Followers

Saturday, June 21, 2008

தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிய திருப்பதி. விபச்சாரம் + கோயிலின் ஜாதிவெறி அம்பலப்படுத்தப்பட்டது.

திருப்பதி- திருமலையிலும் விபச்சாரம்! ஏழுமலையான் "கல்யாண நாடகம்" மோசடி!

திருப்பதி, ஜூன் 19- திருப்பதி கோயிலின் சார்பாக வெங்கடாசலபதி எனும் பொம்மையை ஆந்திராவிலும், தமிழ்நாட்டில் சென்னை தீவுத் திடலிலும் கொண்டு வந்து வைத்து, கல்யாண உற்சவம் என்று வித்தைகாட்டி மக்களை ஏமாற்றிப் பணம் சேர்த்தனர்.

இதே மாதிரி பொம்மையைத் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளுக்குத் தூக்கிச் சென்று, கடவுள் தாழ்த்தப்பட்ட மக்களைத் தேடி வருகிறார் எனப் பிரச்சாரம் செய்து தலித கோவிந்தம் எனக் கூறிப் பஜகோவிந்தம் பாடினர்.

இது தொடர்பாக திருப்பதிக் கோயில் நிருவாகமும், அர்ச்சகர்ப் பார்ப்பனர்களும் செய்த மோசடி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

தலித கோவிந்தம் பஜனைக்குப் பயன்படுத்தப்பட்ட வெங்கடாசலபதி உருவப் பொம்மையை எங்கோ ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிட்டனர் என்று தெலுங்குத் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

அதுபற்றிய சர்ச்சை நடந்து ஓய்ந்த மாதிரி இருந்தது. இப்போது ஆந்திர மாநில எஸ்.சி., எஸ்.டி., இன ஆணையம் இதுபற்றி ஆய்வுக்குழு ஒன்றை நாகராஜு என்பவர் தலைமையில் நியமித்தது,

அந்தக் குழு கோயில் நிருவாக அதிகாரியையும், தலைமை அர்ச்சகரையும் சந்தித்துப் பேசி விசாரணை நடத்தியுள்ளது. இந்தியக் குடியரசுக் கட்சியின் ஆந்திர மாநிலப் பொறுப்பாளர் அஞ்சையாவும் கோயிலுக்குப் போய் சிறப்பு அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, தலைமை அர்ச்சகர் ஏ.வி. ரமண தீட்சிதலு ஆகியோருடன் பேசினர்.

கடவுள் சிலை மூலையில்தெலுங்கு தொலைக்காட்சி செய்தியின்படி, வேமுடு அரிசன் வாடா எனும் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட வெங்கடாசலபதி பொம்மை, தரிசனம் முடிந்து திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டு வந்து கோயிலின் கருவறைக்குள் வைக்கப்படாமல்,
அர்ச்சக பவனம் கட்டடத்தின் சமையல் கட்டில் மூலையில் போடப்பட்டது என்பது குற்றச்சாற்றாகும். இந்தக் கட்டடம் அர்ச்சகர்கள் பணி நேரத்தில் சாப்பிடவும், ஓய்வெடுக்கவும் பயன்படுகிறது.

உண்மை கண்டறியும் குழு நிருவாக அதிகாரி தர்மா ரெட்டியைக் கேட்டபோது இதை அவர் மறுத்தார். அர்ச்சகர்கள் அந்தப் பொம்மைக்கு தினப்படி தூபதீப நெய்வேத்தியச் சடங்குகளைச் செய்து வருவதாகக் கூறியுள்ளார்.

ஏன் கருவறையில் அந்தப் பொம்மையை வைக்கவில்லை எனக் கேட்டபோது, அங்கே எத்தனை பொம்மைகளை வைக்க வேண்டும் என்பதற்கு ஆகம விதிகளில் உச்சவரம்பு இருக்கிறது என்று தலைமை அர்ச்சகர் கூறினாராம்.ஒதுக்கிடத்தில் கடவுள்தாழ்த்தப்பட்டோரைத் தேடிக் கடவுள் வருகிறது என்று ஏமாற்றும் நாடகம் நடத்தப் போய்த் திருப்பதி கோயில் மாட்டிக் கொண்டு விழிக்கிறது.

தீட்டுப்பட்டு விட்ட பொம்மையைக் கோயிலுக்குள் வைக்காமல் தனியே (தாழ்த்தப்பட்ட மக்களை காலனியில் வைத்திருப்பது போலவே) வைத்திருக்கும் ஜாதி வெறியும், மோசடி நாடகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. – viduthalai.com

திருப்பதி: திருப்பதி, திருமலைப் பகுதியில் 20 முதல் 25 இடங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதாகவும், 400க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்த கழகத்தின் இயக்குநர் சந்திரவதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமலைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விபச்சாரம் நடத்துவதற்கு வசதியாக 20 முதல் 25 இடங்களை மையம் போல அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.திருப்பதியில் 3,500 பாலியல் தொழிலாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொழிலாகவே அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இப்பகுதிகளுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், எய்ட்ஸ் பரவல் ஆபத்து அதிகமாக உள்ளது.மேலும், தமிழகம் மற்றும் கர்நாடகத்திலிருந்து திருப்பதியில் வேலை பார்க்க வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் எய்ட்ஸ் பரவும் ஆபத்து உள்ளது.

மே மாதம் 7064 ஆண்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், 268 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

புனித நகரான திருப்பதியை விபச்சார மையமாக மாற்றி வருவது அதிர்ச்சி தருகிறது என்றார் அவர்.இந்தத் தகவல் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள டிவி சானல்களில் பெரிய அளவில் செய்திகள் ஒளிபரப்பி வருகின்றன.

இந்த நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கே.வி.ரமணா சாரி செய்தியாளர்களை அழைத்தார். அவருடன் சந்திரவதனும் இருந்தார்.சந்திரவதன் கூறுகையில், நான் சொன்னதை மீடியாக்கள் தவறாக செய்தி வெளியிட்டு விட்டன. திருப்பதி தேவஸ்தானத்தை உஷார்படுத்தும் நோக்கில்தான் நான் அவ்வாறு கூறினேன் என்றார்.

ஆனால் சந்திரவதன் பேட்டியில் கூறியதை நிருபர்கள் சுட்டிக்காட்டியபோது, அவர் பதில் பேசாமல் எழுந்து போய் விட்டார்.

பின்னர் சாரியிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியபோது, திருமலையில் விபச்சார மையம் எதுவும் இல்லை. பயணிகள் போல வருபவர்கள் சிலர் இதுபோல நடந்திருக்கலாம் என்று மட்டும் பதிலளித்து விட்டு கிளம்பி விட்டார்.இருப்பினும் திருப்பதியிலும், திருமலையிலும் விபச்சாரம் கொட்டி கட்டிப் பறப்பதாகவும், அதை கட்டுப்படுத்தாமல் தேவஸ்தானம் மெளனம் காத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ---- thatstamil news.
----------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

1 comment:

Loganathan said...

இது கடவுளை அவமதிப்பதல்ல இது மனிதனை மனிதன் ஏமாற்றும் வேலை.
www.tamilblog.in