Followers

Thursday, June 26, 2008

பார்ப்பனக் கொடுமை.பிராமண போஜனம். பார்ப்பனர்களும் - சீர்திருத்தமும்!

(பிராமணன்) தோஷமென்று மாமிசத்தைப் புசிக்காவிட்டால் அவன் இருபத்தொரு சென்மம் பசுவாய்ப் பிறப்பான்.

ஆயிரம் பல்லுள்ள பாடீசனமென்னும் மச்சமும், சிகப்பு மச்சமும், எக்கியத்திலும், சிரார்த்தத்திலும் விதிக்கப்பட்டிருக்கிறது.
கும்பலோடு சஞ்சரிக்கின்ற மீனும், சிங்கமுக மீனும், முள்ளுமீனும் மற்றக் காலங்களிலுங் கூடுமென்று சொல்லப் படுகிறது.

முள்ளம்பன்றி, சல்லியமிருகம், உடும்பு, காண்டா மிருகம், முயல் இவைகள் அய்ந்து நகங்களுடையவைகளாயிருந்த போதிலும் இவைகளையும், ஒரு பக்கம் பல்லுள்ள மிருகங்களில் ஒட்டகம் நீங்கலாக மற்றவைகளையும் புசிக்கலாம்.

புசிக்கும்படி சொல்லியிருக்கிற மிருகம், பட்சியிவைகளைப் பிராமணர் எக்கியத்திற்காகவும் அல்லது தம் மாதா, பிதா முதலிய போஷிக்க வேண்டியவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் கொல்லலாம்.

ஒரு பிராமணன் தன்னை மாமிசம் புசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும்போது விதிப்படி சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும் வேறே ஆதாரமில்லாமல் மாமிசம் புசிக்காவிட்டால் உயிர் போகும்படி நேரிட்ட சமயத்திலும் மந்திரத்தினால் கொல்லப்பட்ட மிருகாதிகள் மாமிசத்தைப் புசிக்கலாம்.

ஏனென்றால், பிரமன் இவ்வுலக முழுவதும் சீவனுக்கு ஆதாரமாக உண்டு பண்ணினார். ஆகையால் நெல் முதலிய தாவரமும், மிருக முதலிய சங்கமமும் சீவனுக்கு ஆதாரமாகவேயிருக்கின்றன.

பிராமணன் புசிக்கத்தகுந்த செந்துகளைத் தினந்தோறும் புசித்தபோதிலும் தோஷத்தையடைய மாட்டான். மாமிசம் கிரயத்திற்கு வாங்கினாலும், தானாகவே சம்பாதித்தாலும், ஒருவன் இஷ்டமாகக் கொடுத்தாலும் அவை தேவர்களுக்கும், பிதுர்களுக்கும் நைவேத்தியஞ்செய்து புசிக்கிறவன் தூஷிக்கப்படமாட்டான்.

சிரார்த்தத்தில் விதிப்படி வரிக்கப்பட்ட தூவி ஜனானவன் (பிராமணன்) தோஷமென்று மாமிசத்தைப் புசிக்காவிட்டால் அவன் இருபத்தொரு சென்மம் பசுவாய்ப் பிறப்பான்.

இங்ஙனம் சீவகாருண்யம் சிறிதுமில்லாது துர்நாற்றத்தை வீசும் மாமிசத்தைக் கொண்டிருந்த பூர்வ ஆரிய வமிசத்தில் வந்த இக்காலத்துச் சாதிவேதியர் தின்னாத தென்னை?

இவர்கள் இக்காலத்தில் தின்னாமலிருப்பரேல் தாங்கள் பெரியோரியற்றிய ஸ்மிருதியை உல்லங்கனம் செய்ததாக வல்லவோ முடியும். அவர்கள் கொள்கைக்கு மாறுபட்ட துரோகிகளாகாரா? என் செய்வர் பாவம்.
இவ்வாரியர் தென்தேயத்திலே குடியேறி ஜீவகாருண்ணியர்களாயிருந்த திராவிடர்களுடன் பழகி மாமிசத்தைத் தின்னும் தங்கள் ஆசாரம் அனாசாரமெனத் தெரிந்து வெட்கித் தின்னாது, விட்டனரென்பதற்குத் தடை யில்லை.

மிருகங்களைக் கொன்று தின்று வயிறு வளர்க்கும்படி எழுதி வைத்த ஸ்மிருதியைப் புத்திமான்கள் மதிப்பார்களா?

``நோன்பென்பது கொன்று தின்னாமை புலையுங் கொலையுங் கனவுந்தவிர் என்ற பூலோக சரஸ்வதியாகிய ஔவைப் பிராட்டியார் திருவாக்குகளுக்கு முன் இந்நூலு மொருநூலா? சிலந்தி நூலேயாம்.

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தாண்பிறிதின்னுயிர் நீக்கும் வீணை,அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றினுயிர்செகுத் துண்ணாமை நன்று கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பியெல்லா வுயிருந் தொழும்.தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிதூனுண்பானெங்ஙன மாளு மருள்.
இத்திருகுறள்களைப் படித்த திராவிடர்கள் சாதி பிராமணர்களின் ஸ்மிருதியின் முகத்தை நோக்கவும் எண்ணுவரோ?

தொடவுங் கை கூசாமலிருப்பரோ? அதுவுமொரு நீதி நூலாகுமோ?
அஃதோ ரநீதி நூலென்பதில் ஆட்சேபமுண்டோ? இத்தகைய ஸ்மிருதியை ஆதரவாகக் கொண்டு சாதி பிராமணர்கள் ஒழுகவும், இவர்களால் திராவிடர் சுபாசுபங்களில் காரிய நடத்துதல் அந்தோ! மிக அநியாயம். இவர்கள் திராவிடர் வீட்டுக்களினுழையாதபடி செய்தலே மிக வுத்தமோத்தமமாம்.
- யதீந்தீரர்``திராவிடன், 5.7.1917
viduthalai.com/20080622/news07

சாணி: விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார் கள்? யாரும் கண்டுபிடிக்காத ஒரு அரிய உண்மையை ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கண்டுபிடித்து விட்டார்.

மாடுகள் எண்ணிக்கை பெருகினால் சாணி போடும் - சாணி அதிகம் கிடைத்தால் உரம் அதிகம் கிடைக்கும் - உரம் அதிகம் கிடைத்தால் விவ சாயம் பெருகும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

தூக்கில் தொங்கமாட்டார்கள். மாடுகளை அதிகம் கொல்லுவதால் அதிக சாணி கிடைக்கவில்லை; சாணி அதிகம் கிடைக்காததால் உரம் அதிகம் கிடைக்க வில்லை; உரம் அதிகம் கிடைக்காததால், விவசாயம் செழிக்கவில்லை - எனவே, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு கொடுக்க சிபாரிசு செய்கிறோம்.

ஒரு சந்தேகம் - மாடுகள் கொல்லப்படக்கூடாது என்று இப்பொழுது திருவாய் மலர்ந்துள்ளாரே - மாடுகளில் பசு மாட்டைத்தானே கொல்லக் கூடாது என்று இதுவரை கூறி வந்தார்கள் - கோமாதாவைக் கொல்லலாமா என்று கூக்குரல் கொடுத்தார்கள். இப்பொழுது ஏன் சுருதி பேதம்?

சாணியைப் பற்றி கவலைப்பட்டால் நியாயமாக எருமை மாட்டுக்காகத் தானே இவர்கள் வக்காலத்து வாங்கவேண்டும்?

viduthalai.com/20080621/news01


தந்தை பெரியார் அறிவுரைஅஸ்திவாரம் கிடையாது
"பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரமே கிடையாது."("விடுதலை", 11.7.1954)
பார்ப்பனர்களும் - சீர்திருத்தமும்!அன்று பிராமணர் கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்வானவர்களே. ஆனால் சீர்திருத்தங்களை வெறுக்கிறவர்கள்.

இவர்கள் தங்கள் வரையில், தங்களது நடையுடை பாவனைகளைப் பிரத்தியேகமாக வகித்துக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கியாளும் கருத்துடையவர்கள். இத்தகையோர் தங்களருமையான வேதம், சாஸ்திரம் ஆகம முதலிய நூல்களை ஏனையோர் வாசிக்காவண்ணம் வற்புறுத்துவார்கள்.

இவ்வர்ணத்தவர்களுக்குள் மத பேதங்களும், ஆசார பேதங்களும் பலவுள. இவர்களில் சரியான ஒற்றுமையல்லாவிடினும், `பிராமணன் என்ற வாக்கியத்திற்கு மாத்திரம் கௌரவத்தைக் கொடுப்பார்கள்.

இதனால் அவ்வர்ணத்தார்கள் எல்லா விஷயங்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக ஆசாரச் சீர்திருத்தத்தைக் கைக்கொள்ளுதல் அருமையே.

இவர்களின் முன்னோர்கள் இத்தென்னிந்தியாவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகக் குடியேறியபோது இத்தென்னிந்தியத் திராவிடர்கள் ஜாதி பேதங்களையும், மத பேதங்களையும் கைக்கொள்ளாமல் சுத்த மனமுள்ளவர்களாகவும் நிஷகபடிகளாகவும், பரிசுத்த ஆஸ்திரர்களாகவும், ஒற்றுமையுள்ளவர்களாகவும், அஷ்ட அய்ஸ்வர்யங்களைப் பெற்றவர்களாகவுமிருந்ததற்கிணங்கிய தமிழ் வேதமும், சாத்திரமுமிருப்பதை நன்கறியலாம்.

இவ்வாறு சிறந்தோங்கிய திராவிடர்களிடம் அடைக்கலமடைந்த ஆரியர் கள் நயவார்த்தைகளால் தங்களிடமிருந்த பெரிய மூட்டையை அவிழ்த்து, அதிலுற்ற ஸமஸ்கிருதபாஷா வேதத்தைச் சுட்டியும் அதை மறைத்தும், `பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்னும் வர்ணங்களை ஏற்றக் குறைச்சலாய்ப் புகன்றதுமன்றியில் சண்மதங்களின் கூற்றுகளை விளக்கலாயினர்.

இவ்விளக்கமானது இத்தென்னிந்தியாவில் பரவ பல தேவாராதனையும், தாசிமார் கூத்துகளையும், பயன்படாச் சடங்குகளையும் இன்னும் பல மனக்கிளர்ச்சிகளைப் போதித்துத் தாங்கள் பிரம்மத்தின் முகத்தினின்று தோன்றிப் பிராமண தேவதையானதால் தங்களையே பூஜித்தும், ஆதரித்தும் வரும்படிக் கட்டாயப்படுத்தி விட்ட பிராமணச் சட்ட திட்டம் இன்றும் விடாது வருத்துகின்றது.

ஆயினும் திராவிடர் அப்போதைக்கப் போது தங்களது ஆசார ஒழுக்கங்களைச் சீர்படுத்திக் கொண்டு வந்தும், சில திராவிடர்கள் ஆரியர்களை விட்டகன்று பிரத்தியேகமாய் விட்டார்கள். அவர்கள் விஸ்வகர்மப் பிராமணரெனவும், சிவாசார வீரசைவர்களெனவும் இன்னும் சில வகுப்பினர்களு மாவர்கள். பிராமண வகுப்பினின்று பிறர் எவ்வித சீர்திருத்தத்தை உள்ளபடி கைக்கொள்ளக் காரணமேற்படவில்லை.

ஆனால், திராவிடச் சீர்திருத்தக்காரர்களிடமிருந்து நடை, யுடை, பாவனைகளை ஆரியர்கள் கற்றுக் கொண்டு நாகரிகமடைந்தேவருகிறார்கள்.

மேலும் ஆரியர்கள் பூர்வத்தில் திராவிட மாதர்களை மணம்புரிந்துள்ளவர்களாய், அம்மாதர்களினால் திராவிடர்களது சீர்திருத்தங்களை அனுஷ்டித்து வந்தார்கள் என்பதற்குச் சரியாக பூர்வ இருஷிகளாகவும், பிரமக்கியானிகளாகவுமிருந்த பராசர், வியாசர் முதலானவர்கள் கீழ்வகுப்பு ஸ்திரீகளையே சேர்ந்து வமிசாபிவிருத்தி செய்ததாக நூல்களினாலறிகிறோம்.

நிற்க, நமது தென்னாட்டரசர்களாகிய பாண்டியன், சோழன் முதலியவர்கள் காலத்தில் ஆரியர்களது கருத்துகள் பிரபலமடையவில்லை. மேலும் மகமதிய அரசாக்ஷியில் ஆரியர்களது வலிவுகுன்றியது. சிறந்த ஆங்கில அரசாக்ஷியில் அவரவர்க்குரிய வைதிக, இலவுகிக விஷயங்கள் அவரவர்களால் அனுஷ்டிக்கப்படலாமென்று சுதந்திரம் அளிக்கப்பட்டமையால் ஆரியர்கள் தங்களுடைய வர்ண பேதங்களையும், மத பேதங்களையும், ஆசாரப் பேதங்களையும் திராவிடர்க்குள் பரவ தந்திரோபாயங்களால் ஊர்ச்சிதப்படுத்தி விட்டார்கள்.

இவ்வேற்பாடுகள் ஒரு நூற்றாண்டாகத் திராவிடர்களை ஆண்டு வரத் துணிவு கொண்டன வென்பதைச் சரித்திரங்களால் ஆராய்ந்தறியலாம். இவ்வாறான ஆரியர்களது மதம், ஜாதி முதலியவற்றை தற்காலத்திய ஆரிய ஸமாஜத்தார்கள் முற்றும் மறுத்து வருவது பிரசித்தம்.

இம்மறுப்பு நூல்களை நாம் கவனித்தால் பிரஸ்தாபப் பிராமணர் ஜாதிகளும், மதங்களும், ஆசாரங்களும் தலைகீழாய்விடும். இச்சந்தர்ப்பத்தில் வர்ணாசிரம சங்கம் ஏற்படினும் நிலைப்பதெங்ஙனம்? ஒருக்காலும் நிலைக்காது. வீண் பிரயாசையே. இவையாவுமறிந்த சில ஆரியர்கள் இங்குத் திராவிடர்களது சகல சீர்திருத்தங்களைப் பெற்றுச் சம்பந்தமடைந்து வருகிறார்கள். இவ்வாறே ஆரியரை அபிமானித்துவரும் திராவிடர்களும் சீர்திருத்தமடையக் காலம் நேர்ந்தது.

இப்போது தோன்றிய `திராவிடன் ஆரியரை மறுக்க வேண்டுமென்னும் அபிப்பிராமயல்ல. ஆரியரது மனக்கோணல்களைச் சரிவரச் செய்ய வேண்டுமென்னும் உதாரத்துவமேயாம்.- திராவிட நேசன்திராவிடன் 20.6.1917பார்ப்பனக் கொடுமைமவுரிய சாம்ராச்சியத்தை முடிவிற்குக் கொண்டு வந்த ஆரிய புஷ்யமித்திரன் என்ன செய்தான்?

புத்தரின் கடவுள் இல்லை என்கின்ற கொள்கை ஒட்டிக் கொண்டிருந்த நெஞ்சங்களை எல்லாம் பிளந்தெறிந்தான்.

அகிம்சை வாதிகளான சமணர்களை எல்லாம் விரட்டி விரட்டிக் கொன்றான். தேடித் தேடி கழுத்தை வெட்டினான்.

ஒளிந்து கொண்டிருந்த சமணர்களை எல்லாம் உருவிய வாளால் உயிர் களைச் சூறையாடினான்.

சேனாதிபதிகளின் ஆரிய புஷ்யமித்திரனுடைய கொடுமையைக் கண்டித்து, மவுரிய அரசர்களின் ஆட்சியின் கீழ் வழிவழியாக வாழ்ந்து வந்த பொது மக்களில் யாரும் எந்த விதமான எதிர்ப்பையும் காட்ட வில்லை.
viduthalai./20080621/sunday_news05.

No comments: