unreserved, SC, ST, OBC & Other Physically handicapped) and not by the overall Rank.

கலந்தாய்வு என்பது அந்தந்தப் பிரிவினருக்கான தனிப்பட்ட தகுதி அடிப்படையில்தான் நடத்தப்படும் என்றும், ஒட்டுமொத்த மான தகுதி அடிப்படையில் அது இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் பொருள் - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்கள் பொதுப் போட்டியில் கொண்டு வரப்படமாட்டார்கள். அவரவர்களுக்குரிய ஒதுக்கீட்டுப் பகுதியில் மட்டுமே கணக்கிடப்படுவார்கள். இதன்மூலம் சட்டப்படி இட ஒதுக்கீடு பெறாத பிரிவினரான உயர்ஜாதியினருக்கு மட்டுமே திறந்த போட்டியில் உள்ள அத்தனை இடங்களும் கிடைக்கும்.


இதுவரையில் கேள்விப்படாத ஒரு தனிப்பிரிவு U.R. (Unreserved) என்பது எங்கிருந்து குதித்தது என்று தெரியவில்லை. இதில் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சிப் பொறியிருக்கிறது. எந்த ஆணையின்கீழ் இது உள்ளே நுழைந்தது?


இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் 22.5 சதவிகிதம் போக மீதியுள்ள 68.50 சதவிகித இடங்களும் உயர்ஜாதியினருக்குத் தாரை வார்க்கப்படும்.


(இந்தத் திட்டத்தின்படி மொத்தமுள்ள 3200 இடங்களில் தாழ்த் தப்பட்ட மக்களுக்கு 480 இடங்களும், மலைவாழ் மக்களுக்கு 240 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 9 விழுக்காடு கணக்குப்படி 290 இடங்களும், முன்னேறிய ஜாதியினருக்கு 2190 இடங்களும் கிடைக்கும்).


பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணிக்கும் போக்குஅகில இந்திய நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும்பொழுது இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பல கட்டங்களாக (In Phased Manner) என்று குறிப்பிட்டிருப்பது தேவையில்லாத ஒன்றாகும். ஏனெனில், ஏற்கெனவே இருக்கும் இடங்கள் தவிர புதியதாக அதிக இடங்கள் என்ற பிரச்சினைக்கே இதில் இடமில்லை.


ஏற்கெனவே இருக்கும் இடங்களை தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என்று இடங்கள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், புதிய வசதிகள், ஏற்பாடுகள் (Infrastructure) என்ற பிரச் சினைக்கே இடமில்லை என்கிறபோது, பிற்படுத்தப்பட்டோர்களுக் கான 27 சதவிகித இடங்களை இவ்வாண்டே கொடுக்க வேண்டியதுதானே!


தீர்ப்பினை தங்கள் வசதிக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் தந்திர உணர்வுதான் இதில் காணப்படுகிறதே தவிர, நேர்மையான அணுகுமுறை இதில் கிஞ்சிற்றும் இல்லை.இதில் இன்னொரு திட்டமிட்ட விடுபடுதல் (Omission) நடந்தி ருக்கிறது. விவரக் குறிப்பு (Prospectus - Appendix-V) பகுதியில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் தேதி வாரியாக தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள், இட ஒதுக்கீடு இல்லாதவர்கள் (Unreserved) என்பவர்களுக்கான கவுன்சிலிங் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான விவரம், தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எந்த வகையிலும் மக்கள் தொகையில் மிகப்பெரும் பகுதியினரான இதர பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணிக்கும் போக்கு, வஞ்சிக்கும் போக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.


இது எவ்வளவு பெரிய மோசடி, தில்லு முல்லு என்பது மட்டுமல்ல - முழுமையான சட்ட மீறலேயாகும்.டில்லி எய்ம்சில் நடந்துள்ள மோசடி!
அதேபோல, டில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படும் மருத்துவக் கல்லூரி நிறுவனத்தில் சேருவதிலும் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.


ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.தகுதி மதிப்பெண்ணிலும் குளறுபடி!இதில் தாழ்த்தப்பட்டவர்களானாலும், பிற்படுத்தப்பட்டவர்க ளானாலும், முன்னேறிய ஜாதியினர் ஆனாலும் தகுதி மதிப்பெண் (நுழைவுத் தேர்வில்) என்பது ஒரே அளவில் அதாவது 50 விழுக்காடு பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நடைபெறும் அகில இந்தியத் தேர்வுக்குத் தாழ்த்தப்பட்டோருக்குத் தகுதி மதிப்பெண் 40 சதவிகிதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏனிந்த வேறுபாடு? எய்ம்ஸ் மட்டும் நெய்யில் பொரிக்கப் பட்டதா? 24.8.2001 உச்சநீதிமன்ற தீர்ப்பு இதற்குச் சாதகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அதேநேரத்தில், இவ்வாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி, உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகளைக் கொண்ட ஆயம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நுழைவுத் தேர்வில் மதிப்பெண் 10 சதவிகிதம் குறைக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளதே அது வசதியாக மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறக்கப்பட்டுள்ளது என்பது மறக்காமல் குறிப்பிடத்தக்க ஏமாற்று வேலையாகும்.


தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் போதிய எண் ணிக்கைக் கிடைக்கவில்லையென்றால், இந்த இரு பிரிவுகளுக் கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் பிரிவுகளுக்கு உரிய எண்ணிக்கையில் விண்ணப்ப தாரர் கிடைக்கவில்லையென்றால், அவை அத்தனை இடங்களும் பொதுத் தொகுதிக்கு (General Category) சென்று விடுமாம்.

இட ஒதுக்கீடு என்று வரும்போது எப்படி எப்படியெல்லாம் தடைக்கற்கள், குறுக்குச் சால்கள் தந்திரமாகச் செய்யப்படு கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.


மத்திய சுகாதாரத் துறையே பொறுப்புஅகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் இந்த இருவகை மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது.

இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். சமூகநீதிபற்றி அவருக்கு நாம் வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதே என்பதுதான் நமது வேதனை!


எய்ம்ஸ் மருத்துவமனைப் பிரச்சினையில் அவருக்கு ஆதிக்க சக்திகளால் சோதனைகளும், தொல்லைகளும் ஏற்பட்ட நேரத்தில், நாம் அவருக்குத் துணையாக அவர் கரத்தைப் பலப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.


இந்த நிலையில், அவர் அமைச்சராக இருக்கும் இந்தத் துறைகளில் சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டப்படலாமா?

அதிக மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோரை பொதுத் தொகுதியில் சேர்க்காமல், அவரவர்களின் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் கணக்கிடுவதும், பொதுத் தொகுதி என்பது (Open Competition) முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு - உயர் ஜாதியினர்க்குத் திருப்பப்படுவதும் எவ்வளவு பெரிய மோசடி!


டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்தானே பொறுப்புமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதில் போதிய கவனம் செலுத்தாதது ஏன்? இதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததுதானே?


குற்றப் பத்திரிகை படிப்பது நமது நோக்கமன்று; சமூகநீதியில் இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது - அதனைச் சரி செய்து தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு - செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கிறோம்.


இதற்குக் காரணமானவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதன்மூலம், குறுக்குவழியில் ஒடுக்கப்பட்டோரின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் சூழ்ச்சி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சென்னை 25.9.2008 தலைவர்,திராவிடர் கழகம்.
viduthalai/20080925/news


----------------------------------


தி.நகராம்! எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்.

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

எதிர்வினையா? படிக்கும் போது வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது.

"இந்து மதக் கடவுள்களின் கைகளில் இருப்பதே கொலைகாரக் கருவிகளும், சண்டை போடும் ஆயுதங்களும் தான்.இந்து மதக் கடவுள்கள் சண்டைப் போட்டதாகவும், கொலைகள் செய்ததாகவும் புராணங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன."

அடுத்த மதத்தினரைத் தாக்குவது இந்து மதத்தினரின் பண்பு இல்லை. ஆனால், இந்து மதத்தினர் பொறுத்தது போதும் என்று தீர்மானித்து விட்டார்கள். அதனால் சில இடங்களில் எதிர்விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

எதிர்விளைவுக்கு விமர்சனமும் அரசின் தரப்பிலான நடவடிக்கையும் தீவிரமாகயிருக்கிறது. ஆனால், அடிப்படை விளைவு குறித்து அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இந்துக்களின் மனவுணர்வு பாதிக்கப்படுகிறது.(தினமணி, 24.9.2008)- இவ்வாறு கூறியிருப்பவர் தமிழக பா.ஜ.க.வின் தலைவர் திரு. இல. கணேசன்.

அடுத்தவர்களைத் தாக்குவது இந்து மதத்தினரின் பண்பு இல்லையாம்; இதனைப் படிக்கும்போது வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது.
இந்து மதக் கடவுள்களின் கைகளில் இருப்பதே கொலைகாரக் கருவிகளும், சண்டை போடும் ஆயுதங்களும்தான்.

இந்துமதக் கடவுள்கள் சண்டைப் போட்டதாகவும், கொலைகள் செய்ததாகவும் புராணங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.இந்துக்களின் புராணங்கள், இதிகாசங்கள் எனப்பட்டவையெல் லாம் முழுக்க முழுக்க சண்டைகளை மய்யப்புள்ளிகளாக வைத்துச் சுழலுபவைதான்.

இந்துக்களின் யாகப் புரட்டுகளையும், வருணாசிரமத்தையும் எதிர்த்துப் புதுப்பாதை காட்டப் புறப்பட்ட புத்த மார்க்கத்தை இதே இந்துக்கள் எந்த வகையில் அழித்தார்கள்?

புத்த பிக்குகளைக் கொன்று தீர்த்தனர் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. திருவத்திபுரம் போன்ற கோயில்களில் பவுத்தர்களைக் கழுவில் ஏற்றிய சிற்பங்களை இன்றைக்கும் காணலாம்.

வருண தருமத்தினைக் காப்பாற்ற தண்டத்தை எடுத்துப் போராடலாம் என்கிறது மனு தர்மம்.

அவைகூட பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கதைக்கப் படலாம். தற்காலத்தில் இந்துக்கள் என்ற போர்வையில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களின் நடவடிக்கைகள் என்ன?

இந்த வன்முறைக் கும்பலின் மீது விழும் குற்றச்சாற்றிலிருந்து தப்பிக்கொள்ள இந்துக்கள் அனைவருக்கும் இவர்கள்தான் பிரதிநிதிகள்போல முன்னே வந்து நின்று மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த இந்துக்களையும் இவர்களையும் ஒன்றோடு ஒன்று குழப்பி ஒரு மாயையை உருவாக்குகின்றனர்.

இந்த வன்முறைக் கும்பல்மீது விமர்சனம் வந்தால், அதனை ஒட்டுமொத்தமான இந்துக்கள் மீதான விமர்சனமாக குற்றச்சாற்றாக மாற்ற முயலுகிறார்கள்.

உண்மையில் இந்துத்துவா என்ற போர்வையில் கலவரங்களை, வன்முறைகளை இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் மீது தூண்டுவது இந்த சங் பரிவார்க் கும்பலே தவிர மற்ற இந்துக்கள் அல்லர் என்பதுதான் உண்மை!

இன்றைக்கு நாட்டின் பல மாநிலங்களிலும் கலவரங்கள் வெடிப்பதற்குத் தொடங்கிக் கொடுத்தவர்கள் இந்த சங் பரிவார்க் கும்பல்தானே!

1992 டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை பட்டப் பகலில் பகிரங்கமாக இடித்து நொறுக்கிய பெருங்குற்றவாளிகள் இவர்கள்தானே!

இவர்களா எதிர்வினைகளைப்பற்றிப் பேசுவது? அந்தக் கொடுஞ்செயல்களின் விளைவாக பல இடங்களில் எதிர்வினைகள் ஏற்பட்டன என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர - இவர்களின் செயல்களை எதிர்வினை என்று சொல்லவே முடியாது.

பொறுத்ததுபோதும் என்று இந்து மதத்தினர் தீர்மானித்து விட்டனர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. இல. கணேசன் கூறுகிறார்.

இதன்மூலம் இவர்கள் மேற்கொண்டுவரும் வன்முறை களுக்கு பகிரங்கமாக வக்காலத்து வாங்குவது மட்டுமல்ல - மறைமுகமாகக் கலவரங்களை, வன்முறையைத் தூண்டும் ஒரு மோசமான வேலையில் இறங்கியுள்ளார். இவரின் இந்த அறிக்கையை காவல்துறை கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

சங் பரிவார்க் கும்பலின் ஒரு பிரிவான விசுவ இந்துபரிசத் என்ன செய்கிறது?

திரிசூலங்களைப் பகிரங்கமாக வழங்குகிறது. அந்தத் திரிசூலத்தில் உள்ள ஒரு முனை கிறித்துவர்களையும், இன்னொரு முனை முசுலிம்களையும், மூன்றாவது முனை மதச்சார்பின்மை பேசும் இந்துக்களையும் கிழிக்கும் என்று பச்சையாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார்களே - இதற்குப் பெயர் எதிர்வினையா? வலிந்து போய் தாக்கும் வன்முறையா?

பெண்கள் உள்பட துப்பாக்கிப் பயிற்சியைக் கற்றுத் தருகிறதே - சங் பரிவார். எதற்காக, எந்த நாட்டின்மீது படையெடுக்க?

அப்பாவி கன்னிகாஸ்திரிகளை பாலியல் வன்செயலுக்கு உட்படுத்துவது எதிர்வினையா?

முஸ்லிம் பெண்களின் கருப்பைகளில் இந்துக்களின் கருக்கள் ஜெனிக்கட்டும் என்று பேசுகிற பெண் பேச்சாளர்கள் திரு. இல. கணேசன்
பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தானே!

எந்தத் தைரியத்தில் எதிர்வினை என்ற ஆயுதத்தை ஏந்தி வருகிறார்கள்?
தமிழின இளைஞர்கள் இவர்களை அடையாளம் காணவேண்டும். பகிரங்கமாக வன்முறைக்கு வக்காலத்து வாங்கும் இத்தகையவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு தயங்கக்கூடாது - கூடவே கூடாது!
viduthalai/20080925/news
தந்தை பெரியார் அறிவுரை
மோசமானது.

பார்ப்பனர்கள் தன்மை மிகவும் மோசமானது. விஷமம் அவர்கள் ரத்தத்திலேயே ஊறிய தாகும். நமக்கு ஆத்திரமூட்டக் கூடியவற்றைச் செய்வதே அவர்கள் வேலையாகிவிட்டது.(விடுதலை, 4.12.1972)
--------------------------------

Show all posts மற்ற பதிவுகள்

Thursday, September 25, 2008

தி.நகராம்! எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்.

சைவப் பார்ப்பான் வைணவப் பார்ப்பான், வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப்பான், ` எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்

என்னதான் இடித்து உரைத்தாலும் பார்ப்பனர்களுக்கு நல்ல புத்தி வரவே வராது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

சென்னை - தியாகராயர் நகர் தியாகராயர் மண்டபத்தில் நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்க்கப்பட்டது.

அந்தச் சிறப்புமிக்க விழாவில் பங்கேற்ற மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நீதிக்கட்சியின் தந்தை என்று போற்றப்படும் ஒரு தலைவரால் வழங்கப்படும் இந்தத் தியாகராயர் நகரை அவர் பெயரால் அழைக்காமல் தி.நகர் என்று போடுகிறார்களே என்று தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

திருவல்லிக்கேணியை தி.கேணி என்று எழுதாத ஒரு கூட்டம், தியாகராயர் நகரை மட்டும் தி.நகர் என்று போடுவானேன் என்று நாக்கைப் பிடுங்கவும் வினா எழுப்பினார்.

என்னதான் நீங்கள் இடித்துக் கூறினாலும், தமிழர்கள் என்றால் நாங்கள் நஞ்சுதான் - எங்களுக்கு உரைக்கவே உரைக்காது என்பதைக் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் காட்டிக்கொள்ளும் வண்ணம் - திருவாளர் வைத்தியநாதய்யர் தலைமையில் இயங்கும் - அசல் ஆர்.எஸ்.எஸ். ஏடாக உருவெடுத்துக் கொக்கரிக்கும் தினமணி இன்றுகூட மூன்றாம் பக்கத்தில் தி.நகர் நடைபாதை கடைகள் குறித்து இன்று ஆய்வு என்று செய்தி போடுகிறது.

பார்ப்பனர்களும் தமிழர்கள் தான் என்று இன்றைக்குக்கூடப் பம்மாத்துப் பேசும் தமிழன்பர்கள், பார்ப்பனர்களின் பச்சையான தமிழ் - தமிழர் விரோதப் போக்கை இதன் மூலமாகவாவது புரிந்துகொள்ளட்டும்!

தந்தை பெரியார் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடு தலை மலரில், தந்தை பெரியார் அவர்களின் நாள் குறிப்பிலிருந்து ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜேந்திர பவன், உடுப்பி பவன், டூரிஸ்ட் லாட்ஜ், வசந்தா விஹார், ராமச்சந்திர விலாஸ், ஷண்முகானந்த பவன், ராம விலாஸ், உட்லண்ட்ஸ், அம்பாள் பவன், சென்ட்ரல் லாட்ஜ், லக்ஷ்மி கப்பே, எவரெஸ்ட், போர்டிங் லாட்ஜிங், ஸ்ரீ கிருஷ்ணா பவன், கோதண்ட விலாஸ், சென்ட்ரல் கப்பே, ஸ்ரீ நிவாஸ் கப்பே, மாடர்ன் கப்பே, லஞ்சு ஹோம் இதில் எது தமிழ்? என்று தந்தை பெரியார் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.

நூற்றாண்டு விழா நாயகரான அறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் என்றால் பார்ப்பனர்களின் நடப்பு என்ன என்பதைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை.

அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான் (திராவிட நாடு, 2.11.1947) என்கிறார் அறிஞர் அண்ணா.இதற்குமேலும் பார்ப்பனர்களைபற்றி புரிந்துகொள்ள என்ன இருக்கிறது? http://files.periyar.org.in/viduthalai/20080924/news05.html

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லையோ!"

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் உயரிய கருத்துள்ள நம் நாட்டில் மனிதரிடையே ஏற்றத் தாழ்வை உண்டாக்க பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சிதான் ஜாதிகள்.

அந்த ஜாதிகளை கடவுளே உண்டாக்கினார் என்று கதையளந்து விட்டனர். அந்தக் கடவுளும் காக்கும் கடவுளான திருமாலின் அவதாரமாம். அப்படிப் பட்ட திருமாலின் கோயில்களில் குறிப்பாக காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள், மணவாள மாமுனிகள் சன்னதிகளில் தீண்டாமை கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

கோயில்களில் பார்ப்பனரல்லாதார்க்கு அநீதி

பார்ப்பனரல்லாத வைணவர்களுக்கு பின்வாசல் வழியாக தீர்த்த சடாரி பிரசாதம் வழங்கப்படுகிறது.

பொதுவாக பக்தர்கள் அனைவரையும் உட்கார வைத்துதான் பிரசாதம் தர வேண்டும். ஆனால், பார்ப்பனரல்லாதாரை நிற்க வைத்துத்தான். அதுவும் செருப்பு விடும் இடத்தில்தான் தீர்த்தசடாரி பிரசாதம் தரப்படுகிறது. இதுவும் ஒரு வகை தீண்டாமைக் கொடுமை தான் என்று திருக்கச்சி நம்பி திருமாலடியார்கள் சேவை சங்கம் கூறுகிறது.

அரசு ஆணைகள் மதிக்கப்படவில்லை

தீர்த்தசடாரி பிரசாத விநியோகத்தில் சேவார்த்திகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை ந.க. எண் 4822/03/ஆ3/நாள்: 14.10.2003 அன்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இன்றுவரை பார்ப்பனரல்லாதாரை நிற்க வைத்துத்தான் பிரசாதம் வழங்கப்படுகிறது.

கோயில் நுழைவுச் சட்டம் ஒஒ11 - 1939 முதலிய சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. அறநிலையத்துறையின் பல்வேறு சட்டங்கள் இங்கு செல்லரித்தே கிடக்கின்றன.

ஒரு குலத்துக்கொரு நீதி
`யாருங்க இப்ப ஜாதி பார்க்கிறாங்க என்று கூறும் பார்ப்பனர்கள் - கோயிலில் பார்ப்பனரல்லாதார்க்கு இழைக்கப்படும் அநீதி கேவலமானதல்லவா? இதைத்தான் தந்தை பெரியார் - மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்றார். நூற்றாண்டு காணும் நாயகர் பேரறிஞர் அண்ணா அவர்கள் `பேச நா இரண்டுடையாய் போற்றி என்றார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது - ஜாதி ஒழிப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும். பெரியாராட்சி நடத்திக் கொண்டிருக்கும் மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள், தமிழர் தலைவரின் வேண்டுகோளை ஏற்று அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க சட்டம் செய்து

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பயிற்சி முடிக்கும் தறுவாயில் உள்ளனர். சமூக நீதி அடிப்படையில் அனைத்துக் கோயில்களிலும் அர்ச்சகர்களை நியமித்தால் யதோத் தகாரி கோயில் போன்று மனிதரில் வேற்றுமைகள் காட்டும் ஏராளமான கோயில் ளில் ஜாதி வேற்றுமைகள், தீண்டாமைக் கொடுமைகள் களையப்படும் என்பது உறுதி.

ஜாதி வேற்றுமை காட்டும் கோயில்கள்
பார்ப்பனர்கள், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயி லுக்கு வரும் நிர்வாக அதிகாரிகள்கூட ஸ்மார்த்தா, மாத்வா என்னும் பார்ப்பனர்களே வர வேண்டும். பிறர் வரக்கூடாது என்கின்றனர்.

கோயிலையே ளுஉநஅந கூநஅயீடந என்னும் தனிப்பட்டியலுக்குள் கொண்டுவந்து பிற பார்ப்பன ஜாதியினர்கூட நிர்வாக அதிகாரியாக வர முடியாத அளவுக்கு அவர்களுக்குச் சாதகமாக சட்டத்தை (1952 ஹஉவ) வளைத்துக் கொண்டனர்.

வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வரும் நிர்வாக அதிகாரியே காமாட்சியம்மன் கோயிலுக்கும் கூடுதல் பொறுப்பைக் கவனிக்கிறார்.

தனியாக ஒரு நிர்வாக அதிகாரியை (நு.டீ) காமாட்சியம்மன் கோயிலுக்குப் போடலாம். ஆனால், தனியாக நிர்வாக அதிகாரியை போடாமல் ஸ்கீம் டெம்பிளில் வராத காமாட்சியம்மன் கோயிலுக்கு பார்ப்பனரல்லாத நிர்வாக அதிகாரியைப் போட வேண்டிவரமே என்பதற்காகவே பல காலமாக வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாக அதிகாரியையே காமாட்சியம்மன் கோயிலுக்கும் கூடுதல் பொறுப்பை கவனிக்கச் சொல்கின்றனர். இதனால் பார்ப்பனரல்லாதவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

மடத்தின் அடிமையாக நிர்வாக அலுவலர்
காமாட்சியம்மன் கோயில் காஞ்சி சங்கராச்சாரியார் கட்டுப்பாட்டில், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிகாரி ஓர் அடிமையாகவே செயல்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் காமாட்சியம்மன் கோயில் அதிகாரியை மடம் நினைத்தால் பொறுப்பிலிருந்து நீக்கிவிட அதிகாரம் உண்டு என்னும் நிலையே உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத் துறை இதற்கு விடிவு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை தனித்தனி நிர்வாக அலுவலர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஏராளமாக நில புலன்கள் சொத்து பத்து ஏராளம். காமாட்சியம்மன் கோயிலுக்கும் நிலபுலன்கள், சொத்து பத்து ஏராளம்.

இவையெல்லாம் பார்ப்பனரல்லாத தமிழர்கள் கோயிலுக்கென்று எழுதி வைத்த கொட்டிக் கொடுத்த கொடைகள். ஏராளமான சொத்துக்கள் கொண்ட இரு கோயில்ளுக்கும், தனித்தனி அதிகாரியை நியமித்தால் நிர்வாகம் ஒழுங்காக இருக்கும். ஆனால் ஒரே அதிகாரி இரு கோயில்களுக்கும் பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை! என்ற நிலையால் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக கோயில் சொத்துக்கள் சுரண்டப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், ஸ்மார்த்தா, மாத்வா நிலையில் வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு நிலையான அதிகாரி யாரும் இல்லை. உதவி ஆணையர் பொறுப்பில் உள்ள ஒருவரே கூடுதல் பொறுப்பாக வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், காமாட்சி அம்மன் கோயிலுக் கும் நிர்வாக அலுவலராக உள்ளார். உதவி ஆணையர் நிலையிலும் ஸ்மார்த்தா, மாத்வா பார்ப்பனர்கள் இல்லையென்றால், யார் இப்பொறுப்புகளை கவனிப்பார்?

புரட்சிக் கவிஞர்
`சைவப் பார்ப்பான் வைணவப் பார்ப்பான், வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப்பான், எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான் என்று பாடினாரே புரட்சிக் கவிஞர் - அதைப்போலத்தான் தமிழர் சொத்துகளும் உரிமைகளும் மறுக்கப்பட்டு சுரண்டப்படுகின்றன.

சுரண்டல்காரர்கள்
வரதராஜப் பெருமாள் கோயிலின் உப கோயிலான தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல் கடைசியாக 1984-இல்தான் திறக்கப்பட்டது. அப்போதே மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுமார் ரூ.17,000/- வசூலானது. தற்போது நாளொன்றுக்கு ரூ.2000/- அளவிற்கு தட்டில் வசூலாகிறது.

பணவரவு அதிகம் உள்ள கோயில் என்பதால் கோயிலில் பூஜை செய்யும் பார்ப்பனர்கள் - தங்களுக்கே கோயில் சொந்தம் என்றும், தாங்கள் தான் பரம்பரை டிரஸ்டி என்றும் கூறி நீதிமன்றம் சென்று தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பும் பெற்றுள்ளனர்.

ஆனால், இந்து சமய அற நிலையத் துறைக்குக் கீழுள்ள கோயிலின் வழக்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்றும், இணை ஆணையர் நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்பட வேண் டும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

திறக்கப்படாத உண்டியல்
பார்ப்பனர் ஆதிக்கத்தின் கீழ் தனியார் சொந்தம் கொண்டாடும் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் 1984-க்குப் பிறகு இன்றுவரை திறக்கப் படாமலேயே உள்ளது. இதுபற்றி பார்ப்பன ஏடான தினமலரில் 7.3.2007-இல் பக் 14-இல் `நிரம்பி வழியும் ஆஞ்சநேயர் கோயில் உண்டி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

மாற்றம் வரும்
மேற்கண்ட செய்திகளை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற, மக்கள் சொத்து மக்களுக்கே பயன் பட ஜாதி பேதமற்ற நிர்வாகம் கோயில்களில் நடைபெற, கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடுக்கும் என்று நம்புவோமாக!- பா. கதிரவன்,'விடுதலை' செய்தியாளர் காஞ்சிபுரம் viduthalai/20080802/snews
---------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Wednesday, September 24, 2008

குஜராத், ஒரிசா ... அடுத்து கருநாடகமா?

உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தால், இந்தக் கும்பலின் வால் ஒட்ட நறுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் பதுங்கிவிடும். ........

பா.ஜ.க. என்னும் அரசியல் வடிவத்தின் ஊற்றுக்கண்களான ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார் என்னும் அராஜகக் கும்பல் நாட்டை அமளிக்காடாக மாற்றியே தீருவது என்பதில் மிகவும் உக்கிரமமாக இருப்பது விளங்கிவிட்டது.

1992 டிசம்பர் 6 இல் அவர்கள் அயோத்தியில் தொடங்கிக் கொடுத்த வன்முறை தொடர் ஓட்டம் போல இந்தியாவின் பல பகுதிகளிலும் வக்கிரத்தோடு திமிராட்டம் போடுகிறது.

அவர்களின் முதல் பரிசோதனைக் கூடமாக குஜராத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆடு ஓநாய் கதையாக கோத்ரா என்னும் தொடர்வண்டி நிலையத்தில் நின்ற சபர்மதி இரயில் - எஸ்-6 என்ற பயணிகளின் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் பலியான 56 பிணங்களை அரசியல் மூலதனமாக்கி,

அம்மாநிலத்தையே இந்துக்கள், முசுலிம்கள் என்று இரு தனித்தனி கூறுகளாகப் பிரித்து,

அந்த இந்து வாக்கு வங்கியைத் தங்களுக்குச் சாதகமாக தங்கள் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு விட்டனர்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் இதுவரை பொடா சட்டத்தின் அடிப்படையில் சிறைக்குள் கிடக்கின்றனர்.

பாதிப்புக்குக் காரணமான ஒரே ஓர் இந்துகூட இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவில்லை. பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற பி.ஜே.பி.யின் யோக்கியதை இதுதான் - நாடு தெரிந்துகொள்ளவேண்டும்.

"பொடா" சட்டத்தின்கீழ் சிறையில் உள்ள 84 முசுலிம்களும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பது பொருந்தாது என்று மத்திய ஆய்வுக் குழு (Central Review Committee) 2005 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கியும்கூட,

அவர்கள் பிணையில்கூட இந்நாள் வரை வெளியில் வர முடியாத இறுக்கத்தை - உச்சநீதி மன்றத்தால் நீரோ மன்னன் என்று பட்டம் சூட்டப்பட்ட நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியுள்ளது.

14 வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்றால், குஜராத் மாநில பா.ஜ.க. ஆட்சியின் பாசிச குணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஒரிசாவைத் தங்களின் சோதனைக் களமாக சங் பரிவார் கும்பல் எடுத்துக்கொண்டுள்ளது.

78,000 கிறித்துவ மக்கள் ஒரிசாவின் காடுகளுக்குள் தஞ்சைமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அது நாடா - கடும்புலி வாழும் காடா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கருநாடகத்திலும் தங்களின் வன்முறை ஆயுதத்துக்குக் கூர் தீட்டிப் பதம் பார்த்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் இதே நிலைதான்.

கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா மத்திய அரசு வைத்துள்ள குற்றச்சாற்றுக்குப் பதில் சொல்ல யோக்கியதை இல்லாமல்,

அமர்நாத் பனி லிங்கம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கலவரத்தை எடுத்துக்காட்டி, அப்பொழுதெல்லாம் மத்திய அரசு இந்த அளவு 355 பிரிவை எல்லாம் காட்டி அச்சுறுத்தவில்லையே - ஏன்? என்று நீட்டி முழங்கியிருக்கிறார்.

இது பிரச்சினையைத் திசை திருப்பும் எத்து வேலையாகும்.

மறைமுகமாக கருநாடக மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்திருப்பது உண்மைதான் என்பதை இதன்மூலம் எடியூரப்பா ஒப்புக்கொண்டு விட்டார் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கதாகும்!

சென்னையில் கூடிய கிறித்துவ அமைப்புகள், கலவரங் களுக்குக் காரணமாக இருக்கிற பஜ்ரங் தள் என்கிற அமைப்பைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.

பஜ்ரங் தள் என்றால் அதன் பொருள் குரங்குப்படை என்பதாகும்.

குஜராத்தில் கலவரங்களுக்குக் காரணமானவர்கள் யார் யார் என்பதை தெகல்கா புலனாய்வு நிறுவனம் ஆதாரப்பூர்வமாக ஆள்களை அடையாளம் காட்டியும், அத்தகையவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை இல்லை.

அதேபோல, 1992 இல் பாபர் மசூதியை இடித்து நொறுக்கிய பா.ஜ.க. (அத்வானி உள்பட) சங் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் தண்டனைக்கு ஆளாகாமல் ராஜநடை போட்டுத் திரிகின்றனர்.

இந்த நிலை நீடிக்கும்வரை சங் பரிவார்க் கும்பல் ஒவ்வொரு மாநிலமாக தன்னுடைய வன்முறைக் கலாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டுதானிருக்கும்.

பாபர் மசூதி இடிப்பில் முதல் குற்றவாளியான அத்வானியை மேலும் தாமதம் செய்யாமல் - சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தால்,

இந்தக் கும்பலின் வால் ஒட்ட நறுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் பதுங்கிவிடும்.

இந்த சூட்சுமத்தை மத்திய அரசு உணரவில்லை என்பதுதான் ஆச்சரியமாகும்.
viduthalai/20080923/news

Tuesday, September 23, 2008

பன்றிக்குப் படையல்.!! பன்றியின் ஆண் பெண் 'அது ' அவ்வளவு புனிதம்.? அக்கினியின் ஆசை.

கோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா பன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம்? சங்கர மடமா?

இவர் பெயர் நாராயண நமச்சிவாய சுவாமிகள் - ஊர் ஊராகக் கோயில்களைச் சுற்றி வருவதுதான் இவர் வேலையாம்!

மகாவிஷ்ணுவின் அவதாரமான வராகமூர்த்தி (பன்றி)க்கு பூஜை செய்வாராம். வராக மூர்த்தியாகிய பன்றிக்குப் படையல் என்ற பெயரால் சோறும் பழமும் வைத்தால் சரிபட்டு வருமா?அதற்கு வேண்டியதை வைத்துப் படையல் போட வேண்டியது தானே viduthalai/20080713/news
படிக்கவும்:
பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம். -புராணம்

அக்கினியின் ஆசை
ஒரு காலத்தில் சப்த ரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்குச் சென்று அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்னி பகவான் அந்த ஏழு ரிஷிப் பத்தினிகள் மீது காமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் கூறினானாம்.

ஆண்டவனான அக்னி தன் மனைவியிடம் ரிஷி பத்தினியிடம் காமுற்று இருப்பதைக் கூறியதுடன், தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படி கேட்டானாம். அவன் மனைவியும் சப்த ரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போலவே உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்.

ஆனால், ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லை என்றும் அதற்குக் காரணம் அருந்ததி ஆதி திராவிடப் பெண்மணி என்றும், காரணம் மேலும் தொடருகிறது.(அறிஞர் அண்ணா சொன்ன 100 குட்டிக் கதைகள் நூலில் இருந்து)
- காஞ்சி தி.இரமணன், சென்னை - 81
unmaionline.com/20080701/page11
-------------------------------------
கோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா பன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம்? சங்கர மடமா? THANKS: http://mathimaran.wordpress.com/2008/09/05/article-114/
--------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Monday, September 22, 2008

கடவுளைக் கற்பித்தவர்கள்.!! எத்தர்கள் பலவிதம் அம்மா பகவான் இந்த விதம்!!!

யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வரமுடியுது?

எத்தர்கள் பலவிதம் அம்மா பகவான் இந்த விதம்!!!

பூர்வாசிரமத்தில் கல்வி பகவான் என்று கூறிக் கொண்டு தமிழ்நாட்டு கும்மிடி பூண்டியிலிருந்து ஆந்திரா, மராட்டிய எல்லையான பெல்காம் வரை தன் அயோக்கியத்தனங்களை விரித்துச் சிறையில் மாட்டி இன்னும் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்துமத ஃபிராடு.

அம்மா பகவான் என்று பெயரை மாற்றிவைத்துக் கொண்ட எத்தன், கல்கி பகவான் என்பது கே.டி. பட்டியலில் பதிவாகி இருக்கிறதே, அதனால்!

ஆந்திராவில் தடா பகுதியில் (சென்னையிலிருந்து 50 மைல் தொலைவில்) 42 ஏக்கர் பரப்பில் பெரிய கோயில் கட்டி, திறப்பு விழா என்ற பெயரில் கும்பலைக் கூட்டி, ஆறு பேர் செத்துப்போய் விட்டனர்.

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மதிக்காமல் செயல்பட்டு ஆறுபேர் சாவுக்குக் காரணமான இந்த ஆள்மீது இ.பி.கோ. 304 இன்படி வழக்கு பதிவு செய்தார்களோ?விதிமுறைகளை மதியாமல் கட்டடம் கூட்டி 3 பேர் சாவுக்குக் காரணமான வணிகர்கள் தமிழ்நாட்டின் புழல் சிறையில்!

பக்தியின் பெயரால் எத்தனை சாவுக்குக் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் பாயாதோ? அம்மா பகவானிடம் தீட்சை பெறுவதுபற்றி வியந்து எழுதும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு விளக்குமா?
viduthalai/20080912/news
--------------------


கடவுளைக் கற்பித்தவர்கள்
ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை?

அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்?

எங்களால் மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வரமுடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையை பார்த்து ஏன் அத்தனை பரவசப்படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு, சிலையா மாறணும். அந்த கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கறாங்க?

நாங்கதானே? எங்கிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?

-பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி 11-6-2006 கல்கி இதழில்.
(கடவுளை உண்டாக்கியவர்கள் யார் என்று இப்பொழுது விளங்குகிறதா?)
viduthalai/20080808/news

Sunday, September 21, 2008

படம் " தனம்!".>< புண்படுகிறதோ! அப்போ கோபப்படாத பார்ப்பனர்கள், இப்போது கோபப்படுகிறார்களே!

இனியேனும் தெளிவு பெறுங்கள் தமிழர்களே, பார்ப்பான் தமிழன் இல்லை என்று! சமூக கொடுமையின் காரணமாக விபச்சாரி ஆக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம் " தனம்!"

எங்கள் தமிழர்களை எத்தனை படங்களில் ரவுடி கபாலிகளாக, கொலைக்காரர்களாக, விபச்சாரிகளாக காட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கோபப்படாத பார்ப்பனர்கள், இப்போது கோபப்படுகிறார்களே!

"விபச்சாரம்" வளர்ந்ததற்கு காரணம், ஆடவர்களின் ஆணவமேயாகும். பெண்கள் விஷயத்தில் மாத்திரம் "கற்பு" "பதிவிரதா தர்மம்" என்ற கட்டுப்பாடுகளை வலியுறுத்தி ஆண்கள் விஷயத்தில் வற்புறுத்தாமல் விட்டதனலாகும், அதோடு காதல் மணமில்லாமை, சொத்துரிமை இல்லாமை முதலிய சமூக கட்டுப்பாடுகளும் பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கியக் காரணமாயிருப்பனவாகும் என்றார் தந்தை பெரியார்.

அப்படி, சமூக கொடுமையின் காரணமாக விபச்சாரி ஆக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தனம்!

இந்த படத்தில் பார்ப்பனர்களை பற்றியும், ஜோதிடம், மூடநம்பிக்கைகள் பற்றியும் தவறான காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் இயக்குநருக்கு தொலை பேசியில் கொலை மிரட்டல் வருவதாக செய்திதாளில் பார்த்து, அப்படி என்னதான் இருக்கிறது. இப்படத்தில் பார்ப்போமே என்று பார்த்தோம். பிறகுதான் தெரிந்தது காரணம்!

நாங்கள்தான் பூலோக தேவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிகிற அக்கிரகாரவாசிகளின் மறுபக்கம் அருமையாய் காட்டப்பட்டிருந்தது. அவாள்களை இப்படத்தில் தவறாக காட்டி விட்டார் என்று துள்ளிக் குதிப்பவர்களுக்கு ஒரு கேள்வி!

எங்கள் தமிழர்களை எத்தனை படங்களில் ரவுடி கபாலிகளாக, கொலைக்காரர்களாக, விபச்சாரிகளாக காட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கோபப்படாத பார்ப்பனர்கள், இப்போது கோபப்படுகிறார்களே!

இனியேனும் தெளிவு பெறுங்கள் தமிழர்களே, பார்ப்பான் தமிழன் இல்லை என்று!

படத்தில், ஒரு விபச்சாரியை ஒரு பார்ப்பனப் பையன் திருமணம் செய்து கொள்கிறான். அதுவும் எப்படி தெரியுமா?

இவளை திருமணம் செய்து கொண்டால், வீட்டில் பணம் கொட்டும் என்று அந்த பார்ப்பன குடும்பத்து ஜோதிடன் ஒருவன் சொன்னதும், அந்த குடும்பமே இருவரின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறது.

அடடா! பேராசைக்காரனடா பார்ப்பான் அப்படி திருமணமாகி அக்கிரகாரம் வந்த அந்த பெண்ணை எதிர் வீட்டு அவாள்கள் பார்த்து ஜொள்ளு விட்டு கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் ஒரு வேளை பார்ப்பனர்களின் மனதை புண்படுத்துமோ(!)

அப்படியானால் எங்களுக்கு ஒரு சந்தேகம், அய்வருக்கும் தேவி, அழியாத பத்தினி என்று நீங்களே அளந்துவிட்ட மகாபாரத்தால் உங்கள் மனம் புண்படவில்லையா?

அவ்வாறு அக்கிரகாரத்துக்கு வந்த அந்த விபச்சார நாயகி தான் ஒரு விபச்சாரிதான் என்று வெளிப்படையாக அந்த குடும்பத்திடம் ஒப்புக் கொள்வதும்,

ஆனால் அந்த பார்ப்பன குடும்பம் தன் மருமகள் ஒரு விபச்சாரி என்று வெளியில் உண்மையை ஆச்சாரத்தின் காரணமாக சொல்லாதது மட்டுமல்ல அவள் நம்மவாள் தான் என்று எல்லோரிடமும் அள்ளி விடுவது போன்று அமைக்கப்பட்ட காட்சிகள்,

ஆச்சாரத்தின் பெயரினால் நடைபெறும் தில்லுமுல்லைவிட விபச்சாரம் அவ்வளவு கொடியது அல்ல போலும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
இப்படி அக்கிரகார வீதிகளில் புதைக்கப்பட்ட உண்மைகள் எத்தனையோ!

கோயில்களையும், பார்ப்பனியத்தையும் சாடுகின்ற இயக்குநரின் நுணுக்கமான காட்சிகளும், வசனங்களும் பார்ப்பனர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவை, மறுக்க முடியாத உண்மைகள்!

அப்படி திருமணமான ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதுவரை சந்தோசமாக இருந்த அந்த குடும்பம் அந்த குழந்தை பிறந்ததும் கஷ்ட நிலைக்கு தள்ளப்படுகிறது. மீண்டும் ஜோதிடனிடம் கேட்கிறார்.

அவன், இந்த குழந்தை ராசியில்லாத குழந்தை இதை கொன்றால் சரியாகிவிடும் என்கிறான். அதை கேட்டவுடன் அந்த பைத்தியக்காரப் பார்ப்பனக் குடும்பம் அந்த குழந்தையின் அம்மாவுக்கு தெரியாமல் அந்த பிஞ்சுக் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடுகிறது.

இதே போல் கள்ளிப்பால் கொடுத்து கொல்கிற காட்சி நிறைய படங்களில் வந்திருந்தாலும், ஒரு ஜோதிடன் சொல் கேட்டு பார்ப்பனக் குடும்பம் இப்படி செய்வது போன்ற காட்சி அமைத்ததால் தானோ என்னவோ இயக்குநருக்கு கொலை மிரட்டல்!

ஆணாதிக்க திமிரால் ஒரு நல்ல பெண் விபச்சாரி நிலைக்கு தள்ளப்படும் காட்சி இந்த சமூகத்தின் எதார்த்தமே! அயோக்கியனாக ஒரு ஜோதிடன், அவனிடத்தில் படித்த முண்டங்கள் கூடி நின்று கொண்டு தங்கள் எதிர்காலத்தை தேடுவது போன்ற காட்சிகளை பார்ப்பவர்கள்,

இனியேனும் இந்த ஜோதிடப் புரட்டினை புரிந்து கொள்வது நல்லது. எம்.ஏ. படித்தவன் கிளியிடம் எதிர்காலம் கேட்பதும்,

மனித உடல் தோன்றி எப்படி வளர்கிறது என்று படிக்கும் மருத்துவன் கைரேகையில் நம்பிக்கை கொள்வதும் இன்றைக்கும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன.

இக்காலத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் முயற்சியாய் வரும் இப்படம் பாராட்டத்தகுந்ததே, படத்தின் மய்யக்கருவின் அடிப்படையில்!

பார்ப்பனர்களுக்கு ஒரு வேண்டுகோள்! நீங்கள் எல்லோருமே சுத்தமானவர்கள், ஆச்சாரமானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று எங்களை இன்னும் நம்ப வைத்து கயிறு திரிக்க வேண்டாம்.

எங்களுக்கு தெரியும் உங்களுள் சிலரின் கதை! - - கா. எழிலரசன் செயங்கொண்டம் viduthalai/20080920/snews

Friday, September 19, 2008

விளக்கு பூசை மோசடி கோயில்

வணிகத்தின் வாடிக்கையாளர்கள் பெண்கள்தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நன்கு படித்து சுயமாகப் பொருள் ஈட்டும் பெண்கள் கோவிலுக்குச் செல்வது வெகுவாக குறைந்து வருகிறது. இவர்களை எப்படி ஈர்ப்பது என்று திட்டம் தீட்டிய பித்தலாட்டப் பார்ப்பனர்கள் பெண்களை கோவிலுக்கு இழுக்க நாள் தோறும் புதுப்புது மாய வலைகளை விரிக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் விளக்கு பூசை.

இந்த விளக்கு பூசை நிகழ்ச்சிக்கு ஒரு முகவர் இருக்கிறார். அவர் கோவில் அர்ச்சகர்களோடு தொடர்பு கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை பூசை நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இன்ன மாதம் இந்த ஊர் எனத் திட்டமெல்லாம் தயார் செய்து கொள்கிறார்கள். முதலாவது ஒரு ரசீது புத்தகம், விளக்கத் துண்டறிக்கை இதுதான் முதலீடு. ஒரு சீட்டின் விலை குறைந்தது ரூ. 100/-க்கு குறையாமல். சராசரியாக ஒரு கிராமம் என்றால் 500 சீட்டாவது விற்பனை ஆகிவிடும்.

அவரவர் (பெண்கள்) வீட்டிலிருந்து ஒரு குத்துவிளக்கு மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். நிகழ்ச்சி முடிந்து அதாவது பூசை முடிந்து திரும்பும் போது சீட்டு பெற்றவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட ஒரு பை, அதில் வழக்கம் போல பாதிமூடி தேங்காய், பழம், பூ....இந்தப் பூசை மோசடிக்கு ஏற்பாடு செய்யும் ஏஜெண்ட் (முகவர்) குறைந்தது 500 சீட்டு விற்பனை செய்திருந்தால் ரூ. 50,000 வசூல்.

இதில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு பாதி அளவு கட்டணம், மற்ற செலவு போக மீதம் உள்ளது முகவருக்கு கிடைக்கும்.முகவராக இருப்பவரும், பார்ப்பனப் புரோகிதர்களும் ஒரு நெட்ஒர்க் அமைத்துக் கொண்டு பூசை, சடங்குகள், கோயில் விழாக்கள் இல்லாத காலங்களில் - அதாவது வருமானம் இல்லாத காலங்களில் நவீன மோசடி சீசனை உருவாக்கி வருகிறார்கள்.
viduthalai/20080919/news

யாராவது இறந்துவிட்டால் தப்பு ( மேளம் ) அடிப்பது ஏன்?

பார்ப்பனர்கள் இறந்தவுடன் நேரடியாகச் சொர்க்கத்துக்குச் சென்று விடுகிறார்கள். அதனால் பார்ப்பனர் வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அவர்கள் வீட்டில் யாதொரு மேளமும் கொட்டுவதில்லை.

இந்து மதம் என்கிற வார்த்தை இல்லை. மிகப் பழைய பத்திரங்களில் ஒருவரைப் பற்றிச் சொல்லும் பொழுது சிவமதம் என்றோ, வைணவ மதம் என்றோ தான் குறிப்பிடப்பட்டிருக்கும். கிறிஸ்தவ மதமும்

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பத்திரங்களைப் பார்த்தால் இந்து மதம் என்கிற வார்த்தை இல்லை. மிகப் பழைய பத்திரங்களில் ஒருவரைப் பற்றிச் சொல்லும் பொழுது சிவமதம் என்றோ, வைணவ மதம் என்றோ தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கிறிஸ்தவ மதமும், முகம்மதிய மதமும் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க தங்களால் மட்டும் முடியாது என்பதை நன்கு உணர்ந்த பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக - அனைத்துச் சாதியினரையும் தங்களுடன் சேர்த்து இந்துக்கள் என்று கூறலாயினர். இந்துக்கள் என்போரின் பழக்க வழக்கங்கள் ஒன்றா என்றால், நிச்சயமாக இல்லை.

மனுதர்ம சாஸ்திரப்படி, ஆண் பார்ப்பனர்கள் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள்.

எனவே, அவர்கள் மற்ற வர்ணத்தாருக்குப் பூதேவர்கள். சத்திரியர், வைசியர், சூத்திரர், பெண்கள் (பார்ப்பனப் பெண்கள் உள்பட) பாவயோனியில் பிறந்தவர்கள்.

எனவே தான் பார்ப்பனப் பெண்கள் பூணூல் அணியக் கூடாது, வேதம் ஓதக் கூடாது, யாகம் செய்யக் கூடாது.

பார்ப்பனர்கள் உயர்ந்த ஜாதியானபடியால் அவர்கள் இறந்தவுடன் நேரடியாகச் சொர்க்கத்துக்குச் சென்று விடுகிறார்கள்.

அதனால் பார்ப்பனர் வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அவர்கள் வீட்டில் யாதொரு மேளமும் கொட்டுவதில்லை.

ஆனால், இதர வர்ணத்தவர் இறந்துவிட்டால், அவர் ஆவி வீட்டைச் சுற்றியே அலைவதாகவும் அதை விரட்டி சுடுகாடு மட்டும் கொண்டு செல்வதற்காக விகாரமாக மேளம் கொட்டி சுடுகாட்டின் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மேளம் கொட்டிச் சென்று பின் நிறுத்தி விடுவார்கள்.

மற்ற வர்ணத்தார் மற்றும் பெண்கள் இறந்தபின் நேரடியாகச் சொர்க்கத்திற்கும் போக முடியாது. அவர்கள் பூலோகத்தில் இருக்கும் பொழுது பார்ப்பனர்களுக்குச் சேவை செய்வதுடன் பார்ப்பனருக்கு நிறைய தர்மங்கள் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் பிறகு எப்போதாவது பிராமணனாக (அ) பார்ப்பனனாகப் பிறந்து பின் இறந்தால், அதன்பிறகு சொர்க்கத்தை அடையலாம்.

அதாவது, பார்ப்பனர் நீங்கிய இதர வர்ணத்தார் தங்கள் ஆயுளில் எவ்வளவு நல் ஒழுக்கத்துடன் இருந்து பிறருக்கு உதவி செய்தாலும், இறந்தவுடன் சொர்க்கம் செல்ல முடியாது.

(அப்படி ஒன்று இருந்தால்) மேலும், சொர்க்கத்திலும் பார்ப்பனர் தவிர வேறு வர்ணத்தாருக்கும் கதவு திறக்கப்பட மாட்டாது என்பது தெளிவு.
-ஆர்.டி. மூர்த்தி, திருச்சிராப்பள்ளி unmaionline.com/20080701/page21.

இந்த அநியாயத்தைப் பாரீர்! எங்களையும் வாழ வையுங்கள்?!!!!

1001 லிட்டர் பால் ஊற்றி சாமிக்கு அபிஷேகம் செய்தனராம். புதுச்சேரி அருகே பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நேற்று (4.8.2008) சிறப்பு பூஜை நடந்ததாம். அப்போது 1001 லிட்டர் பால் ஊற்றி சாமிக்கு அபிஷேகம் செய்தனராம்.

2004-05 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரத்துறை ஆய்வின்படி சராசரியாக 57.8 விழுக்காடு கர்ப்பிணிப் பெண்கள், 56.1 விழுக்காடு திருமணமான பெண்கள். 79.1 விழுக்காடு குழந்தைகள் இந்தியாவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர் என்று மக்களவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசு தெரிவித்துள்ளார் (தினமணி, 15.3.2007).

ஒரே ஆண்டில் உலக அளவில் மரணம் அடையும் குழந்தைகள் 1.25 கோடியாகும். அதில் இந்தியாவில் மட்டும் 25 லட்சம் குழந்தைகள் மரணம் அடைகின்றனர்.

முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் மரணம் அடையும் குழந்தைகள் இந்தியாவில் ஆயிரத்துக்கு 58 ஆகும். உலக அளவில் எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளில் 35 விழுக்காடு இந்தியாவில்தான்.

போதிய சத்துணவு கிடைக்காத கொடுமையால் ஏற்படும் மரணம் இது.இந்த யோக்கியதை உள்ள இந்தியாவில், குத்துக்கல்லு சாமிக்கு 1001 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் என்றால், இதைவிட ஈவு இரக்கமற்ற குரூரமான செயல் வேறு உண்டா?

பால் சத்துள்ள உணவு அல்லவா! அதை நாசப்படுத்தலாமா?

இத்தகைய பேர்வழிகளை கொலைக் குற்றத்துக்குச் சமமாக மதித்துத் தண்டனை கொடுக்கவேண்டாமா?

பக்தியின் பேரால் - உற்பத்தி நாசம் என்ற கொடுமையல்லவா இது? அத்தியாவசியப் பொருள் நாசத் தடுப்புச் சட்டம் என்ன செய்கிறது? நன்கு குறட்டை விட்டுத் தூங்குகிறதோ!
viduthalai/20080805/newsஎங்களையும் வாழ வையுங்கள்?!!!!சதீஸ்குமார்.

கடவுளுக்கு பாலாபிசேகம் குடத்தில் என்றாலும் ஒரு குழந்தையின் தொண்டை நனைக்குமோ?!

வளர்ந்தும் வளராத மனிதனா இல்லை இருந்தும் உணர்ந்திடாத புனிதனா

இதற்கு பகுத்தறிவு தேவை இல்லை சற்று இதயத்தில் ஈரம் இருந்தால் போதும்

எலும்பும் தோலுமாய் வேடம் பூண்டுஎதைச் சாதிக்கப் பிறக்கிறோம்...?

வாழும் வரை துயரம் கண்டுஎச்சில் விழுங்க சத்தைக்கூட இழக்கிறோம்...

எங்கள் பசிக்குமருந்து கண்டு உயிர் காக்கக் கேட்கவில்லை...
சிறிது உணவு தந்தால்

எங்கேனும் ஓர் ஓரம் (தெருவோரம்) வாழ்ந்திடுவோம்....

நாங்களும் வாழ்ந்திடுவோம்..உணவளித்த மனிதமேஎங்கள் கடவுளாகிப் போவதால்...

உங்கள் கடவுள் தெரிவதில்லை..தெரிந்து கொள்ளவும் தோணவில்லை...

சுருக்கமாய்ச் சொன்னால்நடமாடும் கடவுளை வணங்கும் ஜாதிகளானோம் நாங்கள்...

நாங்கள் இருப்பதும் இறப்பதும் இனி உங்களிடம்...

எங்கள் விதி எழுத வாய்ப்பிருக்கும்கடவுளாகிப் போன மனிதர்களே உங்களிடம்...

உயிர் போகும் நேரத்தில் உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்கிறோம்

பசிக்காகக் கையேந்தும் குரல் கேட்கும் போதெல்லாம் இந்த வரிகள் மனச்சலவையாய் வந்துபோகட்டும்...

பிஞ்சு வயிறுகள் பசி ஆறட்டும்...
நாங்கள் கேட்பதெல்லாம் திக்கற்ற எங்களின்உயிரை நாளை வரை தள்ளிப் போட உதவுங்கள்...
viduthalai/20080809/snews

Thursday, September 18, 2008

இந்தியச் சுதந்திரம் பகலில் கிடைக்கவில்லை; பூனை பேசுகிறதாம்! பாட்டுப் பாடுகிறதாம்! கேழ்வரகில் நெய்?:

இந்தியச் சுதந்திரம் இரவில்தான் கிடைத்தது. இதற்குள்ளும் ஒரு மூடநம்பிக்கை புதைந்து கிடக்கிறது.ஆக.15 (1947) சுதந்திரம் இந்தியாவுக்கு என்று சட்டம் இயற்றியாகி விட்டது.

நம் நாட்டு வைதிகக் குடுக்கைகள் சும்மா இருக்குமா?

பஞ்சாங்கத்தைப் புரட்டினார்கள்; அய்யய்யோ ஆபத்து, ஆபத்து என்று கூக்குரல் போட்டனர். அன்று அஷ்டமி ஆயிற்றே - அபசகுனம் ஆயிற்றே - அன்று வேண்டாம் சுதந்திரம்! என்று எகிறிக் குதித்தனர்.

சட்டம் எல்லாம் வந்தாயிற்று - இனி மாற்றத்திற்கு இடமில்லை என்று கறாராகப் பதில் வந்துவிட்டது.

என்ன செய்யலாம்? ஆதாயத்துக்காக அதற்கும் ஒரு குயுக்தி வைத்திருப்பார்களே!

நள்ளிரவு 12 மணிக்குத்தானே சுதந்திரம் வாங்குகிறோம். 12 மணி என்பது வெள்ளையர்களுக்கு வேண்டுமானால் நாள் பிறக்கும் நேரமாக இருக்கலாம். நமக்கெல்லாம் நாள் பிறப்பு என்பது விடியற்காலை 5 மணிதான். அப்படிப் பார்க்கும்போது நமக்கு முந்தைய நாள்தான் (ஆகஸ்டு 14) அன்றைக்கு அஷ்டமி கிடையாது என்று சமாதானம் சொல்லி மெழுகிவிட்டனர்.

இவ்வளவுக்கும் பார்த்தால் அஷ்டமி என்பது இந்துக் கடவுளான கிருஷ்ணன் பிறந்த நாள். அது (கோகுலாஷ்டமி) ஓ, கடவுள் பிறந்த நாளே கெட்ட நாளோ!
http://files.periyar.org.in/viduthalai/20080815/news01.html

பூனை பேசுகிறதாம்! பாட்டுப் பாடுகிறதாம்!

திருச்சியில் நடக்குது ஒரு கூத்து!
காலையில் எனது தொலை பேசியில் ஒரு நண்பர் (வில்லியம்) பேசினார். அவர் கூறு கையில், பொன்மலைப்பட்டி வ.உ.சி. தெருவில் வசிக்கும் பாபு வீட்டில் வளர்க்கப்படும் பெண் பூனை பேசுகிறது, பாட்டுப் பாடுகிறது என்று கூறினார்.

உடனே, நான் பாபு வீட்டிற்குச் சென்றேன். திருச்சி பொன்மலைப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி பெயர் கவுரி, மகள் சரண்யா. பாபு இரயில்வே பணிமனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளராகப் பணி யாற்றி வருகிறார். அவரது வீட்டில் ஒரே கும்பல்! ஆம் ஆண்களும், பெண்களும் வந்த வண்ணம் இருந்தார்கள். நம்ம மக்கள் தான் எங்கு எது நடந்தாலும் சொல்லப்படுகிற செய்தி உண்மையா? பொய்யா? என்று ஆராய்ந்து பார்க்க மாட்டார்களே,

ஆட்டு மந்தையாக வந்துவிடுவார்களே! நான் மேற் கொண்டு விசாரித்தபோதும் இந்தப் பூனைக்கு பெயர் பூசியாம். 3 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்கள். மேலும், இப் பூனை இரண்டு நாள்களாகத் தூங்காமல் ஒரு மாதிரி கத்திக் கொண்டே இருந்ததாம். அதைத் தூங்க வைக்க ஸ்ரீராம் ஸ்ரீராம் எனப் பாடினார்களாம். உடனே இந்தப் பூனையும் ஸ்ரீராம் ஸ்ரீராம் என பதிலுக்குப் பாடியதாம்.

இதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம். மேலும் பேச்சு கொடுத்தோம். நாங்கள் எது சொன்னாலும் பதிலுக்குத் திரும்பச் சொல்லுது என்று சொன்னார்கள். நான் உடனே அந்தப் பூனையை பெரியார் என்று சொல்லச் சொல்லுங்கள் என்று அந்த அம்மா கவுரியிடம் சொன்னேன்; சொல்ல மறுத்துவிட்டார்கள்.

செல்போனை கிட்ட வைத்துப் பேசச் சொன்னால் தான் பேசும், பாடும் என அந்த அம்மாவும் அவரது மகள் சரண்யாவும் புருடா விட்டார்கள். நான் சிறிது நேரம் அங்கே நின்று என்ன நடக்கிறது? என்று கவனித்து வந்தேன். அந்த செல்போனை எடுத்து விட்டால் - ஒரு சவுண்டும் வர மாட்டேங்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்த செல்போனில் பாடல், பேச்சு பதிவு செய்து (ரெக்கார்டிங்) வைத்துக்கொண்டு, அந்தப் பூனையிடம் கிட்ட கொண்டு போய், செல்போனை இயக்கி பாட விடுகிறார்கள். ஆனால், அந்தப் பூனை வாயே திறக்க மாட்டேங்கிறது.

ஆனால், அந்த அம்மா கவுரியோ வாயை திறக்காமல் தான் பாடுது! பேசுது! என மீண்டும் மீண்டும் அங்கு வரும் மக்களை முட்டாளாக்கி பெரும் கூட்டத்தைக் கூட்டி வேடிக்கைக் காட்டி வருகிறார்.

மேலும், அங்கு வரும் மக் களுக்கு மனிதனுக்கு ஆறறிவு, மிருகத்துக்கு அய்ந்தறிவு?

பூனை மிருகம். அது எப்படிப் பேசும் என நான் எவ்வளவோ தெளிவுபடுத்தியும், கேட்காமல் இன்னும் மூட நம்பிக்கையை விலை கொடுத்து வாங்கி மடி யில் கட்டிக்கொண்டு வாழும் இந்த பாழாய்ப் போன மக்க ளைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? என அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினேன்.

பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலச் சந்தர் அவர்களைச் சந்தித்து - மேற்கண்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அல்லது எங்களது அமைப்பு ரீதியாக அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரம் இதே இடத்தில் செய்வோம் எனக் கூறியதன் பேரில்,

உடனே சம்பந்தப்பட்ட நபர் (பாபு) அவரது மனைவி கவுரி, மகள் சரண்யா ஆகியோரை காவல் நிலைய ஆய்வாளர் அழைத்து - நான் அறிவியல் படித்தவன். இதையெல்லாம் நம்ப முடியாது. சும்மா வேடிக்கைக் காட்டிக் கொண்டு இருந்தால், அனைவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுவேன். உடனே வீட்டைக் காலி செய்து எங்கேயாவது போய் இருங்கள் என காவல் துறை ஆய்வாளர் பாலச்சந்தர் எச்சரித்ததற்குப் பிறகு உடனடியாக வீட்டைக் காலி செய்யும் வேலையில் இறங்கி உள்ளனர் பாபு குடும்பத்தினர்.- மா. செந்தமிழ் இனியன்திருச்சி
viduthalai/20080820/news


கேழ்வரகில் நெய்?: கேழ்வரகில் நெய் வடிகிறது; ஆமாம், நம்பித்தான் தொலைக்கவேண்டும்; இல்லையெனின் கடவுள் சாபம்தான் கிட்டும்.
பரமக்குடி அருகே மென்னத்தி என்னும் ஊரில் வீரமாகாளி கோயில், அந்தக் கோயில் சாமிக்கு ஒரு சிம்மவாகனம், என்ன ஆச்சரியம்! அந்த வாகனத்திலிருந்து பால் வடிந்ததாம். கிளப்பி விட்டார் ஒரு செய்தியைப் பூசாரி.

அவ்வளவுதான் ஆட்டு மந்தைகள்போல, பக்தர்கள் கூட்டம் - அதன்பின் கேட்கவா வேண்டும் - கோயில் வசூல் களை கட்டியது.

அம்மன் கண்ணில் கண்ணீர் வடிந்தது - அம்மன் கண்கள் அகலத் திறந்தன கோயில் சுவரில் ஏசுநாதர் உருவம் தெரிந்தது - பிள்ளையார் பால் குடித்தார் - வேப்பமரத்தில் பால்- இப்படி மத வியாபாரிகள் தங்கள் கைகளில் தயாராக வைத்துள்ள கைச் சரக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தவணை முறையில் கிளப்பி விடுவார்கள்.

அண்மைக்காலமாக வெளிவரும் தகவல்களும், புள்ளி விவரங்களும் கோயில்களுக்குப் பக்திச் சிரத்தையோடு வருவோர் எண்ணிக்கை சரிந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றன. இந்தக் கூனை நிமிர்த்த வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் இந்தக் கிளுகிளுப்பு விநோதச் சேதிகள்!

இதுபோன்ற அதிசயங்களை அள்ளி விடுகிறார்களே - அந்தக் காட்சிகள் ஏன் தொடருவதில்லை? ஒரு சில மணிகளிலே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓய்ந்துவிடுவது ஏன்?கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள், என்றுதான் கெடு வைத்துள்ளார்கள்.

இந்த மூடநம்பிக்கைகளுக்கு கெடுவாவது - மண்ணாங்கட்டியாவது. அடுத்த சில மணிநேரங்களிலேயே மரணம்தான்!
viduthalai/20080811/news

Wednesday, September 17, 2008

கடவுளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் போவார்களா?

ஏழுமலையான் - பத்மாவதி சிங்கப்பூரில் கல்யாணம்!பொம்பிளை கடவுளை ஆம்பிளை குளிப்பாட்டுகிறான்.

கடல் கடந்து வெளிநாடு சென்ற ஏழுமலையான்
தம்பதியினரை ஏற்றுக் கொள்கின்றனர்; வெளிநாடு சென்ற
அர்ச்சகரை திருப்பதி கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையே ஏன்?

தாம்பரம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவார்ந்த கேள்வி

சென்னை, ஆக. 12- சிங்கப்பூருக்குச் சென்ற திருப்பதி ஏழுமலை யானையும், அவனது துணைவியார் பத்மாவதியையும் திருப்பதியில் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் திருப்பதி கோவில் அர்ச்சகர் சாஸ்திரத்தை மீறி விமானத்தில் ஏறி வெளிநாடு சென்றார் என்பதற்காக அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையே ஏன்? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை மாநாட்டை (செப். 6,7) விளக்கி தாம்பரத்தில் 8-8-2008 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: திருப்பதி கோவிலில் நகைக்கொள்ளை

இங்கே வியாபாரம் செய்தது போதாது என்று திருப்பதி ஏழுமலையானை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து விட்டார்கள். சற்று நேரத்திற்கு முன்னாலே எங்களுடைய கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை சொன்னார் அல்லவா?

எப்படி ஏழுமலையான் பெயர் சொல்லி பதினைந்துலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட நகையை எப்படிக் கொள்ளையடித்தார்கள் என்பதை. இன்றைய விடுதலையில் தெளிவாக வந்திருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருக்கிறார்கள் மக்கள்.

பக்தர்கள் அதைப்பற்றி சிந்திப்பது இல்லை. காரணம் பக்தி வந்தால் புத்தி போய்விடும். புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்று தந்தை பெரியார் பொருத்தமாகச் சொன்னார்களே. அதன்படி பார்த்தால் சிங்கப்பூரிலே கம்ப்யூட்டர் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நவீன நகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏழுமலையான் - பத்மாவதி சிங்கப்பூரில் கல்யாணம்!

இங்கு இருக்கின்ற ஏழுமலையானை அவருடைய துணைவியார் பத்மாவதி சகிதமாக சிங்கப்பூருக்கு கடவுள் சுற்றுலா வந்தார். நாமெல்லாம் சிங்கப்பூருக்கு சுற்றுலாவுக்குப் போகின்றோம். சிங்கப்பூர் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்பதற்காகப் போகின்றோம். ஆனால் திருப்பதி ஏழுமலையானே சிங்கப்பூருக்குப் போனார். இதிலே வேடிக்கை என்னவென்றால் ஏழுமலையான் தரிசனம் பற்றி சிங்கப்பூரில் பக்கம், பக்கமாக விளம்பரங்கள் செய்திகளைப் போடுகிறார்கள்.

நம்மாட்கள் கம்ப்யூட்டரைப் படித்தாலும், விஞ்ஞானத்தைப் படித்தாலும்கூட, இவனுக்கு அறிவைப்பற்றிக் கவலை இல்லை. பக்தியின் மூலமாக இவன் மூளை மழுங்கி விடுகிறது என்பதற்கு அடையாளமாக அங்கே டாலர் கணக்கில் வசூல் செய்தார்கள்.

சிங்கப்பூரில் திருப்பதி லட்டாம்!

இங்கிருந்து முன்னாலேயே ஒரு பத்து பார்ப்பனர்களுக்கு மேலே ஏற்றுமதி செய்து திருப்பதி லட்டை அங்கே வந்துதான் பிடித்துக் கொடுத்தார்கள். லட்டு சிங்கப்பூர் லட்டே தவிர, திருப்பதி லட்டு அல்ல. மைசூர் போண்டா என்பார். நமது ஊரில்தான் செய்வார். பெயர் அதற்கு மைசூர் போண்டா. மைசூர் பாக் என்று சொல்லுவார்கள்.

அது இங்கேதான் செய்யப்பட்டிருக்கும். மைசூரிலிருந்து வருவதில்லை. ஆனால் மைசூர் போண்டா, மைசூர்பாகு என்று அழைப்பதிலே நாம் பெருமையடைகிறோம். ஆனால் அதே நேரத்திலே இதை செய்வதற்கென்று வந்து அதையும் ஒளிப்படம் பிடித்து போட்டவுடனே பல பேருக்கு, அங்கே உள்ள மற்ற மதத்தினருக்கும் வியப்பு.

என்ன வேடிக்கை! லட்டு சிங்கப்பூரிலும் கிடைக்கிறது.

திருப்பதி லட்டை திருப்பதிக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்தால் அதற்கு மகத்துவம். ஆனால் திருப்பதி லட்டு என்று சொல்லி அதை இங்கேயே செய்வதற்கு அதற்குப் பார்ப்பானை இறக்குமதி செய்து அவர்கள் கொள்ளையோ - கொள்ளை என்று அடித்த நேரத்திலே அவர்களுடைய உற்சவமூர்த்தி வந்தார். இதிலே இன்னொரு பெரிய செய்தி என்னவென்று சொன்னால் உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

பக்தி வியாபாரத்தை ஏற்றுமதி செய்கின்றான்

அமெரிக்காவுக்குச் சென்ற மூடநம்பிக்கையுள்ள தமிழர்கள் கோயில் கட்டி இங்கேயிருக்கின்ற அர்ச்சகர்களைக் கூப்பிடுகிறார்கள். ஏனென்றால் ஒரு டாலர் ஏறத்தாழ நாற்பது ரூபாய். அங்கே பெரிய, பெரிய பங்களாக்களை வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு இவன் கடவுள் வியாபாரத்தை பக்தி வியாபாரத்தை ஏற்றுமதி செய்து விட்டான். திருப்பதி கோவில்அர்ச்சகர் திரும்பி வரும்பொழுது அங்கேயிருக்கின்ற நிர்வாக அதிகாரி சொன்னார்:

அர்ச்சகரை ஏற்றுக்கொள்ள மறுப்பு.

உன்னை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ மறுபடியும் அர்ச்சகராக முடியாது. காரணம் என்னவென்றால் இந்து மதத்தினுடைய சாஸ்திரப்படி சனாதனிகள் கடல் கடந்து போனால் அவன் இந்து அல்ல.

எனவே இந்துவாக இருந்தால்தான் நீ திருப்பதி ஏழுமலை யானுக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகராக இருக்க முடியுமே தவிர, நீ எந்த நிமிடம் விமானம் ஏறினாயோ, கப்பல் ஏறினாயோ அப்பொழுதே நீ இந்துத் தன்மையை இழந்து விட்டாய்.

எனவே நீ இந்து அல்ல. ஆகவே மறுபடியும் நீ இந்த உத்தியோகத்திற்கு வர முடியாது என்று சொல்லி அவன் வழக்குப் போட்டு அந்த வழக்கிலும் அது அவனுக்கு விரோதமாக ஆக்கி, பிறகு இன்னொரு அரசாங்கம் வந்து அந்த அதிகாரி மாறி மறுபடியும் அவனுக்கு வாய்ப்புக் கொடுத்ததாக அண்மையிலே நான் ஆந்திராவுக்குச் சென்றிருந்த பொழுது அங்கே இதைச் சொன்னார்கள்.

ஏழுமலையான் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

திருப்பதி ஏழுமலையானுக்கு அர்ச்சகராக இருந்த ஒருவர் அவர் வெளிநாட்டிற்குப் போய் வந்து விட்ட பிற்பாடு அவரே அர்ச்சனை செய்ய முடியாது என்று ஆனவுடனே ஏழுமலை யானும், உற்சவமூர்த்தியும் விமானத்திலே ஏறிச் சென்று விட்டு திரும்பி வந்தால் அவர்களுடைய கடவுள் தன்மையை ஏற்றுக் கொள்ள முடியுமா?

அர்த்தமுள்ள இந்து மதக்காரர்கள் சிந்திக்க வேண்டும்

அர்த்தமுள்ள இந்து மதம் என்று பேசுகிறார்களே - தாங்கள் எல்லாம் இந்து முன்னணி என்று சொல்லுகின்றார்களே அவர்களைக் கேட்கிறோம். நீங்கள் வைத்திருக்கின்ற சாஸ்திரத் தின்படி கேட்கின்றேன் நாங்கள். அதைப் பொருட்படுத்த மாட்டோம். எங்களுக்கு அதிலே நம்பிக்கை இல்லை. அது வேறு செய்தி. கடவுள் என்று முதலில் ஏற்றுக் கொண்டால்தானே அதைப் பற்றி முதலில் சிந்தனை. நமது குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் கேட்டாள். அவள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்பட்ட பொதுவான பெண்.

கடவுளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் போவார்களா?

அந்தப் பெண் - பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டது. திருப்பதி கடவுள் ஏழுமலையானும், அவருடைய மனைவியும் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார்கள். இங்கு திருமணம் நடை பெறும் என்று சொன்னால் இந்த கடவுளர்கள் ஹனிமூனுக்கு ஆஸ்திரேலியாவுக்குப் போவார்களா? என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டது (கைதட்டல்).

இந்த மூடநம்பிக்கை நமது ஊரில் மட்டுமல்ல - வெளிநாட் டிலும் மூடநம்பிக்கை வியாபாரம் செய்வதற்காக இந்த ஏற்பாட்டை செய்தார்கள். எதற்காக இதைச் சொல்லுகின்றோம். கடவுளைப்பற்றி அவர்களுக்குத் தெரியும். எங்களைவிட உறுதியாக கடவுள் இல்லை என்று தெரிந்த சங்கதி யாருக்குத் தெரியும் என்றால் நமது நாட்டில் சங்கராச்சாரிகளுக்கும் இந்த அர்ச்சகர்களுக்கும் தான்.

பொம்பிளை கடவுளை ஆம்பிளை குளிப்பாட்டுகிறான்

ஆம்பிளை அர்ச்சகர், பொம்பிளை ஆசாமியைக் குளிப்பாட்ட ஆரம்பித்தானோ அதைப் பார்த்துக் கொண்டு ஆம்பிளை சாமியும் சும்மா இருந்ததோ அப்பொழுதே அவனுக்குத் தெரிந்து போய் விட்டது கடவுள் இல்லை என்று. (கைதட்டல்).

ஏனென்றால் இது சாதாரண வாழ்க்கையில் நடந்தால் சும்மாவிட மாட்டார்கள். யாருமே விட மாட்டார்கள்.

அவன் எவ்வளவு சோப்ளாங்கியாக இருந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.

அர்ச்சகர் அவன் கடவுளச்சியை குளிப்பாட்டுகிறான். அவனுக்குத் தெரியும் கடவுள் இல்லை என்று.

அதனால்தான் சாணியைப் பிடித்து வைத்தால்கூட சாமி என்று ஏற்றுக் கொள்வார்கள் என்று அவன் கருதுகின்றான். தோழர்களே இந்த மூடநம்பிக்கையை நம்ப வைப்பதால் மிகப் பெரிய கேடுதான் இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில் ஏன் மேல் ஜாதி - கீழ் ஜாதி?

உழைக்கின்ற நாம், பாடுபடுகின்ற நாம் கீழ்ஜாதி. இன்னொரு வன் உழைக்காதவன் மேல் ஜாதி என்று சொன்னால் இந்த அமைப்பை மாற்றுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா? இல்லையா? ஆயத்தப்படுத்திக் கொள்ளக் கூடிய அளவிற்கு வந்தோமா என்றால் இல்லை. ஏன்? என்ன காரணம்? அது நீங்களும், நானும் செய்த ஏற்பாடு அல்ல. பின் எப்படி அந்த ஏற்பாடு வந்தது?

எங்களை மேல்ஜாதியாகப் படைத்தவன் பகவான் என்று சொன்னார்கள். என்னை கீழ்ஜாதியாகப் படைத்ததும் ஆண்ட வன் என்று சொன்னான். அப்படியானால் அந்த ஆண்டவனை நம்பிக் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்கின்ற வரையில் அது ஆண்டவன் செய்த ஏற்பாடே தவிர, மனிதன் செய்தது அல்ல என்று சொன்னவுடனே தான் தந்தை பெரியார் அந்த இடத்தில் தான் மெயின் சுவிட்ச் இருக் கிறது - அங்கே கையை வை என்று சொல்லித்தான் கடவுளை மற, மனிதனை நினை. கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று சொன்னார். (கைதட்டல்).

எவ்வளவு விபத்துக்கள்?

உங்களுக்கு இங்கே திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு நோட்டிஸ் கொடுத்திருப்பார்கள். எத்தனை விபத்துக்கள் நடந்திருக்கின்றன என்ற புள்ளி விவரம் அந்த நோட்டிசில் இருக்கிறது. தினமும் விபத்து நடக்கிறது. ஆனால் ஒருவரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லையே.

பக்தர்கள் அய்ந்து பேர் அய்யப்பன் கோவிலுக்குப் போகிறார் கள். அதே போல பக்தர்கள் திருப்பதி கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டுத் திரும்புகிறார்கள். அப்படி கோவிலுக்குப் போய்விட்டு திரும்புகிறவர்கள் நான்கு பேர் விபத்துக்குள்ளாகி சாகிறார்கள். அவர்கள் செத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைய மாட்டோம்.

பார்ப்பனர் உயிரையும் மதிக்கின்றவர்கள் நாங்கள்

ஏனென்றால் அவர்களும் நம்மாட்கள்தான். பாப்பான் உயிர் போனாலும் அவனும் மனிதர்தானே என்று கவலைப்படக் கூடியவர்கள் நாங்கள்.

அப்படியிருக்கின்ற பொழுது, மனிதர் உயிர் பலியாகி விடக் கூடாது என்று மனிதநேயத்தோடு நினைப்பவர்கள் நாங்கள். சங்கராச்சாரியார்கள் மட்டும்தான் நாத்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாது. அவன் சாக வேண்டும் என்று சொன்னவர்கள் அவர்கள். ஆகவே மனிதநேயம் இங்கே இருக்கிறதா? அங்கே யிருக்கிறதா? என்பதை நீங்கள் நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

மற்றவர்கள் என்ன ஆதீனம்?

நம்மாள்களுக்கு எவ்வளவு அறிவு துருபிடித்திருக்கிறது பாருங்கள். அய்த்து பேர் கோவிலுக்குப் போனார்கள். நான்கு பேர் விபத்தில் இறந்து விட்டார்கள். ஒருவர் படுகாயம் அடைந்து அவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.

ஒருவர் மட்டும் உயிர் தப்பினார் என்றால் அவர் தெய்வாதீன மாக உயிர் தப்பினார். அப்படியானால் இறந்து போன மற்றவர் கள் எல்லாம் என்ன ஆதீனம்? மற்றவர்களை ஏன் காப்பாற்ற வில்லை அந்தத் தெய்வ ஆதீனம்?

பாபர் மசூதியை இடித்ததன் விளைவு

மனிதர்கள் சிந்தித்தால், இதில் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த மூடநம்பிக்கைகளைக் காட்டி ஒவ்வொரு ஆளையும் பிரித்து வைத்து விட்டான். பக்தி மனிதர்களை ஒன்றுபடுத்தவில்லை. கடவுள் மனிதர்களை ஒன்றுபடுத்தவில்லை. ஏனென்றால் என் கடவுள் வேறு என்கிறான். உன் கடவுள் வேறு என்கிறான். முஸ்லிம் கடவுள் வேறு. கிறிஸ்தவக் கடவுள் வேறு. இந்துக் கடவுள் வேறு.

பாபர் மசூதியை இடித்ததினுடைய விளைவு தானே உலகம் பூராவும் இவ்வளவு பெரிய தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது. தீவிரவாதம் மதத் தீவிரவாதம் தான். மதத்தில் சொல்லிக் கொடுத்து விட்டான். நீ உன் மதத்தைப் பரப்ப வேண்டுமானால் தீவிரவாதத்தைப் பின்பற்று என்று சொல்லிக் கொடுத்து விட்டான். viduthalai/20080812/news 17