Followers

Sunday, July 20, 2008

ரஜினி மீது பாயும் இந்து முன்னணி ராமகோபாலன்

இந்து முன்னணியின் அமைப்பாள ரான திருவாளர் ராம.கோபாலன் திடீர் என்று நடிகர் ரஜினிகாந்தின்மீது பாய்ந்திருக்கிறார். மதமாற்றத்துக்குத் துணை போகிறாராம் ரஜினி!

புதிராகத்தான் இருக்கும். ராம கோபாலன் கூறுவதைக் கேட்டால் சிரிப்பாகத் தான் இருக்கும்.

இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமை யார் பற்றி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மறை மாவட்டம் ரூ.100 கோடி செலவில் திரைப்படம் எடுக்கப் போகிறதாம்.. அதில் திருவள்ளுவராக நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக திருவாளர் ராமகோபாலன் கேள்விப் பட்டு கொப்பளித்து எழுந்துள்ளார்.

இயேசுவின் சீடரான புனித தோமையார் இந்தியாவுக்கு வரவே யில்லை. அவர் சென்னைக்கு வந்தார்; திருவள்ளுவரைச் சந்தித்தார். பரங்கி மலையில் நரபலி ஆசாமிகளால் கொல்லப்பட்டார் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று திருவாளர் ராம கோபாலன் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் என்று `குமுதம் ரிப்போர்ட்டர் (17.7.2008) வெளிப்படுத்தியுள்ளது.


டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்றவர்கள் எல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு பேசுகிறாராம் திருவாளர் ராமகோபால வாள்!

புனித தாமஸ் மலை என்று பெயர் மாற்றியது. அநீதியானது மட்டுமல்ல, அது ஒரு கட்டுக்கதையும்கூட; அதுபோல திருக்குறளில் கிறிஸ்துவ கருத்துகள் உள்ளன என்பதும் அபத்த மான ஒன்று. அது தொடர்பான போலி ஆராய்ச்சிகளை அருணவேல் முதலியார் என்பவர் அவரது புத்தகத்தில் கண்டித்துள்ளார் என்றெல்லாம் முடி பிளந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வரலாற்று மோசடிப் படத்தில் ரஜினி திருவள்ளுவராக நடிக்கக் கூடாது. இந்தப் படம் மூலம் மக்களை மத மாற்றம் செய்ய பாதிரியார்கள் திட்டமிட்டுள்ளனர். `புனித தோமை யார் படத்தில் ரஜினி நடித்தால் மத மாற்றத்துக்கு அவர் துணை போய் விடுவார். இதன் மூலம் ரஜினியைச் சாக்கடையில் தள்ளிவிடப் பாதிரியார்கள் முயற்சிக்கிறார்கள் என்றெல்லாம் வாய்வந்த போக்கில் உளறிக் கொட்டியிருக்கிறார். இந்தப் படம் வந்தால் கடுமையாக எதிர்ப்பார் களாம்; தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியையும் நாடுவார்களாம்.

ராம கோபாலன் கூற்றை மறுத்து அருட் தந்தை பால்ராஜ் லூர்துசாமி கூறிய கருத்துகளையும் `குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ளது.

`புனித தோமையார் என்ற இயேசு வின் சீடர் இருந்தாரா? அவர் இந்தியா வந்தாரா? படுகொலை செய்யப்பட் டாரா? என்கிற கேள்விகளை எழுப்பி அதுகுறித்து விவாதங்களில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்கட்டும்.

கிறித்துவத்தின்மீதும், `தோமையார் மீதும் விவாதங்களை வைக்கும் இந்து முன்னணி அமைப்பாளர் அதற்கான தகுதி உடையவர்தானா? என்பதுதான் அடிப்படையான கேள்வி ஏன்? முதல் கேள்வியும்கூட!

வரலாற்று ஆசிரியர்களின் துணை கொண்டு, கோதாவில் குதிக்கின்ற அவரை ஒரே ஒரு கேள்வி மூலம் நெட்டித் தள்ளிவிட முடியும்.

வரலாற்று ஆதாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படுகிறாரே - அதுபோன்றே வரலாற்று ஆதாரங் களைக் காட்டி ராமன் பிறப்பையும் ராமன் வரலாற்றையும் ஆய்வு செய் யும்பொழுது மார்பு நிமிர்த்தி கருத் துக்குக் கருத்து மோதலுக்குத் தயாராக இருந்ததுண்டா!

அவர்கள் போற்றும் சுவாமி விவேகானந்தரிலிருந்து நீலகண்ட சாஸ்திரியார், பண்டித ஜவகர்லால் நேரு உள்பட அனைவரும் இராமா யணம், மகாபாரதம் கட்டுக்கதை என்று எழுதியிருக்கிறார்களே - அதனை ஏற்றுக் கொள்கிறாரா திருவாளர் ராம. கோபாலன்? `பஞ்ச தந்திரம் `அரேபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை தான் இராமாயணமும், மகா பாரதமும் என்று பண்டித ஜவகர்லால் நேரு (Discovery of India பக்கம் 76-77) எழுதியிருக்கிறாரே

"இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான்; வால்மீகி யின் கற்பனையின் விளை வாகவே இராமாயணம் உண்டாயிற்று" - என்று வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ் திரியாரின் ஆய்வுக்கு அக்கிர ராமகோபாலனின் பதில் என்ன?
யாரோ டாக்டர் கிருஷ்ண சாமி அய்யங்கார் எழுதியுள்ளார் என்று தோமையாரை மறுக்கும் இந்தக் கூட்டம் - வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியின் கூற்றை ஏற்று இராமன் கற்பனை, இராமா யணம் கற்பனைக் காவியம் என்று ஏற்றுக் கொள்ளத் தயாரா?

இப்படியெல்லாம் அறிவுப்பூர்வமாக வினாவைத் தொடுக்கும் நேரத்தில் திருவாளர் ராம. கோபால அய்யர்வாள் கூட்டம் தயா ராக ஒரு பதிலை வைத்துள் ளது. இந்த விஷயத்தில் எல்லாம் வரலாறு - கிரலாறு என்று பேசக் கூடாது. அது `இந்துக்களின் நம்பிக்கை என்று வழுக்கி ஓடுவதில்லையா?

அதே பதிலை தோமையார் விஷயத்தில் கிறித்தவர்கள் சொன்னால், ராம. கோபாலன் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்.
மனித சமுதாயமே தோன் றாத கால கட்டத்தில் ராமன் பதினேழரை லட்சம் வருடங் களுக்குமுன் பாலம் கட்டி னான் - அதுதான் சேதுபந் தனம்! அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடாவடித் தனம் பேசுவோர்கள் - இன்னொரு மத சம்பந்தமான விஷயம் என்று வருகிறபோது மட்டும் குறுக்குக் கேள்வி களையும் நெடுக்குக் கேள்வி களையும் கேட்க உரிமை படைத்தவர்கள்தானா?
அயோத்தியில் 450 ஆண் டுகளுக்குமுன் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறது.


அதனை இடித்த இந்து ராம கோபாலன் வகையறாக் கள் அது ராமன் பிறந்த இடம் என்கின்றன ராமன் வரலாற்று மாந்தன் அல்ல - புராணக் கற்பனைப் பாத்திரம்

புராணக் கற்பனைப் பாத் திரத்துக்காக ஒரு வரலற்றுச் சின்னத்தை இடித்தவர்கள் தோமையார் விஷயத்தில் வரலாற்று ஆவணங்கள் பற்றிப் பேச அருகதை உடை யவர்கள்தானா?


வரலாறு தங்களுக்கு உதவாத தருணத்தில் மட்டும் நம்பிக்கை என்னும் முக்காட் டுக்குள் ஒளிந்து கொள்வார்கள்.


``பேச நா இரண்டுடையாய் போற்றி! என்று ஆரியப் பார்ப்பனர்கள்பற்றி அபிடுபே வருணித்ததை அறிஞர் அண்ணா அவர்கள் அருந் தமிழில் ஓவியம் தீட்டிக் காட்டினார்.


பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அது என் றென்றைக்கும் பொருந்தக் கூடியதுதானே!

நடிகர் ரஜினிக்குத் தொழில் சினிமாவில் நடிப்பது; அதுவும் திருவள்ளுவர் பாத்திரத்தை அவர் ஏற்று நடிப்பது என்பது அவருக்குப் பெருமை சேர்க்கக் கூடியதே! அவரைப் போய் ராம. கோபாலன் மிரட்டுகிறார்.


படம் வரத்தான் போகிறது. அப்பொழுது பார்ப்போம் ராமகோபாலன் படை ஜெயிக்கிறதா? - ரஜினி படை ஜெயிக்கிறதா? என்று. viduthalai.com

Saturday, July 5, 2008

நிர்வாணச் சாமியார்கள்.

திகம்பர சமணத் துறவிகள் என்று அழைக்கப்படும் நிர்வாணச் சாமியார்கள் பத்து பேர் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துள்ளனர்.

மக்கள் நடமாடும் இடங்களில் பட்டப் பகலில் அவர்கள் நிர்வாணமாகத் திரிகிறார்கள்.கேட்டால் தர்மம் செழிக்கவும், ஆத்மாவின் சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்களாம். மதப் போர்வை போர்த்திக் கொண்டு காட்டு விலங்காண்டித்தனமாய் மக்கள் மத்தியில் நடமாடுவதை தமிழகக் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.

கும்பமேளாச் சாமியார்களும், திகம்பரச் சாமியார்களும் வட மாநிலங்களில் நிர்வாணமாகத் திரிவதுண்டு, அந்தப் பகுதி மக்களின் கலாச்சாரம் எப்படியோ போகட்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் அத்தகைய அநாகரிகமான ஆபாசமான நடமாட்டத்தை அனுமதிக்க முடியாது. தந்தை பெரியாரால், அவர்கள் கண்ட இயக்கத்தால் மக்கள் மத்தியில் பகுத்தறிவுத் தீ வளர்க்கப்பட்ட பூமி இது. மதத்தின் பெயரால் ஆபாசமாக நடமாடுவதைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதற்கு முன் பலமுறை அப்படி தமிழ்நாட்டில் அவர்கள் நிர்வாணமாக வந்தபோது திராவிடர் கழகத்தால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுண்டு.

அந்த அளவில் அவர்கள் தங்கள் நடவடிக்கையைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கள் ஆபாசக் காட்சியை அரங்கேற்றம் செய்ய முற்பட்டுள்ளனர்.

இந்தச் சாமியார்களைச் சுற்றிப் பெண்கள் நிற்பதும் அவர்களுக்கு இந்த நிர்வாணச் சாமியார்கள் ஆசீர்வாதம் செய்வதும் படுவெட்ககரமான காட்சியாகும்.பக்தி என்று வந்து விட்டால் புத்தி மட்டும் போகவில்லை; மானமும்கூட கப்பலேறி விடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

சில பகுதிகளில் இவர்களுக்குப் பாலாபிஷேகம் செய்யப்படுவதும், அவர்களின் உடலில் வழிந்து ஆண் குறி வழியாக சிந்தும் பாலினைப் பெண்கள் எடுத்துப் புசிப்பதுமான கேவலம் நடைபெறுவதாகத் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

நாம் 2008-ஆம் ஆண்டில்தான் நின்று கொண்டு இருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது.

நமது கழகத் தோழர்கள் இந்த நிர்வாணச் சாமியார்களைக் கண்காணிக்க வேண்டும். தங்கள் பகுதியில் அவர்கள் ஊர்வலமாக வருவதாக நம்பத் தகுந்த முறையில் தகவல் கிடைத்தால், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து விட்டு, அத்தகைய ஆபாச நிர்வாண ஊர்வலம் நடை பெறாமல் தடுக்கும் வேலையை வன்முறைக்கு இடமின்றிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிர்வாணச் சாமியார்கள் ஆத்மப் பரிசோதனை செய்வதாகயிருந்தால் அதனை நான்கு சுவர்களுக்குள் தாராளமாகச் செய்து கொள்ளட்டும்! பட்டப் பகலில், மக்கள் நடமாடும் பகுதியில் நிர்வாணமாக வருவது சட்டப்படி குற்றமாகும்.

மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள் நிர்வாணமாக நடமாடினால்கூட அதனை அனுமதிக்காத காவல்துறை இந்த நிர்வாண ஆசாமிகளை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.

பகுத்தறிவால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணில் இத்தகைய கேவலங்களை அனுமதிக்க ஆரம்பித்தால், சிறுகச் சிறுக வடநாட்டுக் கும்பமேளாச் சாமியார்களும் இங்கு வர ஆரம்பித்து விடுவார்கள்.

இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.உலக அமைதி நிர்வாணச் சாமியார்களால் கிட்டப் போவதில்லை.

ஜார்ஜ் புஷ்ஷும், பின்லேடனும் இந்த நிர்வாணப் பேர் வழிகளின் பிரார்த்தனையால் திருந்தப் போவதில்லை.

இன்னும் சொல்லப் போனால் கடவுளிடம் அனுமதி பெற்றுதான் ஈராக்மீது போர் தொடுத்ததாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.அந்தக் கடவுளிடமே அனுமதி பெற்று நடத்தப்படுவதாகக் கூறப்படும் போரை, இந்த நிர்வாணச் சாமியார்கள் வேறு எந்தக் கடவுளிடம் சொல்லித் தடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

காவல்துறைத்தலைமை இயக்குநரே (னுழுஞ) அவசரமாக அனைத்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் களையும் தொடர்பு கொண்டு நிர்வாண ஊர்வலத்தைத் தடை செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.
http://viduthalai.com

Friday, July 4, 2008

'பேராசைக்காரனடா பார்ப்பான்!'

'பேராசைக்காரனடா பார்ப்பான்...நம்மைப் பிச்சுப் பணங்கொடு எனத் தின்பான்'
என்று அன்று பார்ப்பனப் பாரதியாரே பாடினார்!

21 ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர் மாறவில்லை என்பதற்கு, உள்ளங்கை நெல்லிக்கனிபோன்ற உதாரணம் ஒன்று இதோ!

ஏற்கனவே ஒரே அடியாக 5 ஆண்டுகால பதவி நீட்டிப்பை (ஓய்வு பெற்ற பின்பும்) பா.ஜ.க. பார்ப்பன ஆட்சியினால் பெற்ற பதவியால் சுகம் அனுபவித்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தனது ஆளுமையைச் செலுத்திய புதுடில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் (AIIMS) இயக்குநரான வேணு கோபால் அய்யருக்கு நேற்று ஓய்வு பெற்ற நிலையிலும்கூட கடைசி நேரத்தில் ஓர் நப்பாசை!

சூழ்ச்சி சாணக்கியர் பரம்பரையல்லவா! நேற்று டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பெயரில் ஒரு பொதுநல வழக்கு போட்டாராம்!

நோயாளியான தனது குழந்தையைக் காப்பாற்ற இவருக்கு மேலும் ஆறுமாத பதவி நீட்டிப்புத் தரப்பட வேண்டுமாம்; அப்பொழுதுதான் இவரது குழந்தை காப்பாற்றப்படுமாம்!

இப்படி ஒரு புதிய வரம் கேட்டு நீதிமன்றத்தை அணுகச் செய்தார்.நீதிமன்றம் மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, அய்யர் பேராசையில் மண்ணைப் போட்டுவிட்டது.

ஓய்வு பெற்றுப் போகும்போதும் கூட, அடுத்த பிறவியில் இவர் பிறந்து இந்த மருத்துவமனையின் இயக்குநராகவே வரவேண்டுமாம்!என்ன கொடுமை இது! பார்ப்பனப் பேராசைக்கும், சூழ்ச்சிக்கும் ஓர் எல்லையே இல்லை என்பது இப்போதாவது புரிகிறதா?
viduthalai.com/20080703/news05.

Thursday, July 3, 2008

திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தால் அம்பலமான நரபலி கொடுக்க அருள்வாக்கு கூறிய சாமியாடிக்கு சிறை.

கடலூர் அருகே நடந்த காட்டுவிலங்காண்டித்தனம்.ஏழு வயதுச் சிறுவனை நரபலி கொடுக்க அருள்வாக்கு கூறிய சாமியாடிக்கு ஆயுள் காலச் சிறை
திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தால் அம்பலமான நிகழ்ச்சி.

கடலூர், ஜூலை 2- கடலூர் விரைவு நீதிமன்றம் - சாமியார் என்றும், அருள்வாக்கு கூறுகிறேன் என்றும் ஏமாற்றி 7 வயதுச் சிறுவனை நரபலி கொடுக்கத் தூண்டிய கதிரேசன் என்பவனுக்கும், சிறுவனைக் கொலை செய்த கிருஷ்ணராஜ் என்பவனுக்கும் ஆயுள் காலச் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்புக் கூறியுள்ளது.

இந்தக் குற்றத்தைக் கூட்டாகச் செய்த ஆறு பேர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடலூரையடுத்த அரசடிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் வீடு கட்டி முடிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து விடுபடப் பரிகாரம் கேட்டாராம். அதற்கு சேத்தியாத் தோப்பைச் சேர்ந்த சாமியார் கதிரேசன் என்பவர் மனிதப் பலி கொடுக்கவேண்டும் என்று அருள்வாக்கு கூறினாராம்.

அதன்படி அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சதீஷ் என்கிற சிறுவனைப் பலி கொடுக்க முடிவு செய்து, பாதி கட்டப் பட்ட நிலையில் இருந்த வீட்டிற்குச் சிறுவனை அழைத்துப் போய்க் கொலை செய்துள்ளனர்.சிறுவனின் பெற்றோர் தந்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்படாமல் தேங்கியிருந்தது.

திராவிடர் கழகத்தின் சார்பில் தீவிரப் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டு, சாமியாரின் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டன. அதன்பிறகு காவல் துறை - சாமியார் கதிரேசனைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தது.சாமியார் கதிரேசன், கொலை செய்த கிருஷ்ணராஜ், அவனது உறவினர்கள்மீதும் வழக்கு தொடரப்பட்டுக் குற்றச்சாற்று தாக்கல் செய்யப் பட்டது.

விரைவு நீதிமன்ற நீதிபதி, கதிரேசனுக்கும், கிருஷ்ணராஜுக்கும் ஆயுள் காலச் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். கிருஷ்ணராஜின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தார் 4 பேர்களுக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பு அளித்தார்.

இவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.சாமியார் என்கிற காரணத்தால் கதிரேசனை கைது செய்து வழக்குப் போட மெத்தனம் காட்டிய காவல்துறை, கழகத்தின் பிரச்சாரத்தின் காரணமாக ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. viduthalai.com

Wednesday, July 2, 2008

கொலைக் குற்றவாளிகளான சங்கராச்சாரியார்கள் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

தமிழர் தலைவர் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்.

"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி" கொலைக் குற்றவாளிகளான சங்கராச்சாரியார்கள் வெளியே நடமாடத் துவங்கி விட்டனர். உச்சநீதிமன்றம் - புதுச்சேரி நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

சென்னை, ஜூலை 1- மூன்று முறை ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளோம் - மேலும் தாமதம் கூடாது.

திராவிடர் கழகத்தின் சார்பில் சங்கராச்சாரியார் களின் வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும்.புதுவை நீதிமன்றமும் வழக்கை நடத்துவதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது என்று திராவிடர் கழக தலைவர் தமி ழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கிப் பேசினார்.

நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்திராவிடர் கழகத்தின் சார்பிலே இன்றைக்கு நாடு முழுவதும் நீதி கேட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்குள்ளேயே சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்.

கொலை வழக்கில் முதல் குற்றவாளி காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சங்கராச்சாரியார். இரண்டா வது குற்றவாளி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் என்று அரசு தரப்பு வழக்கறி ஞர் மூலம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முதல் கொலைக் குற்றவாளி யான காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சங்கராச்சாரியார் 61 நாள் கள் சிறையில் இருந் தார். இரண்டாவது குற்றவாளியான விஜயேந்திர சங்கராச்சாரியார் 31 நாள்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

சங்கராச்சாரியார்கள் மீது பல செக்சனில் வழக்கு இரு சங்கராச்சாரியார்கள் மீதும் இ.பி.கோ. 302, 120பி 34, 201 ஆகிய செக்சன்கள் படி இவர்கள்மீது செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. 23.11.2004 அன்றிலிருந்து இன்று வரை ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் மீது நீதிமன்றம் உரிய நடவடிக்கை நடத்தவில்லை.

சென்ற ஜெயலலிதா ஆட்சி யில்தான் இந்த சங்கராச்சாரியார்கள் கைது செய்யப் பட்டார்கள். இந்த ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்காது; வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுத் தான் வழக்கை புதுச்சேரி மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

இன்றைக்கு அந்தக் காரணம் பொருந்தாது எந்த காரணத்தை சங்கராச்சாரியார்கள் சொன்னார்களோ அந்த காரணம் இன்றைக்கு மாறியிருக்கிறதே. அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே.

சங்கராச்சாரியார்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து வழக்கைத் தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

நீதி மன்றத்திற்கு வந்து ஆஜராவ தில்லை.புதுச்சேரி அரசு சங்கராச்சாரியார்களின் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும். புதுச்சேரியில் இருக்கின்ற நீதியரசர் அவர்கள் வழக்கை வழக்கைத் துரிதப்படுத்த வேண்டும் உச்சநீதிமன்றத்தில் இவர்கள் தடை ஆணையை வாங்கியிருக்கின்றார்கள்.

சங்கராச்சாரியார்களின் வழக்கை நடத்துகின்ற தமிழக அரசைச் சார்ந்த அரசு வழக்கறிஞர்களும் இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நடைபெற்ற சம்பவம் சாதாரண சம்பவம் அல்ல. கோவிலுக்குள்ளேயே கொலை நடைபெற்றிருக்கின்றது.உச்சநீதிமன்றம் உடனே இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதிமறுக்கப்பட்ட நீதியாகும் என்று நீதிபதிகளே அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

4 ஆண்டுகள் ஓடி விட்டனசங்கரராமன் கொலை நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்களே மறந்து போய் விடக் கூடிய ஒரு நிலையை இந்த சங்கராச்சாரியார்கள் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.

சங்கராச்சாரியார்களின் வழக்கை உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்.மூன்று முறை திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைந்து நடைபெற வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைத்துதான் திராவிடர் கழகத்தின் சார்பிலே இந்த ஆர்ப்பாட்டத்தை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

திராவிடர் கழகத்தின் சார் பிலே 2006-ஆம் ஆண்டு, 2007-ஆம் ஆண்டு, இன்றைக்கு 2008-ஆம் ஆண்டுகளில் மூன்று முறை இதே காரணத்துக்காக ஆர்ப்பாட்டங்களை நாடு தழுவிய அளவிலே நடத்தியிருக்கின்றோம்.

எங்களுடைய கோரிக்கை விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான்.இப்பொழுது வெளியே தலைகாட்ட ஆரம்பித்து விட்டார்கள். கொலைக் குற்றவாளிகளான சங்கராச்சாரியார்கள் இதுவரை பொது நிகழ்ச்சிகளுக்கு வராமல் ஒதுங்கியிருந்தார்கள்.

இப்பொழுது பொது நிகழ்ச்சிகளில் தலையைக் காட்டவும் துவங்கி விட்டார்கள். தலைமை நீதிபதியை அழைத்தனர் சங்கராச்சாரியார்கள் மடத்தின் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு இன்றைய சென்னை நீதிமன்றத்தின் தலைமை நீதி பதியை அழைத்திருக்கின்றார்கள். அவர் இந்த மண்ணினுடைய மனோபாவத்தை அறிந்து கொண்டு உங்களுடைய விழாவுக்கு வர முடியாது என்று மறுத்து விட்டார்.

சங்கராச்சாரியார்கள் அவரை விடவில்லை. மீண்டும் வற்புறுத்தி உங்களுடைய பாரியளையாவது (மனைவி) அனுப்பி வையுங்கள் என்று கேட்டிருக்கின்றார்கள் என்றால் இவர்கள் எப்படி காரியம் சாதிக்க எண்ணுகிறார்கள் என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண் டும்.

இவர்களை ஆயிரம் கண்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. எனவே உச்சநீதிமன்றம் இந்த சங்கராச்சாரியார்களின் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, கழக பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர் கு.வெ.கி. ஆசான், வடசென்னை மாவட்டத் தலைவர் அ. குணசீலன், மாவட்ட தி.க., செயலாளர் பெ. செல்வராஜ், தென் சென்னை மாவட்ட தி.க., தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செ.வை.ர. சிகாமணி, இறைவி நயினார், கோ.வீ. இராகவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை ஒலி முழக்கங்களாக எழுப்பினர். திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள் விண்ணதிர முழங்கினர்.

மிகத் திரளான தோழர்கள், தோழியர்கள் ஆர்ப்பாட்ட வாசகங்கள் முழக்கி கழக கொடிகளை கையில் ஏந்தி கொளுத்தும் வெய்யிலிலும் தங்களுடைய எரிமலை போன்ற உணர்வுகளை வெளிப் படுத்தினர்.

பெருந்திரளாகக் கூடியி ருந்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்து அதற்குக் காரணமாக இருந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களைப் பாராட்டி, கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் நன்றி தெரிவித்து பேசினார். viduthalai.com

Tuesday, July 1, 2008

குப்பை.? பைபிள் படித்துச் சாமி கும்பிடுபவர்கள்தானே?

இந்தியர்களின் விசித்திரப்பழக்க வழக்கங்கள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து சிலருக்குச் சிரிப்பையும் சிலருக்கு வெறுப்பையும் வரவழைக்கும் நிலை உள்ளது. என்றாலும் கவலைப்படாமல் இந்தியர்கள் பழைய பாணியிலேயே இருந்து வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் இவிமி என்பார், இந்தியர்கள் பொதுச் சுகாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் என்று குற்றம் கூறியுள்ளார்.

ஜன்னல் வழியே பொது இடத்தில் குப்பையைக் கொட்டும் மக்கள் இந்தியர்கள் எனும் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.

ஆனால் அமெரிக்கர்கள் அவர்கள் நாட்டுக் குப்பையைக் கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்களே!

கொச்சித் துறை முகத்தில் 950 டன் அமெரிக்கக் குப்பைகளும், தூத்துக்குடித் துறைமுகத்தில் 850 டன் குப்பைகளும் இருக்கின்றனவே!

வளர்ந்து வரும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் எவ்வளவு குப்பையை அய்ரோப்பிய அமெரிக்க நாடுகள் அனுப்பியிருக்கின்றனவோ?

இவர்களெல்லாம் பைபிள் படித்துச் சாமி கும்பிடுபவர்கள் தானே?

தன் முதுகில் இருக்கும் உத்தரத்தை எடுத்து விட்டுப் பிறர் மீது இருக்கும் துரும்பைப்பற்றிப் பேசலாமே! - சு. அறிவுக்கரசு. viduthalai.com
----------------------------------------
கிறிஸ்தவம்

இந்து வெறியர் பால்தாக்கரே சட்டத்திற்கப்பாற்பட்டவரா?

சிவசேனா தலைவரான பால்தாக்கரே - ஓர் இந்து வெறியர் - மகாராட்டிரத்தில் மகாராட்டிரர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது; வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறி வருவதோடு மட்டுமல்லாமல்,

பல காலகட்டங்களிலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்மீது வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறுவதற்குத் தூண்டும் சக்தியாகவும் இருந்து வந்திருக்கிறார்.

இந்துத்துவா தற்கொலைப் படை ஒன்றை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

சங்பரிவார் என்றாலும், சிவசேனா என்றாலும் அவை வன்முறையின் தத்துப் புத்திரர்கள் என்றாலும், அதிகாரப் பூர்வமாக இப்படி ஒரு படையை அமைப்பது என்பது, நாட்டின் அமைதிக்கும், சக வாழ்வுக்கும் கடுமையான சவாலாகும் என்பதில் அய்யமில்லை.

எரியும் நெருப்பில் எண்ணெய்க் குடத்தைக் கவிழ்ப்பதற்கு ஒப்பாகும்.1966-67-களில் தமிழர்களை மும்பையிலிருந்து விரட்டியடிக்கக் காரணமாக இருந்தவர் அவர்.

அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த எதிர்ப்புக்குரல் அக்கூட்டத்தின் வாலை அடக்கச் செய்தது.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து 1993 இல் மும்பையில் பெரிய இனக்கலவரம் நடைபெற்றதற்கும், ஆயிரக்கணக் கான சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், பிற இனத்தவர்களின் வணிக நிறுவனங்கள் தீக்கு இரையானதற்கும் காரணமாக இருந்தது - சிவசேனாதான்;

அதற்குக் கிரியா ஊக்கியாக இருந்தவர் சாட்சாத் பால்தாக்கரேதான்.

மும்பைக் கலவரம் குறித்து நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன். அந்தக் கலவரத்திற்குக் காரணமாக சிவசேனாவும், அதன் தலைவர் பால்தாக்கரேயும் இருந்திருக்கின்றனர் என்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் எழுதப்பட்ட கட்டுரைகளும், தலையங்கங்களும் வன்முறைக்குக் கொம்பு சீவி விட்டன என்றும் ஆணையத்தின் அறிக்கை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததே - அவற்றின்மீது உருப்படியான நடவடிக்கைகள் இது வரை எடுக்கப்பட்டது உண்டா?

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதில், சிவசேனா தலைவருக்கு மட்டும் விதி விலக்கா?தன்னைத் தாதாவாக வரித்துக்கொண்டு, தட்டிக் கேட்க யாரும் கிடையாது என்கிற மமதையில் அவரின் செயல் பாடுகள் அமைந்துள்ளன.

அரசுகளும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்குவதால், அவரின் நடவடிக்கைகள் அத்துமீறிச் சென்றுகொண்டு இருக்கின்றன.அவருக்கு இருக்கும் அதே கண்ணோட்டம் தமிழர்களுக்கு வந்தால் அதன் விளைவு என்ன என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

தமிழ்நாட்டின் மொத்த வணிகம் முழுமையும் தம் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்?

சென்னை போன்ற தலை நகரங்களில் ஓடும் ஆட்டோக்களுக்கும், வாடகை வாகனங்களுக்கும் உண்மையில் சொந்தக்காரர்கள் யார்?

ஒரு காலத்தில் சவுகார்ப்பேட்டை என்ற ஒரு பகுதி மட்டும் வடநாட்டுக்காரர்கள் வாழும் பகுதி என்று இருந்து வந்தது. இப்பொழுது சென்னை முழுமையுமே சவுகார்ப்பேட்டைகளாக உருவெடுத்து விட்டனவே - இதைப்பற்றியெல்லாம் பிரச்சினை எழுப்பிட நம்மால் முடியாதா?

எந்த ஒரு செயலுக்கும் எதிர் வினை உண்டு என்ற பால பாடத்தைக்கூடத் தெரிந்துகொள்ளாமல், தூங்கும் புலியை இடர ஆசைப் படலாமா?

தமிழ்நாட்டில் நியாயமான மொழி உணர்வு, இன உணர்வு, கலாச்சாரங்கள்பற்றிப் பேசினால், எழுதினால், அதற்குப் பிரிவினை முத்திரை குத்தி, சட்டம் என்ன செய்கிறது என்று சல்லடம் கட்டி ஆடும் பார்ப்பன ஊடகங்கள் பால்தாக்கரேயின் அறிவிப்பு குறித்து அய்ம்பொறிகளையும் பொத்திக் கொண்டு அடைகாத்துக் கொண்டிருப்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.பால்தாக்கரேயின் அறிவிப்பின்மீது சட்ட ரீதியான நடவ டிக்கை எடுக்க மாநில, மத்திய அரசுகள் முன்வரவேண்டும். இல்லையென்றால், "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்" என்ற நிலை நாடெங்கும் உருவாகிவிடும் - எச்சரிக்கை!viduthalai.com
-----------------------------------------------
கணினி வேண்டாம்! கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே !! ?? இந்த பதிவை கண்டுவிட்டு ஒரு கும்மி பதிவு போட்டுக் கும்மியடிக்கிறது பார்ப்பனீயம்.படியுங்கள்>நம்புவதற்கு கஷ்டமான செய்தி ஒன்றை படித்தேன்http://dondu.blogspot.com/2008/06/blog-post_30.html