Followers

Saturday, July 5, 2008

நிர்வாணச் சாமியார்கள்.

திகம்பர சமணத் துறவிகள் என்று அழைக்கப்படும் நிர்வாணச் சாமியார்கள் பத்து பேர் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துள்ளனர்.

மக்கள் நடமாடும் இடங்களில் பட்டப் பகலில் அவர்கள் நிர்வாணமாகத் திரிகிறார்கள்.கேட்டால் தர்மம் செழிக்கவும், ஆத்மாவின் சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்களாம். மதப் போர்வை போர்த்திக் கொண்டு காட்டு விலங்காண்டித்தனமாய் மக்கள் மத்தியில் நடமாடுவதை தமிழகக் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.

கும்பமேளாச் சாமியார்களும், திகம்பரச் சாமியார்களும் வட மாநிலங்களில் நிர்வாணமாகத் திரிவதுண்டு, அந்தப் பகுதி மக்களின் கலாச்சாரம் எப்படியோ போகட்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் அத்தகைய அநாகரிகமான ஆபாசமான நடமாட்டத்தை அனுமதிக்க முடியாது. தந்தை பெரியாரால், அவர்கள் கண்ட இயக்கத்தால் மக்கள் மத்தியில் பகுத்தறிவுத் தீ வளர்க்கப்பட்ட பூமி இது. மதத்தின் பெயரால் ஆபாசமாக நடமாடுவதைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதற்கு முன் பலமுறை அப்படி தமிழ்நாட்டில் அவர்கள் நிர்வாணமாக வந்தபோது திராவிடர் கழகத்தால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுண்டு.

அந்த அளவில் அவர்கள் தங்கள் நடவடிக்கையைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கள் ஆபாசக் காட்சியை அரங்கேற்றம் செய்ய முற்பட்டுள்ளனர்.

இந்தச் சாமியார்களைச் சுற்றிப் பெண்கள் நிற்பதும் அவர்களுக்கு இந்த நிர்வாணச் சாமியார்கள் ஆசீர்வாதம் செய்வதும் படுவெட்ககரமான காட்சியாகும்.பக்தி என்று வந்து விட்டால் புத்தி மட்டும் போகவில்லை; மானமும்கூட கப்பலேறி விடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

சில பகுதிகளில் இவர்களுக்குப் பாலாபிஷேகம் செய்யப்படுவதும், அவர்களின் உடலில் வழிந்து ஆண் குறி வழியாக சிந்தும் பாலினைப் பெண்கள் எடுத்துப் புசிப்பதுமான கேவலம் நடைபெறுவதாகத் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

நாம் 2008-ஆம் ஆண்டில்தான் நின்று கொண்டு இருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது.

நமது கழகத் தோழர்கள் இந்த நிர்வாணச் சாமியார்களைக் கண்காணிக்க வேண்டும். தங்கள் பகுதியில் அவர்கள் ஊர்வலமாக வருவதாக நம்பத் தகுந்த முறையில் தகவல் கிடைத்தால், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து விட்டு, அத்தகைய ஆபாச நிர்வாண ஊர்வலம் நடை பெறாமல் தடுக்கும் வேலையை வன்முறைக்கு இடமின்றிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிர்வாணச் சாமியார்கள் ஆத்மப் பரிசோதனை செய்வதாகயிருந்தால் அதனை நான்கு சுவர்களுக்குள் தாராளமாகச் செய்து கொள்ளட்டும்! பட்டப் பகலில், மக்கள் நடமாடும் பகுதியில் நிர்வாணமாக வருவது சட்டப்படி குற்றமாகும்.

மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள் நிர்வாணமாக நடமாடினால்கூட அதனை அனுமதிக்காத காவல்துறை இந்த நிர்வாண ஆசாமிகளை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.

பகுத்தறிவால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணில் இத்தகைய கேவலங்களை அனுமதிக்க ஆரம்பித்தால், சிறுகச் சிறுக வடநாட்டுக் கும்பமேளாச் சாமியார்களும் இங்கு வர ஆரம்பித்து விடுவார்கள்.

இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.உலக அமைதி நிர்வாணச் சாமியார்களால் கிட்டப் போவதில்லை.

ஜார்ஜ் புஷ்ஷும், பின்லேடனும் இந்த நிர்வாணப் பேர் வழிகளின் பிரார்த்தனையால் திருந்தப் போவதில்லை.

இன்னும் சொல்லப் போனால் கடவுளிடம் அனுமதி பெற்றுதான் ஈராக்மீது போர் தொடுத்ததாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.அந்தக் கடவுளிடமே அனுமதி பெற்று நடத்தப்படுவதாகக் கூறப்படும் போரை, இந்த நிர்வாணச் சாமியார்கள் வேறு எந்தக் கடவுளிடம் சொல்லித் தடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

காவல்துறைத்தலைமை இயக்குநரே (னுழுஞ) அவசரமாக அனைத்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் களையும் தொடர்பு கொண்டு நிர்வாண ஊர்வலத்தைத் தடை செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.
http://viduthalai.com

No comments: