Followers

Wednesday, June 18, 2008

`ஆர்.எஸ்.எஸ். நாளேடான ` தினமணி தன் ஆற்றாமை.

கோயில் விழாக்களுக்கு தடை வருமா?

கடலூரில் நடைபெற்ற பெண்கள் மாநாடு, பேரணி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள் பார்ப்பனர் வட்டாரத்தை பா.ஜ.க., வட்டாரத்தை ஆணிவேர் வரை சென்று தாக்கியுள்ளது என்பது அந்த வட்டாரங்களின் எதிர்வினைகளிலிருந்து நன்கு உணர முடிகிறது.

பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகளை அரசியல் கட்சிகளும் சரி, சமுதாய இயக்கங்களும் சரி நடத்துவது என்பது வாடிக்கையான ஒன்றே.
மக்கள் நாயகத்தில் தத்தம் கருத்துகளைப் பரப்புவதற்கு, கொள்கைகளை எடுத்துக் கூறுவதற்கு இவை எல்லாம் சிறப்பான அணுகுமுறைகளும், வழிமுறைகளும் ஆகும்.

நீதிமன்றங்கள் இதில் குறுக்கிடுவது ஏன் என்று தெரியவில்லை. நாட்டில் எந்த பிரச்சினைகளுமே இல்லாது ஒழிந்தால் ஒருக்கால் இவர்களுக்கெல்லாம் வசதியாக இருக்கும்போலும்!

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பினை வைத்துக் கொண்டு `ஆர்.எஸ்.எஸ். நாளேடான `தினமணி தன் ஆற்றாமையைத் தலையங்கத்தின் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தம் பின்னால் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவும், தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணிகளை நடத்தி வருகிறார்கள் என்றும் இதனால் பல லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப் படுகின்றன என்றும், பல மணி நேரம் உழைப்பு வீணாகிறது என்றும், மிகவும் கவலைப்படுவதுபோல `தினமணி தலையங்கம் தீட்டித் தள்ளியுள்ளது.

திராவிடர் கழகம் - திராவிட இயக்கக் கொள்கைகளை உடைய அமைப்புகள் மொழி, இனம், கலாச்சார, அமைப்புகள் மக்கள் மத்தியிலே கருத்துப் பிரச்சாரம் செய்வதையும் மக்கள் அதற்கு ஆதரவு கொடுத்து வருவதையும் தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன வட்டாரம்,

இதுபோன்ற குரலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேதான் வந்திருக்கிறது; கடலூர் மாநாடு என்பதும் அண்மைக் காலத்தில் அவாளுக்கு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியின் விளைவாக இப்பொழுதும் அந்தச் செல்லரித்து போன சங்கதியைத் தூசு தட்டி மறு பதிப்புச் செய்கிறார்கள்.

பேரணிகளிலும், மாநாடுகளிலும் மக்கள் கூடுவது என்பதெல்லாம் வீண் வேலை, விரயம் என்று கூறுகிற இந்தக் கூட்டத்தை நோக்கி நாம் மிக எளிதாக அவர்கள் தொடுத்த அம்புகளையே - நாம் திருப்ப முடியும்.

மகாமகம் என்றும், கும்பமேளா என்றும் மக்களை இலட்சக்கணக்கில் கூட்டுகிறார்களே, மகர ஜோதி மோசடி என்று தெரிந்திருந்தும் அதனை விளம்பரப்படுத்தி மக்களை இழுக்கிறார்களே,

வருடம்தோறும் பிரமோற்சவம் என்ற பெயரிலே கொடியேற்றம், கோயில் திருவிழாக்களை நடத்துகிறார்களே, தேரோட்டம் என்று கூறி 50 கிலோ சிலையை வைத்து 5 டன் எடையுள்ள தேரை உருவாக்கி 5000 பேர்கள் சேர்ந்து இழுக்கிறார்களே –

இவற்றையெல்லாம் இதே கண்ணோட்டத்தில் விமர்சிப்பதற்கு தினமணி வகையறாக்கள் தயார்தானா? இது குறித்தும் நீதிமன்றம்தான் பார்வையைச் செலுத்துமா?

மக்களைக் கூட்டி கருத்துகளை தெரிவிப்பது, கொள்கைகளை முழக்கமாக ஒலிப்பது என்பதில் கருத்துப் பரவல் என்ற நோக்கம் இருக்கிறது.
கோயில் திருவிழா என்று சொல்லி ஆயிரக்கணக்கான டின் நெய்யை நெருப்பில் போட்டு எரிப்பது, யாகம் என்ற பெயரால் உணவுப் பொருள்களை நாசமாக்குவது என்பதில் எல்லாம் பொருள் நட்டம், மனித உழைப்பு விரயம், கால விரயம் என்பவையெல்லாம் இடம் பெறவில்லையா?

இவற்றை எல்லாம்விட புத்தி நாசமாக்கப்படுகிறதே இது எவ்வளவுப் பெரிய கொடுமை!

மதத்தின் பெயரால் எது நடந்தாலும் சரியானது; அறிவின் பெயரால் எது நடந்தாலும் குற்றம் மகா குற்றம் - என்று பேசுவதெல்லாம் எழுதுவதெல்லாம் பிற்போக்குத்தனங்களைப் பாதுகாக்கும் பார்ப்பனீயத்தனம் என்பதை அறிவுள்ளவர்கள் உணரவே செய்வார்கள்.

கோயில் விழாக்களை முதலில் தடை செய்துவிட்டு, அதன்பின் மற்றவற்றையும் பேசினால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பதாகும். viduthalai.com
---------------------------------
கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன?
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

2 comments:

siva said...

சிறப்பான கருத்து
என் வருத்தம் என்னவேன்றால் கடலூரில் கனிமொழியை முன் நிறுத்துவதை காட்டிலும் ரசாத்தியாம்மாவை மகளீர் அணிக்கு தலமை கொடுத்து இருக்கலம்.

புதுவை சிவா.

Thamizhan said...

திருப்பதியிலே கைக்குழந்தைகளுடன் மொட்டையடித்த தலையுடன் கால் கடுக்கப் பல மணி 10-20 அதற்குமேலே
நின்று பணத்தை அள்ளியிறைப்பதை,

குடந்தையிலே அழுக்குத் தண்ணீரிலே
அமுங்கிச் சாவது,
மாதந்தவறாமல் கோவில்களில் வீணடிப்பது,
ஆண்டு தோறும் என்றோ இறந்துவிட்ட
பெற்றோருக்கு தனித் தபாலில் கொண்டு சேர்ப்பேன் என்று பகல் கொள்ளையடிப்பது
இதெல்லாம் அவசியந்தானா?
ஒரு பெண்ணிடம் செருப்படி வாங்குகிறோமே என்பதுதான் மிகவும்
உறுத்துகிறதோ?