Followers

Wednesday, June 4, 2008

ஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத்தம்.அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா!

பஞ்சாங்கத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் பார்ப்பனர்கள் ஏன் இப்படி பதறுகின்றார்கள், பதை பதைக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது,

இந்த நாட்டில் நாத்திகர்கள் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை, பஞ்சாங்கம் பார்க்காததனால் பாழாகிப் போய் விடவில்லை.

இன்னும் கேட்டால் நமது பெரியார் பட நாயகர் இனமுரசு சத்யராஜு அவர்கள் சொன்னதுபோல் நாத்திகர்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள், வரவுக்கு ஏற்றபடி செலவு செய்கின்றார்கள் , வாழ்வியல் சிந்தனையோடு மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்கின்றார்கள் .

ஒழுக்கத்தை, நாணயத்தை மூலதனமாகக் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் பஞ்சாங்கம் பார்ப்பவர்கள், ஜாதகம் பார்ப்பவர்கள் இப்படியா?

எனக்குத் தெரிந்த அலுவலக நண்பர் ஒருவர். அவரது +2 படிக்கும் மகள் ஒரு சிறு மோட்டார் வாகன விபத்தில் லேசான காயம் அடைந்தார். அதைப் பற்றி விசாரிப்பதற்காக வந்த ஒருவர், நண்பரிடம் விபத்துக்கு காரணம் ஏதேனும் தோஷமாக இருக்கலாம், உடனே ஜாதகத்தை ஜோதிடம் காட்டுங்கள், அந்தப் பெண் ஜாதகம், உங்கள் ஜாதகம், உங்க வீட்டுக்காரம்மா ஜாதகம் எல்லாத்தையும் ஜோதிடம் காட்டுங்கள் என்றார்.

தோஷத்திற்கு பரிகாரம் ஏதேனும் சொன்னால் உடனே அதனைச் செய்துவிடுங்கள் என்று பரிந்துரைத்தார். நண்பர் லேசாக சிரித்துக் கொண்டே , கவனக் குறைவால் வண்டியிலிருந்து கீழே விழுவதற்கும், ஜாதகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்றார்.

அய்யயயோ, அப்படி நினைக்கா தீர்கள், ஜாதகம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது, முன்னாடி பார்த்து பரிகாரம் செய்துவிட்டால் சரியாகி விடும் என்றார். ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னவர் பார்ப்பனர்.

ஓவ்வொரு இடத்திலும், அரசு அலுவலகமாக இருந்தாலும்,தனியார் நிறுவனமாக இருந்தாலும் பார்ப்பனர்கள் ஜோதிடத்தை, ஜாதகத்தை பரிந்துரைக்கும் விற்பனைப் பிரதிநிதிகளாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .

சிலர் ஜோதிடம் பார்க்கும் (பார்ட் டைம்) பகுதி நேர ஜோதிட அரசு , தனியார் ஊழியர்களாக இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு, மரியாதை. பொய்மையை, புளுகுமூட்டையை, அறியாமையை மக்களிடத்தில் விதைத்துக் கொண்டிருக்கின்றோம் என்னும் குற்ற உணர்வு அவர்களிடம் இல்லை.

என்னோடு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி, என் கையில் ஜோதிடப் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்தார். சார், நீங்கள்தான் கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சிக்காரர் ஆச்சே, ஜோதிட வாடையே உங்களுக்கு ஆகாதே, உங்கள் கையில் எப்படி இந்தப் புத்தகங்கள் எல்லாம் என்றார்.

ஜோதிடம் பொய் என்பதை விளக்கி கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் , அதற்காக சில புத்தகங்களை வாங்கியிருக்கின்றேன் என்றேன் .அப்படியா? என்றவர் , சார் என் வீட்டிற்கு வாருங்களேன், வந்து என் கணவரிடம் ஜோதிடம் பொய் என்பதைப் பற்றி அவரிடம் கொஞ்சம் பேசுங்களேன் என்று சொல்லும்போதே கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர்.

பதறிப்போன நான், ஏன் அழுகின்றீர்கள் கேட்டபோது, சார், என் மகளுக்கு 26 வயது ஆகின்றது, இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறாள், இதுவரை 20 வரன் வந்து விட்டுப் போய் விட்டது. என் கணவர், என் பெண் ஜாதகம் ஏதோ பாவம் ஜாதகம் என்கின்றார். பெண் பார்க்க வருவதற்கு முன்பே ஜாதகத்தை பார்த்துவிட்டு, இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றார். ஜாதகப் பைத்தியமாய் இருக்கும் அவரிடம் வந்து கொஞ்சம் ஜோதிடம் பொய் என்பதைப் பேசுங்களேன் என்று கையெடுத்துக் கும்பிட்டு அழைத்தார்.

இப்படி ஜோதிடப் பைத்தியங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் எத்தனை மனைவிகளோ, எதிர்த்துப் பேச முடியாமல் காலம் கழிக்கும் எத்தனை மகள்களோ - தெரியவில்லை.

இந்த 80 பக்க ஜாதக நோட்டு எத்தனை பேர் வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது? .

ஏன் ஆத்திக வாதிகளாக இருந்தாலும் கூட, ஜாதகம், ஜோதிடம் பொய் என்று தெரிந்தாலும் கூட அதனைப் பற்றி பேச மறுக்கின்றார்கள் என்ற கேள்வி வந்த போது , தந்தை பெரியார் பதில் அளிக்கின்றார் பாருங்கள்.

"சாதாரணமாய் எப்போதுமே ஜோசியன்,மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக்களின் பேராசைக்கும், முட்டாள் தனத்திற்கும் சரியான கர்த்தாக்கள் ஆவார்கள். எப்படியெனில் , முதலில் ஜோசியன் ஒருவனுடைய ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுவதன் மூலம் அவனுக்கு வரும் ஆபத்துக் கண்டம் நீங்க "சாந்தியும்", கிரக தோஷ பரிகாரத்திற்கு குருக்களைக் கொண்டு சாமிகளுக்கு அர்ச்சனை அபிசேகங்களும் செய்யும்படி சொல்லுவான் .

இதைக் கேட்ட அந்த மனிதன் தனது முட்டாள்தனத்தினால் ஏற்பட்ட பயத்திற்காகவும் , ஆசைக்காக வும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்வான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர்களாக இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்க கடைச் சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரை மண்டலம் நவ கிரகங்களூக்கோ அல்லது ஒரு குறிப் பிட்ட சனி, செவ்வாய் முதலிய ஏதாவது கிரகத்துக்கோ, ஒரு சாமிக்கோ அர்ச்சனை,எள்ளு, பருத்திக் கொட்டை முதலியவற்றால் விளக்கு வைத்தல், அபிஷேகம் செய்தல் ஆகியவைகளையும், ஏதாவது புண்ணிய புராணம் படித்தல் முதலியவைகளையும் செய்யும்படிச் சொல்லிவிடுவான்.

இவைகளை எல்லாம் செய்தால் மந்திரவாதிக்கு வரும் வரும் படியில் ஒரு பாகம் ஜோசியனுக்கும் சேர்வது உண்டு. " தந்தை பெரியார்- சோதிட ஆராய்ச்சி பக்கம் -7-8.

இன்றைக்கு பங்குச் சந்தை வர்த்தகம் பற்றிப் பேசுகின்றோம். ஆனால் 2000 ஆண்டுகளாக உள்ள பங்கீட்டு வர்த்தகம் பற்றி பெரியார் சொல்கின்றார்.

இந்த கோயில் உண்டியல் வர்த்தகத்தில் பணம் போடுகின்றவனுக்கு ஒரு பலனும் இல்லை .மக்க ளிடமிருக்கும் பேராசையையும், முட்டாள்தனத்தையும் பயன்படுத்தி அவர்களின் உழைப்பால் வருகின்ற பணத்தை நயவஞ்சகமாய் உறிஞ்சுகின்றவர்கள் இந்த ஜோசியன்,மந்திரவாதி, கோயில் குருக்கள் மூவரும் என்பதைப் பெரியார் சொல்கின்றார்.

கூட்டணி அமைத்துக் கொள்ளை அடிக்கும் இவர்களுக்கு நமது நாட்டின் ஊடகங்கள், பத்திரிக்கைகள் போன்றவைகள் மிகப் பெரிய விளம்பரதாரர்களாக இருக்கின்றார்கள். - வா. நேரு

-----------------------------------
திருமணப் பொருத்தம்
திருமணத்திற்கு மணப்பெண்ணோ, மாப்பிள்ளையோ தேடுபவர்கள் பெரும்பாலும் கையில் ஜாதகத்தோடு அலைகின்றார்கள். பெண் அல்லது பையனின் மணவாழ்க்கை ஜாதகப்பொருத்தத்தின் அடிப்படையில்தான் அமைவதாக பெரும்பாலோர் நம்புகின்றார்கள்.

10 வகையான பொருத்தம் முக்கியம் ஜோடிகளை இதன் அடிப்படையில்தான் சேர்க்க வேண்டும் என்கின்றார்கள். கன்னிகாதானம் என்கின்றார்கள் . ஆட்டைக் கொடுப்பதைப் போல மாட்டைக் கொடுப்பது போல ஒரு பெண்ணை ஒருவனிடத்திலே தானம் கொடுப்பது என்கின்றார்கள்,

அப்படி கன்னிகாதானம் கொடுக்கப்படும் பெண்ணும் ஜாதகத்தின் அடிப்படையில் கொடுக்கப் படவேண்டும் என்கின்றார்கள். ஜோதிட ஜோடிப் பொருத்ததின் முதல் பொருத்தம் நட்சத்திரப் பொருத்தம் என்கின்றார்கள்.

மணப்பெண் நட்சத்திரம் முதல் நட்சத்திரம் அஸ்வினி என்று வைத்துக் கொள்வோம். மணமகன் நட்சத்திரம் 3,5, 7 என்று வந்தால் அதாவது கார்த்திகை, மிருக சீரிடம், புனர்பூசம் என்றால் பொருத்தம் இல்லை என்கின்றார்கள்.

மணமகன் நட்சத்திரம் 2,4,6,8 என்று வந்தால் நட்சத்திரப் பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள் . அதாவது பரணி,ரோகினி,திருவாதிரை, பூசம் என்று வந்தால் பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள்.

அதாவது ஒற்றைப் படை எண் , 1 க்கு 3,5, 7 பொருத்தம் இல்லை ஆனால் 2, 4,6,8 க்கு பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள். இதற்கு என்ன அறிவியல் அடிப்படை?

இரண்டாவது ஜோதிட ஜோடிப் பொருத்தம் கணப் பொருத்தம் என்கின்றார்கள். 27 நட்சத்திரங்களையும் 3 வகையாகப் பிரித்திருக்கின்றார்கள். தேவ கணம் நட்சத்திரங்கள், மனுஷகண நட்சத்திரங்கள், ராட்சஸ கண நட்சத்திரங்கள். அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியவை தேவ கணம் நட்சத்திரங்கள்.

இதைப் போல வேறு 9 நட்சத்திரங்கள் மனுஷகண நட்சத்திரங்கள், மீதி இருக்கும் 9 நட்சத்திரங்கள் ராட்சஸ கண நட்சத்திரங்கள். ராட்சஸ கண நட்சத்திரமாக பெண் நட்சத்திரமும், மனுஷகண நட்சத்திரமாக ஆண் நட்சத்திரமும் இருந்தால் , ஆண் நட்சத்திரத்திலிருந்து பெண் நட்சத்திரம் 14க்கு மேல் இருந்தால் பொருத்தம் உள்ளது, 14க்கு கீழ் என்றால் பொருத்தம் இல்லை என்கின்றார்கள். எப்படி நட்சத்திரங்கள் தேவர்களாகும், மனுசர்களாகும், ராட்சஸர் களாகும். எந்த அடிப்படையில் பிரித்தார்கள் ?

எப்படி இதன் அடிப்படையில் ஜாதகப் பொருத்தம் உள்ளது, இல்லை என்று சொல்கின்றார்கள்- வா. நேரு
----------------------------------------------------

சோதிட மூடநம்பிக்கை: அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா!
கிரகங்களால் பாதிப்பா?


சூரியனை, கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனின் ஆற்றல் மிக்க சக்தியினால் கிரகங்கள் அனைத்தும் அதன் கட்டுப் பாட்டில் கொஞ்சம்கூட விலகாமல் சுற்றி வருகின்றன. எனவே இதை சூரிய குடும்பம் என்பர்!

சூரியன் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னர் 1000 சூரிய னுக்குச் சமமான தூசியும் வாயும் கொண்ட ஒரு மேகத் திரள் உள் அழுத்தத்தால் அண்டத்தில் வெடித்துச் சிதறியது. அதில் ஒரு துண்டு மேலும் வெடித்து சிதைந்து சூரிய குடும்பமாகத் தோன்றியிருக்கக் கூடுமென்று ஆய்வுகள் கூறுகிறது.

கிரகங்கள் அனைத் தையும் அணைத்து அணி வகுத்து கட்டுப்படுத்திச் செல்லும் ஆற்றல் மிக்க தலை வனாக சூரியன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கு சூரியனின் பேராற்றலே காரணம்! ஈர்ப்பு விசை!கிரகங்களுக்கும் துணைக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை உண்டு!

அவைகளின் ஈர்ப்பு விசை அளவு ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறுபடும். பூமிக்கு மிக நெருக்கமாக துணைக் கிரகம் சந்திரன் இருப்பதால் அதன் ஈர்ப்பு விசை பூமியில் சில பாதிப்புகளை உண்டாக்குகிறது.

மற்றக் கிரகங்கள் எல் லாம் வெகு தொலைவில் இருப்பதால் அவைகளின் ஈர்ப்பு விசை பூமியை எட்டவே எட்டாது!

பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான்! அதுபோல மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கே இருக்கும்.எனவே கிரகங்களின் ஈர்ப்பு விசையால் பூமியிலுள்ள மனிதர்களுக்கு எந்தவிதப் பாதிப் பும் ஏற்பட வாய்ப்பேயில்லை!

பூமியும் ஒரு கிரகம்தான்! அதுவும் துடிப்பான உயிர்க் கிரகம். மற்றக் கிரகங்களில் கடுங்குளிர், கடும் வெப்பம், கரியமில வாயு என்றுதான் இருக்கிறது.

அவைகளிலிருந்து எந்தத் தீங்கு தரும் வாயுவோ - கதிர்வீச்சோ ஈர்ப்பு விசையோ பூமிக்கு வர வாய்ப்பேயில்லை!பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொண்டிருக்கிறது.

சூரியனில் ஏற்படுவது போன்ற அணுச் சேர்க்கையோ அணு வெடிப்போ கிரகங்களில் கிடையாது. எனவே கிரகங்களிலிருந்து கதிர் வீச்சோ வேறு வகையான காந்த சக்தியோ ஏற்பட்டு மனித வாழ்வை பாதித்து விடுமோ என்ற அச்சத்திற்கே இடமில்லை!

கிரகங்களுக்கிடையே ஈர்ப்பு விசை தவிர வேறு விசைகள் இல்லை என்பதே அறிவியல் ஏற்கும் கொள்கை! என்று தில்லி பல்கலைக் கழக விஞ்ஞானி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கிரகங்களால் தனி மனித வாழ்வில் தாக்குதல் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வை ஏற் படுத்தும் என்று சோதிடம் சொல்வது ஏற்கக் கூடியதேயல்ல!

பூமியில் ஒரு கிரகம்!பூமி ஒரு உயிர்க்கிரகம். இந்த உயிர்க்கிரகத்தால் மற்றக் கிரகங்களுக்கு எப்போதாவது எந்த காலத்திலாவது தீங்கு ஏற்பட்டதா! உயிர்க்கிரகமான பூமியால் மற்றக் கிரகங்களுக்கு தீங்கேதும் ஏற்படாத போது வறண்டு கிடக்கும் மற்றக் கோள்களால் பூமி கிரகத் திற்கும் மக்களுக்கும் நன்மை தீமை ஏற்படுமென்று கூறுவது அறியாமையா பித்தலாட்டமா!

பிழைக்கும் வழியா!பூமியின் இன்ன ஆற்றல் அல்லது சக்தி மற்றக் கிரகங் களை இப்படியெல்லாம் பாதிக்கிறதென்றோ அல்லது மற்றக் கிரகங்களின் இன்ன சக்தி பூமியை இப்படியெல் லாம் பாதிக்கிறதென்றோ சொல்லட்டும்! எனவே சோதி டம் என்பது இல்லாத ஒன்றைச் சொல்லி பிழைப்பு நடத்தப்படுகிறது என்பதை சோதிட நம்பிக்கையுள்ளவர்கள் உணர வேண்டும்!

சில அதிர்வுகள் பூமியில் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று வாதிடு வோரும் உண்டு! அதிர்வு என்பது இரண்டு பொருட்கள் மோதினாலோ அல்லது உயராய்வதாலோ ஏற்படும். பூமியுடன் எந்தக் கிரகமும் மோதாதபோது அதிர்வு ஏற்பட வாய்ப்பேயில்லை!பூமி வினாடிக்கு சுமார் 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

அதனால்கூட பூமியில் எந்த அதிர்வும் ஏற்படு வதில்லையே! எனவே அதிர்வு பூமியில் மாற்றத்தை உண்டாக்குமென்பது அர்த்தமற்றது.

குறுங்கோள்கள்சூரியனுடைய கட்டுப்பாட்டை மீறி சில குறுங் கோள்கள் விண்கற்கள் விண் வெளியில் சுற்றி வருகிறது. இவைகள் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் வரும்போது பூமியைத் தாக்கக் கூடும். சுமார் 26 கோடி ஆண்டிற்கு முன் ஒரு முறை குறுங்கோள் ஒன்று பூமியைத் தாக்கியதால் டைனோசர் விலங்கினம் விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆண்டிற்கு 150 டன் விண்கற்கள் பூமியில் விழுவ தாக கணக்கிடப்பட்டிருக்கிறது.நமது சோதிடர்கள் குறுங் கோள் பற்றிக் கூறவில்லை.

பூமிக்கிரகம் நீக்கி மற்றக் கிரகங்களில் ஐந்தை மட்டுமே கணக்கிலெடுத்து மனித வாழ்வை நிர்ணயிப்பதாகக் கூறுகிறார்கள். சோதிடர்களின் கூற்று எந்த வகையிலும் ஏற்கக் கூடியதல்ல!

இத்தனை அறிவியல் ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுக்களையும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் கிரகங்களால் அங்கிருந்து வரும் காந்த விசைகளினால் மனித வாழ்வில் நன்மை தீமை நடக்குமென்று நம்பிக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு சொல்லிக் கொள்வது என்ன வென்றால்,

சூரியனிலிருந்து தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு என்று பூமியை இடை விடாமல் தாக்கிக் கொண்டே இருக்கிறது! இவ்வளவு ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளையே பூமியைச் சூழ்ந்துள்ள, பூமிக்கு கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலம் தடுத்து நிறுத்தி அவற்றை சின்னா பின்னமாக்கி, பூமியை வந்தடையாமல் செய்து விடும் போது நீங்கள் நம்புவது போல வலிமை குறைந்த கிரகங்களிலிருந்து வரும் வலிமையற்ற எந்த ஆற்றலும் சக்தியும் காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேர முடியுமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

காற்று மண்டலம் ஒரு வடிகட்டி! அதை மீறி நல்ல சக்தியோ தீய சக்தியோ பூமியை வந்தடைய முடியாது என்பதை சோதிட அன்பர்கள் உணர வேண்டும்!- தி. பொன்னுசாமிதரவு: சோதிட மறுப்பும் வானவியல்
viduthalai.com
---------------------------------
எத்தனை முறை ஜெயலலிதா ராஜினாமா செய்திருக்க வேண்டும்? போச்சே! போச்சே!' அ.தி.மு.க.வினர் புலம்புகிறார்கள்.
----------------------------------

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: