Followers

Monday, June 30, 2008

கணினி வேண்டாம்! கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே !! ??

1962ஆம் ஆண்டு வாக்கில் நான் விடுதலைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற பொழுது ஒரு சம்பவம் நடைபெற்றது.

வங்கிகளில் அப்பொழுது கணினியைப் புகுத்தினார்கள். வங்கிப் பணிகள் விரைவாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் புகுத்தினார்கள். அப்பொழுது நம்முடைய பொதுவுடைமைத் தோழர்கள், முற்போக்குச் சிந்தனைவாதிகள் இவர்களெல்லாம் முதலில் கடுமையாக அதை எதிர்த்தார்கள்.

கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே என்று சொல்லி எதிர்த்தார்கள். எப்படி காந்தியார் தொழிற் சாலைகளுக்கு எந்திரம் கூடாதென்றாரோ,

அதுபோலவே முற்போக்குச் சிந்தனையாளர்களும் கணினியைக் கடுமையாக எதிர்த்தார்கள். எங்கே பார்த்தாலும் வேலை நிறுத்தம். தந்தை பெரியார் என்னைக் கூப்பிட்டு எதற்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று கேட்டார்.

கணினியைப் புகுத்துவதை எதிர்த்து என்று நான் பதில் சொன்னேன்.

என்ன இது பைத்தியக்காரத்தனம்? நாம் காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து நாகரிகமுள்ள ஒரு நாட்டைப் போல் முன்னேற விரும்புகிறோம். வெளி நாட்டைப் போல வளர விரும்புகிறோம். எனவே, கணினியை வரவேற்பதுதானே முறை. ஆகவே கணினியை ஆதரித்து எழுதும்படி அய்யா என்னிடம் சொன்னார்.

1962 இல் வெளியான விடுதலைத் தொகுப்பை பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதில் நான் ஒரு தலையங்கம் எழுதினேன். கணினி பரவினால் வேலை வாய்ப்பு குறையாது. மாறாக வேலை வாய்ப்புகள் அதிக மாகும் என்று எழுதினேன்.

நான் எழுதியதை அன்றைக்கு ஏற்றுக் கொள்வதற்குக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் கணினி அறிவுபற்றித்தான் பேச்சு. தெருவுக்குத் தெரு கணினி மையம், கணினிப் பயிற்சியகம் என்று வந்து விட்டது. இன்று யாராவது இவைகளை எதிர்த்துச் சொல்கிறார்களா?

மேலும் புதுப்புது வேலை வாய்ப்புகள்தான் அதில் வர வாய்ப்புள்ளது. இன்று கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
( திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் நூல் 2 ஆம் பாகத்திலிருந்து... )தகவல்: இரா.கலைச்செல்வன், திருச்சி.
----------------------------------------

இந்த பதிவை கண்டுவிட்டு
ஒரு கும்மி பதிவு போட்டுக் கும்மியடிக்கிறது பார்ப்பனீயம்.
படியுங்கள்
நம்புவதற்கு கஷ்டமான செய்தி ஒன்றை படித்தேன்

http://dondu.blogspot.com/2008/06/blog-post_30.html

1 comment:

Thamizhan said...

எதையும் ஆதாரபூர்வமாக எழுதும் விடுதலையும்,ஆசிரியரும் என்று தெரிந்திருக்கும் அனைவர்க்கும்.
இருந்தாலும் ஒரு கும்மி பதிவு போட்டுக் கும்மியடிக்கிறது பார்ப்பனீயம்.
ஒரு வேளை காஞ்சி சுப்புணி விவகாரம் விரைவு படுத்த நடத்தும் போராட்டம் காரணமாக இருக்கலாம்.
உங்கள் விளம்பரந்தான் எங்களுக்கு முக்கியம்.அடியுங்கள் உங்கள் கும்மியை.