Followers

Tuesday, July 1, 2008

இந்து வெறியர் பால்தாக்கரே சட்டத்திற்கப்பாற்பட்டவரா?

சிவசேனா தலைவரான பால்தாக்கரே - ஓர் இந்து வெறியர் - மகாராட்டிரத்தில் மகாராட்டிரர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது; வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறி வருவதோடு மட்டுமல்லாமல்,

பல காலகட்டங்களிலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்மீது வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறுவதற்குத் தூண்டும் சக்தியாகவும் இருந்து வந்திருக்கிறார்.

இந்துத்துவா தற்கொலைப் படை ஒன்றை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

சங்பரிவார் என்றாலும், சிவசேனா என்றாலும் அவை வன்முறையின் தத்துப் புத்திரர்கள் என்றாலும், அதிகாரப் பூர்வமாக இப்படி ஒரு படையை அமைப்பது என்பது, நாட்டின் அமைதிக்கும், சக வாழ்வுக்கும் கடுமையான சவாலாகும் என்பதில் அய்யமில்லை.

எரியும் நெருப்பில் எண்ணெய்க் குடத்தைக் கவிழ்ப்பதற்கு ஒப்பாகும்.1966-67-களில் தமிழர்களை மும்பையிலிருந்து விரட்டியடிக்கக் காரணமாக இருந்தவர் அவர்.

அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த எதிர்ப்புக்குரல் அக்கூட்டத்தின் வாலை அடக்கச் செய்தது.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து 1993 இல் மும்பையில் பெரிய இனக்கலவரம் நடைபெற்றதற்கும், ஆயிரக்கணக் கான சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், பிற இனத்தவர்களின் வணிக நிறுவனங்கள் தீக்கு இரையானதற்கும் காரணமாக இருந்தது - சிவசேனாதான்;

அதற்குக் கிரியா ஊக்கியாக இருந்தவர் சாட்சாத் பால்தாக்கரேதான்.

மும்பைக் கலவரம் குறித்து நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன். அந்தக் கலவரத்திற்குக் காரணமாக சிவசேனாவும், அதன் தலைவர் பால்தாக்கரேயும் இருந்திருக்கின்றனர் என்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் எழுதப்பட்ட கட்டுரைகளும், தலையங்கங்களும் வன்முறைக்குக் கொம்பு சீவி விட்டன என்றும் ஆணையத்தின் அறிக்கை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததே - அவற்றின்மீது உருப்படியான நடவடிக்கைகள் இது வரை எடுக்கப்பட்டது உண்டா?

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதில், சிவசேனா தலைவருக்கு மட்டும் விதி விலக்கா?தன்னைத் தாதாவாக வரித்துக்கொண்டு, தட்டிக் கேட்க யாரும் கிடையாது என்கிற மமதையில் அவரின் செயல் பாடுகள் அமைந்துள்ளன.

அரசுகளும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்குவதால், அவரின் நடவடிக்கைகள் அத்துமீறிச் சென்றுகொண்டு இருக்கின்றன.அவருக்கு இருக்கும் அதே கண்ணோட்டம் தமிழர்களுக்கு வந்தால் அதன் விளைவு என்ன என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

தமிழ்நாட்டின் மொத்த வணிகம் முழுமையும் தம் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்?

சென்னை போன்ற தலை நகரங்களில் ஓடும் ஆட்டோக்களுக்கும், வாடகை வாகனங்களுக்கும் உண்மையில் சொந்தக்காரர்கள் யார்?

ஒரு காலத்தில் சவுகார்ப்பேட்டை என்ற ஒரு பகுதி மட்டும் வடநாட்டுக்காரர்கள் வாழும் பகுதி என்று இருந்து வந்தது. இப்பொழுது சென்னை முழுமையுமே சவுகார்ப்பேட்டைகளாக உருவெடுத்து விட்டனவே - இதைப்பற்றியெல்லாம் பிரச்சினை எழுப்பிட நம்மால் முடியாதா?

எந்த ஒரு செயலுக்கும் எதிர் வினை உண்டு என்ற பால பாடத்தைக்கூடத் தெரிந்துகொள்ளாமல், தூங்கும் புலியை இடர ஆசைப் படலாமா?

தமிழ்நாட்டில் நியாயமான மொழி உணர்வு, இன உணர்வு, கலாச்சாரங்கள்பற்றிப் பேசினால், எழுதினால், அதற்குப் பிரிவினை முத்திரை குத்தி, சட்டம் என்ன செய்கிறது என்று சல்லடம் கட்டி ஆடும் பார்ப்பன ஊடகங்கள் பால்தாக்கரேயின் அறிவிப்பு குறித்து அய்ம்பொறிகளையும் பொத்திக் கொண்டு அடைகாத்துக் கொண்டிருப்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.பால்தாக்கரேயின் அறிவிப்பின்மீது சட்ட ரீதியான நடவ டிக்கை எடுக்க மாநில, மத்திய அரசுகள் முன்வரவேண்டும். இல்லையென்றால், "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்" என்ற நிலை நாடெங்கும் உருவாகிவிடும் - எச்சரிக்கை!viduthalai.com
-----------------------------------------------
கணினி வேண்டாம்! கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே !! ?? இந்த பதிவை கண்டுவிட்டு ஒரு கும்மி பதிவு போட்டுக் கும்மியடிக்கிறது பார்ப்பனீயம்.படியுங்கள்>நம்புவதற்கு கஷ்டமான செய்தி ஒன்றை படித்தேன்http://dondu.blogspot.com/2008/06/blog-post_30.html

No comments: