Followers

Monday, June 23, 2008

மசூதிக்கு அருகில் திடீர்ப் பிள்ளையார் !

ஆதம்பாக்கத்திலும் திடீர்ப் பிள்ளையார்! மசூதிக்கு அருகில் இந்துக் கடவுள் பொம்மை வைத்தவர் கைது .

சென்னை, ஜூன் 22 - சென்னைப் புறநகர் ஆதம்பாக்கம் நகரில் உள்ள மதரசா அல் முபாரக் மசூதிக்கு அருகில் பிள்ளையார் பொம்மையை வைத்துப் பூஜை செய்து மதக் கலவரம் ஏற்படும் நிலையை உருவாக்கிய ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணியம் என்பவர் காவல் துறையால் கைது செய் யப்பட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

ஆதம்பாக்கம் 11-ஆவது முக்கிய சாலையில் உள்ள மசூதிக்குப் பின்புறத்தில் ஒரு வாசல் உண்டு. இதன் வழியாக முசுலிம் மகளிர் வழிபாட்டுக்கு வருவர். இந்த வழியை அடைத்தாற்போல சுப்பிரமணியம் ஒரு கொட்டகை கட்டிப் பாதையைத் தடுத்துவிட்டார்.

இசுலாமியர்கள் இது பற்றிக் காவல்துறையில் முறையிட்டதன் பேரில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நிகழாமல் தடுப்பதற்காக இரு காவலர்கள் அங்கே நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அந்த இடத்தில் திடீர்ப் பிள்ளையார் பொம்மை ஒன்று மசூதிக்கு வெகு அருகில் வைக்கப் பட்டு, சுப்பிரமணியம் என்பவர் அதற்குப் பூஜை செய்து வருவது தெரியவந்தது.

இந்துக் கடவுளின் பொம்மை தெருவில் வைக்கப்பட்டு இருந்தபடியால் அதை அகற்றும்படி சுப்பிரமணியத்தைக் கேட்டுக் கொண்டனர். அவர் அதைக் கேட்கவில்லை. மாறாக, இந்து மத அமைப்பைச் சார்ந்த சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து பிரச்சினை செய்தார்.

காவலர்கள் இதுபற்றி துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அந்த இடத்தைப் பார்வையிட்ட காவல் துறை அதிகாரிகள் பிள்ளையார் பொம்மையை எடுக்கும்படி சுப்பிரமணியத்திடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

சில நாள்களுக்கு பின்பு பொதுப் பாதையை அடைத்து மசூதிக்குச் செல்லவிடாமல் தடுத்து விட்டார். இந்தப் பொம்மையைச் சுற்றிச் செங்கல், சிமென்ட் வைத்துக் கட்டடம் கட்டி மசூதிக்கு எதிலே கோயில் கட்டினார்.

காவல்துறையினர் எச்சரித்தும் அவர் அதனை அப்புறப் படுத்தாமல் தினமும் பூஜைகள் நடத்தி வந்தார்.

இதனால் அந்தப் பகுதியில் இருமதங்களைச் சேர்ந்தவர்களுக் கிடையே மோதல் ஏற்படுத்தும் சூழல் உருவாகுமாதலால் சுப்பிரமணியன் வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார்.

மத விரோதங்களைத் தூண்டும் வகையில் செயல்படுவது குற்றம் ஆதலால் அவர்மீது இ.பி.கோ. 153-ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிபதி முன்பாக வெள்ளிக்கிழமை அவர் நிறுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப் பட ஆணையிடப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப் பட்டார்.
viduthalai.com
------------------------------------
திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

1 comment:

Irai Adimai said...

இத்தகைய கிருமிதனங்களை செய்து அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டில் இந்து முஸ்லீம் கலவரங்களை தூண்டி அதன் மூலம் இந்துக்களை பாது காப்பது போன்ற ஒரு போலி நாடகமாடி மக்களை நம்பவைத்து ஆட்சியை பிடிக்க வேண்டி அலையும் ஒரு கூட்டத்தை தவிர வேறு யார் இதனை செய்து இருக்க முடியும் இன்று இந்த பரதேசி வந்தேறி கூட்டங்களுக்கு இந்து சகோதரர்களின் பக்தி ஒரு விளையாட்டு பொருளாகி விட்டது.இந்த மக்களின் உண்மை பக்தியை கொண்டு பல கலவரங்களை உண்டு பண்ண நினைத்து தோற்று போன சமீபத்தி பல நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.இந்தியர்கள் மத்தியில் இவர்களை போன்ற கயவர்களை பற்றிய ஒரு விழிப்புணர்வு தேவை