Followers

Tuesday, June 24, 2008

தெகல்கா : அய்யப்பா எல்லாமே பொய்யப்பா! விஸ்வ இந்து பரிஷத் வன்முறை இயக்கமே!

அசிங்கப்பட்டு நிற்பது அய்யப்பன் மட்டும் அல்ல! அரசாங்கமும் தான்!

அய்யப்பன் - கையப்பன் - அரிகரபுத்திரன் - என்ற்லலாம் ஓர் இந்துமதக் கடவுளைச் சொல்லி அது திருமணமாகாத ஆண் கடவுள்; ஆகவே பெண்கள் பார்ப்பதற்கு வரக்கூடாது எனக் கூறி விட்டார்கள்.

பார்த்தால் யாருக்குப் பேதலிக்கும்? கடவுளுக்கா? பெண்களுக்கா? விளக்கம் இல்லை.

ஆனாலும் நடிகை ஜெயமாலா தனது 20 வயதில் கருவறைக்கே போய்க் கடவுளைத் தொட்டுத் தழுவிக் கும்பிட்டதாகச் சேதி. விசாரணை நடக்கிறது.

கடவுளைத் தொட்டுப் பூஜை செய்யும் தலைமைப் பூஜாரி கொச்சியில் விபச்சாரி வீட்டில் பிடிபட்டார். பூஜை செய்யக் கூடாது எனத் தடை.உண்டியல் காசை எண்ணுபவர்கள் வெறும் முண்டு மட்டுமே கட்ட வேண்டும்.

காரணம், உள்ளடையில் ரூபாய் நோட்டுகளைக் கட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

கடவுளின் கையாலாகாத் தனத்துக்கு வேறு சான்று தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-இல் மகர விளக்கு `தானாகத் தெரியும் எனக் கதை. 50 ஆண்டுகளாகக் கட்டிவிடப்பட்ட கதை.

சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம். இக்குடும்பத்தின் பி. ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்த வேண்டும் எனக் கூறி ஆள்களை அனுப்புவார்கள்.

ஆனாலும் கதை கட்டியவர்கள் கூறுவது: முதலில் பரசுராமன் விளக்கை ஏற்றினான். வழிவழியாகத் தொடர்கிறது என்கிறார்கள்.

இந்தியா `விடுதலை பெற்ற பிறகுதான் மோசடிகளே! காட்டு இலாகாவும் மின் துறையும் மோசடியைச் செய்பவர்கள். கர்ப் பூரத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டிக் கொளுத்தி `மகரவிளக்கு காட்டுகிறார்கள்.

இதற்கானச் சைகை கோயிலிலிருந்து மாலை 6.30-க்கு அனுப்பப்படுகிறது.பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர்.

1973-இல் 24 பேர் கொல்லத்திலிருந்து பொன்னம் பலமேடுக்கு வந்து குறிப்பிட்ட நாளில், நேரத்தில் பட்டாசுகளை வெடித்துப் பக்தர்களைக் குழப்பம் தெளிவிக்க முயன்றனர். கைது செய்து வழக்குப் போட்டது அரசு. இந்தியக் குற்றச் சட்டத்தின்படி எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றம் விடுதலை செய்தது.

1980-இல் திரிச்சூரிலிருந்து பொன்னம்பல மேடு வந்து வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர்.1981-இல் வந்த பகுத்தறிவாளர்களை காவலர்கள் காட்டு விலங்காண்டித் தனமாகத் தாக்கினர். காவல்துறையை ஏவி விட்டது அன்றைய சி.பி.எம். ஆட்சி.

சாட்சி சொல்கிறார், தேவஸ்வம்போர்டு தலைவராக இருந்த ராமன் நாயர்: காவல் துறையினரும் தேவஸ்வம் போர்டு அலுவலர்களும் சேர்ந்துதான் பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கைக் கொளுத்துவார்கள்.

இதற்கு மாநில அரசு ஆணை வழங்கியது.மோசடிக்குத் துணை போனது கேரள அரசு. பகுத்தறிவாளர்களை அடித்தது. வழக்கு போட்டது.

இன்றைய நிலை என்ன?மகர விளக்கை மனிதன் கொளுத்துகிறான் என்கிறார் தலைமைப் பூஜாரி கண்டரேறு மகேஸ்வரரு.

ஆமாம், ஆமாம் என்கிறார் தேவஸ்வம் போர்டு தலைவர் சி.கே. குப்தன். இவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாடின் மருமகன்.இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு அரசு முத்திரை குத்தி ஆமோதிப்பவர் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகரன்.

அசிங்கப்பட்டு நிற்பது அய்யப்பன் மட்டும் அல்ல! அரசாங்கமும் தான்!

ஒப்புதல் வாக்குமூலம் தரும் இதே கட்சி ஆட்சிதான் 1981-இல் அடித்து நொறுக்கியது. சிபிஎம் கட்சியிலும் 27 ஆண்டுகளில் மனமாற்றம்தான்.

எப்படி வந்ததாம், மன மாற்றம்?கேரள சுற்றுலாத் துறை வாரியத் தலைவர் செரியன் பிலிப் அரசுக்குச் சொன்னார். `எல்லா உண்மைகளையும் சொல்லிடுக. அதன் மூலம் மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிடுக.

பொன்னம்பல மேடு மகரவிளக்கு மூடநம்பிக்கைக்கு உடந்தையாக இருந்து கொண்டே சாமியார்கள்மீது நடவடிக்கை எடுத்தால், அரசு நடவடிக்கைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை வராது என்றே கூறிவிட்டார்.கேரள அரசு உண்மையைத் தெரிவித்து விட்டது.

கேரளப் பகுத்தறிவாளர் (யுக்திவாதி) சங்கத் தலைவர் யு. கலாநாதன் தோலுரித்துக் காட்டியுள்ளார் - பல ஆண்டுகளாக இந்த மோசடியைப்பற்றிய உண்மையைத் தெரிவிக்க நாங்கள் முயன்ற போதெல்லாம் கைது செய்தார்கள், அடித்தார்கள், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள்.

நாங்கள் கூறியது மெய் என மக்கள் இப்போது புரிந்து கொண்டார்கள் எனக் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மகர விளக்கன்று அரசு ஊழியர்கள் செய்த தடபுடல் சொல்லும் தரமன்று. 1999-இல் மகர விளக்கு கொளுத்தப்படும் நேரத்தில் அதைக் காணத் துடித்த மட பக்தர்கள், நெரிசலில் சிக்கி 53 பேர் இறந்தே போயினர்.

மத நம்பிக்கைக்காரர்கள், கோயில் பெருச்சாளிகள், பக்தர்கள் எல்லாருமே காட்டிய புனிதத்துவம் பொய்த்துப் போய் விட்டது.

பகுத்தறிவாளர்கள் வெற்றி பெற்று விட்டனர்.இனியாவது கடவளை நம்பும் அய்யப்பப் பக்தர்களுக்குப் புத்தி வருமா? புத்தி வரும்படி, காரியங்களைச் செய்யுமா, கேரள அரசு?

செய்யாது. மூன்று கோடிப் பேர் வருவதாகச் சொல்லப்படும் மகர விளக்கு மோசடியால் வரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை இழக்க அரசு தயாராக இல்லை. அறிவு இழப்புபற்றி அரசுக்குக் கவலையில்லை. ஆனால் பகுத்தறிவாளர்களான நாம் கவலைப்படாமல் இருக்க முடியாதே!
தரவு: `தெகல்கா 21.6.2008
__________________________________________

விஎச்பி - வன்முறை இயக்கமே!

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பெண்களுக்கான பயிற்சி முகாம் காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நேற்று நடந்தது. முகாமில் பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. viduthalai.com
----------------------------------
தந்தையின் உடலுக்கு சடங்குகளின்றி தீ மூட்டிய அல்லிராணி + இந்து மதத்தின் அஸ்திவாரம் கலகலத்து வருகிறது.

துக்ளக் சோ ராமசாமியின் கோமாளித்தனமான விவாதம்.

மசூதிக்கு அருகில் திடீர்ப் பிள்ளையார் !

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

No comments: