Followers

Sunday, June 15, 2008

நாலு பேர் வழக்கு போட்டால், மீதிப் பேர் சினிமா பார்க்கக் கூடாதா? என்னங்க நியாயம்?

தசாவதாரம் என்றொரு திரைப்படம். பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டதாம். அதற்கு எதிர்ப்பு, சலசலப்பு காட்டி ஒரு பெருமாள் பக்தர் பொது நலவழக்கு போட்டார், சென்னை உயர்நீதிமன்றத்தில்! படத்தில் சைவ வைணவச் சண்டைகள் பெரிதாகக் காட்டப்படுகின்றன.

ஓம் எனும் பிரணவ மந்திரம் கேவலப்படுத்தப்படுகிறது. கீதை எனும் நூலின் மேல் கால் வைக்கப் படுகிறது என்றெல்லாம் கதை அளந்து, வழக்கு. தொடர்ந்து ராம கோபாலன் போன்ற வெறும் வாயை மெல்லும் நபர்கள், அவல் கிடைத்தது எனும் ஆவலாதியில் எதையெல்லாமோ உளறினார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் பொது நலவழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது.

அகில உலக.. சபா என்று ஒரு லெட்டர் பேடு தயாரித்துக் கொண்டு எந்த அநாமதேயமும் புண்ணாகி விட்டது என்று டிஞ்ச்சர் தேடி (மருத்துவமனைக்குப் போகாமல்) நீதி மனைக்குப் போகலாம். அந்த வகையில் பார்த்துவிட்டுப் பேசு என உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.

விடவில்லை, மதவெறி! உச்சநீதிமன்றம் போனது. அங்கேயும் மூக்குடைப்பு.

படம் 13-ஆம் தேதி திரையிடப்பட்டது. அதற்குக் கூடச் சில பேர்! 13-ஆம் தேதி வெள்ளிக் கிழமை! படம் விளங்காது. காரணம் நாள் நல்ல நாள் அல்ல! என்று சில பேர் ஆரூடம் கணித்தார்கள்.

படம் எடுத்தவர் கமல்ஹாசன் - வாஜ்பேயி அல்ல! 8-ஆம் எண்ணை ஆறு-ஏ என மாற்றி விட்டு ஆர்த்ரிடிஸ் நோயால் அவதிப்படுகிறாரே, அவரைப் போன்றவரல்லவே கமல்ஹாசன்! பகுத்தறிவாளராயிற்றே! பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமாக வெளியாகி விட்டது!

சைவ வைணவச் சண்டைக்குக் கோபித்துக் கொள்வதாக இருந்தால், வைணவ மகா சபாவின் சாமியார் மட்டுமே வழக்காடுகிறார்; சைவ மடக்காரர்கள் யாருமே வழக்குப் பக்கம் வரவில்லையே, ஏன்?

வந்த வைண வரை, திருப்பெரும்பூதூர், காஞ்சிபுரம், சீரங்கம், வானமாமலை ஜீயர்கள் ஆதரித்தார்களா? இல்லையென்றால் இவர் மட்டும்தான் வைணவத்தின் ஏகப் பிரதிநிதியா?

நாலு பேர் வழக்கு போட்டால், மீதிப் பேர் சினிமா பார்க்கக் கூடாதா? என்னங்க நியாயம்? viduthalai.com
----------------------------------
இந்துத்துவாவின் வால்.!! மதச்சார்பின்மைக்குச் சவால்! சட்டம் பாயுமா?
------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: