Followers

Friday, June 20, 2008

கீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை--- கனிமொழி எம்.பி.

சென்னை, ஜூன் 19- பகவத் கீதையை திரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர

இது கீதையின் முதல் அத்தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல்வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும்பத்தில் அறமின்மை தலையெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின்றனர்.

பெண் சீரழிந்து கெட்டுப்போவதால்தான் வருணாசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.

இந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக்குறளை மேற்கோள் காட்டுவதென்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

உலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட்பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மதத்தின் பெயரால், பாரம்பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண்டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம்.

ஆனால், பகவத் கீதையைக் காக்க கொடி தூக்குபவர்கள், அதில் என்ன இருக்கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவை உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான். கனிமொழி பேச்சும் - வெங்கைய நாயுடுவின் வினாவும்!
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

2 comments:

siva said...

TAMIL MOZHI IN 1960
SEMM MOZHI IN 2000
KANNI MOZHI IN 2007

தமிழன் முழக்கம் - சங்கே முழங்க said...

கீதையிலும், மகாபாரதத்திலும், இராமாயணத்திலும் அதனை உள்ளார்ந்து படித்தால் இந்த உலக மக்களுக்கான அனைத்தும் கிடைக்கும் என்று அறிஞர்கள் ? கூறுகின்றனர். நாமெல்லாம் தவறாக அதன் கருத்துகள உள்வாங்கிக்கொள்கிறோமாம்.கடவுள் என்ற ஒருவரால் வழங்கப்பட்டதாயின் அல்லது கடவுளின் அருள்பெற்றவரால் எழுதப்பட்டதாயின் அதுவானது முக்காலத்திற்கும்(எக்காலத்திற்கும்) எவராலும் கேள்விகேட்கக்கூடியதாய் இருக்கக்கூடாது.அதுவன்றி எவராலும் கேள்வி கேட்கக்கூடியதாகவும் அறிவுக்கௌ பொருத்தமற்றதாகவும் உள்ள இவைகளை கேள்வி கேட்ககூடாதென்பது நியாயம் இல்லை. திருவள்ளுவர் அருளிய இருவரிகுறளின் பொருள் என்னாளுக்கும் ஒரேமாதிரியாக இருக்கிறதே அதுபோல கீதையும் இருந்திருக்க வேண்டாமா?